https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 3 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * அனுபவம் என்கிற இடற்பாடு *

 ஶ்ரீ:



பதிவு : 529  / 722 / தேதி 03 செப்டம்பர் 2020



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 06 .





அரசியலில் அனைவரும் தன் பொருட்டு எதையும் செய்து அதற்கு அரசியலை, சந்தர்ப்ப சூழலை காரணம் சொல்ல கூடியவர்களே, சில சமயம் நம்பிக்கைக்கு உகந்தவர்களின் அரசியல் செயல்பாடுகள் அவர்களை உருவாக்கியவர்களுக்கு எதிராக சென்றதே எங்கும் காணக்கிடைக்கிறது . சிறு அளவாவது கோட்பாடு” என ஒன்றை வைத்துக் கொண்டவர்கள் பாடு சமரசம் செய்து கொள்ள இயலாமல் வெளியேறி அடையாளமிழந்து போவதை தவிர பிறிதொரு வழியில்லை  . சமரசம் செய்து கொண்டு அங்கேயே உழன்று  தேங்குபவர்கள் சிலகாலம் அரசியல் லாபம் பெறக்கூடியவர்கள் ஆனால் காலத்தின் தீர்ப்பு அனைவருக்கும் ஒன்றே .அது அனுகும் காலம் அரசியலில் கோட்பாடு இல்லாது தேங்கி இருப்பவர்கள் நரகத்திற்கு இணையான ஒரு உலகில் வாழ நேர்கிறது .


வெளியேறுபவர்களில் சிலர் வேறு அரசியல் நிறுவனங்களுக்கு சென்று முகம் கரைந்து போகிறார்கள் . கோட்பாடுகளில் நம்பிக்கையுள்ளவர்கள் மிகச்சிலரே . அவர்கள் முற்றாக ஒதுங்கி விடுகிறார்கள் . தனது கடந்து வந்த பல அரசியல் சூழலில் ஆற்றியவற்றை சிலவற்றையாவது அசைபோட்டு நிறைவுற்று மன்மறைகிறார்கள் . அது ஒரு தியான மனநிலை . அனைவருக்கும் கூடுவதில்ல


மனிதர்களை மையப்படுத்திய அரசியல் எதிர்காலக் கணக்குகள் எப்போதும் யாருக்கும்  வசப்பட்டதில்லை .மிகப் பெரும்பாலும் அது பிழை என்றே நிருபிக்கப்பட்டிருக்கிறது. தன்கைக்கு என்றைக்கும் அடக்கமானவராக இருப்பார் என சண்முகம் நாராயணசாமியை பற்றி கணக்கிட்டது அவரது முன்னறிதல் பிழை .பிற மாநிலத் தலைவர்களை தன்னை ஒட்டிய நிலபாடுகளை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கி  வைத்தது அவருக்கு இருந்த முன்னறிதல்.


ஆனால் அவரும் ஒரு எளிய மனிதர் தான் போலும் .தனது  அரசியல் வாழ்வில் அவர் தெரியாது இயற்றிய பெரும் அரசியல் பிழை .தெரிந்த பிழைகளும் உண்டு அதற்கான காரண காரியங்களுடன் .தனது  முன்னறிதல் பிழைக்கு விலையாக அவரது அரசியலை நாராயணசாமி முடிவிற்கு இட்டு சென்றார் .


ஆரம்ப கால அரசியலில் நாராயணசாமி சண்முகத்திற்கு அடக்கமானவாராகவே அனைவராலும் அறியப்பட்டார் . ஆனால் அவரின் அரசியலில் பாடத்தில் சண்முகம் அவரை பாதிக்கவேயில்லை என்பதை தனது பிற்கால அரசியலில் வெளிப்படுத்தினார் .நரி” என்கிற குறியீட்டு சொல்லுடன் அவர் பிற்காலத்தில் அடையாளப் படுத்தப்பட்டார் . சண்முகத்திடம் கற்றுக்கொள்ள அவருக்கு ஒன்றுமில்லை . சண்முகம் இட்ட வேலைகளை செய்து முடிப்பவராக இருந்தார் .


1989 களில் சண்முகம் மாநில அரசியலுக்கு திரும்பும் விழைவு கொண்ட போது , அவர் அதுவரை பேணி வந்த மாநில அரசியல் அதன் சமன்பாடுகளை குலைந்துக் கொண்டு  புதிய கணக்குகளை கோரியது.அந்த சூழலில் 1990 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உட்கட்சி சதியால்” சண்முகம் தோல்வி அடைந்தார்.அது அவரை கசப்பு நிறைந்த மனிதராக மாற்றி இருந்தது.


பின் மாநில்அரசியல் கோரிய புதிய சமண்பாடுகளை அவரால் கொடுக்க முடியவில்லை.பல்வேறு அரசியல் சூழலால் தான் நன்கு காலூன்றி வளர்ந்து விட்டதாக எங்கோ ஒரு புள்ளியில் சண்முகம் உணர்ந்திருக்க வேண்டும்.இனி அரசியலில் முதல்வர் என்கிற நிலையில் பலமிக்கவராக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டிருந்தார்.இனி மாநில அரசியல் தன் கணக்கிற்கு உட்பட்டு நடக்கும் என்கிற புது கோட்பாட்டிற்கு வந்து சேர்ந்தார்.


அரசியல் நரம்பின் முடுக்கில் , ஆழ்ந்த அனுபவமும் ஒன்று சேர்த்து சில அசாத்திய முடிவுகளை எட்ட வைக்கிறது . அதுநாள்வரை அடைகாத்து வந்த ஆசைகள் வெளிப்பட வேண்டிய காலம் கனிந்து விட்டதாக எங்கோ உணர்ந்திருக்க வேண்டும் .அது அவரது அனைத்து தயக்கங்களையும் உடைத்து வெளிவர செய்தது .ஆனால் தேர்தல் தோல்வி அவரை நிலைகுலையச் செய்து விட்டது .


அனுபவ முதிர்வு எல்லா நிலைகளிலும் ஒருவருக்கு நன்மை பயப்பதில்லை என்பது ஓர் பேருண்மை . அனுபவ ஞானம் எல்லோருக்கும் கடந்து செல்ல முடியாத பாதையை ஒன்றை அளிக்கிறது .தன்னம்பிக்க தன்னுணர்வை பெருகச் செய்வது , தன்னை  மட்டுமின்றி அதை கடந்து புற உலகைப் பற்றிய நம்பிக்கையை இழக்காதிருப்பதும் அனைத்திலும் அழகியலை நுழைத்துக் கொடுப்பது .வற்றாத அனுபவ ஞானத்தை இருக்கச் செய்வது.


உள்ளுணர்வாலும் செயலூக்கத்தினாலும் அந்த அனுபவ ஞானத்தை இடத்திற்கு தக்கவாறு பொறுத்தி பொருளை மேம்படுத்திக் கொள்பவர்களுக்கு மட்டுமே அது மேலும் மேலுமென அனுபவத்தை கொடுத்துக் கொண்டே இருப்பது . மாற்றமடையாத ஏதும் தேங்கி நிற்பது .


புதியன கற்றல் இளமனத்திற்கு உரியது சிறியவர்களுக்கு உகந்தது .யார் உள்ளத்தில் அந்த சிறுவனை சாகாமல் வைத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு பேரியற்கை அறிதல் எனும் கதவை திறந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது . அவர்களுக்கு கற்றல் முடிவுறவதில்லை .


ஒவ்வொரு உலகிலும் அதற்கான நியாய தர்மங்களும் கோட்பாடுகளும் அதன் எல்லைகளும் அதற்கான விதிகளும் உள்ளது . அது பொது மக்கள் அறியாதலுக்கானதல்ல . அரசியலில் குப்புற தள்ளுவது” அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது விதிகளில் ஒன்று .அதில் ஏமாற்றுவதும் ஏமாற்றப்படுவதும் இயல்பில் உள்ளது .சண்முகம் எங்கோ தனது கற்றலை முடித்துக் கொண்டார் .அதுவரை கற்ற அனுபவம் மட்டும் அவருக்கு துணைநின்றது . ஆனால் மாறிவருகிற உலகில் அது போதாமை கொள்ளும் ஒரு சூழல் நிகழ்கிறது .கையில் உள்ளவற்றை மட்டும் கொண்டு அவற்றை அளந்து விட முடியாது .


எந்த கட்டுபாடும் இல்லாதவராக நாராயணசாமி அதனது அரசியலை முன்னெடுத்தார் . சண்முகம் தன் கணக்கை எங்கு தவறவிட்டார் என்பது அவர் மட்டும் அறிந்தது .


தில்லி இளைஞர் காங்கிரஸ் மாநாட்டிற்கு பயணப் படுவது முன்னமே சண்முகம் மற்றும் நாராயணசாமிக்கு இடையேயான பனிப்போரை நான் எங்கோ உய்துணர்ந்திருக்க வேண்டும். அது பற்றி சண்முகம் எங்கும் எதிலும் தன் அகக்கணக்கை எளிதில் எவளிக்காட்டாதவர்.நான் எனக்கான அரசியல் நிலைபாட்டை உருவாக்கி கொள்ளும் எண்ணத்தை வந்தடைந்தது அதன் பின்னரே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்