https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 16 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 190 * சூழும் கரங்கள் *

ஶ்ரீ:





பதிவு : 190 / 265 / தேதி :- 16 செப்டம்பர்   2017

* சூழும் கரங்கள்  *


தனியாளுமைகள் - 16 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04



என்னால் எவரிடமும் எதற்காகவும் மன்றாடமுடியாது . எதிர்த்து நிற்பது எனக்கு இயல்பில் உள்ளது . அது பழைய பாணி . இங்கு எடுபடாது . அதை செய்வது அறிவீனம் . நான் என்ன பேசவேண்டும் என்பதை யோசிக்கும் முன்பாக தலைவரை யாரென எங்கு வைத்து பேசவேண்டும் என் தோன்றியது . அந்தக்கூட்டத்தில் நான் என்ன பேசவேண்டும் நான் முடிவெடுத்துவிட்டேன். 



தலைவர் தனது பாணியில் ஏதேதோசொன்ன நேரத்தில் கேட்டுக்கொண்டிருந்த நான் திடீரென ஒரு திறப்பை அவர் சொல்லாத ஒன்றிலிருந்து அடைந்தேன் . எனக்கென நான் இந்த விளையாட்டை துவக்கவில்லை . நேற்று என்ன நிகழந்ததோ அது என்னை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது அல்ல . குவியும் மையத்தில் தலைவர்தான் இருக்கிறார் எனக்கும் அவருக்குமான ஒரு அற்புத குரு சிஷ்ய பாவனை தொடங்கி நீண்ட நாளாகிறது . அவர்கள் அஞ்சுவது தலைவரைத்தான் . நான் கொண்டுசென்ற நிகழ்வின் முறையில் தலைவரின் சாயல் என்னில் இருப்பதாக அஞ்சத்துவங்கியிருக்கலாம் . அதன் மூலம் சண்முகமே ஏதோ மறைமுக திட்டத்திலிருப்பதாக புரிதலை எட்டியிருக்கலாம் . தலைவருக்கு என்வயதில் ஒரு நிர்வாகியை அவர்களால் கற்பித்துக்கொள்ள இயலவில்லை . அவரின் போதாமை இளைஞர்களை தொடும் அணுகுமுறை அவருக்கு இல்லை , மேலும் பரிட்சர்த்தமான புது முயற்சிகள் அதுவரையில் பேணப்பட்டுவந்து சமன்பாட்டை குலைத்துவிடும் . அவர்கள் அஞ்சியது அதற்குத்தான் .ஆனால் இதில் வேடிக்கை அவர் எனக்கென எப்போதும் எந்த திட்டத்தையும் சொல்லுவதில்லை . நான் அவற்றை நான் நின்றுகொண்டிருந்த சூழலில் இருந்தே பெற்றுக்கொண்டேன் . தலைவர் எனது முயற்சிகள் அவரின் எண்ணம் என்கிற தகவல் அவரால் பெறப்பட்டபோது , அதை தனது பாவனையாக ஆக்கிக்கொண்டார் .

அரசியலில் கொஞ்சம் விஷயமறிந்த ஒருவர் பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் அந்த தளத்தில் ஒருபோதும் நிகழ்வதில்லை என அறிந்திருப்பார். உண்மையில் மிகப்பெரிய அரசியல்நிகழ்வுகள் கூட மிகமிகச் சாதாரணமாக, சின்னச் சின்ன விஷயங்கள் சார்ந்து அதன்போக்கில் நடைபெற்று முடிகின்றன. கடந்த இருபதாண்டுகளாக நான் கவனித்த மிகப்பெரிய அரசியல் நிகழ்வுகள் அனைத்துமே சம்பந்தப்பட்டவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தங்கள் பாட்டுக்கு இருக்க, முழுக்க முழுக்கத் தற்செயலாக நடந்து முடிந்தவை. புத்திசாலி அரசியல்வாதி என்பவர் அந்த நிகழ்வுகளில் இருந்து தன் இருப்பை பாதுகாத்துக்கொண்டு லாபம் அடைந்து வெளிவரும் சமயோசிதபுத்தி கொண்டவர் மட்டுமே. என்று தன்னுடையஅரசியலாதல்என்கிற கட்டுரையில் தொகுப்பில் சொல்கிறார் திரு.ஜெயமோகன் அவர்கள்.

ஆம் அன்று நிகழ்ந்ததும் ஏறக்குறைய இதே துல்லியத்தில் . எனக்கு வேண்டியதை நான் அவரிடம் கடைசிவரை கேட்டதேயில்லை . இதில் சிக்கலில் இருப்பது அவர்தான் . நான் எப்படி இது என்னை குறிவைத்தது என எப்படி பிழையாக புரிந்துகொண்டேன் என தெரியவில்லை . எனது முழுஅரசியல் பாணி அவரை ஒட்டி இருந்தது ஒரு தற்செயல் மட்டுமே. .மற்றபடி நான் ஆற்றிய பல நிகழ்வுகளிலிருந்து எழுந்த மாற்றங்களை ,அவர் தனது அரசியல் நிலைகளை வடிவமைத்துக்கொண்டார்

இப்போது சட்டென ஒரு ஆணவம் எங்கிருந்து பிறந்தது என்று புரியவில்லை . தலைவர் சொன்னதை மிக அமைதியாக கேட்டபடி இருந்து நான் சொல்லவேண்டிய கட்டம் வந்ததும் . நான் எனது நிலையை மிக துல்லியமாக அவரிடம் சொன்னேன் அங்கு உள்ளூர் தலைகள் எனப்படும் ஏதும் நமது கட்டுப்பாட்டில் இல்லை அவர்களின் கட்டுப்பாட்டில்தான் அங்கு அரசியல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வளர்வதற்கு உகந்தபடி உங்களது  அரசியல் இதுவரை  சென்றுகொண்டிருந்தது  . எனது நுழைவு அவர்களுக்கு இதுவரை இருந்துவந்த சமன்பாட்டையும் அவர்களை நீங்கள் சார்ந்து இருக்க வேண்டிய நிர்பந்தத்தை குலைத்துவிட்டது . அது நீங்கள் அறிந்ததே .தங்களின் நிலைகளை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லுவதற்கு தயார் எனபதை நம்மிடம் வெளிப்படுத்தி விட்டார்கள் .

அது எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம் பிறிதொரு குழு அவர்களுக்கு மத்தியில் அவர்களுக்கு  எதிராக எழுந்துள்ளது என்பதும். அதை நாம் அங்கீகரிக்கப்போகுறோமா என்பது தான் நான் எனக்கு கேட்ட கொண்ட கேள்வி .அது சம்பந்தமான சில நடவடிக்கைகளில் இருந்து எழுந்ததே அன்று நிகழ்ந்த வெற்றிகரமான நிகழ்வு . அதை நான் உங்களிடம் நிரூபிக்க முயன்றதை அவர்கள் முறியடிக்க பார்த்தனர் . அது அந்த நொடியில்  தவிற்கப்பட்டது . மாலை நிகழ்வுகள் நாம் வெற்றிபெற்றதையும் அதில் நீங்கள் நிகழ்த்திய உரையின் எதிர்விளைவே இன்று உங்களுக்கு அரசியல் அழுத்தமாக வந்து சேர்த்துள்ளது

அன்று நிகழ்ந்ததில் பங்கெடுத்துக் கொண்டவர்கள அனைவரும் இளைஞர்கள் ,அவர்களை ஒருநாளும் பழைய முறைக்குள் நுழைக்க முடியாது . இரண்டாவதாக நான் மூத்தவர்களுடன் இவர்களை இணைப்பதில் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறேன் . இதைக்கொண்டே மற்ற தொகுதிகளைக் இதை வளர்த்தெடுக்கும் பணியை எனக்கான வேலையாக முடிவு செய்திருக்கிறேன். இன்று நிகழவிருக்கும் பஞ்சாயத்தில் , எழுப்பப்படும் கேள்விகளிக்கு நமது குழுவே பதிலளிக்கும் . நான் இதை எதிர்கொள்ள தாயாராக இருக்கிறேன் என்றதும், தலைவர் மௌனமாக சிரித்துக்கொண்டார் , சிறுது நேர அமைதிக்குப் பிறகு . தன்னுடைய கார் பழுதடைந்திருப்பதாகவும்  . அன்று மாலை வீட்டிலிருந்து கட்சி  அலுவலகத்திற்கு என்னை வந்து  அழைத்துக்கொண்டு செல்லச் சொன்னார் . நான் மாலை கூட்டத்திற்கு யாரையாரை அழைக்க வேண்டும் . என்ன பேசவேண்டும் என்கிற சிந்தனையோடு அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினேன் 

நான் பிறிதொரு முறை எனக்குள் சொல்லிக்கொண்டேன் , இன்றைய விசாரணை குழுவில் உணர்ச்சிகளில் முயங்கி நடந்ததை  சொல்ல தொகுதியில் இருந்து வருபவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் .தாக்குதலுக்கு பின்புலத்தில் உள்ளவர்களை துணிந்து அடையாளம் காட்டப்படவேண்டும் .அதில் எழும் வாதப்பிரதிவாதங்களுக்கும் அவர்களே பதில் சொல்லட்டும் . நான் பஞ்சாயத்து தரப்பில் நின்றாக வேண்டும், எக்காரணம் கொண்டும் பிரதிவாதி பக்கம் நிற்கக்கூடாது .தங்களின் தரப்பை அவர்கள் தெளிவாக நிலை நிறுத்தத்தும் எண்ணமே நான் இதுபோன்ற முயற்சிகளில் இனி நான் ஈடுபடவேண்டுமாஎன்பதை முடிவு செய்கிறேன் ,என்கிற நிலைப்பாட்டை எடுத்தபிறகு மாலை விசாரணை குழுவில் பங்குபெறும் நேரத்தை ஆவலுடன் எதிர்நோக்க துவங்கினேன்

என்னை சுற்றிச் சூழும் கைகளுக்கு நான் இரையாகப் போவதில்லை . எதிர்நின்று அதை பதட்டமல்லாது கூர்ந்து நோக்கப்போகிறேன் . நீங்கள் இதுவரையில் சந்தித்தவர்களில் ஒருவனல்ல நான். தலைவர் என்னை என்னவாக கையால்கிறார் என்பதை அறியும் ஆவலே எனக்கு முதலில் எழுந்து வந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...