https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

வானப்பிரஸ்தம் “வாழ்கை அகத்தில் நிகழ்வது”

  வானப்பிரஸ்தம்    வாழ்கை அகத்தில் நிகழ்வது”


பதிவு : 001  / 721

வாழ்கை அகத்தில் நிகழ்வது”

புதுவை

தேதி:- 30 ஆகஸ்ட் 2020






வாழ்கை என்பது மானுட அகத்தில் நிகழ்வது’ .எவ்வளவு அசலான விஷயம் , கடந்து சென்ற நாட்கள்  நினைவுகளாக, வர இருக்கின்ற நாட்கள் ஏக்கங்களாக அல்லது அச்சுறுத்துபவையாக நம்மிடம் இருக்கும் போது வாழுதல் எங்கே நிகழ்கிறது அல்லது வாழ்தல் என்பதுதான் என்ன? என்கிற கேள்வியை உருவாக்கிக் கொண்டால் இந்த வரி பெரும் அர்த்முள்ளதாகிறது.


அது அழகியல் கொண்டதாவதற்கு இந்து ஞான மரபில்” சொல்லப்படும் நான்கு ஆஸ்ரமத்தில் முதல் மூன்றை ஒருகால் தவறவிட்டிருந்தாலும் நான்காவதாக உள்ள ஆஸ்ரமத்தை காலம் ஒவ்வொருவருக்கும் பணி ஓய்வு , உடல் உபாதை அல்லது நோய் என்று அளித்து அதை நோக்கி செலுத்துகிறதுஅதை வானப்பரஸ்தமாக தெரிவு செய்வது கொள்ள ஒரு கீதா முகூர்த்தம் நிகழ்கிறது . அதை தவறவிட்டவர்கள் பின் ஒருபோதும் திரும்பி வர இயலாது பிறர் மேல் வன்மம் கொண்டு, கசப்படைந்து , அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்து தங்களது கடைசி காலத்தை நரகமாக்கிக் கொள்கிறார்கள் .தன்னைச் சுற்றியுள்ள பிறரையும் அதை நோக்கி தள்ளி விடுகிறார்கள்.


வானப்பிரஸ்தம் . வாழ்வாங்கு வாழ்ந்து முடித்தும் , முடியாது போனாலும்மிச்சமுள்ளதை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள முயல்வது .இந்த நவீன யுகத்தில் வனங்களில் வசிப்பது முற்றாக பழக்கமில்லாத , அரசுகளால் அனுமதிக்கப்படாத மற்றும் நமது அனுபவத்தில் இல்லாதது .விரக்த்ரராக சந்நியாசம் செல்வது , மலைக்குகைகளில் வசிப்பது இன்றும் நிகழ்கிறது அது வேறு ஆஸ்ரமம் .குடும்பஸ்தனுக்கு சொல்லப்பட்டதல்ல.


இன்றைய நவீன யுகத்தில் வானப்பிரஸ்தம் என்பது சமூகத்தின் மத்ததியில் வாழ்வது .வனத்தில் வாழ்வதற்கு  இணையான மனநிலையை உருவாக்கி கொள்ள முடிந்தால் வானப்பிரஸ்தம் நாட்டிலும் நிகழக்கூடிதே என யூகிக்கிறேன்வனத்தில் வாழ்வதை காட்டிலும் நகர வாழ்வு மேலதிக சவால்கள் உள்ளடக்கியவையாக இருந்தால் வியப்பில்லை.


நகர வானப்ரஸ்தம் வெளியுலக தொடர்பு தேவையற்ற நிலையை உருவகித்து அதனால் நிகழும் மனப்பதற்றத்தை எதிர் கொள்வது .நேற்றின் தொடர்ச்சியை அறுத்து , நாளைய பற்றிய கவலை இல்லாமலிருப்பது . இன்றில் நிறைந்து இனிது வாழந்து முடிப்பது .இறப்பு ஒன்றை தவிர அதை இடையறுப்பது பிறிதொன்றில்லை .


வனத்தில் வாழ எதிர்கொள்ளும் சவால்களுக்கு இணையாக நகர வானப்பிரஸ்தத்திலும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளுதல் , வனவிலங்குகளிடம் அச்சம்  நோய் பற்றிய எச்சரிக்கை , உணவு பற்றிய எதிர்பார்ப்பு.இறப்பை ஒரு பொருட்டாக எண்ணாத சூழலில் மூன்றுமே அர்த்தமிழந்து போகின்றன . மரணத்தை எதிர்கொள்வதற்கும் தற்கொலை மனநிலைக்கும் உள்ள வேறுபாடுகள் ஆழ்ந்த அகவயமானதுஅழுத்தமானது .  அதே நேரத்தில் மன நிறைவுற்று , அந்த வாழ்தலில்  திளைக்காதிருத்தல் மிக நுண்மையானது மகத்தானது . அன்றாடத்தில் உறிஞ்சபடாமல் அதை எதிர்கொள்ள நேர்கிறபோது.


நாட்டில் சமூகத்தில் வாழ்கிற போது இல்லம்” பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வைக்கிறது உணவுதேவைக்கு கைவசமுள்ள ஏற்பாடுகள் உதவலாம் . விலங்குகளின் அச்சுறுத்தல் இல்லை அதற்கினையாக உறவுகளிடமிருந்தும் சமூகத்தினிடமிருந்தும் . வனத்தில் புறவயமாக விலங்குகள் நிகழ்த்துவதை விட சமூகமும் உறவும் அகவயமாக செய்கின்ற அகவய பாதிப்புகள் அதிகம் என்றே நினைக்கிறேன்.அவற்றை எதிர்கொள்ள மரணத்தை பற்றிய அச்சமின்மையை உச்ச வரம்பாக வைத்துக் கொள்ள இயன்றால் இதிலிருந்து வெளி வருவது இயல்வதே என நினைக்கிறேன்.


மானுடன் தன்னை கடைநிலையில் உள்ளவனாக உருவகிக்கிற போது பேரியற்கையை பெரும் கருணை கொண்டாதாக உணரும் ஒரு தருணம் வாய்க்க வேண்டும் . அத்தருணம் நிகழ்கிற போது அவன் தன்னை தனியனாக எண்ணமுடிவதில்லை .ஆனால் அந்த பேருண்மையை நோக்கிய பயணத்தில் உணரக்கூடியது உண்மைகள் இறுதிநிலையில் மிக எளியவை என்பதை . ஆனால் கீழ்த்தளத்தில் அவ்வுண்மைகள் நடைமுறை வாழ்க்கையாக ஆகும்போது சிதறிப்பரந்து பலநூறு வழிகளாகப் பல்லாயிரம் முடிச்சுகளாக உள்ளன”.


பரமார்த்திக உண்மைகளை அன்றாட வாழ்க்கைமூலம் மட்டுமே மனிதனால் அறியமுடியும்அறிந்தவற்றைத் தொகுத்துத் தொகுத்து அதை அவன் செறிவாக்கித் தூய்மையாக்கி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது”-ஜெ


மரபான சம்பிரதாய நம்பிக்கையும் ,இன்றைய நவீன ஊலகின் அதற்கான மதிப்பீடுகளையும் மறு உருவாக்கம் கொள்வதனூடாக அதை கடந்து செல்லதும் இயல்வதே.

யாரையும் எதையும் சாராது , அல்லது எதிர்பாராது இருக்கும் மனநிலையை உருவாக்கிக் கொண்டால் அது அதை நம்மில் நிகழ்த்திக் காட்டலாம் .


குடும்ப பொறுப்புகளில் இருந்து முற்றாக விலகி வெளியேறிஅவற்றை நிகழ்த்திக் கட்ட வேண்டியதில்லைகாரணம் பொருப்பில் இருந்து விலகுபவனை இங்கு உதாரணமாக கொள்ள இயலாது . அது சந்நியாசத்திற்கு சில படிகள் கீழ் . அதை முதல் தளத்திலேயே மறுதளிக்கிறேன் . அவன் எனக்கு சொல்ல ஒன்றுமில்லை .


அனைத்து உறவுகளுடனும் அது சார்ந்த சமூகத்துடனும் உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ள முடியாத நிலையில் வானப்பிரஸ்தம் சாத்தியமா ? என கேட்டுக் கொண்டால் அது ஒருவித மன ஒழுங்கு மற்றும் கற்பிதம் பொறுத்தது என நினைக்கிறேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்