https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 29 ஆகஸ்ட், 2020

அடையாளமாதல் * கவனிக்கப்படுபவர் *

 ஶ்ரீ:





பதிவு : 528  / 720 / தேதி 29 ஆகஸ்ட் 2020


* கவனிக்கப்படுபவர்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 05.






புதுவை காங்கிரஸ் தலைவர் சண்முகத்திடம் எனக்கிருந்தது போற்றிபாடல்” போன்ற தலைமை வழிபாடா அல்லது அதைக் கடந்து அவரது ஆளுமை மீது எனக்கிருந்த தர்க்க ரீதியான மரியாதையா என பல முறை  எனக்கு நானே கேட்டுக் கொண்டதுண்டு . அவருக்கு எதிரான மனநிலை கொண்ட அமைப்புதான் என்னை அரசியலில் வளர்த்தெடுத்தது . நானும் அவருக்கு எதிரான மனநிலையில் தான் இருந்தேன்  முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் கண்ணனும், பாலனும் .


எல்லாவிடத்திலும் உள்ள குரு சிஷ்ய பரம்பரை போல இங்கும் ஒரு நீண்ட நிரை உண்டு  . பாலன் கண்ணனின் அரசியல் பாணியை ஒட்டி தன் அரசியலை கொண்டருந்தார் . ஆனால் அது கண்ணனின் அரசியலை நகல் செய்தது .நிஜமான தலைமை பண்பை பாலன் பெற்றிருக்கவில்லை .வெகு விரைவில் பாலனின் அரசியல் வீழ்ச்சி கண்டது .கண்ணன் தனது அரசியல் நிலைபாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வதன் வழியாக மற்றும் அதி நம்பிக்கையால் அதனது அரசியல் முற்றழிவை சந்தித்தார் .


இவர்களுக்கு மத்தியில் சண்முகம் கவனிக்கத் தக்கவராக இருந்தார் என்பது உண்மை .அவரைப் பற்றிய நேர் மற்றும் எதிர்மறை செய்திகள் அறிந்திருந்தேன் .ஒரு புள்ளியில் அவை ஒன்றை ஒன்று சமன் செய்வதாக இருந்தது . இரண்டும் உண்மை . இரண்டு வகைகளில் .மிக நுட்பமான அரசியல் களத்தையும் அதில் காய்கள் நகர்த்தப் படுவதையும் அதில் சண்முகத்தின் நிலைபாடுகளை வெகு அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை ஊழ் எனக்கு அளித்திருந்தது என்று நினைக்கிறேன்.அரசியல் சரி நிலைகளைக் கடந்து ஒரு மெல்லிய கோட்பாடு அரசியல்” அவரிடம் இருந்தது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அரிதானது . மற்றைய அரசியலாளர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது அதுவே என நினைக்கிறேன்.


நேரு , இந்திரா , ராஜீவ் காந்தி என சண்முகம் அகில இந்திய கட்சி அரசியலில் தலைமைக்கு உகந்தவராகவும் அதனால்  பிற எவரிடமும் உதாசீனராக இருந்தவர் . எளிதில் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவராக , தில்லியின் நீக்குபோக்கான அரசியலில் வளைந்து கொடுக்காமல் அதில் இருந்து வேறுபடுத்தி  தன்னை வளர்த்துக் கொண்டதால் , அகில இந்திய காங்கிரஸ் அமைப்பில் அவருக்கு ஏராளமான  எதிரிகள் உருவாகினர் .தில்லி அரசியலில் பிழைத்திருப்பது ஒரு கலை .எதிலும் எவரும் உறுதியான வெகுஜன அரசியலை நிகழ்த முடியாது .எப்பேர்பட்ட தலைவர்களும் சூழ்நிலைக்கு ஏற்றபடியே தங்களை வைத்திருக்க வேண்டும் என்பது அரசியல் உண்மை .


தங்களின் அடையாளமாக சிலவற்றை உருவாக்கி வைத்திருந்தவர்கள் கூட ஒரு சந்தர்ப்பத்தில் அகில இந்திய அரசியலில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது .மிக சமீபத்திய உதாரணம் . வாழப்பாடு ராம மூர்த்தியும் , கருப்பையா மூப்னாரும் .தலைமை பொருப்பில் உள்ளவர்களும் வெகுஜன அரசியலை மனத்தில் கொண்டே தங்களின் அரசியலை வரையறை செய்கிறார்கள் . அந்த நிலைப்பாடுகள் சில சமயம் வெற்றிகளை கொடுத்திருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் காலை இடறிவிட்டிருக்கின்றன . யாராளும் புரிந்து கொள்ள முடியாதது அரசியல் குறித்து சமூகங்களில் நிகழும் முரணியக்க முடிவுகள் .


சீத்தாராம் கேசரி மற்றும் நரசிம்மராவ் அகில இந்திய தலைவராக நீடித்த போதும் அவர் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார் அரசியலை உற்று நோக்கினால் புரிந்து கொள்ள முடியும் அரசியலில் ஏற்றமும் இறக்கமும் மிக இயற்கையானது , அதில் பிழைத்திருப்பது என்பது பிறிதொன்றை சொல்ல வருவது 


தமிழக காங்கிரஸ் அரசியலை பாரத்தாலே இதை விளங்கிக் கொள்ளலாம் . தமிழக மாநிலத் தலைமை கடந்த நாற்பது ஆண்டுகளில் பலமுறை மாற்றப்பட்ட போதும் சண்முகம் தலைவராகவே நீடித்தார் .அதற்கு தமிழக கூட்டணி அரசியலை காரணமாக சொல்பவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள் . தமிழக கூட்டணி பொருத்து நிகழ்வதே புதுவைக்கும் சேர்த்தே நிகழ்ந்திருக்கிறது .


சண்முகம் புதுவை அரசியலில் தவிற்க முடியாத சக்தியாக தன்னை நிலைகொள்ள செய்ததற்கு முதன்மைக் காரணம் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பல காலம் நீடித்தது என்பதும் . அதற்கு பின்னால் சண்முகம் இருந்தார் என்பதும் புதுவையில் காங்கிரஸ் ஒரு பலமிக்க அரசியல் கட்சியாக இருந்தது போன்றவை வெளிப்படையான காரணம் மட்டுமே .ஆனால் அதற்கு பின்னால் சண்முகத்தின் நிலைபாடு முக்கியமான காரணமாக இருந்தது .


பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவரல்ல சண்முகம் , ஆனால் பல கட்சி தலைமைகளுடன் மற்றும் பிற அமைப்புகளை இணைக்கும் ஒரு புள்ளியாக தன்னை நிலைநிறுத்துக் கொண்டது அவரின் அரசியல் தொடர் வெற்றிக்கு அடிப்படை காரணம் என நினைக்கிறேன்.


சண்முகம் பற்றி பிற அரசியல் தலைவர்களுக்கு ஒரு நிலையான கருத்துரு இருந்தது .எளிதில் வளைந்து கொடுக்காதவராக மென்மையான அதே சமயம் அரசியல் அழுத்தம் தாங்குபவராக அவர் எப்போதும் இருந்தார். இணையும் போது பிரியவும் , பிரியும் போது மீளவும் இணையும் வாய்பபை மிகத் தெளிவாக உணர்ந்தவராக இருந்தார்.தனது நிலைப்பாட்டை இதை ஒட்டி உருவாக்கிக் கொண்டார். இது ஒரு முதன்மை அரசியல் கோட்பாடு என நினைக்கிறேன்.அதே சமயம் தனக்கென ஒரு முகத்தை உருவாக்கிக் கொண்டது வியப்பானது


நாளை என்ன கிழமை”? என்றால் தில்லியை கேட்டுச் சொல்லும் காங்கிரஸ் அரசியலில் அவர் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியது மிகவும் ஆச்சர்யமான ஒன்று .அவர் எப்போதம் தயக்கம் மிகுந்தவராகவே இருந்தார் . அதீத கூச்சம் சுபாவம் உள்ளவர் என்பது மிக நெருக்கமாக இருந்தவர்கள் மட்டுமே அறிந்தது .


யாரையும் எந்த சூழலில்லும் நம்பாதராவே அவர் அதனது இறுதிகாலம் வரை இருந்தார் .எவரை பற்றியும் சந்தேகம் கொண்டவராக இருந்தார் . அரசியலில் யாரும் எதையும் சந்தர்ப்ப சூழலில் செய்யக் கூடியவர்களே என்பதால் அவரது சந்தேகங்கள் பெருமாலும் உண்மையாகிப் போயின.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக