https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 3 மார்ச், 2021

அடையாளமாதல் * பொறுப்பின்மை *

 




ஶ்ரீ:



பதிவு : 567  / 757 / தேதி 03 மார்ச்  2021


* பொறுப்பின்மை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 45.





என்னை பற்றிய குறையாக, போதாமையாக நான் நினைத்துக் கொள்வது ஒன்றுண்டு . அது பிறர் செய்ய தயக்கம் கொள்ளும் படைப்பூக்கம் மிக்க செயல்களை செய்து முடித்து அதில் வெற்றியும் அடைந்த பின்னர் , ஏன் அவற்றில் நான் தொடர்ந்து இருந்து கொண்டிருந்ததில்லை என்பது  . வசீகரிப்பவனாக தோன்றுபவன் சட்டென அதிலிருந்து எப்போது ?ஏன்? நழுவி விடுகிறேன்  . அவற்றை நான் வெவ்வேறு அர்த்தங்களை கொடுத்துக் கொண்டு அதை கடந்து விடுகிறேன் என்றாலும் அவை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு துறைகளில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . வெற்றி தந்த இடத்தில் வெற்றிக்கு பிறகு ஏற்படும் சலிப்பு மீண்டும் மீண்டும் அதையே செய்து கொண்டிருப்பதால் எழுகிறதா? . அல்லது ஒன்றில் நிலைத்திருக்க தேவைபடும் சமரசத்தை என்னால் அடையமுடியாமையா ? . இவை மட்டும்தானா? என்றால் இல்லை என நினைக்கிறேன் . நான் தேர்ந்தெடுக்கும் பாதை அல்லது கருக்கோளில் இரண்டிலிருந்தும் அது துவங்குவதாக இருக்கலாம் . ஒன்று - நான் எனக்கான இலக்காக வைத்துக்கொண்டு முன்னகர்ந்தவற்றின் பெறுபகுதி பிறரது கனவையும் அதிலிருந்து உருவாகும் புதிய சாத்தியக்கூறுகளையும் புரிந்து கொள்ள முயல்வதனூடாக எழுந்தவைகள் . அதை அவர்கள்  முயற்சித்து பார்க்க தவறுகிறார்களா ? , அல்லது அவற்றின் தடைகளை மட்டுமே உணர்கிறார்களா? என கேட்டுக் கொள்வதுண்டு. தடைகளில் உள்ள வெற்றி எனக்கு மிக அனுக்கமாக தெரிந்த உடன் அவற்றில் நுழைய நான் தயங்குவதில்லை . இரண்டு - எனது மனதிற்கு அவற்றை மிக அனுக்கமாக உணரும் தேடல் விதையை அவதானிக்கும் போதே அங்கிருந்து எனது பயணம் தொடங்கிவிடுகிறது . முதலாவதில் நான் நேரடியாக அங்கு சென்று சேர்கிறேன் . சில காலம் அவர்களுடன் பழகும் போது ஏற்படும் புரிதல்கள் அதில் உள்ள நடைமுறை சிக்கல் போன்றவை அவர்களை ஏன் தயங்க வைத்து விடுகின்றன என புரிந்து கொண்ட பின் அதை சவாலாக எடுத்துக் கொள்ளும் போக்குடன் அவர்களை ஒருங்கிணைக்கும் வழியாக என்ன நிறுவிக்கொள்கிறேன். தெளிவான திட்டமிடலுடன் காலம் வைக்கும் பாதை என அவை உருவாகிவந்து பெரும் வெற்றியைப் பெறுகின்றன . வெற்றிக்கு உடன் வருபவர்கள் ஒரு கட்டத்தில் என் தேவை  அவசியமில்லாத ஒன்றாக உணர்கிறார்கள் . அங்கிருந்து  சொந்தமாக அல்லது கூட்டாக அதைத் தொடர நினைக்கிறார்கள் . அவர்களுக்கு நான் தேவையற்ற எடையாகிறேன் . அந்த ஊதாசீனம் என்னை சீண்டுவதால் நான் அங்கிருந்து வெளியேறிவிடுகிறேன் . அதுவரை நிகழ்ந்த செயல்களை மேலும் முன்னெடுப்பவர்களுக்கு தடையாக நான் அங்கு இருக்க விழைவதில்லை. ஆனால் அந்த செயல்களை ஒரு கட்டத்தில் மிக சாமான்யமான ஒன்றாக ஆக்கி விடுகிறார்கள் அல்லது அதை மேலும் முன்னெடுக்க இயலாமல் தோல்வி அடைகிறார்கள் . அத்த எல்லையை வந்தடைந்ததும் அவர்களை நான் கைவிட்டு விலகியதாக என் மீது வன்மம் கொள்கிறார்கள் . எப்போதும் அதுதான் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . எது எப்படியாயினும் அந்த நண்பர்களை நான் நிரந்தரமாக இழந்து விடுகிறேன்


நண்பர் கமலக்கண்ணன்தலைவர்-தொண்டர்உறவு என்கிற எளிய கருத்தியல் கொண்டவர் . தலைவர் என்பவர் தொண்டனின் எல்லா தேவைகளை நிறைவேற்றித் தருபவராக இருக்க வேண்டும் என நினைப்பவர் . குறுங்குழுக்குள் அது இயல்வதும் தவிற்க இயலாததும் கூட  . ஒரு புள்ளியில் கமலக்கண்ணனின் எதிர்பார்ப்பை பாலனால் செய்து கொடுக்க முடியவில்லை . பாலனும் எளிய ஆலைத் தொழிலாளி . ஒரு கட்டத்திற்கு பிறகு கமலக்கண்ணனை முன்னிறுத்தும் தமோதரனின் நிலை சங்கடமானது . இருவருக்கும் இடையே அவர்தான் ஓயாத தூது சென்றுகொண்டிருந்தார். தாமோதரன் பாலனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் . சிறந்த தொடர்புறுத்துனர் . அமைப்பு நிர்வாகத்தில் நல்ல அனுபவமுள்ளதால், அவரை தவிற்க பாலன் நிறையவே சிரமப்பட்டார் . தனக்கான எதிர்காலம் கண்ணனிடம் இருக்கிறது என எப்போதும் உறுதியாக நம்பினார் கமலக்கண்ணன் . ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாத கணக்கு . அரசியிலில் ஒரு முறை நம்பிக்கை இழந்தவராக அறியப்பட்டவர்கள் ஒரு போதும் பழைய நிலைக்கு திரும்ப முடியாது . அவரும் அதை அறியாதவர் அல்லர் . ஆனால்மிக விழைவுயாதார்த்தத்தை பார்க்க மறுப்பது . பாலனுக்கு பிறகு சிதறருண்ட அமைப்பு வல்சராஜ் தலைமையின் கீழ் திரள வேண்டிய சூழ்நிலை எழுந்த போது . நான் நேரடியாக சண்முகத்தின் கீழ் இணைந்ததால் அங்கு வல்சராஜை தலைவரின் சக அணியை சேர்ந்தவராக பார்க்க நேர்ந்தது என் நல்லூழ் . வல்சராஜிடம் நிலைகொள்ளாதவராகவே கமலக்கண்ணன் இருந்தார் . தாமோதரனின் இடத்தை பச்சைமுத்து எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் . ஆனால் அது நிகழவில்லை. அவரை எனக்கு எதிரெடையாக வல்சராஜ் வைத்த போது என்னிடம் சமரச அரசியலை கமலக்கண்ணன் முன்வைத்தார் . நான் எந்த இடத்தையும் விழையாத ஒன்றிற்கு வந்து சேர்ந்து வெகு நாட்களாகியிருந்தது .மேலும் சண்முகம் பாலனின் நிர்வாகத்தில் இருந்த எவரையும் இறுதிவரை நம்பவில்லை .என்னைப் பற்றிய அந்த சந்தேகத்தின் நிழல் எப்போதும் அவருக்கு இருந்திருக்க வேண்டும் . அதுவே என் விஷயத்தில் எல்லா முடிவுகளுக்குக்கும் மிக தாமதமாக வந்து சேர்ந்தார் . என்னுடைய அரசியல் நிலையாமைக்கு அது ஒரு முக்கிய காரணம் .அதை நான் பொருட்படுத்தும் இடத்தில் இல்லை . முன்பு பதிவிட்டபடி சண்முகம் இன்னார் எனத் தெரிந்தே இருந்தேன் . கமலக்கண்ணனை பற்றி சண்முகம் தெளிவாக தெரிந்து வைத்திருந்தார் . நான் எவ்விதத்திலும் கமலக்கண்ணனுடனான சமரசத்தை ஏற்கவில்லை .


வல்சராஜ் தலைமையில் புதிய நிர்வாகக்குழு அமைந்தவுடன் புதிய சூழல் எழுந்தது . அரவணைப்பும் கருணையும் அற்ற அரசியலை கமலக்கண்ணன் எதிர்பார்த்திருக்கவில்லை . குறுங்குழு அரசியலுக்கு பழகி இருந்தவர் யாருடைய நிழலும் இல்லாத ஒற்றை அரசியல் அவருக்கு பழக்கமில்லாதது . நேரடியாக வெய்யிலில் வந்து விழுந்தவர் போலானார் . பச்சைமுத்துவின் திடீர் மரணம் அவரை இன்னும் நிலைகுலையச் செய்திருந்தது . கண்ணனுடன் திரும்பவும் இணைவது மட்டுமே தனக்கு மீட்பு என எண்ணியிருக்க வேண்டும் . அவர் எடுத்த மிகத் தவறான முடிவு அது . கட்சியிலேயே இருந்திருந்திருந்தால் என்ன கிடைத்தருக்கும்? யார் அதற்கு உத்திரவாதம்? என அவர் கேட்க்கக் கூடும் . அதை சென்ற இடத்திலாவது அவரால் பெற முடிந்ததா என்பது கேள்விக் குறியது . அரசியல் யாருக்கும் எதையும் உறுதி செய்யாது . கிடக்கப் பெற்றவர்கள் நல்லூழ் வாய்த்தவர்கள். கட்சியைவிட்டு வெளியேறுவதை அவர் ஒருநாள்  செய்யக்கூடும் நான் எதிர்பார்த்தேன் . எதிலும் நிலையற்ற மனிதாராக அவரை எப்போதும் பார்த்திருக்கறேன் . தமோதரனை இழந்ததும் அச்சாணி கழன்றது போலானார் . திரும்பவும் கண்ணனிடம் சென்றடைந்தார் . அவரது எதிர்பார்பபு அங்கு நிகழ்ந்ததா என தெறியவில்லை . வல்சாராஜிற்கு கமலக்கண்ணனின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது . இப்படி நிகழும் என அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை .அதன் பிறகு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகத்திலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக் கொண்டார் .


அது முற்றிலும் நான் எதிர்நோக்காதது. எனக்கான வாய்ப்புகள் சட்டென திறந்து கொண்டன. மிக தீவிர அரசியலை நோக்கி இழுக்கப்பட்டு அதன் அத்தனை சாத்தியகூறுகளின் வழியாக பயணப்பட்டு  வழக்கம் போல எனது தனித்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன் . மகிழ்வும் வருத்தமற்ற ஒரு இடம் அது . காலம் எனக்கென உருவாக்கித் தருவதில் நான் எனக்கென நிலைப்படுத்திக் கொள்வது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்