https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

அடையாளமாதல் - * சிதைந்து போன கடந்த காலம் *

 ஶ்ரீ:



பதிவு : 527  / 719 / தேதி 24 ஆகஸ்ட் 2020



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 04 .






தொகுதிகளுக்கு தலைவர்களாக வரக்கூடியவர்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்ததை இப்போது பயண்படுத்தி பார்க்க முடிவெடுத்தேன் . அதில் கடைசி நேர மாற்றங்களை செய்து அவர்களுக்கு முறைப்படி செய்தி அனுப்பினேன் . தில்லியில் நடைபெற இருக்கும் கூட்டத்தை யாரும் தவிற்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் . மிகச்சிலரை தவிர மற்றவர்கள் தில்லி வருவதை உறுதி செய்தனர் .பட்டியலை இறுதி செய்து தலைவரிடம் கொடுக்க காத்திருந்தேன் . 75 பேரை தில்லி அழைத்து சென்று வருவது மிகவும் செலவேறியது என்பதால் என்னால் அதற்கு செலவு செய்ய இயலாது . அனைவரும் தில்லி சென்று வருவதற்கான செலவை அவரே ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார் . அது அவரின்  வழமை .


கடைசி நிமிடத்தில் வல்சராஜ் தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பது மேலும் ,புதுவை வருவதாகவும் இணைந்து செல்லலாம் என எனக்கு செய்தி அனுப்பி இருந்தார் .அவர் விமானத்தில் செல்பவர் .நான் புதிய நண்பர்களுடன் ரயிலில் செல்ல முடிவெடுத்தேன் .தில்லி ரயில் பயணம் சுமார் இரண்டு நாளெடுப்பது நண்பர்களுடன் உரையாட நிறைய நேரம் கொடுப்பது . அனைவரின் கவனத்தையும் சிதறரடிக்காமல் ஓரிடத்தில் குவித்து கொடுப்பது என்பதால் அதுவே சிறந்தது .

எனது எதிர்கால திட்டம் குறித்து விரிவாக உரையாட ஒரு நல் வாய்ப்பு . அதை ஒருபோதும் தவறவிடக்கூடாது .


எனக்கு ரயில் பயணங்கள் மிகுந்த உற்சாகம் தருவதாக இருப்பது என்பது அடிப்படையான காரணமாக இருந்தாலும் அந்த பயணங்கள்  எனக்கு எப்போதும் பல்வேறு ஆழ்மன புரிதல்களை கொடுத்திருக்கிறது . திகைத்து நின்ற முட்டுச்சந்துகளில் இருந்து வெளிவருவதற்கான வழிகளை நான் சட்டென கண்டுகொண்டது ரயில் பயணத்தின் போது .ரயில் பயணம் எதையும் நேர்மறையாக சிந்திக்க செய்வது , மிகுந்த செயலூக்கம் கொடுப்பது அது ஏன் என்பதற்கான   காரணத்தை என்னால் சொல்ல முடியவில்லை


தில்லிக்கு வருபவர்கள் பட்டியலை பல முறை சண்முகம் வற்புறுத்தி கேட்ட பிறகும்  நான் அதை அவரிடம்  கொடுக்க காலம் தாழ்த்தி வந்தேன் . அவர் என்னிடம் கேட்பது போலவே மாநில அனைத்து தலைவர்களிடமும் கேட்டிருப்பார். அது தவிர கட்சியின் அனைத்து தொகுதி தலைவர்களிடமிருந்தும் ஒரு பட்டியலை கேட்டு வாங்குவார் என்பதால் நான் எனது பட்டியலை அவரிடம் கொடுக்க கால தாமதப்படுத்தினேன்.  


நிஜமான தற்சார்பு அமைப்பு ஒன்றை அதன் அடிப்படை கட்டமைப்புகளுடன் எழுப்புவது  மட்டுமே நீண்டகால இளைஞர் அரசியல் நிலைத்தன்மை உருவாகிவரும் .இதில் என்னை ஏற்பவர் மட்டும் இணைக்கப்படுவது குறுங் குழுவே உருவாகி வரும்  அதை நான் விழையவில்லை . அது எந்நிலையிலும் மாநில அரசியல் நுழைய இடம் கொடுக்காது.


 அதை கடந்த காலத்தில் இருந்து கற்றிருந்தேன் . முன்னாள் இளைஞர் இமைப்பின் பெரும் தலைவராக அறியப்பட்ட கண்ணனும் , அவரை நகல் செய்ய முயன்ற பாலனும் சென்று சேர்ந்தது முற்றழிவு மட்டுமே.அதை பிறருக்கு நிகழ்தியவர்கள் இறுதியில் அவர்களும் அங்குதான் சென்றனர்.


மாநில இயக்கத்தை நான் முன்னின்று வழிநடத்தும் காலம் என ஒன்று வரும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை . இப்போது அந்த வாய்ப்பு பலர் கைகளில் இருந்து நழுவி என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அதை விருப்பு வெறுப்பிற்கு அப்பால் நின்று செய்ய முயற்சிப்பது அதன் முற்றான வெற்றிக்கு இட்டுச் செல்லும் . எனக்கான அடையாளம் அதில் மிக மெல்லத்தான் உருவாகி வரும் . ஒருக்கால் அப்படி நிகழாது போனாலும் , அதற்காக முயற்சித்தது மட்டுமே மனநிறைவை கொடுக்க வல்லது.


தில்லி மாநாட்டிற்கு நான் தெறிவு செய்து வைத்திருந்தார்களில் பெரும்பாண்மையோர் அந்தந்த தொகுதி தலைமைக்கு அனுக்கமானவர்கள் , அரசியல் காரணங்களுக்காக தொகுதி முக்கியஸ்தர்கள் , அவர்களை தவிர்ககவே எப்போம் முயல்வார்கள். மாநில அரசியலில் ஈடுபாடு  அரசியலின் நெளிவுகளை சொல்லிக் கொடுப்பது . ஒரு முறை மாநில அரசியலின் போக்கை அறிந்து கொண்டவர்கள் பின் ஒருபோதும் தொகுதி அரசியலை திரும்பமாட்டார்கள்..


அவர்களை தொகுதி அரசியலில் முடக்கிப் போட்டு தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவர்களின் பெயர்களை இணைக்க மாட்டார்கள் .அவர்கள் தொகுதி அரசியலுக்கு திரும்பமாட்டார்கள் என்பதுடன் தொகுதி தலைமைக்கு கட்டுப்படாமல் போக வாய்ப்பிருப்பதாக அவர்கள் கருதுவதே அதற்கான காரணம் .


அனைத்து தலைவர்களும் கொடுத்த பட்டியலில், விடுபட்டவர்கள் பெயர்களை சூர்யநாராயணனிடம் இருந்து பெறுவது சிரமமல்ல ,  விடுபட்டவர்களின் பெயர்களை மட்டும் கொடுக்கும் பட்டியலில் இணைத்து கொடுப்பதின் வழியாக , நான் நினைக்கும்  முழுமையான அமைப்பை அது உருவாக்க உதவலாம் .


அது ஒரு முக்கிய அரசியல் சூழல் வெகு விரைவில் நாராயணசாமி சண்முகத்திற்கு எதிராக தன்னை முன்னிறுத்த முயல்வார் என கணித்திருந்தேன் . ஆனால் அது குறித்து எனக்கு அனுக்கமானவர்களிடம் கூட கருத்து பரிமாறிக் கொள்ள இயலாத சூழல் . புதுவை மிக சிறிய மாநிலம் அலர் செய்திகளும் ஊகங்களும் காட்டுத்தீயாக பரவக் கூடியவை . அனைத்திலும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்