https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 25 ஜனவரி, 2021

அடையாளமாதல் * வெளிச்சத்தின் இருள் *

 ஶ்ரீ:பதிவு : 560  / 750 / தேதி 25 ஜனவரி  2021


* வெளிச்சத்தின் இருள்ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 38.


எங்கும் உள்ள வழக்கம் போல இங்கும். ஊருக்கு வெளியே தனிக்காலனிகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை சமூகம். அதன் மூத்தோர் அனைவரும்  பெருநிலக்கழார்களை சார்ந்து பல தலைமுறைகளாக தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டவர்கள் . தொழிற்சாலைகள் வந்த போது அவை தனி சாலை வசதிகள் காலனிக்களுக்கு ஊடாக அமைந்தன . சாலையின் வரவு சமூகத்தில் அக மற்றும் புறவயமான மாற்றங்களை உருவாக்கி விட்டது மிக குறிகிய காலத்தில் சட்டென எல்லாம் மாற்றமடைந்து சமூகத்தில் புது அடுக்குகள் எழுந்து வந்தன . அது நிலக்கிழார்களுக்கு சலுகையென அதுவரை வழங்கி இருந்த பலவற்றை ரத்து செய்துவிட்டிருந்தது . சிலவற்றை காலாவதியாக்கியும் இருந்தது . அதன் பின் அவர்களால் இக்கால இளைஞர்கள் மீது வெளிப்படையான  அதிகாரம் செலுத்த முடியாமலாகியது . ஆனால் அவை அனைத்தும் திரைமறைவில் வேறு தளத்தில் வேறு விதமாக ஆனால் முன்னிலும் பலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருந்ததுதமிழகத்தில் சில இடங்களில் காணப்படும் தாழ்பட்டவர்களின் நிலை போல புதுவையில் அது வெளிப்படைத் தன்மையற்று இருந்தாலும் , மௌனமாக ஆழத்தில் அது இருந்து கொண்டிருக்கிறது. கராணம் புதுவை நகரமாக மாற முயற்சிக்கும் கிராம சூழ்நிலையையும் , சட்டென நகரமாகி அதன் அத்தனை அலகுகளுக்கும் வந்து சேரக்கூடிய சிறிய வேறுபாடுகளைக் கொண்ட இடத்திலும் இருக்கிறது. ஆகையால் அதன் மீது எப்போதும் அசையும் இருப்பில் நிலமுடைய சமூகம் இருக்கிறது  . சிறு சமன்குலைவு அச்சமூட்டும் அளவிற்கு அனைத்தையும் புரட்டக்கூடியது என அவர்கள் அறிந்திருக்கி்னறனர் . தங்களை நிலை கொள்ளச்செய்ய ஆளும் காங்கிரஸ் அமைப்பில் அவர்கள் எப்போதும் தங்களை வைத்துக்கொண்டனர் . காங்கிரஸிற்கு நீண்ட கால ஆட்சியில் இருக்கும் வாய்ப்பிருந்ததால் அவர்கள் தங்களை காங்கிரஸின் ஆதரவாளர்களாக வெளிப்படுத்திக் கொண்டனர்  . 


தனித் தொகுதி வேட்பாளர்கள் இவர்களின் ஆதரவில் இருந்து தான் எப்போதும் உருவாகிறார்கள் . ஊர் , காலனி என இரண்டையும் இணைக்கும் இடத்தில் இருப்பவர்களில் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படுகிறார்கள் . அதற்கு நுண்ணிய பின்னனி ஒன்று உள்ளது . அவர்களில் மிகப் பெரும்பாலும் அரசு வேலையில் இருப்பவர்கள் அல்லது வேலையை உதறி வெளிவந்தவாராக இருப்பார்கள் . அரசு உத்தியோகம் அனைத்து விதத்திலும்  அடிமைத்தொழில் , அது மேல் கீழ் என்னும் அடுக்குமுறையை அவர்களுக்கு பயிற்றுவிக்கிறது யாரும் எந்த சமூகமும் அதற்கு விதிவிலக்கல்ல . தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அது இன்னும் ஆழமான அடங்கியிருத்தலை கற்றுக் கொடுக்கிறது . மேலும் தேர்தலில் தோல்வியுற்றால் அரசு வேலைக்கு திரும்பும் வாய்ப்பை சட்டம் அவர்களுக்கு வழங்குவதால் முதல் முறை சட்டமன்ற  நுழைவுக்கு பிறகு , மறுவாய்ப்பு கிடைக்காமல் போனால் மீளவும் தங்களின் வாழ்வாதரத்தை திரும்பப் பெற இயலும் . ஆனால் அது  இறுதிவரை எந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில்லை. மீளவும் அரசாங்க வேலைக்கு திரும்ப அவர்கள் மனம் ஒருபோதும் ஒப்புவதில்லை . ஒரு வித கையறு நிலை . அவர்களின் வாழ்நாள் இறுதிவரை அவர்களை விடாது தொடர்வது . அவர்கள் அதற்கு எப்போதும் அஞ்சினர் . தங்களை மீறி செயல்பட நினைக்கும் எவருக்கும் நிலமுடை சமூகம் மீளவும் ஒருமுறை வாய்ப்பு அளிப்பதில்லை என்பது அவர்களை பலமுள்ளவர்காளாக ஆக்கி அந்த அடுக்குகளை நிரந்தரம் செய்கிறது  . அதன்பொருட்டு வேட்பாளர் தேர்வு  கட்சியின் வழியாக நிகழாது பார்த்துக் கொள்ளப்படுகிறது. விதி விலக்கான சட்டமன்ற உறுப்பினர்களாக வந்தவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள். அவர்கள் அரசியலுக்கு முற்றும் புதியவர் அமைப்பின் பின்னணியில் வெற்றி பெறும்போது  கட்டற்றவர்களாக ஆகி விடுகின்றனர் . புதுவையின் ஆட்சி மாற்றத்திற்கு பல சமயங்களில் இவர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். அல்லது அவர்களிடமிருந்து துவங்கி இருக்கிறது  . ஆகவே தாழத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சி அமைப்புகள் பொறுப்பிற்கு வருகிறபோது அவர்களை கட்டுக்குள் வைக்க நிலமுடை சமூகத்தின் உதவி தேவைபடுகிறது , மேலும் பல அலகுகளை கையாளத் தெரிந்த நிலவுடையை சமூகத்தை சார்ந்திருப்பது அவசியமாகிறது , அவர்கள் எண்ணற்ற உள் நெசவுகளின் மூலம் அதை தங்கள் கையில் எப்போதும் வைத்திருக்கின்றனர் . ஆகவே அவர்களே எப்போதும் கட்சியின் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களாக உறுவெடுக்கிறார்கள்.


தாழ்த்தப்பட்ட சமூக நவீன இளைஞர்கள் இயல்பில் பிற சமூக இளைஞர்களை விட மீறல் மனநிலை கொண்டவர்கள் . காரணம் அவர்கள் இருப்பே கேள்விக் குறியாகி விடுகிறது . அதை எதிர்பதன் பொருட்டு எந்த நிர்பந்தமும் இன்றி ஒருங்கு திரளக்கூடியவர்கள் என்பது அவர்களை பிற சமூகத்தினரை விட பலமுள்ளவர்களாக ஆக்குகிறது  . தங்கள் மீது இருக்கும் நேரடி மற்றும் மறைமுக கட்டுப்பாட்டில் இருந்து வெளிவர அரசியலை தேர்ந்தெடுக்கின்றனர் . அதன் ஊடாக பதில் சொல்ல முயல்வது ஒன்றே அவர்களுக்கான மீட்சி . அந்த இளைஞர்கள் அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் அமைப்பிற்குள் வந்து சேர்ந்தபோது அங்கு நிலவும் அடுத்த கட்ட சிக்கலை புரிந்து கொள்ள துவங்கினர் . தனித் தொகுதிகளின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அவர்களுக்கு மத்தியில் இருந்து தாமாக ஒருபோதும் எழுந்து வராமல் பார்த்துக் கொள்ளப்படுவதும். நிலமுடை சமூகத்தின் தயவினால் மட்டுமே அவர்களால் அரசு அதிகாரங்களுக்குள் நுழைவு நிகழ இயலும் என்பது இன்னும் தீவிர எதிர்மனநிலையை் உருவாக்கி இருந்தது . இளைஞர் காங்கிரஸ் அதற்கான மாற்று என அதன் தலைவர் கண்ணனால் அழுத்தமாக சொல்லப்பட்டது . ஆட்சி பொறுப்பில் இடம்பெற ஆர்வமுள்ளவர்களுக்கு இளைஞர் காங்கிரஸிற்குள் நுழைந்தனர் . தீவிர எதிர்ப்பு மனநிலை உள்ளவர்வகள் கம்யூனிஸ இயக்கம் நோக்கி சென்றனர்.


கண்ணன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக வந்த போது அவர்களே அதன் பலமென அமைந்தார்கள் . கண்ணன் கட்சி அமைப்பை எதிர்ப்பவராக, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மாற்றாக தன்னை நிறுவிக்கொண்டருந்த காலம் . கிராமம் மற்றும் நகர்ப்புற இளைஞர்களை கவர்பவராக இருந்தார் . அவர்களில் பெரும்பான்மையோர் கம்யூனிஸ இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் கம்யூனிஸ்ட்களின் வெறுப்பிற்கு ஆளானார் . சகோதர யுத்தம் துவங்கி பல வன்முறைகளை அதை தொடர்ந்து அரசியல் கொலைகளுக்கு வழிவகுத்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக