https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 27 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 199 * தடையறு வளர்ச்சி *

ஶ்ரீ:
பதிவு : 199 / 276 /  தேதி :- 27 செப்டம்பர்   2017


*  தடையறு வளர்ச்சி  *தனியாளுமைகள் - 25 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-06

வல்சராஜின் எளிமைக்கு அருகில் எப்போதும் ஒரு தேர்ந்த உயர்தர ஒழுங்கு இருப்பதையும் . தனது ரசனைவழியாக அது ஒரு வாசனையை போல எங்கும் பரவியிருப்பதை உணரமுடியும். இவை அனைத்தும் அவரை புரிந்து கொள்வதில் எவருக்கும் சிக்கலை உண்டு பண்னுபவை. யார் எது குறித்து பேச வந்தாலும் , தங்களின் மனதிலிலுள்ளதை விரித்து சொன்ன பிறகு அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாததை  அறியாது முழு திருப்தியுடன் எழுந்து செல்வதை வியப்பாக பார்த்தபடி இருந்திருக்கிறேன.

“கருத்துகளை முறைமையுடன் முன்வைப்பது எனக்குரிய இயல்பல்ல என உணர்கிறேன். நான் முன்வைப்பவை மனப்பதிவுகள். ஆகவே இரு வெவ்வேறு தளங்களைச் சார்ந்த நோக்குகள் இங்கு ஒன்றையொன்று பரிசீலிக்கின்றன என்று கொள்வதே சரியாகும். நூல்களையோ கொள்கைகளையோ சுட்டும்போதுகூட அவை சார்ந்த என் மனப்பதிவையே சொல்லமுடியும்.”

அவனது ஆய்வு உபகரணங்களும் இலக்கியம் சார்ந்தவையே. அதாவது தகவல் திரட்டுதல், தொகுத்தும் பகுத்தும் முடிவுகளுக்கு வருதல், தருக்க முறைமை சார்ந்து அவற்றை முன்வைத்தல் ஆகிய அறிவியக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட முறைகளை அவன் கையாளமுடியாது. அது அவன் மன இயக்கத்துக்கே அன்னியமானது. அவன் கருத்துகளை மனப்படிமங்களாகவும் ஆழ்மனப்படிமங்களாகவும் தான் உள்வாங்கி முன்வைக்கிறான்” என்கிறார் திரு.ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில்.

நான் என்னை கூர்ந்து அவதானிக்க துவங்கியது ஜெயமோகனை வாசிக்க ஆரம்பித்தபோது . எவ்வித  முறைமை சாராது வெறும் மனப்பதிவுகளை கொண்டு , ஆனால் என்னுடனான தருக்க வழியாகவே நான் என்னை தொகுத்து கொண்டு இதுவரை பயணித்து வந்திருக்கின்றேன். அவரின் சொல்லாட்சிகள் என்னை எப்போதும் அன்றைய நிகழ்வுகளை கொண்டுவந்து தன்னுடன் இணைத்து நான் முயங்கிய முறைகள் , சரியான தருக்க வழிமுறைகளில்தான் என்பது என்னை மேலும் தன்னம்பிக்கை கொள்ளவைப்பதுடன் , என்னை, என் ஆழ்மனத்தின் போக்கை , மேலும் அணுகி புரிந்து கொள்ளும் முயற்சிக்கு ஒரு காரணிகளாக இருப்பதை அறிகிறேன்.

அரசியலில் எனது செயல்திட்டங்கள் சூழியல் அவதானிப்புகள் கூர்ந்து அறியும் ஆழ்மன வெளிப்பாடுகள் விளைந்தவைகள. என இப்பொது கருதுகிறேன்.அவற்றை செயல்முறைபடுத்து மிடத்து உடன்நிற்பவருக்கு சொற்களால் விவரிக்க இயலாது திகைத்திருக்கிறேன். அதை தருக்க ரீதியாக முன்வைத்த ஒவ்வொரு சந்தரப்பத்திலும் எனது பிரயத்தனங்கள் வ்யர்த்தமாகி பிறரின் மறைமுக எள்ளுக்கு உள்ளாகியிருக்கின்றன . பின்னாளில் அவற்றை காலம்  சரியென நிரூபித்திருப்பதை இப்போது நினைக்கிறேன் .

வல்சராஜ் தில்லி பயணத்திற்கு  நிர்வாகிகள் வரவேண்டுமென்றும் , அனைவருக்கும் தலைவர் ரயிலில்  முன்பதிவு செய்திருப்பதை பற்றியும் சூர்யநாராயணனன் அதை பார்த்துக்கொள்வதாகவும் என்னிடம் சொன்னார் . நான் அவற்றை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பதை பற்றி சொன்னேன் . நிர்வாகிகள் கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னர் தான் கிளம்ப இருப்பதை  சொன்னார். நான் “சரி” என்றேன் . என்னை அவருடன் வருமாறு சொன்னார், எனக்கு பெரிய  தயக்கமிருந்தது. நான் என்நண்பர்களுடன் செல்வது பற்றிய திட்டத்திலிருந்தேன் . எனக்கு அது எப்போதும் உவகையளிப்பது. மேலும் அதிகாரத்திலுள்ளவர்களுடன் செல்லும்போது அவர்களின் அணுக்கம் விலகி ஒரு மேட்டிமையும் அதனடியில்  அடிமைத்தனத்தை எதிர்பார்க்கும்  போக்கு எழ வாய்ப்புள்ளது . நான் யாருக்கும் அடங்குபவனில்லை.

எனது நண்பர்கள் சிலருடன் நான் செல்வதாக முன்னரே திட்டமிட்டதை அவரிடம் பலமுறை வலியுறுத்திச் சொல்லியும் அவர் விடுவதாக இல்லை . நானும் வேறுவழி இல்லாது அவருடன் செல்ல சம்மதித்தேன் . வருத்தம்தான் . நண்பர்களுடன் பயணிப்பது எனக்கு அளவில்லாத சுதந்திரத்தை கொடுப்பது . அதை நான் இம்முறை இழக்க வேண்டிவரும் . இருப்பினும் வல்சராஜனுடன் எனது பயணம் , அவரை பற்றி நான் இன்னும் அணுக்கமாக தெரிந்துக்கொள்ளுவதற்கு உபயோகப்படும் . சராசரி அரசியல்வாதிகளில்லிருத்து  வல்சராஜ் மிகவும் மாறுப்பட்டிருப்பதை நான் புரிந்துகொள்ள அந்த பயனம் எனக்கு பெரிதும் உதவியது .

எங்களுக்கு அதிகாலை சென்னையிலிருந்து தில்லிக்கு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது . அதனால் முதல்நாள் இரவே சென்னைக்கு சென்று . அங்கு KK நகரில் ஒருங்கியிருந்த புதுவை அரசினர் மாளிகையில் இரவு தங்கினோம் . எனக்கு பல வருடங்களுக்கு முன்பே அறிமுகமாயிருந்த வல்சராஜின் குணம் ,எனக்கு புதுவையிலிருந்து சென்னைக்கு கிளம்பும் போதே தெரிந்தது . மிக சகஜமான  உடல்மொழியும் , நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படும் பேச்சும் எங்களை சடுதியில் சிறந்த நட்பு வளையத்திற்குள் கொண்டுவந்தது . மிகையில்லாத சொல்லும் ,பிரிவில்லாத பழக்கங்களும் , ஒரு அனுசரணையான நட்பிற்கு தில்லி சென்று சேருவதற்குள் நாங்கள் சென்று சேர்ந்துவிட்டிருந்தோம் . 

அரசியல் ஆளுமைகளில் சிலர் மட்டுமே சராசரி அரசியல்வாதிகளிலிருந்து வேறுபடுத்தும் தனித்த குணாதசியமுள்ளவர்கள்  அவரகளே இந்த இடத்திற்கு வந்து சேருகிறார்கள் . எளிமையும் சிக்கலும் கொண்டது மனித மனம் . மிக சிலர் மட்டுமே அதை மிக திறம்பட கையாள மற்றும்  வெளிப்படுத்துவதில் கூர்கொண்டிருப்பார்கள். தாங்கள் மட்டுமே புழங்கும் ஒரு வட்டத்தை அனுபவமில்லாதவர்கள் மிக பெரிதாக வளரவிட்டிருப்பார்கள் . அதனாலேயே எவருடனும் இயல்பிலே பழகினாலும் கசப்படைந்து வெகு விரைவில் முரண்பட்டுவிடுவார்கள் . அவர்களின் உணர்வுக்கொம்புகள் பல தேவையற்ற  இடத்திலும் பரவிஇருப்பது ஒரு காரணம் . வெகு சிலரே அவற்றை மிக நேர்த்தியாக , தாங்கள் சீண்டப்படும் முக்கிய இடத்திலோ ,தருணத்திலோ ,வெளிப்படும் இடத்தில் அவற்றை வளர்த்திருப்பார்கள். அந்த எல்லைவரையில் அவர்களும் பிறிதெவரும் வருவதை தடுக்காது எளிதில் பழக்கூடியவர்களாகவே இருப்பர் .

வல்சராஜ் அப்படி பட்ட ஒரு ஆளுமையாக எனக்கு தோன்றியது .எதிலும் அவசரமின்றி நிகழ்வுகள் தங்களுக்கு முற்றிலுமாக எதிரென திரும்பும் அந்த கணம் வரை காத்திருப்பர் . அதை மன வொருக்கத்தினாலோ ,பரந்துபட்ட பலருடைய தொடர்பினாலோ அந்த தன்னம்பிக்கையை அடைந்துவிட்டிருப்பவர்கள் . அந்த தருணம் வாய்க்கையில் எவரும் எதிர்பார்க்காத விளைவுகளை செய்யும் இடத்திற்கு சகலத்தையும் கடந்து செல்வார்கள். தங்களுக்கு தேவையானதை மிகத் துல்லியமாக வண்டு தேனெடுப்பதைப்போல , பிறரிடம் தன் தேவைகளை கொய்து எடுத்துக்கொள்வார்கள் . அவர்களின் வளர்ச்சிக்கு எவையும் தடையாக இருப்பதில்லை. ஏன்? , சில நேரங்களில் இயற்கை நெறிகளும் , ...........................…..சில காலத்திற்குமட்டுமாகிலும்..................................................கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக