https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 21 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -60 . தரிசனம் .


ஶ்ரீ:





தரிசனம்.





பதிவு :  452 / தேதி :- 21 . மார்ச்   2018






ஆயிரம் ஆண்டுகளாகநினைவு கூறத்தக்க ஒன்று, மிக சமீபத்தில் நிகழ இருப்பதும், அது நிகழும் போது நமக்கு இன்னும் கொஞ்சம் இளமை மிச்சமிருப்பதும் , முயன்றால் அதில் நமக்கும் ஆற்றிட சிறு பங்கும் இருப்பின், அது நமக்கு  ஒரு கொடையை போல நினைக்க வைப்பது . பல விதங்களில் மனிதர்களை இதில் இணைத்து விட வேண்டும் என்கிற விழைவு மிகுந்திருந்தது . மரபு மற்றும் நவீன மனங்களுக்கான முரண்களை களைய இதில் ஒரு வழி கண்டடையப்பட வேண்டும் என நினைத்தேன். வேதம் மகாபாரத காலத்தில் இரண்டாக பகுக்கப்பட்டது கர்ம காண்டம் , ஞானகாண்டம் என்று . ஞானகாண்டம் வேதாந்தம் எனப்படுகிற வேதமுடிபு கொள்கைகளை பற்றிப் பேசுவது . புராணங்களும் இதிகாசங்களும் வேதாந்தத்தை விளக்கி சொல்ல வந்தவைகளே என்கிறார் வியாச , வால்மீகிகள் தங்கள் ஆக்கங்களில்  . வேதமுடிபு கொள்கைக்கு எதிராக நடந்த யுத்தமென மிக நுட்பமாக சொல்லப்படுவது மகாபாரதம் . கிருஷ்ணின் அவதாரமே அதை நிர்ணயம் செய்வதன் பொருட்டே என்றும் , கீதை அழுத்தமாக நிர்ணயிப்பது வேதமுடிபையே என்கிறார்கள் பெரியோர்கள். ஆனாலும் இந்த சர்ச்சை ஆயிரமாண்டுகளுக்கு முன்னரும் உயிர்ப்புடன் இருந்திருப்பதை ராமானுஜரின் சரித்திரத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது .

அவற்றை தீவிரமாக முன்மொழிந்த ராமானுஜர் அன்று மதப் புரட்சியாளராக பார்க்கப்பட்டு , தீவிர வைதிகர்களின் எதிர்ப்பில் உயிராபத்தையும் சந்திக்க வேண்டி இருந்தது . ஆயிரமாண்டுகளுக்கு பின்னர் அவர் சொன்ன கோட்பாடுகள் இன்று எவ்வாறு இந்த பொருளியல் மற்றும் உலகமயமாக்கல் காலகட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் என்கிற பார்வை முக்கியமானதாக கருதுகிறேன். அவற்றின் புதிய மதிப்பீடுகள் கண்டடையப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என நினைக்கிறேன் , சித்தாந்தத்திற்கும் நடைமுறைக்குமான விஷயம் அது . இன்று பேசப்படும் ஒழுக்க நெறிகள் கணக்கிட முடியாத காலத்திலிருந்து உலகம் முழுவதுமாக பொதுவில் எழுந்து வந்தவை

அறம் எனப்படுவது . பாசம் கருணை என்கிற  உணர்வுகளை போல மனிதனின் இயல்பில் அது இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் .அதனால்தான் இத்தனை கோடி நூல்கள் அறத்தை வலியுறுத்தி வந்துகொண்டே இருக்கிறது போலும் . வேத முடிப்பின் சாரத்தை சொல்லி பரவியது விசிஷ்டாத்வைதம் , அந்த காலகட்டத்தில் ஆறு சம்பிரதாயங்கள் சனாதன மதம் என்கிற கோட்பாட்டை கொண்டதாக அடையாளப்படுத்தப்பட்டது . அவை வேதத்தை ஒப்புக்கொண்டவைகள் என்கிற அளவுகோலில் படி இருந்தும்அந்த காலகட்டத்தில் அவற்றிற்குள் இருந்த முரண்பாடு உச்ச நிலையை அடைந்திருந்தது . முரண்களினால் விளைந்த கொலைகளும் , கோவில் சிதைப்புகளும்மூல விக்ரகங்களை மாற்றி ப்ரதிஷீட்டை செய்யப்பட்ட நிகழ்வுகளையும் வரலாறுகளில் இருந்து தெரிந்து கொள்கிறோம் .

இன்று மதத்திற்கான தேவைகளும் ,நோக்கங்களும் பெரும் மாற்றமடைந்து விட்டதை பார்க்க முடிக்கிறது . இன்று சனாதன தர்மம் என்கிற அளவில் ஓங்கி முழக்கப்படுகையில் கூட அவை புரிந்துகொள்ளப்படுமா? என்கிற கேள்வி எழுகிறது . கார்ப்பரேட் குருநிலைகளின் தோற்றமும் வளர்ச்சியும் வைதிக மத தொடர்ச்சியை விரும்புபவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுப்பதை விட காழ்ப்பையே கொடுத்திருக்கிறது. ஆனால் இன்றைய நவீன மனங்களின் தேவையை காரபரேட் குருநலைகள்தான் மிகச் சரியாக புரிந்து வைத்திருக்கிருக்கின்றன . அங்கிருந்துதான் நாம் அடையவேண்டிய சில இலக்குகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்

அனுபவங்களை கருத்துக்களாக தொகுத்துக்கொள்ள தத்துவம் இன்றியமையாதது . நவீன குரு நிலைகள் அதைத்தான் முன்வைக்கின்றன . அது இங்கும் விரிவாக, ஆழமாக எடுத்துப்பேசப்பட வேண்டும் என்கிற விழைவு எனக்கு எப்போதும் இருந்து கொண்டிருந்தது . பௌராணிக மரப்பில் அதை நிகழ்த்து கலையாக பேசுபவர்களும் நிகழ்த்துபவர்களுக்கும் , தங்கள் அவைகளில் அமரும் பார்வையாளர்களை கணிக்க தவறுவதை பார்த்துவருகிறேன். அதற்கு வரும் திரள்களின் எண்ணிக்கை தேய்ந்து வருவதற்கு காரணம்மாற்றமடைந்து வரும் சமூகத்தை நோக்கி  உரையாட அவற்றிடம் ஏதுமில்லை என்கிற உண்மையே பேருரு கொண்டு நிற்பதை பார்க்க முடிகிறது.

ஒரு முறை வேளுக்குடி ஸ்வாமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது  அவரிடம் கேட்டேன் , உபன்யாசத்திற்கான கூறுமுறையை அன்றாட மாறுதலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்கிறீர்களா? எப்படி மேம்படுத்திக்கொள்கிறீர்கள் ? என்று . அதற்கு  அவர் காலத்தை ஏற்று தாம் மேம்படுத்திக் கொள்வதாக சொன்னார். காலத்திற்கு உகந்த கருத்துக்களுக்கு தேவை ஏற்படும் போது. அதற்கு ஒரு நவீனத்தன்மை இருப்பதாக பொதுவில் ஒரு அர்த்தம் வந்து விடுகிறது . ஆனால் அவை அனைத்தும் வேதக்கடலில் எங்கோ சொல்லப்பட்டவைகளே . அதில் எங்கு அல்லது எவ்விதம் அவை சொல்லப்பட்டு இருக்கிறது, என்பதை  இணைத்து பார்க்கும் யுக்தி தெரிந்து விட்டால், பேம்படுத்துதல் எல்லோருக்கும் , எப்போதும் இயலுவதே என்றார் . இதுவே  நான் எதிர்பார்த்த கருத்தும் கூட . இன்றைய நவீன உலகிற்கு பொருந்தும் கருத்துக்கள் மதத்திற்கு எதிரானதாக நினைப்பதற்கு முன்பாக, அதுபற்றிய ஒரு மாற்று சிந்தனைக்கு அவை அறைகூவுவதை பற்றி விவாதிக்க  வேண்டும் என்று நினைத்த போதுதான்வேதவிஞ்ஞானம்என்கிற கருதுகோளை நோக்கி நகர ஆரம்பித்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...