https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 165 * நினைவுகளை பிடித்தல் *

ஶ்ரீ:




பதிவு : 165 / 239     தேதி :- 21 ஆகஸ்ட்  2017

* நினைவுகளை பிடித்தல் *


மீண்டும் இயக்கத்தில்
1996 தேர்தல் களம் - 1

அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் இனி விடமாட்டார்கள் . நான் “சரி நாளை வருகிறேன் ஆனால் சண்முகத்தை பார்க்கமாட்டேன் . காந்திராஜுடன் இணைந்து என்னால் என்ன முடியுமோ செய்கிறேன்” என்றதும் மரியதாஸ் விடுவதாகயில்லை .“உன்னை திருப்பவும் அழைத்துவந்த பெருமை எனக்கு இருக்கட்டுமே அதை எனக்கு தரமாட்டாயா” என்றதும் நான் ஒருவார்த்தையும்  பேசாது அவருடன் புறப்பட்டேன் .




நான் முன்னாள் அமைச்சர் ஜோசப் மாறியதாஸுடன் காந்திராஜை சந்திக்க புறப்பட்டேன் . அவர் தனது அரசியல் வாழ்வு , ஏற்றம் இறக்கம் என ஏதேதோ காரில் பேசியபடி வந்தார் . நான் அவர்சொன்னதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாய் அவரை பார்த்தபடி இருந்தாலும் , மனதில் வேகமாய் அடுத்தடுத்து நிகழக்கூடியதை நினைத்தபடி அவருடன் சென்று கொண்டிருந்தேன் . காத்திராஜ் சாமித்தோட்டம் என்னுமிடத்தில் வாக்காளர் சந்திப்பு நிகழ்த்திக்கொண்டிருந்தார் . நான் ஜோசப் மரியதாஸுடன் சென்று இறங்கினேன் . அங்கு ஐம்பது அறுபதுபேர் கட்சி சின்னம்போட்ட பேட்ஜ் அணிந்து துண்டு பிரசுரங்களை வருவோர் போவோருக்கு வினியோகித்துக் கொண்டிருந்தனர் . ஜோசப் மரியதாஸ் அங்கிருந்தவரிடம் "காந்திராஜ் எங்கே" என்றதும் ,அவர் அங்கு அருகிலிருந்த வீட்டை காண்பித்து “உள்ளே இருக்கிறார்” என்றனர் . 

புதுவை தேர்தல்கள் வேடிக்கையானது , அதேசமயம் சிக்கலானதும்கூட . ஒவ்வொரு தொகுதியும்  அளவும் வாக்காளர் எண்ணிக்கையும் மாறுபடும் . சமீபத்தில் நிகழ்ந்த தொகுதி மறுசீரமைப்பிற்கு முன் ராஜ்பாவன் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்களே ஏறக்குறைய எட்டாயிரம்தான் . சுமார் எண்பதுசதவிகித போலிங் என்றாலும் , ஆறாயிரத்து ஐநூறு பேர் வாக்களிப்பார்கள். பிரதானமான காட்சிகள் என் எடுத்தல் மூன்று அல்லது நான்கு . இரண்டாயிரத்து எண்ணூறு ஓட்டுவாக்கினாலே வெற்றி நிச்சயம் . எனவே ஒவ்வொரு வீடும் முக்கியத்தும் வாய்ந்தது  . ஒருவருக்கு ஐந்து குடும்பம் எதிரானால் அவர் தோற்பது உறுதி . ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு சுற்று வாக்குசேகரிப்பு நிகழ்துவார்கள் . ஏறக்குறைய ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துவிடும். தேர்தல் பெரும்பாலும் மே மாதம் தான் நடைபெறுகிறது .உக்ரமான வெயிலில் சுற்றுவதை காட்டிலும் வதை பிறிதொன்றில்லை.

அங்கு நின்று கொண்டிருந்தவர்களை பார்த்தேன் . இவர்கள் வேறுவிதமான கட்சிக்காரர்கள் . உள்ளூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்புள்ளவர்களை எப்போதும் சார்ந்திருப்பார்கள் . சலுகைகளுக்கு ,பணத்திற்கு சிபாரிசுக்கு இப்படி . இதில் ஒரு பத்துபேர் கூட கட்சி பிண்ணனி உள்ளவர்களாக  இருப்பதில்லை . அவர்கள் நிலை மாறிக்கொண்டே இருப்பார்கள். வேட்பாளராக வருபவர்களும் இந்த தேர்தல் வெற்றி தோல்விக்கு பிறகு இவர்கள் யாரையும் கண்டுகொள்ள மாட்டார்கள் . அவர்களுக்கும் இது தெரியும் . ஆனாலும் அந்த ஒருமாதம் , மாரியாத்தா கூழ்திருவிழா கணக்கில் , அதில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்   சலம்பலும் கூச்சலுமாக உற்சாக சண்டை என அதில் ஒரு கலியாட்டென நேரம்  கழிப்பதில் பொழுதை போக்குவார்கள் . இது மிக விசித்திரமான கூட்டம் .முக்கியமான வேலைகளுக்கு நம்பிக்கையானவர்கள் அனேகமாக வேட்பாளரின் உறவினர் அல்லது நண்பர்களாக இருப்பார்கள் . இந்தக்கூட்டம் கொஞ்சகாலம் அவர்களை சுற்றியபடி இருக்கும் . 

ஒரு வீட்டினுள்ளிருந்து சட்டென வெளியில் வந்தார் காந்திராஜ் . என்னை எதிர்பார்க்காததால் சற்று திகைத்தவரைப்போல நின்று, பின் சிரித்தபடி என்னை நோக்கி வந்தார் . நெருங்கிவந்ததும் மரியதாஸ் அவரிடம் என்னை  திருமணத்தின்போது பூட்டிவிடுவதுபோல என்கையை காந்திராஜ் கையில் வைத்து “என்னிடம் சொன்னதை நான் செய்துவிட்டேன் ,இனி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார் . காத்திராஜ் மகிழ்வுடன் “மிகவும் சந்தோசம் அரி" . என்ன முடியுமோ அதை செய்துக்கொடுங்கள்” என்றார் நானும் “என்னால் என்ன இயலுமோ அதை கண்டிப்பாக செய்கிறேன்” என்றேன் . காந்திராஜுடன் இருந்த ஓரிருவர் எனக்கு சிறிது முகப்பழக்கமென்பதால் அவர்களுடன் பேசியபடி, நானும் மரியதாசும் அன்று இரவுவரை தொகுதியை சுற்றிவந்தோம் . இருள் கவிழ்ந்ததும் ஓட்டு சேகரிப்பு முடிந்தது . காந்திராஜ் என்னிடம் இன்று இரவு அல்லது நாளை காலை ,உங்கள் சவுகரியம்போல் என்னை சந்தியுங்கள் , நான் உங்களுடன் நிறையப்பேச வேண்டும் என்றார் . நான் அவசியம் வருவதாக சொல்லி விடைபெற்றேன்.

எனக்கு இது மிகவும் விசித்திரமான அனுபவமாக இருந்தது . காந்திராஜுடன் இருந்தவர்கள் அவரை சார்ந்தவர்களாக , கட்சிக்குள் எந்த தொடர்புமில்லாது தனித்தீவு போல இருந்தார்கள் .ஏறக்குறைய எல்லாத்தொகுதிகளிலும் இதுதான் நிலை. ஒரு தொகுதியிலிருப்பவர்களுக்கு பக்கத்துத்தொகுதியில் உள்ளவர்களை தெரியாது . இது தவிர வேட்பாளரை சுற்றி பல அடுக்குகளாக அவரது அணுக்கர்கள் இருப்பார்கள் .முதல்நிலையில் உள்ளவர்கள் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் . அவர்கள் பெரும்பாலும் உறவு அல்லது நட்பின் அடிப்படையிலேயே இருப்பவர்கள் இரண்டாவது அடுக்கு சொந்த மற்றும் கூட்டணி கட்சியில் பொறுப்பிலுள்ளவர்கள் , தொகுதி வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்கள் அல்லது நீண்ட காலம் தேர்தல் பணியில் அனுபவமுள்ளவர்கள். மூன்றாவது அமைப்பு வேலைகளை செய்து அதற்கு பலன் பொருளாக அன்றே முடித்துக்கொள்பவர்கள் அல்லது வேலைவாய்ப்பு வேறு ஏதாவது அரசாங்க உதவிக்கு காத்திருப்பவர்கள் . எனக்கான இடம் நான்  கண்டடையவில்லை . 

எனக்கு தேர்தல் அரசியல் சரியாக வராது . இதன் விழுமியங்கள் வேறுமாதிரியானவைகள் . நான் தினம் காந்திராஜை இரவுநேரங்களில் சந்திப்பதை வழமையாக கொண்டேன் . அவருக்கு என்னுடைய கட்சிபூர்வீகம் தெரியாது . அவர்  தனது வக்கீல் துறையில் புதுவையில் ஒரு ஜாம்பவான் . நீண்டகால காங்கிரஸ் அனுதாபி  . ஒவ்வொரு தேர்தலுக்கும் சம்பிரதாயமாக  சீட்டு கேட்பார் அதுவரையில் கிடைக்கவில்லை . மரியதாசுடன் சணமுகத்திற்கு ஏதோ மனப்பிணக்கு, அவருக்கு மற்றொருமுறை சீட்டு கொடுக்க விருப்பமில்லை . ஆனால் கிருத்துவரில் ஒருவர்கூட பிரதிநிதித்துவமில்லை என்கிற கோணத்தில் மரியதாஸ் லாபியில் ஈடுபட . அவருக்கு மாற்றாக அதே சமூகத்தைச்சேர்ந்த காந்திராஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. 1991 தேர்தலில் தோல்வியுறுவார்  எனகிற கணக்கை தாண்டி அனுதாபஅலையில் 43 ஓட்டு வித்தியாசத்தில் வென்று அமைச்சருமானார் . முழு நேர அரசியல் விஷயங்களில் பல குளறுபடிகளை செய்ததனால் அவருக்கு ஆற்றல் மிக்க அமைப்பு தொகுதி அளவில் அமையவேயில்லை . அதனால் பின் எப்போதும் அவர் தேர்தலில் வெற்றி அடையவே முடியவில்லை .

காந்திராஜ் ஐந்தடிக்கும் குறைவான குள்ளமான உருவமும், முழுவழுக்கை விழுந்த தலை , ஐயங்கார் என்றால் தயங்காது நம்புகிற நல்ல சிகப்பு நிறம். பழைய பாணி முரட்டு காதர் சட்டை வேட்டி . சட்டையில் கீழே இரண்டு பாக்கெட் வைத்த குபேரின் பிரெஞ்சு பாணி சட்டை . பழக இனிமையானவர் என்ன காரணத்தினாலோ எவரையும் தனது வயதை மறந்து  “அண்ணன்” என விளிப்பது அவரது வழமை . வக்கீலுக்கே உரிய எவரையும் நம்பாதது அவருக்கு இயல்பில் இருந்தது . யாரையும் சட்டென தனக்கு போட்டியாக உருவகித்துவிடும் பழக்கம் . அதை அவரை சுற்றியிருந்த சிலர் அவரை தவறாக பயன்படுத்திவந்தனர் . அதன் விளைவாக அவர் அடிக்கடி அரசியல் முட்டுசந்திற்கு வந்து நிற்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

தேர்தல் நடந்த இரண்டொரு நாளில் வாக்குசீட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் .அனால் அந்தத்தேர்தல் முடிவை அறிவிக்க பதினைந்து நாட்கள் தள்ளிப்போனதால் . அது நீண்ட காலம் , எந்த வேலையுமில்லாது போனது . நான் காலையிலும் மாலையிலும் அவரை சென்று சந்திப்பதை வழமையாக கொண்டேன் . 

நாங்கள் ஓரளவிற்கு நெருக்கமானதாக நான் நினைத்த காலம், இருப்பினும் . பழைய அனுபவம் காரணமாக சற்று தள்ளி இருந்து அங்கு நடப்பதை வேடிக்கை கொண்டிருப்பேன். அங்கு தினம் வருபவர்கள் தொகுதியின் எளிய  மனிதர்கள்  என்பதால், அவர்கள் யாருக்கும் என்னைத் தெரிந்திருக்கவில்லை . அதுதான் ஆரம்பக்கட்டமாக நான் காந்திராஜை சென்று சந்திக்க எந்த மனத்தடையையும் விளைவிக்கவில்லை . அவர்கள் மாநில அரசியல் அதுயிதுவென ஏடாகூடமாக அவரவர் கற்பனைக்கேற்ப பேசி எப்போதும் பூசலிட்டபடி இருப்பார்கள். எனக்கிது நல்ல பொழுதுபோக்கு .அவைகளில் எனக்கு ஒருவரை தெரியும் .அவரை இளைஞர் காங்கிரஸ் நிகழ்வுகளில் பார்திருக்கிறேன் . அவருக்கும் என்னை நன்கு தெரியுமென நினைக்கிறேன். அவர் மட்டிலும் நான் வந்தமர்த்தால் அந்த கூட்டத்தை அமைதிப்படுத்திய படி இருப்பர் அவ்வப்போது என்னிடம் இதை "நீங்கள்   யாரென  இவர்களுக்கு தெரியாது”  பெரிதுபடுத்திக்கொளாதீர்கள் என்பார்  .  . நான் அவரை அடக்கி “எக்காரணத்தைன்கொண்டும் என்னை பற்றி இங்கு பேசாதீர்கள்” என்றேன் . சிலசமயங்களில் அபத்தமாக அவர்கள் ஏதாவது அரசியல் பேசினால் கூச்சத்துடன் நெளிந்தபடி இருப்பார் . நான் சொன்னாலும் சில சமயம் அவர்கள் ஏதாகிலும் முரண் மிக்க அரசியல் பேசும்போது கண்டிக்க தவறுவதில்லை .

அன்று மாலை நான் காந்திராஜ அலுவலகத்திறகு வந்தபோது அலுவலகம் அலராக இருந்தது . அன்றைய பரப்பான செய்தியாக “இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலன் கட்சியைவிட்டு ஓட்டம்” என வந்திருந்ததை குறித்து  . கண்ணன் தலைமையில் துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் அன்று மதியம் இணைந்திருந்தார் . அன்று அதை குறித்து காரசாரமாக பலர் விவாதித்தபடி இருந்தனர் . நான் பொதுவில் இவர்கள் என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என அவதானிப்பதற்கு அவர்களை கவனித்தபடி இருந்தேன் . நல்லவேளை ரவி அங்கு இல்லை . அவன் அங்கு இருந்திருந்தால் இவர்களை பேசவே விட்டிருக்க மாட்டான் . அது ஒரு நிம்மதி . நான் பழைய நினைவுகளின் மத்தியில் கற்பனையாக வாழ்ந்து கொண்டிருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...