https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 150 * * வெட்டு சொற்கள் * *

ஶ்ரீ:




பதிவு : 150 /  224    தேதி :- 06 ஆகஸ்ட்  2017

*  வெட்டு சொற்கள்  *

இயக்க பின்புலம் - 74
அரசியல் களம் - 43


\\தாமோதரன் கமலக்கண்ணனை தவிர்த்து  தனியாக என்னை சந்திக்க வந்தாரென்றால் என் யூகம் சரி. எப்படியும்  என் பேசுமுறை மாறப்போவதில்லை .நான் தாமோதரனிடம்   எங்கிருந்து  தொடங்கவேண்டும் என்கிற  பேசு முறைமைகளை பிறிதொரு முறை மனதில் எடுத்து பேசி பேசி, பிழையூகம் கொள்ள செய்யும் விதைகளை விலக்கி செறிவாக்கியபடி, அவருக்காக   அமைதியாக காத்திருந்தேன்.//





வியாபார விஷயமாக வங்கிவரை சென்று திரும்பிய நேரத்தில்சேகர் வந்து சென்றதாக எனது அலுவலக மேனேஜர் சொன்னார் . எனக்கே ஆச்சர்யமாக இருந்தது ,எப்படி மறந்துபோனேன் இதை  , நல்ல வேலையாக அரைமணி நேரத்தில் திரும்ப வருவதாக சொல்லி சென்றான் என்றார் . அடுத்ததாக யோசிப்பதற்குள் சேகர் அலுவலகத்திற்கு  வந்துவிட்டான் . நான் ஒன்றும் பேசாது அவனை பார்த்ததும் அவன்தாமோதரன் டவுனில்தான் இருக்கிறார் , அநேககமாக இப்போது வந்துவிடுவார் என்றான்” . ஏதாவது சொன்னாரா என்றதற்கு . "ஒன்றும் சொல்லவில்லை . நீ பார்க்க விழைகிறாய் என்று சொன்னதும் வருகிறேன் என்று சொல்லிவிட்டார்" என்றான்

சொன்னதுபோல தாமைதாரன் உள்நுழைந்தார் . நான் அவரை வரவேற்று நலம் விசாரித்தேன். ஜாக்கிரதையாக கமலக்கண்ணனை பற்றி ஒரு சொல்லும் பேசவில்லை . அதை அவரே சொல்லட்டும் என விட்டுவிட்டேன் . சிறிது நேர மௌனத்திற்கு பிறகு . அவர் தடுமாற்றத்தில் இருக்கிறார் என புரிந்துகொண்டேன் ,நான் அவரிடம் "வெளியில் செல்லலாம்" என்றேன் அவரும் சரியெனன்று என்னுடைய வண்டியில் ஏறிக்கொண்டார் . சேகர் அவனுடைய வண்டியில் வந்துகொண்டிருந்தான் . நாங்கள் வழமையாக செல்லும்பிலிஸ் விடுதிக்குவந்து சேர்ந்தோம் . வழியில் தாமோதரன் மெள்ளசேகர் தேவையாஎன்றார் , "நான் அவனை ஒதுக்குவது சரிவராது , இருக்கட்டும்" என்றேன் . மேலும் இது அனைவரையும் இணைக்கும் பணி எவரையும் இழக்கலாகாது . சேகர் . பலரின் பலநாள் முயற்சியை அவன் ஒருவனே ஒன்றுமில்லாது செய்து விடுவான் , தவிறவும் அவனுக்கென பிரத்தியேக பணி  ஒன்று உள்ளது .

மூவருக்கும் சிற்றுணவு ,கொறிப்பான், டீ , சொல்லிவிட்டு தாமோதரன் பேச காத்திருந்தேன் . சட்டென கண்களில் வந்து சூழ்ந்த அடிபட்ட வலியுணர்வுடன் தொண்டையை செறுமியபடி ஒருசொல் சொல்லாது அமர்ந்திருந்தார் . நான் தான் அதிகமாக பேசுவது வழமை என்பதால் நானே தொடங்கட்டும் என காத்திருந்தார் என நினைக்கிறேன் . ஆனால் நான் துவங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்  , அது அழுத்தமான உரையாடலை சென்றடையாது . மேட்டிலே கொட்டிய நீரென பல திசைகளில் ஓடி விசை இழந்துவிடும்

நான்  என் பேச்சை விசை குறைகாது  இலக்கை அடைந்தபிறகும் மிச்சம்வைக்க வேண்டும் . தாமோதரன் சிறிய கணைப்பிற்கு பிறகு , சேகர் வந்து நான் அழைத்ததை சொல்லி , என்னை சொல்லுங்கள் என ஊக்கினார் . இதை எதிர்பார்த்ததுதான் . நான் அவரிடம்பாலனுடன் என்ன முரண்என்றேன் . அவர் சொன்னது நான் யூகித்ததே . மாநாட்டிற்கு பல இடத்திலிருந்து நிதி திரட்டி தந்ததில் தாமோதரன் பெரும் பங்கு வகித்தார் . கொடுத்த அனைவரும் என்ன கோவில்காரியத்திற்கா கொடுத்தார்கள், புண்ணியம் புருஷார்த்தம் என்று . அவர்களில் பலர் வியாபாரிகள் பலவித அரசாங்க உதவியை எதிர்பார்த்துதான் செய்திருந்தார்கள்  . 

தாமோதரனின்நண்பரின் நிலத்திற்கு ஆழ்குழாய் போர் போடுவது நெடுநாள் பிரச்சனை  , பத்திரத்தில் ஏதோ சட்ட சிக்கல். அதை காரணம்காட்டி அரசு இழுத்தடித்து வருகிறது , அவரின் நண்பரும் பல முறை முயன்றும் கோப்பு எவரிடமிருக்கிறது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. பாலனிடம் பலமுறை சொல்லியாகிவிட்டது , ஒவ்வொரு முறையும் , பாலன் தன்னுடைய சிக்கலை சொல்லியபடி காலம் தாழ்த்திவந்தார் , இன்று காலை நண்பரை அழைத்துக்கொண்டு தாமோதரன்  நேராக ரங்கசாமியை சந்திக்க சென்றிருந்த போது பாலன் வேறொருவருக்கு ஏதோ அரசாங்க அனுகூலத்திற்கு விண்னப்பித்துக் கொண்டிருந்த போது அங்குசென்று சேர்ந்தார்.

தாமோதரனின் வருகையை பாலன்  அந்த சந்தர்ப்பத்தில் எதிர்நோக்கவில்லை என்பதால் நிலை தடுமாறி போனார் . தாமோதரன் மெளனமாக தன்னுடைய காகிதங்களை அவர் கைகளில் கொடுக்க அடிபட்டவலியுடன் திருப்பி தாமோதரனின் கைகளில் திணித்து வெளியில் காத்திருக்கும்படி சொல்ல , தாமோதரன் நிகர்நிலை இழந்தார் . அழைத்துவந்த நண்பருக்கு எதிரில் இது நடந்ததால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக எழுந்த உணர்வு அவரை நிலைதடுமாற செய்துவிட்டது.

பல நாள் தன்மனசமாதானங்களின்  எல்லைகள் தகர்ந்துபோனது , இனி பொறுப்பதில்லை என்கிற கட்டம் தொட்டதும் , “பலமுறை சொன்னேன் அரசியல் சூழ்நிலைகளை காரணமென சொல்லி தட்டிக்கழித்த நீங்கள் இன்று உங்களிடம் நேரடியாக வந்த சிக்கலை எடுத்துக்கொண்டு தீர்க்க வந்து விட்டீர்கள் , இனி எல்லாம் நேரடியாகத்தான் வரவேண்டுமென்றால் நாங்கள் எதற்குஎன்றதும்நீ என்ன என்னை கேட்டுக்கொண்டா சட்டமன்றம் வருகிறாய் இப்போது  என்னிடம் வரும் உனக்கு, எப்போதும் அப்படித்தான் வரவேண்டும் என தெரியவில்லையா . யார்யார் எதற்காகவெல்லாம் கொடுக்கும் வாக்குறுதிக்கெல்லாம் நான் ஜவாப்பல்ல , எதிலும் நேர்மை தேவை” என்றார்  , அது மிக தவறான விசை. அதை பாலன் தொட்டது அவரின் ஊழ்

காக்கப்பட வேண்டியவனால் கடுமையாக தாக்குண்டவன் தன்னை நொந்து கொள்வதை தவிர பிறிதொரு வழியில்லை , " உன்னிடம் வந்து நிற்பதற்கு இது வேண்டியதுதான் அதற்கு என்னை நானே கழற்றி அடித்துக்கொள்ள வேண்டியதே என சொல்லி சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...