https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 9 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 183 * தொடுகையின் நிழலும் நிஜமும் *

ஶ்ரீ:




பதிவு : 183 /258 : தேதி :- 09 செப்டம்பர்   2017

* தொடுகையின் நிழலும் நிஜமும் *

தனியாளுமைகள் - 10”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04

அரசியல் நிலைகள் எப்போதும் நேர்மறையான திரள்களின்  தொகையில் சில விஷயங்கள் முடிவு செய்யப்படுபவைகள் . அவற்றை விழைபவன் எதையும் மன்றாடுவதில்லை . அதை எடுத்துக்கொள்வான் அதுவே எனக்கானான வழி . அவரை தினசரி சந்திப்பவர்களில் ஒருவனல்ல நான் என்பதை நான் அவருக்கு உணர்த்தினால்தான் எனக்கான பாதை எழுந்துவரும் . நான் அதை செய்துபார்க்கும் நிகழ்வாக அதை வடிவமைத்ததால் அது மிக பிரம்மாண்டமாக உருவெடுத்தது. ஊழ் எனக்கான உணவை எப்போதும் ஆபத்தான இடத்திலேதான் வளர்க்கிறது வைக்கிறது .




ஒரு நாள் முழுவதும் விழவு நடத்துவது எப்படி சாத்தியம் என அவர் கேட்டபோது நான் அதற்கான காரணமும் நம் பலத்தையும் சொன்னபோது உற்சாகமானார் . அது காலை ஏழு மணிக்கு சேதாரப்பட்டில் துவங்கி இரவு 12:30 மணிக்கு முடியும்படி திட்டமிட்டிருந்தது . அன்று முழுவதுமாக ஊசுடு மட்டுமே சுற்றிவந்தோம் . சில மாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்த வெறியாட்டத்திற்கு இது ஒரு எதிர் நடவடிக்கை . இது எனது பாணியாக இருந்தது . கொடியேற்றமே நிகழ்ந்து பல பத்தாண்டுகள் ஆன நிலையில் , இது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுத்தது . இந்த விழாவினை முன்னிட்டு நடந்த அனைத்து கூடுகைகளிலும் , அவற்றை கிராம சபை என்கிற  கணனோட்டத்தை முன்னிறுத்தியே  அவற்றை ஏற்பாடு செய்திருந்தேன் . அந்த சபை கட்சி வேறுபாடுகளை கடந்து பொது  பிரச்சனைகளில் ஒன்று கூடும் வாய்ப்பை முன்வைத்தே பேசினேன் . தனிப்பட்ட சிலரிடம் வெளிப்படையாகவே இனி எழும் எந்த சிக்கலையும் இதைக்கொண்டே சரிசெய்ய முயலுங்கள் என்றேன்  . அவர்களுக்கும் இது புது அனுபவமாக இருந்தது . அவர்களிடையே உற்சாகத்தை காணமுடிந்தது 

பாலனுடன் இளைஞர் காங்கிரஸில் இதை போல பல நிகழ்வுகளை நடத்தி இருந்த போது கிடைக்காத ஒரு நிறைவு இதில் எனக்கு கிடைத்தது . சுமார் இருபத்தியேழு இடத்தில் கொடியேற்றம் நிகழ்ந்தது . சில இடங்களில் ரோட்டில் நின்றபடி தலைவர் பேசுவார் . சில இடங்களில் மேடை அமைக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் முதலில் பேச இறுதியாக தலைவர் பேசி அதை முடித்துவைப்பார் . இளைஞர் அமைப்பு மறுபடியும் கட்சியில் இணைந்ததை அனைவரும் உணர்ந்த தருணம் அவை . கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்களும் அதில் பங்குபெற்றார்கள் . எனக்கான ஆதரவுத்தளம் மெல்ல உருவாகிவந்தது . அன்றைய நாள் முழுவதும் ஒரு களியாட்டம் போலவே அந்த நிகழ்வு நிகழ்ந்து முடிந்தது . 

பலவித சம்பவங்கள் நான் துவக்க நினைக்கும் அமைப்பு எந்த திசை நோக்கி தன பயணத்தை தொடங்கவேண்டும் எனபதை அடையாளப்படுத்திய பல சம்பவங்கள் அன்று ஒருநாள் முழுவதும் நிகழ்ந்தபடி இருந்தது . காங்கிரஸ் ஒரு மேட்டுக்குடி மற்றும் ஊர்பெரியவர்களின் கட்சி அதில் உள்ள இடம் இளைஞர்களுக்கானதில்லை என்பதுதான், பொதுவான பார்வையாக இருந்தது . கிராமத்து இளைஞர்கள் அவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்பது எழுதாத விதி . அதற்குள் அவர்கள் வரமறுத்த போது அவர்களை கட்டுபடுத்த முயன்ற அனைத்து தடைகளையும் உடைக்க அவர்கள் பிற மாநில கட்சி  அமைப்புகளுக்குள் சென்றுவிட்டனர்  அதுதான் அவர்களை ஈர்க்கும் வாய்ப்பை பிற எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்தது . 

எதிர்நிலைப்பாட்டாளர்களின்  உள்ளூர் அரசியல் நிலைகளை  கலைய முற்பட்டதும்  அதற்க்காகத்தான்  . அதில் ஆரம்பம்முதலே நான் ஈடுபட்டிருந்தேன் . அன்று பாலன் தலைமையில் அவற்றை ஒருங்கியதால் , நான் தனித்து தெரியவில்லை . இப்போது நான் நேரடியாக அதை தொடங்கியவுடன் . அவர்கள் பழைய செய்திகளை அறிந்துகொள்ள அதுவே எனக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருபக்க நிகராக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர் . முக்கியமாக சில சம்பவங்களை சொல்லலாம் . நான் நிகழ்த்திய இளைஞர் காங்கிரஸ் சிறு கூடுக்குகைகள் பலகாலமாக இருந்துவந்த சம்மரசபுள்ளிகளை உடைக்க துவங்கியிருந்தது .ஜாதி ,சமூகம் ,ஊர் தலைக்கட்டு இவர்களின் கைகளிலே முழு கிராமப்புற அமைப்பு சிக்கி எந்த முடிவும் எடுக்கப்பப்படாததற்கு  பெரிய தடை இவர்கள் . பொருளியல் ரீதியில் பலம்வாய்ந்தவர்கள் என்பதால் முழு அமைப்புமே இவர்களின் கீழே தொகுக்கப்பட்டிருந்தது . அனைவரையும் மூச்சுமுட்ட செய்யும் நிர்வாகமாக அது பல ஆண்டுகளாக நடந்துவந்தது. 

அதை எதிர்ப்பவர்கள் எளிய மக்கள் .அவர்களுக்கு இதிலிருந்து வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை . இதை  இளைஞர் காங்கிரஸில் இருந்தபோது நான் தெளிவாக உணர்ந்தது . இதன்  மீட்சி சரியான அரசியலை சென்று  தொடும் , அதுவே பிற எல்லாவற்றிக்குமான பதிலாக இருக்கும் என நினைத்தேன். பாலன் போன்றவர்கள் தங்களது பதவி மூலமாக ஒரு அடையாளத்தை அடைவது பற்றிய கனவிலிருந்தபோது நான் இந்த மீட்சியை நிகழ்த்துவதன் மூலமா அதை அடைய விரும்பிம்பினேன். எனக்கு தேர்தலாரசியலில் பங்குபெறும் விருப்பம் என்றுமே இருந்ததில்லை நான் அதற்கானவனில்லை . என்னால் அதை சிறப்பாக செய்ய இயலத்து . காரணம் அது சமாதானங்கள் , விட்டுக்கொடுப்பது மற்றும் பேரங்களின் வழியே தனது வளரும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளவது . 

அவர்கள் இன்று எல்லா கட்சிகளிலும் முக்கிய அரசாங்கப் பதவிகளில் இருக்கிறார்கள் . நான் எனக்கான வழியாக உட்கட்சி அரசியலைப் பார்த்தேன் . அதிலிருந்து எனக்கான பாதைகளை நான் கண்டடைந்தேன் . அன்று இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில் அதன் தலைமையை தாண்டி எனக்கான ஆதரவு தளம் எழுந்துவந்தபோதுதான் அதற்கான தேவைவும் பிறரின் விழைவையும் புரிந்துகொள்ள முடிந்தது  , அன்று அவை செயல்பாடுகள் என்கிற கோட்டை தொடும் நிலையில் இல்லை அது அன்று ஒரு சிந்தனைப்பெருக்கு மட்டுமே .அதற்கே பலன் அபரிதமாக இருக்கும்போது .அது நிகழுமானால் பெரிய தலைமுறை மாற்றத்தை கட்சிக்குள் கொண்டுவரும் என்கிற கனவு வலுத்ததனால் அது சீரழிக்கும் எந்த மாற்று முடிவிற்கும் நான் உடன்படவே இல்லை , அதன் விளைவு நான் இளைஞர் அமைப்பைவிட்டே வெளியேற வேண்டிய சூழல் உருவாக்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக