https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 16 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 159 * கூடா இணைப்பு *

ஶ்ரீ:





பதிவு : 159 / 233     தேதி :- 15 ஆகஸ்ட்  2017

* கூடா இணைப்பு *

இயக்க பின்புலம் - 82
அரசியல் களம் - 48


எதையும் ஒரு யாசகம் போல மன்றாட்டு போலவே கேட்கப்பழகிகிவிட்டனர் , அதிலிருக்கும் இளிவரலை அவர்கள் அப்பொது கவனிப்பதில்லை . ஆனால் அதற்கென ஒருநாள் வைத்திருப்பார்கள் . அன்று குமுறி எழுந்து கொல்லவும் தயங்காதவர்கள் . எதையும் உணர்வுபூர்வமாக மாற்றிக்கொள்வார்கள் .




பண்ணீர்செல்வம் இளைஞர் காங்கிரசின் பிளவை பற்றி சணமுகத்திடம் சொன்னபோது ஆர்வமில்லாது கேட்டவர் , "நாமென்ன செய்யவியலும் இதில்"என்றார்  . "அவர்கள் மரைக்காயரை சார்ந்து அரசியல் செய்கிறார்கள் , பாலனைத் தவிர அங்கு யாருமே இதுவரை அரசியல் பொதுவெளிக்கு வரவில்லை . உனக்கு யாரையாவது பழக்கமுண்டா" என்றதும் "தனக்கு அனைவரையும் நல்ல பரிட்சமுண்டு"என்றார்  “சரி என் சார்பாக சென்று பார் , பத்திரிக்கைகளுக்கு செல்லவேண்டாம் கொஞ்சகாலம் அமைதியாக இருக்க சொல்என்றார் . அதைத்தான் பண்ணீர்செல்வம் என்னை சந்தித்தபோது சொன்னது . அன்று மாலை  தன்னை சந்திக்க அங்கு வந்த வைத்யநாதனிடம் சண்முகம் , "இளைஞர் காங்ரஸில் என்ன நிகழ்கிறது உனக்கேதாவது தெரியுமா என கேட்டிருக்கிறார்" . வைத்திநாதன் துணை தாசில்தார் . சண்முகத்தின் நம்பத்தகுந்த அணுக்கர் . “வில்லங்கம்என்பது  அவரின் விளிப்பெயர் . அவரால் எதிலும் வில்லங்கத்தை  தவிர பிறிதெதையும்  மிகைத்திறம்பட ஆற்ற இயலாதென்பதால் அது அவரின் பெயரானது  . அவர் முன்னாள் அமைச்சர் ரேணுகா அப்பாதுரையின் தனி செயலராக இருந்தவர் அவருக்கு எப்போதும் சர்ச்சை சூழலிருப்பது பேரின்பவெள்ளம் . என்னை நன்கு அறிந்தவர் . ரேணுகா அப்பாதுரை எனக்கு மிக அணுக்கமானவர் . அவர் மூலமாக என்னைப்பற்றிய சகல தகவல்களும்  அவருக்கு அத்துப்படி. நான் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில்   நிகழ்த்திக்கொண்டிருப்பதை   முற்றிலுமாக  கவனித்து வருபவர் . அவரது அரசியலுக்கு அது தேவைப்படுவது. அதை இப்போது சண்முகத்திற்கு நினைவூட்டினார்

சண்முகம் இந்த குழுவைப்பற்றி என்னைவிட மிக அணுக்கமாக தெரிந்திருந்தார் என்பது பின்னொரு காலத்தில் அறியமுடிந்தது. அதையேதான்  வைத்தியநாதன் மூலமாக  என்னிடம் பேச விழைந்தார்  . ஆனால் எனக்கு அங்கு யாதொரு எதிர்காலமிருப்பதாக இருப்பதாக எண்ணவில்லை தவிர , இவர்களை இப்படியே விடுத்து எனக்கான இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள என் அகம் விரும்பவில்லை . நான் அரசியலின் மையத்தை நோக்கி இழுக்கப்படுவதை உணரமுடிந்தது . சண்முகம் மீது பெரும் மதிப்பிருந்தாலும் , அதோர் ஆலமரம் அதனடி நிழலில் எதுவும் முளைக்காது . மாநில பெரும் தலைவரொருவரால் பார்க்க விழையப்படுவது , மனதிற்கு இதமாய் இருந்தும் நான் மறுத்துவிட்டான் . இதை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்றதும் அவர் கிளம்பிச்சென்றார் .

இவர்களை நம்பமுடியாது , ஒருவாரம் காத்திருக்கவும்என் சண்முகம் வைத்யநாதனிடம் சொல்லியிருந்ததையே நாராயணசாமி mp யிடமும் சொல்லியிருப்பார்ப்போல . அதன்பிறகு நாராயணசாமி தாமோதரனுக்கு காணாமலானார் . வைத்தியநாதன் என்னை வந்து சந்தித்து சென்றதை தாமோதரன் அறிந்திருந்தார் . அதை இப்போது பயன்படுத்தி பார்க்க  சொன்னார் . நான் மறுத்துவிட்டேன். எனக்கான ஆட்டத்தை வேறுமாதிரி வடிவைமைத்திருந்தேன் . அந்த மாநாட்டில்  இவர்களுக்கு நிகழந்த பரிபவத்தை நான் கணக்கிடாது போனாலும் அதற்கிணையாக ஏதாகிலும் நடக்குமென எதிர்பார்த்தேன் . ஒருமுறை ஏமாற்றம்  எவர்க்கும் நிகழ்வதே . தொடர்ந்து அது ஒருவனுக்கு  நிகழுமானால் அவனை போன்ற அறிவிலி பிறிதொருவனில்லை . நான் எக்காரணம் கொண்டும் இதை பாதியில் விட முடியாது . இந்தமுறை எனக்கு முதல்வரின் நடவடிக்கை மீது மிகுந்த அதிருப்தியில் இருந்தேன்  . பெரிய பொறுப்பிலிருப்பவர் , ஆனால் அவர்பொருட்டு கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டதாக அறிகிறேன் , எப்படியாகிலும் இருதரப்பையும் அழைத்து பேசியிருக்கலாம் . முதல்வர் ஒருதரபானார்  , பிறிதொரு தரப்பாக நான் என்னை முன்னிறுத்த துவங்கினேன்

உள்ளூர் தலைவர்களை சார்ந்திருக்கும் நேரமால்ல  இது . அவர்வர்களுக்கு ஒருவரை ஒருவர் வீழ்த்தி விளையாடும் நோக்கமிருக்கும் , இதில் நமது நோக்கம் எங்காவது  சிக்கி சிதைந்துபோகும் வாய்ப்பே அதிகம் . நான் இதை மூப்பனார் வரையிலும் கொண்டுசெல்ல முடிவெடுத்தேன் . இனி உள்ளூர் மாற்று தலைமைக்கு செல்வது சரி எனப்படத்தால்  நான் மூப்பனாரிடம் எனக்கு செல்வாக்கை இருக்குமானால்  அதை இப்போது பயன்படுத்தி பார்க்க முடிவு செய்தேன் . அதற்கு முன்பாக , அவரது தம்பி ரங்கசாமி மூப்பனாரை தொடுவதுதான் சரியாக்கப்பட்டது . அங்கும் பாலன் சந்திரசேகரை வைத்து எனக்கு எதிர்ப்பான நிலையை எடுக்கும் முன்பாக நான் அவரின் கதவை தட்ட முடிவெடுத்தேன் . அநேகமாக பாலன் அதை முன்பே அடைத்துவிட்டிருப்பார் என தெரியும் . வாழப்பாடி பெயரை சொன்னால் போதும் அந்தக்கதவு தானாகவே மூடிக்கொள்ளும் .

அனைத்தும் அடைபட்ட பிறகும் நமக்கான கதவு எங்கோ திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பதில் எனக்கு அசாத்தய நப்பிக்கை . அது என்னை கைவிட்டதில்லை, ரங்கசாமி மூப்பனாரை சந்திக்கும் வாய்ப்பை தாமோரனின் குழுவிடம் சொன்னபோது பிரகாசமானார்கள்அன்றே ரங்கசாமி மூப்பனாரை சந்திக்க கும்பகோணம் புறப்பட்டோம் . மாலை வழக்கம்போல 6:30 மணிக்கு புறப்பட்டு நேரடியாக அவரை சந்தித்து அனைத்தையும் விரிவாக எடுத்துக்கூறினேன் . இதில் தான் என்ன செய்யலாம் என்கிற குழப்பம் அவருக்கு இருந்திருக்க வேண்டும் ஆனால் நான் சொன்ன ஒரு விஷயம் அவரது மனதில் நச்சென சென்று அமர்ந்தது . கமிட்டி கலைக்கப்பட்டது மூப்பனாருக்கு தெரியாது . அதை ஏன் அப்படி செய்தார்கள்  என்கிற சந்தேகம் அவரை எந்த முடிவும் எடுக்க இயலாதபடி இருந்தது . அதே சமயம் வாழப்பாடி கட்சியில் இணைந்ததாக எழுந்த குற்றச்சட்டு அப்படியே நிலுவையாக இருந்தது

நாங்கள் பேசிக்கொண்டிருந்த இடைவெளியில் புதுவையிலிருந்து சிலர் வந்திருப்பதாக சொன்னதும் , அவர் எங்களை சற்றுநேரம் காத்திருக்க சொல்லிவிட்டு , அவர்களை உள்ளேவர சொன்னார் . மணி அப்பொழுதே இரவு 9:30 மணி  தாண்டி இருந்தது . எங்களுக்கும் வேறுவழி இல்லை வெளிவந்தோம் . காத்திருந்தோம் . எனக்கு யார் புதுவையிலிருந்து என தெரிந்து கொள்ள  ஆர்வமாய் வெளியே வர அது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி . மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் . கண்ணனின் ஒருகால அணுக்கர் . இவர்  ரங்கசாமி மூப்பனாரின் தொடர்பிலிருப்பது அப்போதுதான் அறியமுடிந்தது . ஒரு சிறு அசௌகர்யமா உணர்ந்தேன் . இவர் எவ்வகையில் பார்த்தாலும் எதிர் முகாம் . நம்மைப்பற்றி எப்படியும் நல்ல முறையில் சொல்லப்போவதில்லை . சரி இது இத்துடன் முடிவுறுகிறது . அதுவும் நல்லதற்கே என்கிற எண்ணத்தோடு , சிறிது பதட்டமாக வெளியில் அமைந்திருந்தோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்