https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

அடையாளமாதல் * கனவும் கைக்கு எட்டுவதும் *

 






ஶ்ரீ:



பதிவு : 557  / 747 / தேதி 10 ஜனவரி  2021


* கனவும் கைக்கு எட்டுவதும்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 35.





அரசியலின் நிஜமான முகமும் , எனக்கான அரசியல் களமும் அதை ஒட்டிய எனது புரிதலும் , நிலைபாடும் ஒரு கட்சி நிர்வாக அடிப்படைச் சிக்கலில் இருந்தது தெளிவுபெறத் துவங்கியது ஓர் இரவு நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகுதான் . ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பி்ன் பலங்களில் ஒன்று . எனக்கு பலம் என ஆனாதெல்லாம் 1996 கொடியேற்ற நிகழ்விற்கு பிறகுதான் . சர்ச்சைக்குறிய தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி அதில் ஒன்றின் அருகில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் காலனியுடன் நீண்டகாலச் சிக்கல் . அது ஒரு ரசாயன சுத்திகரிப்பு ஆலை .அது அங்கு துவங்கப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைகுறிய பல சம்பவங்களை அந்த ஆலை நிர்வாகம் துணிந்து செயல்படுத்தத் துவங்கியது . அந்த ஆலை அங்கு அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது உள்ளூர் பிரமுகர்களின் தலையீடு மற்றும் அவர்கள் அளித்த உறுதி மொழியினால் எதிர்ப்புசெயலிழக்கம்செய்யப்பட்டது . ஆலை நிர்வாகம் கொடுத்த இரவு நேர உற்பத்தி மட்டும் என்கிற உறுதி மொழி மீறப்பட்டு மாலையிலேயே உற்பத்தி துவங்கியது . அது குறித்து இளைஞர்கள் சிலருடான பல நாள் நடைபெற்ற  சில்லரை தகராறு ஒரு நாள் ஆலை நிர்வாகத்திற்கு எதிரான பெரும் மோதலாக உருவெடுத்தது. இளைஞர் காங்கிரஸின் தொண்டர் அமைப்பு பலமிக்க பகுதிகளில் அதுவும் ஒன்று . பிரச்சனை காவல்நிலையம் வரை சென்றது . இளைஞர் காங்கிரஸ் சார்பாக பதினைந்து பேர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றனர் , அவர்களை காவல் துறையினர் கைது செய்திருப்பதாக இரவு 9:00 மணிக்கு செய்தி வந்தது . செய்திகள் எப்பவும் நெருப்பு போல உக்கிரத்துடன் வந்தடைந்தவுடன் எங்கும் பற்றி எரியத்துவங்குவது . உடனடியாக கூட்டம் தலைமை அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் குவியத் துவங்கியது  . பாலன் அன்று ஊரில் இல்லாததால் இங்கும் அங்குமாக முட்டி மோது தகவல் எங்களிடம் வந்து சேர இரவாகியது . நாங்கள் காவல்நிலையம் சென்றபோது சூழல் கொதிநிலையை எட்டி இருந்தது . அது எனது முதல் அனுபவம் , மிகுந்த பதட்டத்தில் இருந்தேன். இரவு நேரம் அதை பல மடங்காக பெருகச் செய்திருந்தது . இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி தொண்டர்களாக அன்றாடம் பார்க்க நேரும் அந்த மனிதர்களை காவல் நிலையத்தில் பிரச்சனைகளுக்கு மத்தியில் பார்க்க நேர்ந்தது துணுக்குற வைத்தது . காவல் நிலையத்தில் வழக்கம்போல மட்டையடி நடத்தி அவர்களை மீட்டு வந்தது சாதனை உணர்வை  தந்தது . மொத்த சிக்கலுக்கும் குறிப்பிட்ட ரசாயன ஆலை காரணமாக இருந்தாலும் புகார் கொடுக்க வந்த ஆளும் கட்சியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை தயக்கமில்லாமல் கைது செய்தது அதிர்வை ஏற்படுத்தி இருந்தது . மீட்டு வெளிவந்த பின்னரும் அது பற்றிய பேச்சு ஓயவில்லை , எங்கு சுற்றினாலும் இறுதியில் அங்கு வந்து நின்றது . அங்கு ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த முதிர்ந்த ஒருவர் வலுவான மாற்று சிந்தனை ஒன்றை முன் வைக்கும் வரை . அவர் சுதந்திர போராட்டத் தியாகி என்று பின்னர் அறிந்து கொண்டேன். பலர் பரப்பரப்பாக பேசிக் கொண்டிருக்க அவர் சொன்ன கூரிய அரசியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவர் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டேன். பேச்சினூடாக அவர் முன் வைத்தது அரசியலின் எதார்த்த முகம். மிக கொடுமையாக இருந்தது . எந்த பகட்டு பாவனைக்குள்ளும் அடங்காமல் குத்திக் கிழித்து புடைத்து வெள்ளெலும்புக் என வெளித்தெரிந்தது. இயக்கங்களுக்குள் நிகழும் உள்ளரசியல் பற்றியும்  அதன் இடவெளிகளின் வழியாக காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் அத்துமீற நினைப்பது போன்றவை அப்போது எனது ஆரம்ப கட்ட புரிதலாக இருந்தது . அரசு துறைகளின் அரசியல், அவர்கள் அரசியலாளர்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும். கட்சி ரீதியில் தொண்டர்கள் எந்த உண்மைநிலையை முன் வைத்தாலும் அரசாங்கத்திற்கு வேறொரு கருத்தை முன்வைத்து அவற்றை செயலிழகச் செய்துவதுடன் அமைச்சர்கள் அல்லது கட்சி நிர்வாகிகளை அவர்களுக்கு எதிராக திருப்பி விடுவது அரசு அதிகாரிகளின் அடிப்படை அரசியல் . அவர்களை வெல்லும் வழி அறியாது ஒருவன் தன் அரசியலை வென்றெடுக்க முடியாது என்றார்  . அரசியல் என்பது கட்சிக்குள் நடக்கும் காலிடறும் விளையாட்டை மீறி , பொது நிர்வாகத்திடம் பேசும் வல்லமையை பெறுவதில் தான் இருக்கிறது என்றார். அன்று இரவு நடந்த உரையாடல் நான் முற்றாக எதிர்பாராது . எனக்கான தனித்த அரசியல் என அப்போது ஏதும் எனது எண்ணத்தில் இல்லை . ஆனால் அது எங்கோ எனது ஆழ்மனதில் தங்கி இருக்க வேண்டும் . 1999 களில் எனக்கான பாதையை நான் திட்டமிட்டது மொத்தமும் அதன் அடிப்படையில் அமைந்தது .பிறிதொரு சந்தர்பத்தில் அவரை தேடிச் சென்று தலைவர் சண்முகம் என் முன் வைத்த அந்த இரண்டு கேள்விகளில் ஒன்றை கேட்டேன் . புதுவை சுதந்திர போராட்டம் பற்றிய பல அரிய தகவல்களை சொன்னார் . அவை சிக்கல் மிகுந்தவை . புதிய புரிதல்களை கொடுத்தவை


அந்த நிகழ்விற்கு பின்னர் ஒவ்வொரு பகுதியிலும் அவரைப் போன்றவர்களை தேடி சென்று சந்திப்பதை வழக்கமாக கொண்டேன் . வயது முதிர்ந்த அந்த சுத்தந்திரப் போராட்டகாரர்களை சந்திப்பது அரசியல் முக்கியத்தும் வாய்ந்தது என கருதத்துவங்கினேன் . அரசாங்கத்தின் கனிந்த முகத்தை கட்சி அல்லது அமைச்சர்களின் கருணையால் வென்றெடுக்க முடியாது என்றனர்  . ஒவ்வொன்றிலும் அவரவர்களுகான தனித்த நோக்கம் இருக்கிறது . இங்கு பொதுப் பிரச்சனை என ஒன்றில்லை என்கிற நிதர்சனம் அதிர வைத்தது . உண்மை தோலுரிந்து வெளிவரும் கணம் என ஒன்றுண்டு . எனக்கானது இதுதான் . அரசியலை கடந்து காவல்துறை தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தால் வழக்கு பதியாமல் அவர்களை காவல் நிலையத்தில் அந்த இரவு வைத்திருக்கம் துணிவைத் தந்தது . இயக்கத்தினுள் இருந்த பிளவு , இளைஞர் காங்கிரஸின் கையறு நிலை அதை பயன்படுத்தும் உள்ளூர் கட்சி முக்கியஸ்தர்கள் என பல முகங்கள் வந்து சென்றது . அன்றிரவு வென்றாதாக நினைப்பது போல மடமை பிறிதில்லை . காவல் நிலையத்தில் இருந்த குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் , வெளியே திரண்டிருந்த எதிர்நோக்காத கூட்டம் , வழக்கு பதியாமையால் உடன் அழைத்துச் சென்றிருந்து வழக்கறிஞர் முன்வைத்த கேள்விகள் மற்றும் முதல் தகவல் அறிக்கை போன்ற ஆவணங்களை கொடுக்க முடியாமை போன்றவை அவர்களின் கைகளை கட்டியிருந்தது . நிலமை கைமீறி செல்வதை காவல்நிலை பொறுப்பாளர்கள் தங்கள் மேலிடத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்த , பிடித்து வைத்திருந்தவர்களை வெளியிட நேர்ந்தது . ஆனால் அது முடிவல்ல நாளை இரவு அழுத்தத்துடன் அவர்கள் இன்னும் மூர்கமாக அதையே மீளவும் செய்யக்கூடும் . அந்த உண்மை அப்போது உரைக்கவில்லை . அரசியலில் அனுபவமுள்ள வயதான அந்த காலனி பெரியவர் ஒருவர் அதை உணர்த்தும் வரை. “அவர்கள் அங்குதான் இருக்க போகிறார்கள் இன்றில்லை என்றால் என்ன ? நாளை பார்த்துக் கொள்ளலாம் என புன்சிரிப்புடன் நினைத்துக் கொண்டிருப்பார்கள்என்றார் , அந்த எண்ணம் நினைவில் எழும்போதெல்லாம் உளச்சலை கொடுத்து .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக