https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 170 * இடைவெளிகளைத் தொகுத்தல் *

ஶ்ரீ:





பதிவு : 170 / 244 : தேதி :- 26 ஆகஸ்ட்  2017

* இடைவெளிகளைத் தொகுத்தல் *

அரசியல் வெற்றிடம்
1996 தேர்தல் களம் - 6



தலைவர் சொல்லித்தான் உங்களின் பாலனின் தொடர்பே தெரியும்அவர் இந்தளவிற்கு ஒருவரை உயர்வாக பேசி நான் பார்க்கவில்லை . இப்போது எதையாவது சொல்லி நீங்கள் என்னை அனுப்பிவைத்தாலும்இது என்னுடன் முடியப்போவதில்லை . என்றார் . நான் அவரிடம் நான் என் உள்நிலை மாற்றத்திற்காகவே உங்களிடம் வந்தேன் . உங்களை பற்றிய என் எண்ணம் வேறாக இருந்தது அதனால் நான் யார் என்பதை உங்களிடம் வெளிப்படுத்தவில்லை . ரவிக்கு மட்டும் நான் யார் என்பது தெரியுமாதலால் உங்களிடம்சொல்லவந்தவனை நான் தடுத்துவிட்டேன்அன்று எனக்கிருந்த மனநிலையில் இனி சரிவராது என்றுதான் வெளியேறினேன் . ஆனால் இது ஊழின் அழைப்பில் பொதிந்துள்ள வசீகரம்  இதிலிருந்து தப்பிப்பது சாத்தியமில்லை என உணரத்தொடங்கினேன். அது விரிக்கும் கரத்தை பற்றுவதை தவிர எனக்கும் வேறு வழியில்லை 




ஒரு கட்டத்தில் நான் என்ன நினைத்தேனோ அதை அவரிடம் சொல்லத்துவங்கினேன் . தான் அனுப்பிய ஆள் தவறு அதுதான் காரணம் நான் உதாசீனமாக நினைத்துவிட்டேன் என சண்முகம் சொன்னது , அவருக்கு ஒருவித சங்கடத்தைக் கொடுத்திருக்கலாம். அது நிஜமில்லாத்தால் அதை கலைய நினைத்தேன் . “சுரேஷ் தவிர வேறு யாரும் வந்திருந்தாலும் என்னை இவ்வளவு எளிதாக சந்தித்து பேசியிருக்க முடியாது காரணம் நான் பேசுகிற மனநிலையில் இல்லை ”. “நான் அரசியல் மீதே ஒருவித கசப்பிலிருந்த நேரம்” . “எனக்கு அரசியலை தாண்டி சுரேஷ்  மீது நிறைய மரியாதை இருந்ததால்தான் நான் என்ன நினைத்தேனோ அதைப்பேசி அனுப்பினேன்”. “இதில் நான் எதிர்பார்க்காதது. மரியதாசின் நுழைவை . அது தலைவர் நிகழ்த்தியது” என்றார் . “இன்று உங்களிடம் சிக்கிக்கொண்டது போலவே அன்று அவரிடம்என்றதும் . அவர் சிரித்துக்கொண்டார் . “நான் நினைத்ததைவிட நீங்கள் வேறுமாதிரி இருந்தீர்கள் என்பதால்தான் நான் இதுநாள் வரை உங்களுடன் பயணித்தேன்” .என்றேன் 

அன்று பாலனுக்கு பிறகு யார் என்கிற விவாதம் துவங்கிய பிறகு , அங்கிருந்து எனக்கு வேறு வழிகள் திறந்து கொள்ளலாம் என்கிற அச்சம் காரணமாக நான் பாதியில் எழுந்து கொண்டேன். சிறிது இடைவெளி தேவை என தோன்றியதால் , சில நாட்களுக்கு வேறு விஷயங்களில் கவனத்தைக் குவித்தேன். ஆனால் சில நாட்களிலேயே இது சரிவராது என புரிந்துபோனது . எனக்கான வேலைகள் ஏதும் இல்லாது ஓரிடத்தில் நான்  இருக்கமுடியாதென முதல் நாளே அறிந்து கொண்டது தான் . யாராலும் கவனிக்கப்பாடாது இருந்துவிட முடியும் என்கிற என் நிலைப்பாடு எனக்கு மேலதிக மனவழுத்தையே கொடுத்தது” . 

நான் திரும்ப அரசியிலில் ஈடுபட நினைத்தது தவறோ என்கிற குழப்பத்தினால் என்னை மறுபடியும் தொகுத்துக் கொள்ள நினைத்தேன் , அதுவரை நினையாது விட்டிருந்த இடைவெளிகளை நிரப்ப, அதன் பொருட்டும் நான் அன்று உங்களிடம் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிச் சென்றேன்”. “பிறிதொரு முறை நீங்கள் என்னை தொலைபேசியில் அழைத்தபோதும் நான் வெறுமனே வருகிறேன் என் சொல்லி வைத்து விட்டேன் . நீங்கள் இவ்வளவு சொன்ன பிறகு நான் மறுத்ததின் காரணம் ,என் ஆணவம் என் நீங்கள் நினைக்கக்கூடாது” . “ உங்களின் மீது எனக்கிருக்கும் மதிப்பின் காரணமாகவே இந்த சங்கட நிலை . ஏனென தெரியவில்லை என்னால் முடியாது என சொல்ல தயங்குகிறேன்என்றேன். அவரும்அந்த நட்பின் அடிப்படையிலேதான் உங்கள் வீடுதேடி வந்திருக்கிறேன்என்றார் . நான் மேற்கொண்டு  வார்த்தைகளை விரயம் செய்யவிரும்மவில்லை . “ஒரு ஐந்து நிமிடம் ,இதோ குளித்து விட்டு வருகிறேன்என்றேன் . அவர் முகமலர்ச்சியுடன்காத்திருக்கிறேன் வாருங்கள்என்கிறார் . நான் என் தங்கையிடம் அவருக்கு காபிக்கு சொல்லிவிட்டு குளிக்கச்சென்றேன் .  

என்ன ஒரு மடத்தனம் இதை எப்படி யூகிக்காது போனேன் . மூப்பனார் வெளியேறி புதுக்கட்சி கண்டபிறகு சண்முகத்தின் அணியிலிருந்துதான் முக்கிய தலைவர்கள் கண்ணனை ஏற்காது போனாலும் மூப்பனாருக்காக அங்கு சென்று சேர்த்தனர் . கட்சியில் இன்று ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிகர் செய்யும் வேலையில் சண்முகம் உள்ளார் . எனக்கு அப்போது தேர்தலில் வீதி பிரச்சாரத்தின் போது நிகழந்த அந்த சம்பவம் நினைவிற்கு வந்தது .

எல்லோரும் காலை 10:30 மணிக்கு கூடினால் போதும் என்றுதான் முதல்நாள் இரவு முடிவு செய்திருந்தார்கள் . அன்று காலை காந்திராஜிக்கு கட்சி அலுவலகத்தில் ஏதோ வேலை . அவர் திரும்ப 11:00 மணியானது . அதன் பிறகே அவர்கள் வாக்கு சேகரிப்பை துவங்கினார்கள்  . என்னால் 11:30 மணிக்குத்தான் அங்கு செல்ல முடிந்தது. நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரிப்பு . அண்ணா சாலையில் அவர்கள் இருக்கும்போதுதான் என்னால் அவர்களுடன் சென்று இணைய முடிந்தது . கடும் வெயில் என்பதால் எல்லோரும் ரோடில் நிற்பதும், கிடைத்தபோது நிழலில் ஒதுங்குவதுமாக இருந்தனர். வேட்பாளர் காந்திராஜிக்கு அந்த கொடுப்பினை இல்லை. நடு ரோட்டில் நிலவு காய்வது போல உலாவினார் . நான் நிழலுக்கு ஒதுங்கிய இடத்தில் வக்கீல் முருகேசன் நின்றுகொண்டிருந்தார்

அவரை கவனிக்காது உள்ளே வந்த பிறகுதான் அவரை பார்த்தேன் . சட்டென வெளியேற முடியாது. அது நாகரீகமில்லை என்பதால் அவரை நோக்கிய புன்னகையுடன் ,அவர் அருகில் சென்று நின்று கொண்டேன் .சில நிமிட முறைமை உபசாரங்கள் , பின் அவர் என்னிடம்நீங்கள் வந்தது குறித்து காந்திராஜிக்கு ஏக சந்தோசம்என்றார் . நான் மையமாக சிரித்துக்கொண்டு அவரிடம்மூப்பனாருக்கு நீங்கள் எவ்வளவு அணுக்கம் என் ஊருக்கே தெரியும் . அவரே கட்சி தொடங்கிய பிறகும் அவருடன் செல்லமாக நீங்கள் இங்கேயே நீடிப்பது பெரிய விஷயம்என்றேன் . அவர் நான் பெரியவரை சென்றுமுதலில் நான் என்ன செய்யட்டும் என்றதற்கு அவர் நாங்கள் இங்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி கொண்டுவர முயற்சிக்கிறோம் , அங்குதான் அது ஆட்சியில் இருக்கிறதே . நீங்கள் போய் புதுவையில் காங்கிரசுக்கு வேலை செயுங்கள்என்றார் . “அவர் சொன்ன பிறகு நமக்கென்ன தனி அபிப்ராயம் . என்னால் இங்கு கண்ணனுடன் இணைந்து வேலை செய்ய முடியாதுஎன்றார் .

சண்முகம் இதுவரை சந்தித்ததை விட இந்த முறை நிச்சயம் இது பெரிய சவால் . மற்ற தலைவருடன் இருந்து பிரிந்தவர்களைவிட சண்முகத்திடமிருந்து பிரிந்தவர்கள் அதிகம் என்றார் . அதனால்தான் தான்  இங்கு நீடிப்பதாக சொன்னார் . ஆனால் மறுநாள்முதல் முருகேசன் வரவில்லை ஏன் என யாருக்கும் புரியவில்லை. சில நாட்களுக்கு பிறகு காந்திராஜுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னது . மூப்பனாரை முருகேசன் சந்தித்தபோது அவருடன் சென்ற சிலர் அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தனர் . புதுவையிலிருந்து பண்ணீர்செல்வம் சென்று மூப்பனாரை சந்தித்து முருகேசன் சொன்னவசனத்தைஅவர் பேச மூப்பனாரும் தான் முருகேசனனுக்கு சொன்னதையே பண்ணீர்செலவத்திற்கும் சொன்னார். அதை கேட்டு அவர் புதுவை திரும்பினார் . அங்கு பேசிக்கொண்டிருந்தவரகளிடம்  மூப்பனார்நானே வெளிவந்துவிட்டேன் என் பின்னல் வருவதுதானே இவர்களின் வேலை ,என்னிடம் அவர்களது எண்ணத்தை மறைத்து வார்த்தை வாங்க முற்சிக்கிறார்கள்”” என்றார் .”இது தான் தொண்டன்  தலைவனூடான அரசியல்என்று கூறி சிரித்துள்ளார் . இதை கேள்விப்பட்ட இருவரும் அன்றிரவே கண்ணனுடன் சென்று சேர்த்தனர்” . எனக்கூறி சிரித்தார் காந்திராஜ்
தலைவர் தொண்டன் அரசியலின் பரிணாமம்மிது . கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் . பாலனுடனான அரசியல் நீச்சல் குளமெனில் இது கடல் . வாழ்வு நிஜம் போலே சாவும் நிஜம் .சண்முகத்திற்கு பல அடிப்படைக் காரணங்களுக்காக நான் தேவைப்படலாம் . வெற்றிடம் மிகும் இடங்கள் எனக்கான களமாக நான் பார்ப்பது வழமை . ஆனால் சண்முகத்தை சந்தித்த பிறகு நான் அடைந்த அனுபவங்கள் அனைத்திற்குமானது . அங்கிருந்து நான் பெற்றதை வாழ்வின் பல கணங்களில் பொருத்தி பல பரிமாணங்களை பார்த்திருக்கிறேன்

நான் குளித்து முடிப்பதற்குள் ஒரு முடிவை மனம் எட்டியிருந்தது . பாலனை சந்திக்கும் போது என்ன நினைத்தேனோ அதுவே இப்போதும் என் மனதில் நிழலென தோன்றியது . எனக்கான வாய்ப்புகளும் அதை சார்ந்து எழுந்துவரயிருக்கும் மனவருத்தங்களும் புரிந்தே இருந்தன . இதில் ஒரு ஆகப்பெரும் மாற்றம், பாலன் தலைவர் போல ஆனால் சண்முகம் முற்றும்  தலைவரே . ஆகவே அவ்விடம் எனக்கு கிடைக்காத அனுபவங்கள் முற்றாக இங்கு கிடைக்கலாம் . சவாலை ஏற்றுக்கொள்வது மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது . அது எனக்கான அனுபவங்களை வைத்துக்கொண்டிருக்கிறது . நான் காந்திராஜுடன் சண்முகத்தை பார்க்க புறப்பட்டேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...