https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 10 பிப்ரவரி, 2022

அடையாளமாதல். * அறம் கூச்சத்தின் உடல்மொழி *

 


ஶ்ரீ:பதிவு : 606  / 796 / தேதி 10 பிப்ரவரி  2022


* அறம் கூச்சத்தின் உடல்மொழிஆழுள்ளம் ” - 04

மெய்மை- 04.
கூச்சம் அறத்தின் உடல் மொழி . தற்கணிப்பின் வழியாக அதை நியாயப்படுத்தி தன்மதிப்பை நிலைநிறுத்திக் கொள்கிறது . அது ஒருவகை பணிவின் வெளிப்பாடு அவை ஒருபோதும் குறுகலாக உருவெடுப்பதில்லைஒருவருடைய தன்னறம் புறவய காரணங்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் போது  உள்ளே ஒன்று அசைக்கப்பட்டு விடுகிறது, ஒரு சீண்டலைப் போலஅதில் எழும் நிலையழிதலை தனது தர்க்கத்தின் மூலமாக தனக்குள் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து உரையாடி ஒரு புள்ளியை கண்டடைந்து மனதை அமைதியை நோக்கிச் செலுத்துகிறது . அவரவரின் தன்னறத்தை பொறுத்து அவை மாறுபட்டுக் கொண்டே இருந்தாலும் , ஒரு நிலை அல்லது செயலுக்காக தன்னுடன் ஓங்கி தர்க்கித்துக் கொள்ளும் மனிதன் எல்லாவகையிலும் மேலானவன்அவன் தன்னைக் குறித்த தாழ்வு மனப்பான்மைக்குள் ஒருபோதும் செல்வதில்லை


Lk.அத்வாணி மற்றும் ரத்தன் டாடா போன்ற பெரும் ஆளுமைகள் கூட நம்ப முடியாத கூச்ச சுபாவிகளாக, அறிமுகமான உடன் சட்டென உரையாட தயக்கம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள் . ஒருமுறை அத்வாணியை சந்திக்க வந்த ரத்தன் டாடா அவருடன் ஒரு உரையாடலை துவங்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார் என சொல்லப்படுகிறது . அயோத்தியில் பாபரின் கும்மட்டம் பாதிப்புக்கு உள்ளாகாமல் போராட்டம் நடத்தப்படும் என அத்வாணியின் உறுதிமொழியை எப்படி அரசியல் மேதையான நரசிம்மராவ் நம்பினார் . அத்வாணியின் அறவுணர்வான கூச்சம் வெளிப்பாடுடன் அவரது ஆழ்மனம் உரையாடியிருக்க வேண்டும. அரசியல்வாதியின் உறுதிமொழி எப்படி ஏற்கலாம் என்பதை  ஒருபோதும் தர்ககத்தின் மூலம் விளக்கிவிட முடியாது,அது ஆழ்மனம் தொட்டெடுத்து தருவது . நல்ல அரசியல் ஆழ்மனதில் நிகழ்வது .


ஒரு பெரும் சுழல் போல உருவாகி வரும் மக்கள் திரளை எவராலும் கையாள முடியாது . அதை அத்வாணிக்கு அவரது அரசியலின் அனுபவம் சொல்லிக் கொடுக்கவில்லை. அல்லது அந்த கூச்சத்தினால் தன்னை முன்னிறுத்தாதல் மக்களின் நம்பிக்கையில் இருந்து தனது அரசியலை வென்றெடுக்க அவர் முயற்சித்து அவருக்கு எதிர்மறை விளைவை உருவாக்கியது அல்லது.கும்மட்டம் இடிக்கப்பட்டபிறகு நரசிம்மராவ் அத்வாணியின் மீது கடும் கோபம் கொண்டது அவர் தனது உறுதிமொழியை மீறினார் என்பதற்காக இருக்க முடியாது தனது ஆழ்மனக் கணிப்பு எப்படி பொய்த்தது என்கிற வலியில் இருந்து எழுந்திருக்கலாம் . பல வழக்குகள் அவர்மீது பாய்ந்தது போன்றவை வேறு செய்திகள். தலைவர் சண்முகமும் தயக்கமும், கூச்சமும் சுபாவமாக உள்ளவர் .


45 அகவை கடந்து வல்சராஜ் இளைஞர் காங்கிரஸ் தரைவராக பொறுப்பில் வந்த போது அவருடைய கூச்சம் அவருக்கு தயக்கத்தை, தடுமாற்றத்தை கொடுத்திருக்கலாம் . பின்னர் தில்லியில் நடந்த அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக தலைக்கு கரும் மை பூசி வந்த 55 வயது போளூர் வரதனை பார்த்த போது அந்த கூச்சம் சற்று விலகி என்னிடம்நான் பரவாயில்லை போலஎன கூறி சிரித்துக் கொண்டார் . வயது முதிர்ந்த குமரி அனந்தன் தமிழக காங்கிரஸ் தலைவரானதும் கூச்சமில்லாமல் போளூர் வரதனை இளஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க சிபாரிசு செய்தார் . அவர் குமரி அனந்தன் காலத்து இளைஞர் போல. அதற்கும் சண்முகம் சிபாரிசிற்கும் பெரிய வேறுபாடு உண்டு . குமரி அனந்தன் தனது தொடர்புறத்தலுக்கான இயலாமையை நீக்கிக் கொள்ள தனக்கு அணுக்கமான ஒருவரை கொண்டுவந்தார் . ஆனால் சண்முகம் வல்சராஜ் நியமனம் இளைஞர் காங்கிரஸை எந்த திசைக்கும் நகர இயலாது அதன் மேல் வைக்கப்பட்ட எடை. இளைஞர் காங்கிரஸின் வல்சராஜை தலைவராக நியமிக்கும் போது அவரது இளமை மிகுந்த உடல் தோற்றம் சண்முகம் தனது கூச்சத்தை கடக்க உதவியிருக்கலாம்


கூச்சத்தை வெல்ல தர்க்கதை முன்வைக்கும் போது அதற்கு மானுட அறத்தை மட்டுமே அளவுகோல் எடுக்க முடியும் . ஆழுள்ளத்தில் உறையும்அறம்ஒருவரில்சுபாவமாகவெளிப்படுகிறது. அந்த கூச்ச சுபாவத்தால் வாழ்க்கையில் இழப்பவைகள் குறித்த வருத்தத்தை, நிலையழிதலை தங்களதுஅறவுணர்வுடன் நிகழ்த்திக் கொள்ளும் தருக்கத்தைமுன்வைத்து தங்களை வெல்கிறார்கள் . எதிலும் அறம் பற்றி நம்பிக்கையில்லாதவர்களை சற்றும் கூச்சமில்லாதவர்களாக பார்த்திருக்கிறேன் . அவர்களைஅறம்ஒருபோதும் தொந்தரவு செய்வதில்லை. மூப்பனாரும் வாழப்பாடி ராம்மூர்த்தியும் சமூகத்தின் வெவ்வேறு பக்கத்தில் இருந்து வந்திருந்தாலும் சற்று கூச்சமுள்ளவர்களே . அவர்களது தன்மதிப்பு பாதிப்பிற்குள்ளான போது தயங்காமல் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்கள் . வாழப்பாடி ராம்மூர்த்தி காங்கிரஸிற்கு திரும்பினார் ஆனால் மூப்பனார் கூட்டணியாக தன் அடையாளத்தை இழக்காமல் உள்ளே வந்தார் . சண்முகம் ஒருபோதும் காங்கிரஸில் இருந்து வெளியேறவில்லை ஆனால் ஒதுங்கிக் கொண்டார். இவை அவர்கள் தங்களின் தன்னறத்துடன் உரையாடி அடைந்த இடமாக இருக்கலாம்.


வல்சராஜ் தயக்கம் காரணமாக இளைஞர் காங்கிரஸின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை. அங்கு நிலவிய குழப்பம் அனைத்து செயல்பாடுகளையும் உறைநிலைக்கு கொண்டு சென்றது . சண்முகம் அதைத்தான் அவரிடமிருந்து எதிர்பார்த்திருக்க வேண்டும் . தில்லியில் இருந்து தொலைபேசியில் என்னுடன் பேசும் போது என்னை முதன்மை பொதுச் செயலாளராக நியமித்திருப்பதாக சொன்னார். இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பட்டியலுடன் தில்லியில் ஒப்புதலுக்காக சென்ற போது சண்முகம் வைத்தரசைதான் முதன்மைச் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என சொன்னதாக கூறினார். நான் எந்த பதிலும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் தனது விருப்பம் காரணமாக அதைச் செய்யாமல் அந்த பதவிக்கு என்னை சிபாரிசு செய்திருப்பதாக கூறினார் . பாலனுக்கு அணுக்கனாக நான் இருந்ததை அறிந்தவர் சண்முகம் என் மீது அவருக்கு இருக்கும் அவநம்பிக்கையை குறித்து எனக்கு வியப்பில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 68 அழைப்பிதழ்

 காண்டீபன்