https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

Netflix “Takers ”

ஶ்ரீ:



பதிவு : 701 / தேதி 19 ஜனவரி 2020



Netflix “Takers ” ****




சில சமயம் இலக்கிய வாசிப்பை தவிர காட்சி ஊடகத்துறை அறிய புரியல்களை கொடுத்து விடுவதுண்டு . சமீப காலமாக நிறைய வலை தொடர்களையும் , திரைப்படங்களையும்  நெட்ப்ளிக்ஸ்சில் பார்க்க நேர்த்தது . அவை பல நாடுகளின் நிலவியல் கூறுகளை , அங்கு நிலவும் பண்பாட்டு தொகைகளை மிக நெருக்கமாக உணரவைத்து விடுகின்றன . அவை மிக நீண்ட தொடர்கள் என்பதால்  , அனைத்தைக் குறித்தும் மிக விரிவாக எடுத்துவைக்க முடிவதுடன் அவற்றிற்கு அந்த நாட்டில் பெரிய வரவேற்பு இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது . ஐரோப்பிய நிலவியல் ,பண்பாடு , குடும்ப , சமூக கட்டமைப்பு . வாழ்வியல் விழுமியங்கள் குறித்தும் அறிந்து கொள்ள நேர்ந்தது .அது ஒருவகையில் அவர்களுடன் எனக்கு முன்பிருந்த   ஒப்பிட்டு பார்க்கும் மனநிலையை தடுக்கிறது . இந்திய நிலப்பரப்பையும் அதன் பண்பாட்டையும் அவர்களுடன் இணைத்து குழப்பிக்கொள்வதை தவிற்க இயல்கிறது .இந்தியாவின் பிரிட்டீஷாருடன் காந்திக்கு இருந்த புரிதலுக்கான காரணமும் அவரின் நிலைபாடுகளில் உள்ள பின்புலம் குறித்து மிக தெளிவாக புரிந்து கொள்ள வைக்கிறது.

 சில தொடர்களையும் அதை சார்ந்த திரைப்படங்களும் இணைத்து பார்க்கும் போது அவை மேலும் விரிவான தளத்தை நோக்கி அழைத்து செல்வது பிரம்மிப்பை தருகிறது . அவற்றை பதிந்து வைக்கும் . முயற்சியாக அவற்றை பற்றிய புரிதல்களை இங்கே பதிவிட முயல்கிறேன்.கதை விமர்சனமாக இதை எழுதும் போது எனக்கு  மொழி மேலும் அணுக்கமாவதை உணரமுடிகிறதை .கதை விமர்சனம் எழுதுவது புதிய எழுத்து யுக்தியை கொடுக்கலாம் . பல விதங்களில் எழுதிபார்க்க முயல்கிறேன் .
Netflix Takers ஆங்கில திரைப்படம் வழமையான பிறிதொரு வங்கிக் கொள்ளை படம். ஆங்கில திரைப்படங்களில் வாங்கிக் கொள்ளை விதவிதமாக சொல்லப்பட்ட போதும் அது இன்றுவரை சொல்லி தீரவில்லை என்றே நினைக்கிறேன் . அறத்தை வலியுறுத்தும் பல படங்கள் வெளிவந்த போதும் . அதன் எதிர்மறை படங்களே  பெருமளவில் வெளிவருகின்றன . இறுதியில் அவர்கள் வெல்வதாக காட்டப்படும் படங்களே அதிகமும் இது அந்த பட்டியிலில் இடம்பெறுகிறது . மேற்கத்திய ரசிகர்கள் வங்கி கொள்ளையிடும் படங்களை வெற்றியடைய வைப்திலிருந்து  , அவர்களது ஆழ்மனதில் வங்கிக்கு எதிராக அல்லது காலமெல்லாம் உழைத்து பொருளீட்ணுவதை விட உயிரை பணயம் வைத்து சில மணி நேரங்களில் கிடைக்கும் பல நூறு கோடி ஈர்பைப் உருவாக்குவதை அறிய முடிகிறது .இன்று இந்தியவில் வங்கிகள் மீது பொது மக்கள் கொண்டிருக்கும் கசப்பு இங்கும் அத்தகைய படங்கள் எடுக்கப்பட்டு  வெற்றி பெற்றால் ஆச்சர்யமில்லை .
வங்கி இரும்பு வண்டியை கொள்ளயிடுவதில் உதவும் நண்பன் கோஸ்டை நம்பி ஏமாற்றுகிறார்கள் . ஆறு பேர் கொண்ட நண்பர் குழு வங்கி கொள்ளையிடுவதை தொழிலாக செய்கிறார்கள் . கோஸ்ட்டின் முன்னாள் காதலியை மணக்க இருக்கும் நண்பனை பழிவாங்க அவர்களை இதில் ஈடுபடுத்துகிறான். வங்கியின் இரும்பு வண்டியை கொள்ளையிடுவதில் எதிர்பாராமல் நிகழும் சிறு விபத்து மொத்த திட்டத்தையும் கெடுக்கிறது . இடையே சின்ன சின்ன நேர்த்தியான சிறு கதைகள் இடையே சேர்க்கப்பட்டு முழு கதையின் ஓட்டத்தை இணைக்கிறது . திரைக்கதை நெசவு மிக நுட்பாக இருக்கிறது . கொள்ளயிட்ட பணத்துடன் நண்பர்களில் இருவர் மட்டும் தப்பித்து செல்வதாக கதை முடிகிறது . திரைக்கதை சொல்லும் விதம் படத்தை சலிப்படையாது பார்க்க தூண்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்