https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 196 * தொடர்புருத்தலின் சவால் *

ஶ்ரீ:




பதிவு : 196 / 273 /  தேதி :- 24 செப்டம்பர்   2017

* தொடர்புருத்தலின் சவால் *



தனியாளுமைகள் - 22 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-05

 தலைவரின் பக்கத்தில் அமர்திருத்த போது அடைந்த உற்சாகம் செயல்படும் வேகம் எல்லாம் கரைந்துபோய் வெறும் குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது . பொதுவெளியில் பார்ப்பவரின் கண்ணைப்பறிக்கிற அரசியல் அதிகாரம் மரியாதை செல்வாக்கு என்பதன் பின்னணியில் செயல்பாடுகள் என்பவை அசைக்கப்படாத கல்லாக கிடப்பது .  இந்த பெரும் உண்மை . அப்படித்தானா? . பின் அனைத்தும் ஒரு வகை நடிப்பு மட்டும்தானா?. பல நிலைகளில் இருந்து  தொடங்கும் வாழ்க்கை பயணம். தனி ஒருவனின் நெடுக பயணப்பட்டால் மட்டுமே அதில் முடிவென்பது மரணமாக மட்டுமே இருக்க முடியும் . இது ஒரு கண்ணுக்கு தெரிந்து கைக்கு வராத பொருள் . ஒன்றின் பிடி பிறிதொன்றில் என தனித்து செயல்பட விடாது. ஒன்றை ஒன்று பற்றி செயல்படாமைக்கு இட்டு செல்கின்றன போலும் 








“கருத்துச்செயல்பாடுகளுக்கும் சமூகத்தின்   அடித்தளத்தை தீர்மானிப்பதில் ஒரு பங்கு உண்டு. எதுவுமே வீணல்ல.
என்னுடைய   அரசியலென்பது காந்திய அரசியலே. அதிகாரத்தை நம்பாமல் மக்களின் உள்ளே செயல்படும் கருத்தியலின் ஆற்றலை நம்பிச் செயல்படுவதே காந்தியம்." என்கிறார் திரு.ஜெயமோகன் தனது சாட்சி மொழி கட்டுரைத் தொகுப்பில் 

ஊசுடு கொடியேற்ற விழாவில் நிகழ்ந்தது அதுவே . நான் அரசியல் அதிகாரமென்பது சட்டமன்றத்திற்கும் தலைமைச்செயலகத்திற்கானது , நிர்வாகம் சம்பந்தப்பட்டது  அது  வசூலிக்கும் வரிகலிருந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டு சட்ட ஒழுங்கு ,மராமத்து ,போக்குவரத்து போன்ற நாகரிக மேம்பாடுகளை தக்கவைக்க  , இதை கையாளும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க அதைத்தாண்டி பொது சமூகத்துடன் அதற்கு நிறைய பொறுப்பிருப்பதைப்போல ஒரு தோற்றமிருக்கிறது ஆனால் யதார்த்தத்தில் அப்படி ஒன்று இல்லவேயில்லை . ஆயிரம் வார்த்தைகளில் யார் இதை மறுத்தாலும் அது வெறும்மா  ஏமாற்று மட்டுமே  . தன்னை வளர்த்தெடுக்கும் எண்ணமுள்ள எந்தஅரசியலில் தனது தலைமை பண்பை வளர்க்க விரும்புபவன் ஒருநாளும் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படுவதில்லை . 

அரசியலில் இருப்பது என முடிவான பிறகு அதன் பிறிதொரு அலகான மக்கள் தொடர்புறுத்தலே எனக்கான பாதை . ஆட்சி அதிகாரத்திலுள்ள எவர் மீதும் பொது சமூகத்திற்கு எப்போதும் மரியாதை இருந்ததில்லை . அவர்களின் கருத்தியல் வழியாக அவர்களை ஒன்று கூட்டும்போது அதன் பிளவில் குளிர்காயும் அமைப்பு வெகுண்டெழுவது இயல்பானது .நீண்ட மௌனத்தில் நானும் சூர்யநாராயணனும் அமர்ந்திருந்தோம் . சில விஷயங்களை திறந்து நோக்குவது மிகுந்த மன அழுத்தத்தையும் நிலையழித்தலையும் கொடுப்பவை . நல்லூழின் பொருட்டு சில முட்டாள்தனங்களில் உள்ள நம்பிக்கையின் பயணம்,  யதார்த்தவாதிகளுக்குக் கிடைப்பதில்லை . 

நான் தலைவர் சொன்ன தில்லியில் நடக்கவிருக்கும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாடு விஷயம் பற்றி சூர்யநாராயணனிடம் கேட்டேன் . வல்சராஜை தலைவராக நியமிக்கப்பட்டது தலைவர் தனக்கான அரசியல் பலத்தால் . அதனாலேயே அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமை வல்சராஜ் மீது கடும் கசப்பிலிருக்கிறது . காங்கிரஸ் கட்சியிலிருந்து  பழைய நிர்வாகிகளை அழைத்து செல்ல இயலாது , தான் மட்டிலும் உதிர்ந்து வெளியேறிய  பாலனின் முடிவு துரதிஷ்டமானது, முட்டாள்தனமானது . நிர்வாகிகள் எவரும் அவரின் பின்னல் செல்லவில்லை காட்சியிலேயே தங்கிவிட்டனர் என்பதை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்தால் அன்றி மாநில நிர்வாக கமிட்டி வெளிவராது . அதற்கான முழு ஏற்பாடுகளையும் என்னை செய்யச்சொல்லியுள்ளார் என்றார் .

 நான் என்ன செய்யவேண்டும் என்றதும் . பழைய நிர்வாகிகள் எல்லோரையும் ஒருங்கமையுங்கள் . கிருஷ்ணமூர்த்தி குழு அங்கு தனி ஆவர்த்தனம் வாசிக்கும் . அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமைக்கு வல்சராஜ் மீதுள்ள கசப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள் . நிர்வாகிகளில் பெரும்பான்மை அவர்கள் வசம் சென்றுவிட்டால் , பிறகு நமக்கு இங்கு “நித்தியம் மண்டகப்படிதான்” என்றார் . அது ஒரு குழுவாக அனைவரையும் அழைத்துச் செல்வதுதான் . இப்போது நானிருக்கும் மனநிலையில் ,இவ்வகை அரசியலில் ஒரு ஓரமாக இருந்துவிட்டு போகிறேன் . யார் எந்தப்பட்டணம் போனால் எனக்கென்ன . அவரவர் தங்களின் நிகர்நிலை பேணிக்கொள்ள , அதன் இடைவெளியில்தான் நான் விளையாடும் களமிருக்கிறது . மிகுந்த சோர்வாக உணருகிறேன் . தலைவரின் வெளிப்படையான ஆதரவு கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில்  இந்த மன விரக்தியின் காரணமாக இதிலிருந்து விலகினால் நாளை நீங்கள் நினைத்தாலும் இதனுள்புக முடியாது . இப்போதைக்கு பட்டா யார் பெயரில் இருக்க வேண்டுமோ அதில் இருக்க வேண்டும் , சாதகமான சூழல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்கிறார் சூர்யநாராயணன் . தலைவலி தாங்க முடியவில்லை ரவியிடம் மீண்டும் டீ சொல்லிவிட்டு சிந்தனை மத்தியில் அமர்ந்திருந்த போது சூர்யநாராயணன் சென்றுவிட்டிருந்தார் . நான் என்னை தொங்கும் முகமாக யோசித்தபடி இருந்தேன் .

“சென்ற ஒருதலைமுறையாக நம் சிந்தனையில் ஒரு பெரிய சிக்கல் உருவாகியிருப்பதை நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சிந்தனைக்கு ஒரு தொடர்ச்சி உள்ளது. அது எளிய படிமங்களாக பழங்குடி வாழ்விலிருந்து எழுகிறது. பின்னர் சொல் வடிவமும் தர்க்க வடிவமும் பெறுகையில் தரிசனமும் தத்துவமும் ஆகிறது. அதன்பின் பிற தரிசனங்களுடனும் தத்துவங்களுடனும் உரையாடுகிறது. வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் அன்றாட யதார்த்ததுடன் மோதுகிறது. விளைவாக வளர்சிதை மாற்றம் அடைந்து நம்மிடம் வந்துசேர்கிறது. 

நம்மிடமிருந்து வருங்காலம் நோக்கிச் செல்கிறது. ஆனால் சென்ற தலைமுறைமுதல் நாம் தொல்நூல்களை அவற்றின் வேர்களையும், கடந்தகால வளர்ச்சிப்போக்கையும் முழுமையாக உதாசீனம் செய்து மொழிப்புலத்தில் இருந்தும் பண்பாட்டுப்புலத்தில் இருந்தும் முழுமையாகத் துண்டித்து எடுத்துக்கொண்டு சமகாலதேவைகளுக்கும் புரிதல்களுக்கும் ஏற்ப விளக்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளோம். திருக்குறள் இப்போக்கின் முதற்பெரும்பலி; பதஞ்சலி யோகசூத்திரம் வரை இந்த மனநிலையின் பலிகளாக ஆகியிருக்கின்றன. இது நம் கல்விச்சோம்பலின் விளைவு. மரபின்மீதான கல்வியை அளிக்கும் அமைப்புகளின் வீழ்ச்சியும் இதற்குக் காரணம்” என்கிறார் திரு.ஜெயமோகன் தனமு சாட்சி மொழி ஆய்வில் .

ஒரு இலக்கியவாதியாக அவர்தனது எழுத்துமூலமாக இன்று அறிவதை  நான் அன்று கண்டடைந்தேன் அத்தத்துவத்தை நானறிந்து உணர்ந்த வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது அறிபவை இவை ,சிந்தனை ஒரு தொடர்ச்சியாக நிகழ்வது , முந்தய முடிவின் எச்சமும் குழப்பமும் அதன் விளைவாக எழுபவை , எனக்கு இது மகத்தான திறப்பை கொடுத்தது . எனது பதிவுகளில் திரு.ஜெயமோகனின் பல சொல்லாட்சிகளை தொடர்ச்சியாக இதில் சொல்லிவருகிறேன் . காரணம் கடந்தகால நிகழ்வுகளை நான் எனது ஆழ்மனப்படிமனங்களோடு அணுகி இருக்கிறேன் , ஆனால் ஒவ்வொரு முறையும் அவை வலிமிகுந்த செய்முறையாக இருந்திருக்கிறது . வெறும் மனப்பதிவுகளின் ஊடாக அவற்றை காத்திருக்கிறேன் , கடந்திருக்கிறேன் . இப்பொது கிடைக்கும் இச்ச்சொல்லாட்சிகளை அவற்றின் வெற்றிடங்களில் நிரப்பும் போது புது பரிமாணம் எழுந்துவருவதுடன் . நான் சரியாகவே அவற்றை பார்த்திருக்கிறேன் என்பது மகிழ்வையும் திருப்தியையும் கொடுப்பது. இந்தப் பதுவுகளின் வழியாக நான் அவதானிக்கும் முறைகளில் தவறுதல் உள்ளதா என்கிற மீள்சிந்தனைக்கு அவற்றை எடுக்கிறேன்.

நான் வல்சராஜுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது , அவரும் என்னை சந்திக்க விழைவதாக சொன்னார் . தற்போது ஒழிவாக இருந்தால் தன்னை  சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் சந்திக்க முடியுமா என்றார் . நான் வருகிறேன் என்றேன். தலைவர் சொன்னது சூர்யநாராயணனையும் வல்சராஜையும் இணைப்பில் வைத்திருக்க சொன்னதால் , தலைவர் அவருடன் ஏதாவது செய்தி பகிர்ந்துக்கொண்டிருக்கலாம் அது என்ன என்பதை அறியாது அடுத்த கட்டத்திற்க்கு நான் நகர முடியாதற்பென்பதால் . அவரை சந்திக்க புறப்பட்டேன் . சிந்தனை பற்றிய தெளிவை இன்றஉ உணர்கிறேன் அதை வலிந்து தொடர்பில் வைத்திருக்க பலவித நோக்குகளை இணக்க .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்