https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 29 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -66 . மையக்கருதுகோள் .

ஶ்ரீ:





மையக்கருதுகோள்






பதிவு :  460 / தேதி :- 29 . மார்ச்   2018





ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பரகாலன்ஆயிரமாவது ஆண்டு விழாபற்றிய ஒரு கோட்டோவித்தோடு என்னைத் தேடி வந்திருந்தார். அது நான் திட்டமிட்டதற்கு சம்பந்தமில்லாத ஒரு பொது நிகழ்வு போல ஒருங்கப்பட்டிருந்தது . ஆயிரமாவது ஆண்டு விழாக்குழுவின் தொடக்கமாக அது தேதி குறிப்பிடப்படாமல் ,வேளுக்குடி ஸ்வாமியின் தேதியை பெற்றுவிட்டால் பின் அனைத்தும் அதை மையப்படுத்துகிற ஒன்றாக உருமாறிவிடும் . அது ஒரு நிகழ்வின் அட்டவனையை போல இருந்ததே அன்றி , நான் உருவாக்க நினைக்கும் இயக்கத்திற்கும் அதற்குமாக எந்த தொடர்பும் இல்லாமையால் , என்னை அதற்கு தலைமை ஏற்க சொன்னபோது நான் உறுதியாக மறுத்துவிட்டேன்

அது வழமை போல சில பகவாதர்களை கொண்ட குழுவாக வடிவமைக்கப் பட்டிருந்தது  , இரண்டு காரணங்களுக்காக அதற்கு முற்றாக என்னால் உடன்பட முடியாமல் போனது . ஒன்று ; இவர்களுக்கு மாற்றாக உருவாகி வருவதே நான் நினைக்கும் அமைப்பு , அவர்கள் அனைவரும் தங்களை தீவிர நோக்கம் கொண்டவர்களாகவும் , அதையே பொது தளத்தில் வெளிப்படுத்திக் கொள்ளவதில் தயக்கமில்லாதவர்களாகவும்அதுவே தங்களுக்கான அடையாளம் என நினைப்பவர்களாக, அதனால்  மிகையான செயல்களுக்கு  தயங்காதவர்களாக இருந்தனர்

ஆன்மீக நாட்டமுள்ள குடிமை சமூகமோ மிக நுண்மை தேவைபடுகிற தொடுகையை வேண்டுபவை . விஷயங்களில் சொல்லப்படுகிற அழுத்தம் தவறான இடத்தில் கொடுக்கப்பட்டால் அவர்கள் நொறுங்கிபோவார்கள் . பின் ஒருகாலமும் இதற்குள் வருவதற்கான விழைவை கைவிட்டு விலகுவார்கள் ,என்கிற புரிதல் இல்லாதவர்களாக இவர்களை பார்த்திருக்கிறேன் . நான் இதில் எவர் மேலும் குற்றம்காண விழையவில்லை ,இந்த வலுப்பூதளம் அதற்கானதுமல்ல. சிதறிய என் சிந்தனைகளை எழுதித் தொகுத்துக் கொள்வதற்கானது இத்தளம்

சம்பிரதாயத்தில் ஊற்றமுடையவர்கள், தங்கள் உரையாடல்களில் குடிமை சமுகத்தின் போக்கிற்கு விருத்மானதான ஆச்சாரம் போல ஒன்று இங்கு பேசப்பட்டு விடுவது கேட்கும் எவருக்கும் சட்டென ஒரு ஒவ்வாமையை அது ஏற்படுத்திவிடும் . அவர்கள் பேசுகிற ஆசாரம் காலாவதியான ஒன்று ,மேலும் சில காலம் கழித்து சொல்பவர்களாலேய அதை கடைபிடிக்க முடியாத சூழல் எழுந்து வருவதையும் . நம்பிக்கைக்கும் , நடைமுறை யதார்த்தத்திற்கும் மத்தியில் சிக்கி அனைத்திலும் கசப்படைந்து தங்களின் இறுதி காலத்தில் தனிமைபட்டு விடுவதை பார்த்திருக்கிறேன் .

அவர்களின் இளமை காலத்தில் சாமான்ய கருத்துக்களில் இருந்து நுண்மையான சம்பிரதாயமான கருத்துக்களால் ஏற்படும் அளப்பரிய புரிதலில் ஏற்படும் தாக்குதலின் எடை தாளாமல் , தனக்கு கிடைத்த அனுபவம் பிறருக்கும் என பகிர எண்ணுகிற நல்லுணர்வே இந்த சிக்கலின் துவக்கம் என்பது நகைமுரண் . அதை அவர்கள் பலவித உலக அனுபவம் பெற்றவர்களை ஒரு திரளாக நிறுத்தி தான் அடைந்த புரிதல்களை அவர்களை நோக்கி பேச முற்படுகையில் தனிமை படுத்தப்படுவது துவங்கி விடுகிறது. . 

ஆச்சார விஷயங்கள் பாத்திர சுத்தி போல , ஶ்ரீமத் பாகவதம் இதை சாமான்யம் , விசேஷம் என இரண்டாக பகுத்துக்கொள்கிறது . நம்பிக்கையும் புரிதல்களும் அவரவர் வாழ்வியில் அனுபவத்திலிருந்து துளிர்ப்பவை . அனைவருக்குமான பொதுமையாக அவை சொல்லப்பட்டிருந்தாலும். அவை ஒவ்வொரின் ஆழ்மனத்துடன் தனித்து உரையாடக்கூடியவை. புரிதலை வாழ்வியலில் பொறுத்திப்பார்த்து , ஜீரணிக்க கூடியதை அவரவர் விழைவில் விட்டு , அங்கிருந்தே அவர்களுக்கான பாதை எழுகிறது என நினைக்கிறேன்.

என்னுடைய எண்ணங்கள் சிதறிக்கிடந்ததால் அதன் முரண்களை தொகுத்துக் கொள்ள இயலவில்லை . ஜெயமோகனின் ஆக்கங்களும் , பதிவுகளும் எனக்கு அற்புதமான திறப்புக்களை கொடுத்திருந்தன . நான் அடைந்தவற்றை அங்கிருந்துதான் பெற்றுக்கொண்டேன். “வேதவிஞ்ஞானம்என்கிற கருதுகோளுடன் துவங்கிய எனது பயணம்இந்து ஞானமரபுஎன்பதாக மாற்றமடைந்த பிறகே இதில் எனக்கான தெளிவு கிடைத்தது . அதைப்பற்றிய விரிவான பதிவு பிறிதொன்றில் .

இந்தப்பதிவில்  சொல்லப்படுகிற கருத்துக்கள் என் நினைவாக சிதறி கிடந்தவை, அவற்றை ஜெயமோகனின் கருத்துக்களை கொண்டு என்னை தொகுத்து கொள்ளும் முயற்சியாக இதை பார்க்கிறேன். “இந்து ஞானமரபுகுறித்த சில முன்னெடுப்புகளுக்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நிலையில் . இப்போது நான் என்னை தொகுத்துக்கொள்வது அவசியமாகிறது . நான் இன்னும் அந்த பயணத்தில் தான் இருந்து கொண்டிருக்கிறேன் . இதன் பெரும்பகுதி அவரது கட்டுரையிலிருந்து நான் என்னை தொகுத்துக்கொண்டவை

ஜெயமோகன் சொல்லுவதைப்போலஉறுதியான நம்பிக்கை என்பதே கூட ஆன்மீகத்துக்கும் தேடலுக்கும் ஒருவகையில் எதிரானது . அது லௌகீகத்தில் கடவுளைப் பிடித்துக்கொண்டு முன்னேறுவதற்குரியது. அந்த நம்பிக்கை என்பது ஆன்மீகத்தேடலுக்குரிய சுதந்திரம் இல்லாமல் செய்துவிடுகிறது. ஆன்மீகத்தேடல் என்பது எல்லா திசைகளுக்கும் விரியக்கூடியதாகவே இருதல் தனக்கான வழியை அடைவது என்கிறார்.

ஆன்மீகம் என்பது ஒரு நிறைவின்மையை ஒருவர் உணர்வதில் இருந்து ஆரம்பிக்கிறது .ஒருவருக்கு ஆன்மீகமான நிறைவின்மையும் தேடலும் உருவாகவில்லை என்றால் அவருக்கு அதை இன்னொருவர் உருவாக்கி அளிக்கவேண்டும் என்பதில்லை. கடவுளும் மதமும் அளிப்பவையே அவருக்குப் போதுமானவை


கீழ்நாட்டு மதங்களான இந்து, பௌத்த,சமண மதங்களில் ஆன்மீகவிடுதலை என்ற கருதுகோள் முக்கியமானது. ‘மோட்சம்என்றும்முக்திஎன்றும்கைவல்யம்என்றும்நிர்வாணம்பல்வேறு சொற்களால் இந்நிலை சுட்டப்படுகிறது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த மதங்களில் இல்லாத ஒரு மையக்கருதுகோள் இது. ஒரு தனிமனிதர் எட்டக்கூடிய உச்சகட்ட நிலை என இதைச் சொல்லலாம்எனகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்