https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 27 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 198 * விழைவின் புரியாமை பொருள் *

ஶ்ரீ:




பதிவு : 198 /  275 /  தேதி :- 26 செப்டம்பர்   2017


* விழைவின் புரியாமை பொருள்  *



தனியாளுமைகள் - 24 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-06


இளைஞர் காங்கிரஸ் அவருக்கு ஒரு பெரிய அடையாளம் ஆனால் அதை ஒருகாலமும் புதுவையில் அவர் வெளிப்படுத்தியதில்லை அவர் களத்தில் அதனால் என்ன பயனடைந்தனர் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் . அரசியல் லாபங்களை வெற்று  அலம்பலாக அலராக வெளிப்படுத்தும் அரதியல்வாதிகளுக்கு மத்தியில் . வலசராஜ் யாருடைய கவனத்தையும் கவராத  அரசியல்வாதியாக தனது பலத்தை செல்வாக்கை குவிமையமாக  நிழலாகவே தன் அருகில் வைத்திருப்பவர் .






“ஒரு இலக்கியவாதியாக என் எழுத்துமூலம் நான் கண்டடைகிறேன். அத்தத்துவத்தை நானறிந்து உணர்ந்த வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது அறிபவை இவை” என்கிறார் திரு. ஜெயமோகன் ….. ……இலக்கியவாதிகள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் அனுபவங்களை கருத்துக்களாக மாற்றிக்கொள்வதன் வழியாக அவற்றை தத்துவமாக வாழ்வியலில் ஒப்பிட்டு சமூகம் மற்றும் மனிதர்கள் மீது நமக்கான புரிதலை அடையும் போது அது நம்மை வேறொரு தளத்திற்கு நகர்துகின்றது . நாம் நம் அகத்தை ,நம் வாழ்கையின் பெருக்கை இன்னும் நொருங்கி அறிந்து கொள்ள இயலுகிறது .

வல்சராஜிடம் நான் பார்த்தது ஒருவகையான நிழல் அரசியலிலும் அதன் உட்பிரிவுகளிலிலும் ஒரு தேர்ந்த ஓருங்கமைவு காணப்பட்டது . சண்முகத்திற்கு அடுத்த ஆளுமையாக நான் யாரையாவது கணக்கில் கொள்ளவேண்டுமென்றால் அது வல்சராஜைத்தான் . அப்படித்தான்  எண்ணுகிறேன்  . அவரதுபாணி அரசியலில்  நான் புக விரும்பவில்லை .அது அரசியலை இன்னும் மிக நுண்மையாக அதிரும் புள்ளிகளில் தொடும் மேல்நிலை அரசியல் சூழ்தல். தனித்த தளம் அது . நான் வேறு தளத்தை சேர்ந்தவன் என்பதால் , அவற்றை அறியும் பொருட்டு அது எனக்கு ஒரு புரிதலின் ஈர்ப்பை கொடுத்தாலும் நான் அவற்றை புரிந்து கொள்வதோடு நிறுத்துக் கொண்டேன் அதனுள் கடைசீவரை நுழையவேயில்லை . அதன் படிகள் அரசாங்கத்திற்குள் கொண்டு செல்பவை . அது எனக்கான பாதையல்ல . காரணம் ,நான் என்னை அரசு பொறுப்பில் முன்னிறுத்திக் கொள்ள விழைந்ததில்லை , கட்சி அமைப்பில் நான் இரண்டாம் நிலை தலைமை பொறுப்பில் நிற்கவே விரும்பினேன் . காரணம் முதல் நிலை என்பது சமரசத்தை அடைப்படை கொண்டது . பேரம் லாபம் இரண்டையும் கொண்ட ஊடுபாவாக அமைந்தது , பெரும் நிழலானது . நிழலானவைகளை எனக்கு எதிராக நான் பார்க்கிறேன்  . எனக்குள் ஒன்று எப்போதும் அடங்க மறுப்பது. என்னை எப்போதும் தொல்லைகளுக்கு ஆட்படுத்துவது . சூழியல் நிர்பந்தத்திற்கோ, பிறிதொருவரால் நிர்பந்திக்கப்படுதலுக்கு ஆளாகும் போதோ , எப்போதும்  நான்  என்னையும் அறியாது அதற்கு எதிர்நிலையைத்தான் எடுத்திருக்கிறேன் . 
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பின் மதியம் ,வல்சராஜ் தனது அறையில் தனித்து யாருக்கோ கடிதமெழுதிக் கொண்டிருந்தார் . நான் உள்நுழைந்ததும் என்னை நோக்கிய புன்னகையுடன் தலை அசைத்து அமர சொன்னார், நான் அவருக்கு பக்கத்திலிருந்த நாற்காலியில் அமைந்தேன் . டீ மேஜையில் சில கடிதங்கள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருந்தன , ஆங்கிலத்திலும் சில மலையாளத்திலும் . அனைத்து மிக நெருக்கமானவர்களுக்கு என நினைத்தேன் . வேலைமெனக்கட்டு கடிதம் எழுதும் அந்தப்போக்கு மிக எனக்கு விசித்திரமாக பட்டது. அலைபேசி முழுவதுமாக செயல்படத்துவங்கிய நேரம் . இதை அதன் வழியாகவே சொல்லி விடலாம் , ஒருவேலை அந்தக் கடிதங்கள் வெளிநாட்டு தொடர்ப்புக்கு என நினைத்தேன். இல்லை அவை எல்லாம் உள்நாட்டிற்குள் செல்வது , அவரிடம் “என்ன கடிதம்” என்றதும் அவர், தான் மாதத்திற்கு பாதிநாட்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள புதுவை வந்துவிடும்போதெல்லாம், தொகுதியில் தவறவிடும் நல்லது கெட்டத்துக்களுக்கு , கடிதம் மூலம் நிகழ்வுக்கு தான் வர இயலாமையை பேசி , பின் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு வாழ்த்தும் வருத்தமும் சொல்லுபவை என்றார் 

மாஹி கேரளா எல்லையை ஒட்டிய பிரதேசம் ,முழு கல்வி அறிவு பெற்ற பகுதியாக இருந்தது. புதுவையும் ஏறக்குறைய  அப்படித்தான் . காரணங்களை தொலைபேசியில் சொன்னால் புரிந்துகொள்ள போகிறார்கள் . மேலும் புதுவையை போல இல்லாமல் கம்யூனிச செயல்பாடுகளின் பாதிப்பால் அந்தப் பகுதிகள் நல்ல அரசியல் விழிப்புணர்வு உள்ளவை, சிறு சிக்கலுக்கும் நான்கே பேர்  வேட்டியை தூக்கிப்பிடித்தபடி அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்துவிடக்கூடியவர்கள். வல்சராஜ் சொன்னது பலமுறை தொலைபேசியில் பேசுவதை விட ஒரு கடிதம் அவர்களுக்கு இன்னும் தன்னை மிக அணுக்கமாக காட்டும் என்றார் . ஆம் அது நிஜம் . ஞாயிற்றுகிழமை ஓய்வாய் இருக்க விரும்பாது செயலில் செயல்பாடுகளில்  ஓய்வாக உணருதல்  ஒருவகை முறைமை .  எடுத்த காரியத்தில் உள்ள ஊற்றம் சிறந்த தலமைக்கானது . இதை சணமுகத்திடம் பார்த்திருக்கிறேன். தான் அனுப்பவேண்டிய ஆயிரக்கணக்கான  பொங்கள் , தீபாவளி வாழ்த்து அட்டைகளில் கூட  மெனக்கெட்டு கையெழுத்திட்டுக் கொண்டிருப்பார். 

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டு பற்றிய பேச்சு வந்ததும் அது பற்றி நிறைய பேசியபடி இருந்தார் . பொதுவாக எதிலும் ஆர்வமற்று இருப்பதாக ஒரு தோரணை அவர் பேச்சில் எப்போதும் இருக்கும் . எந்தப்பதவிகளிலும் தம்மை பிணைத்துக்கொள்ளாத ஒரு தன்மை தங்களுக்கு இருப்பதை மெனக்கட்டு நமக்கு புரியவைப்பார்கள் . ஆனால் அதிலடையும் லாபங்களை வேறு தளத்தில் தயக்கமின்றி பயன்படுத்திக்கொள்வார்கள் . இந்த கடிதம் எழுதும் அதே மெனக்கெடலில் உள்ள ஒரு அர்த்தம் அவரது அணைத்து  விஷயங்களிலும் பொதிந்ததாக இருந்தது . தொகுதி முழுக்க தனது கட்டுப்பாட்டில் வைப்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு , தங்களின் மீள் வெற்றிக்கு தேவையாகிறது .அவர்களது எல்லா மெனக்கெடலுக்கும் பின் தன்னை அனைவரின் கவனத்திற்குள் நிலைநிறுத்தும் விழைவே பிரதானமாக இருக்கும். தங்களை எளிதில் யூகிக்க இயலாத தன்மையை ஒவ்வொன்றிலும் பெருக்கியபடி இருப்பார்கள். தலைவரிடமுள்ள எளிமையை அவர் தன்மீது வலிந்து திணித்துக்கொண்டது போலன்றி இயல்பாக இருக்கும்

வல்சராஜின் எளிமைக்கு அருகில் எப்போதும் ஒரு தேர்ந்த உயர்தர ஒழுங்கு இருப்பதையும் . தனது ரசனைவழியாக அது ஒரு வாசனையை போல எங்கும் பரவியிருப்பதை உணரமுடியும். இவை அனைத்தும் அவரை புரிந்து கொள்வதில் எவருக்கும் சிக்கலை உண்டு பண்னுபவை. யார் எது குறித்து பேச வந்தாலும் , தங்களின் மனதிலிலுள்ளதை விரித்து சொன்ன பிறகு அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாததை  அறியாது முழு திருப்தியுடன் எழுந்து செல்வதை வியப்பாக பார்த்தபடி இருந்திருக்கிறேன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக