https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

அடையாளமாதல் * தீர்வுகளை உள்ளடக்கி எழும் சிக்கல் *

 


ஶ்ரீந:பதிவு : 606  / 796 / தேதி 04 பிப்ரவரி  2022


* தீர்வுகளை உள்ளடக்கி எழும் சிக்கல்ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 04.
ஆழுள்ளத்தில் எழும் அலை சிந்தனையாக நிகழ்ந்து கொண்டிருப்பதை ஏதாவது ஒரு உடல் மொழியாக பிறருக்கு மட்டுமின்றி அவருக்கும் கூட சமயங்களில் வெளிப்படுகிறது . காரணம் அது அவர்கள் அறியாமல் தங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆழ்மனச் செயல்பாடு . அது ஒருவரின் எண்ணத்தை பிரதிபலிக்கக் கூடியது என்பது என்னை பற்றி என் மகள் விஜி சொன்னபோது முதலில் அதை மறுத்தேன் சில நாட்களில் என்னையும் அறியாது அது நிகழ்வதை , என்ன முயற்சித்தாலும் அதை நிறுத்த முடியமையால் அந்த புரிதலை அடைந்தேன். ஒவ்வொரு முறையும் நான் பேசி முடித்து எழுந்து செல்வதற்கு முன்னர் கை விரல் முட்டியால் மேஜையை மெல்லக் குட்டுவது போல சிறிய ஒலியெழுப்பி செல்வதாக சொன்ன போது நான் அதை நம்பாமல் என் மனைவியை பார்க்க அவள் அமோதித்தாள் . பின்னர் நான் கூர்ந்து என்னை கவனித்த போது அது என்னையும் மீறி நடக்கும் ஒன்று அந்த கணம் அதை நிகழ்த்துவது வேறு ஒன்று . என் மனம் ஒரு விஷயத்தை மிக தீவிரமாக எண்ணி முடித்த பிறகு மேலதிகமாக பேச ஒன்றும் இல்லை என்பதை என் உடல்வழியாக வெளிப்படுவது எனப் புரிந்து கொண்டேன் . நான் வாழ்நாளெலாம் சந்தித்த பல துறை சார்ந்த ஆளுமைகளில் இந்த உடல் மொழி வெளிப்பாட்டை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.


இரவு தலைவர் வீட்டில் சந்தித்து  அந்த பட்டியலை அவரிடம் கொடுத்த போது நான் சொன்ன இரண்டு விஷயம். ஒன்று புதிதாக சிலரை ஏன் அழைக்க வேண்டும் . இரண்டு எதன் அடிப்படையில் . இதை அவர்களுக்கு புரியவைக்க முயன்றேன்நான் எனது ஆதரவாளர்களை உள்ள நுழைக்க முயல்கிறேன் என்பதை கடுமையாக மறுத்தேன். அதற்கு சாட்சி அந்த பட்டியல் உள்ளவர்களில் பெயர் அவர்களை யார் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது . அவர்களில் எனது ஆதரவாளரகளாக யாரை சொல்லகிறார்கள் என்பது கேள்வி . தொகுதியில் களப் பணிச் செய்து கொண்டிருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நம்பிக்கையளித்து உள்ளே கொண்டு வந்திருக்கிறேன் . நான்  அவர்களுக்கு பதவி குறித்து எந்த உத்திரவாதமும் கொடுக்கவில்லை என்பதை விட அவர்கள் அதை எதிர்பார்த்து வந்தவர்களும் அல்ல . அதே சமயம் இது பதவி நியமனம் குறித்த கூட்டமில்லை . புதியவர்களுக்கு கட்சியை புரியவைப்பதும் அதில் நம்பிக்கையை குறித்து பேசுவதும் . அரசியலின் விழுமியம் சார்ந்த நம்பிக்கை முன்வைப்பது . அரசியலில் தனிமனித ஒழுக்கம பற்றிய வளர்த்தெடுப்புகள் குறித்து மிக விரிவாக தயாரிக்கப்பட உள்ள கூட்டத்தில் நிரல்கள் அவர்கள் முன்னால் நிகழ வேண்டும் என நினைக்கிறேன் . இதில் என்னை முன்னிலைப்படுத்துக் கொள்ளும் தேவை எனக்கில்லை . கண்ணன் , பாலன் போன்றவர்களை முன்வைத்த அரசியல் சென்று சேர்ந்த இடமென்ன என்பதையும் அதன் இன்றைய நிலையை என்ன என்பதை புதிதாக உள்நுழைய இருப்பவர்கள் முன் வைக்க கூடாதென்றால், பின் எவர் முன்பாக அவை வைக்கப்பட வேண்டும் என கூறட்டும் .


இவர்கள் வேண்டாம் சரி . மாற்று நண்பர்களின் பெயர்களை இவர்கள் சொல்லட்டும் அவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றால் அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்கிறேன் . ஆனால் கொடுக்க் கூடாது என யார் நொல்ல முடியும் . யாரும் வேண்டாம் என்றால் யாருக்கானது இந்த இயக்கம் . கடந்த 4 ஆண்டுகளில் நீங்கள் நடத்திய கூட்டம் அல்லது போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கொடி மற்றும் பதாகைகளுடன் வந்து கலந்து கொண்டார்கள் அப்போது சொல்லியிருக்கலாம் இந்த மறுப்பை ,தவிர இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான இவர்கள் முன்னெடுத்த செயல்பாடுகள் என்ன என்று இங்கு சொல்லட்டும் . இவர்களின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களும் வரட்டும் நான் அவர்கள் வேண்டாம் எனச் சொல்ல மாட்டேன் . இதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை என்றதும் . கூடியிருந்தவர்களில் நிகழ்ந்த உள அசைவை உணர முடிந்தது . சண்முகமும்அது சரிதானே விட்டுப் போனவர்கள் யார் என முடிவு செய்து அவர்களையும் அழைத்து வாருங்கள் பிரச்சனை இத்துடன் முடியட்டும்என் சொல்லிவிட்டார் . சிக்கல்கள் இந்த அளவில் முடிந்து  போன பிறகு எனக்குள் அதுவரை அடங்கி இருந்து சீற்றம் நிலையழிதலாக மாறியது உள்ளக்குள்ளே ஒன்று அசைந்து விட்டதை புரிந்து கொள்ள முடிந்தது . இதில் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளன் பாண்டினும் இருந்தான் .   

என்னை சார்ந்து நிற்பாதாக தோற்றம் கொடுத்தாலும். அவன் தன்னை முன்னிறுத்தும் அரசியலுக்கு காத்திருந்தான் . நாராயணசாமி இந்த விஷயத்தில் அவனை வெளிப்படையாக ஆதரிப்பார் என அனைவருக்கும் தெரியும் .நான் சண்முகத்தை விட்டு நாராயணசாமியை ஆதரிக்க வேண்டும் எனப் பல முறை என்னிடம் விவாதித்திருந்தான்


கட்சி அரசியல் என்பது எங்களைப் பொறுத்தவரை ஒரு தலைவரை பின் தொடர்ந்தே நிலைக்க முடியும் . அது ரசிகர் மன்ற செயல்பாடுகள் போல் இல்லாமல் நாம் யாரை பின் தொடர்கிறோம் அவரது அரசியல் விழுமியங்கள் என்ன அவை அவர் செயல்பாட்டில் எப்படி வெளிப்படுகிறது எனபது குறித்து முடிவு செய்யப்படுகிறது. நாராயணசாமி முதல் நிலை தலைவராக ஒரு நாளும் வர இயலாது . விதி வசத்தால் அந்த இடத்தை அடைந்தார் என்றால் அவர் தனக்கும் இருந்த பதவிக்கும் பழியே சேர்ப்பார். அவரால் நிரந்தரமாக ஒன்றை எப்போதும் முன்வைக்க முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை மாற்றிக் கொள்வது அரசியல் என நம்புகிறவர். அவர் எத்தகைய உயர்ந்த பதவிநில் இருந்தாலும் தனக்கு பின்னால் ஒரு நிரையை ஒருபோதும் உருவாக்க முடியாது என்றேன் . இதில் வேடிக்கை அவன் என்னை மறுக்கவில்லை என்பதுதான் .


கூட்டம் விடபட்டவரகளின் பட்டியலுடன் தலைவரை வந்து சந்திப்பதாக கூறி கலைந்து சென்றார்கள். பறைவை கூட்டம கலைந்து சென்ற மரம் போல அமைதி திரும்பியது. கட்சியின் வேறு சிக்கல்களை சொல்ல வந்திருந்த முன்னணித் தலைவர்கள் சிலர் நாளை வந்து சந்திப்பதாக சொல்லி அகன்ற பின்னர் நானும் தலைவர் மட்டுலுமாக அங்கு மிச்சப்பட்டிருந்தோம் . காலை அலுவலகத்தில் வைத்த அதே வாதத்தை மட்டும் இன்னும் விரிவாக முன்வைத்தேன். கடந்த மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி போராட்டத்திற்கும் கூட்டத்திற்கும் என்னிடம் கொடுக்கப்பட்ட நூற்றுக் கணக்கான அழைப்பிதழ்கள் உரிய இடத்தில் சென்று சேர்ந்து அவர்கள் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள் அதை இங்குள்ளவர்கள் யார் மறுக்க முடியும் . அது போல இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் யார் யரை அழைத்து வந்தனர் என்கிற பட்டியலை கொடுக்க இயலுமா . அவ்வாறு வந்தவர்கள் அனாமதேயங்கள் என்பது கடும் இளிவரல். இப்போது அவர்களை அழைக்க வேண்டாம் என்றார் நான் அதற்கு கட்டுப்படுகறேன் . இனி அவர்கள எதிலும் கலந்து கொள்ள அழைக்கமாட்டேன் . ஊசுடு நிகழ்வு அந்த ஒரு தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட குழுவினர் இப்போது அந்த கூட்டதில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள் அனாமதேயங்கள் என்றால் இந்த தலைவர்கள் நாளை அவர்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் . அமைதியாக இருந்து சண்முகம் சற்று சிரித்தபடிஇந்த கூட்டத்தில் மனம் சூம்பிய ஒருவனுக்கு இங்கிருந்து இந்த செயல்பாடு எங்கு செல்லும் என்கிற தெளிவான கணிப்பிருக்கிறது அது தான் அவனுக்கு இந்த நிலைகொள்ளாமையை கொடுக்கிறது . அவன் பிறரின் காழ்ப்பை தூண்டி இதை செயலிழக்க வைக்க முயல்கிறார்கள்.

சரி நீ ஆக வேண்டியதைப் பார் இனி இதுபற்றி விவாதிக்க வேண்டாம்என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்