https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 21 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 194 * தனியர்களின் பாதையில் *

ஶ்ரீ:




பதிவு : 194 / 270 / தேதி :- 21 செப்டம்பர்   2017


* தனியர்களின் பாதையில் *



தனியாளுமைகள் - 20 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-05




தலைவரை சுற்றி நிற்கும் குழு மிக எளிமையானது . சூர்யநாராயணன் பழைய பணியின் காரணமாக கறாராக நடந்துகொள்ளுபவர் . அவ்வளவு எளிதில் எவருடனும் பழகாதவர் . என்னினடம் நெறுக்கியக்த்திற்கு தலைவர் மற்றும் எனது தந்தை ஒரு காரணமாக இருக்கலாம் . நான் டீ வாங்கிக் கொண்டு அவரது அருகில் சென்று அமர்ந்தேன் . அவர் உங்களுக்குத்தான் தகவல் சொல்ல நினைத்தேன் . நீங்களே வந்துவிட்டீர்கள் . பேச்சவார்த்தை தள்ளிவைக்கப்பட்டு இடமும் மாற்றப்பட்டுவிட்டது . என்றார் . அரசியல் காத்திருக்கும் பொறுமையுள்ளவர்களுக்கானது அங்கு மனப்  பரபரப்பு ஒருநாளும் இருப்பதில்லை , அப்படி இருந்தாலும் , அந்த தனித்த தனிமையை பேண இயலாதவனுக்கு கசப்பின் நரகம் வெகு சமீபத்தில் உள்ளது  




“விசாரனைக் கூட்டம் இடமும் காலமும் மாறிப்போனதற்கான பின்னணி ஸ்வாரஸ்யமானது” என்றார் சூர்யநாராயணன் . நான் அவர் தொடர்ந்து பேச காத்திருந்தேன் . “நேற்று சிலர் வந்து தலைவரை சந்தித்தார்கள் அவர்களின் பேச்சினூடாக கடந்த ஒருவருடமாக நீங்கள் நடத்திய கூடுகையின் முழுத்தகவலும் தற்செயலாக தலைவருக்கு நேற்றுத்தான் கிடைத்தது . நேற்று மாலை முதல் அவர் நீங்கள் தொடர்புகொண்ட கூடுகையின் உறுப்பினர்களில் அவருக்கு பழக்கமான அனைவரயும் தொடர்புகொண்டு பேசிவிட்டார் . நான் தான் அனைவருக்கும் தொலைபேசி அழைப்பை போட்டுக்கொடுத்தேன் . அனைவரிலும் ஒலித்தது பெரும் நம்பிக்கை , நெகிழ்வு, உற்சாகம். என்ன உங்கள் திட்டம்” என்றார் கண்சிமிட்டியபடி . 

நான் “திட்டமென்று ஒன்றில்லை . தலைவரின் தலைமையில் அன்று நிகழ்ந்ததுதான் இதன் பிண்ணனி. நீங்கள்தான் இதை துவங்கி வைத்தீர்கள் . தலைவரை நான் கூப்பிட்டு வரமாட்டேன் என்றவர், நீங்கள் சொல்லித்தான் கலந்துகொண்டார் . அன்று அதன் முழு அமைப்பையும் கூட்டிவன் நான் என்பது உங்களுக்கு எனக்கு மட்டுமே தெரியும் . அந்த கூட்டத்தில் என்னை ஏன் பேச யாரும் அழைக்கவில்லை?” என்றேன் . சிறிது நேர யோசனைக்கு பிறகு அவரும் “ஆம் ஏன் உங்களை அழைக்கபில்லை?” என்றார் ஆச்சர்யத்துடன் . அதுதான் எனக்கான அரசியலின் மையப்புள்ளி. எனக்கு முக்கியத்துவம் கிடைப்பதை தவிர்க்க ஒரு குழு எப்போதுமே ஒற்றைபடையான திட்டத்துடன் கிளம்பிவிடுகிறது . எனது உடற்குறையை காரணம்காட்டி நான் தவிக்கப்பட்டபோது . இத்தகைய எதிர்ப்பை இயல்பாக  கடப்பது எனது குணம் . என் தடையை உடைக்க நான் துவங்கிய விஷயமே, இந்த சிறு சிறு கூடுகைகள் . அது ஒன்றை தொட்டால் பிறிதொன்றில் கொண்டுவிடும் என்பது நான் அறிந்ததே. 
எதிர்ப்பும் ஆதரவும் அப்படிப்பட்டதே . எந்த இடத்திலும் நமது ஆட்கள் என எவருமில்லை . எல்லா இடத்திலும் எதிரும் புதருமாக இரண்டு முரண்பட்டக் குழு எப்போதுமே இருந்து கொண்டிருப்பது . ஒன்றை நாம் ஆதரித்தால் பிறிதொன்று நமக்கு எதிராக மாறுவதை தவிர்க்கவே இயலாது . நான் எப்போதும் மூர்க்க குணமுடைய குழுவை தேர்ந்தெடுப்பதில்லை . அவர்கள் நமது போக்கை தீர்மனிப்பார்கள் . அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் பராமரிக்க வேண்டிவரும் . நான் நேர்மறையான ஒரு சிறு குழுவுடன் முற்றிலும் புதியவர்களை இணைப்பது எனது வழிமுறை. அவர்களுக்கு எப்போதும் தார்மீகமான கோபமிருக்கும் அதுவே அவர்களை செலுத்தும் விசை . அவர்கள் அரசியலில் அனுபவமோ திறமையோ அற்றவர்கள் . அரசியல் ஈர்ப்பினால் ஒருங்கு திரள்பவர்கள் . 

அவர்களுக்கு எப்போதும் எழும் கோபம் நம்மால் அடக்கமுடியாதது . நடைமுறை சிக்கலை கற்றுக்கொடுக்கும் போது பெருபாலும் நம்மைக்கெதிரான எண்ணமே அவர்களுக்கு ஒரு நாளில்லை ஒருநாள் எழுந்துவிடும் . மிக எளிதில் பிறருக்கு இரையாவார்கள் . இது அனைத்து பொறுப்பிலுள்ள புதியவர்களின் நிலை எளிய தொண்டனிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் வரை இதுவே பொதுவிதி . முதலில் எழுந்து சிக்க்லில் அனைவரையும் கொதிநிலைக்கு கொண்டுவருவது ஒருவகையில் இவர்களைப் போன்ற  புதியவர்களே இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் .

ஆனால் கொடியேற்றும் விழவில் அது போன்ற ஒன்று பேணப்படும் எனபதை நான் யூகிக்கவில்லை .இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியது என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது .ஆனால் தலைவருக்கும் உட்கட்சியில் மறைந்துள்ள எதிர்ப்பு ,இன்று என்னால் தெளிவாக பார்க்கமுடிகிறது . நான் நினைத்திருந்தை விடவும் இங்கு எனக்கு கிடைக்கும் பதிவு, ஒரு அதிரச்சி தரும் திறப்புகள் . அமைப்பை நீண்டநாட்களுக்கு கொண்டுசெல்வது மிகவும் சவாலானதாக உணர்கிறேன். இது தலைமைபண்பை என்கிற ஒன்றை ஒன்றில்லாமல்  செய்து விடும். 

ஒரு பக்கம் இன்று நான் வந்து சேர்ந்திருக்கும் நிலைகளும் , தலைவரின் ஆதரவும் , இதில் அவரது கையறு நிலையும் உட்கட்சி அரசியலின் பல பரிமாணங்களை எனக்கு திறந்து காட்டுகிறது . அது எனக்கு மிகுந்த மன சோர்வையும் , ஏன் இதை செய்யவேண்டும் என்கிற விரக்தியையும் சேர்ந்தே கொடுக்கிறது . உச்ச நிலைக்கோ அல்லது அதில் உள்ளவரின் பக்கத்தில் நிறப்பவர்கள்தன்னிலையழியாது செயல்பட முடிவதில்லை  என்பதை இங்கிருந்து என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது . இப்போது எனக்கு முன்னே உள்ளது இரண்டு . இந்த கணத்தை புரிந்துக்கொண்டு இதிலிருந்து விலகிவிடுதல் . பிறிதொன்று இதில் பயணப்பட்டு அனுபவங்களை அடைவது . முடிவு மிக கசப்பானதே .அதை புரிந்து செயல் படுவது என்றேன் . சூர்யநாராயணன் , இதுதான் இந்தக்கட்சியில் அனைவரும் வந்தடையும் இடம் , இதுவே எவரையும் ஊக்கமில்லாது செய்துவிடுகிறது. மிகக் கொடூரமான எதார்ததம் இது . பல நிலைகளை கடந்து முடிந்த படியில் அமர்பவர்களுக்கு நிகழவேண்டியது என் முதல்படியில் நிற்கும் எனக்கேற்பட காரணமென்ன என்பதே இப்போது எனக்கு முன்பாகவுள்ள ஆகப்பெரும் கேள்வி. யாருடை துணையும் ஆதரவும் அற்றதான இப்பாதையில் பயணிக்க வேண்டுமா என்பது எனக்குள்ள நலுங்களை கொடுத்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்