https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 17 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -57 . குரு .

ஶ்ரீ:

குரு
பதிவு :  448 / தேதி :- 17. மார்ச்   2018

எனக்கு அரசியலில் குரு எனில்  மானசீகமாக  "காந்தி" , அவரின்புராதன வடிவமாக நான் கருதும் "பீஷ்மர்" , நேரடியான  "குரு" எக்காலத்துக்குமாக  தலைவர் சண்முகம்” . எனக்கு அரசியலில் விழுமியங்களை சொல்லிக் கொடுத்தவர்  . பிறிதொருவரை அந்த இடத்தில் என்னால் வைக்க முடியாமையே, நான் என்னை முற்றாக அரசியலிலிருந்து துண்டித்துக் கொண்டதற்கு முதற் காரணமாக அமைந்து . அந்த இடத்திற்கு பிரிதொருவர் வர இயலாது என்றே நான் நினைக்கிறேன் . சில சமயம் அவருக்கு அடுத்ததாக நான் வல்சராஜை நினைத்ததுண்டு , ஆனால் அதற்கான தகுதி தனக்கிருப்பாதாக அவர் நினைக்கவில்லை என்பதுதான் வினோதம் . அன்று தலைவர் சண்முகம் தனது வெறுமையாலோ, ஆற்றாமையாலோ தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் . ஆனால் தொடர்ந்து அவர் செய்த பிறழ்வுகளால் , அவருக்கு அடுத்தபடியாக வளர்ந்திருக்க வேண்டிய தலைமுறை முற்றாக சிதைந்து போனது . அந்த பெரும் மனவருத்தத்தில் இருந்த போது, அவரது  பேச்சால் கடுமையாக சீண்டப்பட்டு  முதல் முறையாக அவரிடம் நேருக்கு நேர், எதிர் நிற்கிறேன்

அந்த இரண்டு மணிநேர விவாதத்தின் இறுதியில் அவர் என்னிடம்  “நீ ஜெயித்தாய் , நான் தோற்றேன்என்றது விந்தையானது , அப்போது முடிவு செய்தேன் ,இனி நான் கட்சியில் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று . அவர் சொல்லிக் கொடுத்த தத்துவத்தின் படியே எந்த வித சலனமுமின்றி அரசியலிலிருந்து முற்றாக வெளியேறினேன் . அவரது அறுபது வருட அரசியல் அனுபவம் பலரின் கணிப்பை பலமுறை பொய்யாக்கி இருக்கிறது. ஆனால் அன்று நான் கணித்ததே அவருக்கு நிகழ்ந்தது . இன்னொரு வாய்ப்பு அவருக்கு கிடைக்கவேயில்லை . அன்று அவருடனான விவாதத்தில் , மிக சரியான வாதத்தைதான் நான் முன்வைத்தேன் என்பதில் எனக்கு நிறைவே .

அன்று இரவு பலவாறான சிந்தனையின் மத்தியில், நான் பாட்னாவிலிருந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன் . அந்த பயணம் எனக்கு பல காரணங்களினால்  மறக்கமுடியாதது . நான் என் குடுபத்தருடன் ரயிலில் பயணிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை அதற்கான சந்தர்ப்பம் இப்போது வாய்த்தது . ரயில் பயணிப்பது எனக்கு  எப்போதும்  ஒரு வித மன உத்வேகம் கொடுப்பது . ஆனால் இந்த பயணத்தில் மன அலைக்கழிப்பை தருவதாக இருந்தது. எனக்குள் எழுந்த அடுத்து என்ன? என்கிற கேள்வி

எனது பயணங்கள் எப்போதும் முழு அளவில் திட்டமிடப்பட்டதாக இருக்கும் . அனைத்திலும் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் வழமை எனக்கு இயல்பில் இருந்திருக்க வேண்டும் . அதுவே என்னை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிறர் செய்ய தயங்கும் விஷயங்கள் முயற்சிக்கும் எனக்கான பாதையாக அவை திறந்து கொள்கின்றன . அதுவே எப்போதும் என் அடுத்தநகர்விற்கு காரணமாக இருந்து விடுகிறது . அவற்றை முற்றாக திரும்பிப்பார்க்கிறேன் . அனைத்திலும் இப்போது முழுதான மனமாற்றத்தை அடைந்திருக்கிறேன் என நினைக்கிறேன்

முழுமையாக  நடைமுறைத் தொழிலில் இருந்து அப்போது வெளியேற விழைந்து நான் காத்திருந்தேன் . அன்றைக்கு எனது திட்டங்கள் வேறுவிதமானவைகள் . தந்தையின் பெயரில் ஒரு அறக்கட்டளை துவங்கப்பட வேண்டும் என்கிற முனைப்பு இருந்த காலம் அது. அதற்கான பூர்வாங்கமான வேலைகள் அனைத்தும் தொடங்கி, முடிந்திருந்ததுஅந்த அறக்கட்டளை ஜீயர் ஸ்வாமியை தலைவராக கொண்டும் , அதற்கு  தேவையான பொருளாதாரத்தை என் தொழிலில் இருந்து மடை மாற்றப்படுவதை பற்றிய திட்டம் முழு வடிவத்தை எட்டி இருந்தது

அந்த காலகட்டத்தில் நான் இரண்டு விதமான மனநிலையில் இருந்ததை இப்போது அறிந்துகொள்ள முடிகிறது . அவை  ஒரே பொருளின்  இரு முனைகளை போல . எதிரும் புதிருமானவை . ஒன்றில் நான் தொழிலில் இருந்தும் முற்றாக வெளியேற வேண்டும் என்கிற விழைவு அடிநாதமாக இருந்ததுஆனால் நான் அதுவரை செய்து கொண்டிருந்த தொழைலைபொது நிறுவனமாகமாற்றி மிக  விஸ்தாரமான முன்னெடுத்து கொண்டிருந்தேன் . மனம் இரண்டாக பிளவுற்றது போல ஒரு நிலை. உள்ளே ஆழத்தில் ஒன்று கெஞ்சுவதையும் அது முழுமையாக என்னை ஆக்ரமிக்கும்போது கண்களில் நீர்மை அடைவதையும் என்னால் தவிர்க்க இயலவில்லை

அது மன நிம்மதியை பற்றியது . அதற்காக அது கேட்கும் விலை மிக பயங்கரமானது . அதை ஒருநாளும் என்னால் செய்ய முடியாதது . ஆனால் காலம்தான் அதை எனக்கு எடுத்து கொடுத்தது. அதை பற்றிக்கொண்டு நான் மெல்ல மெல்ல அதிலிருந்து வெளியேறினேன்.

அது ஒரு இறப்பின் தருணம் . நான் வெளியேறினேன் என சொல்லுவதை விட , அது என்னை வெளியேற்றியது என சொல்வதுதான் சரியாக இருக்கும். இப்போதும் நினைத்துப்பார்க்கிறேன் , பிறந்ததிலிருந்து உடலில் ஒட்டியிருந்து ஒன்றை, உயிருக்கு சமானமான ஒன்றை ,வெட்டிக்கலைந்ததை போல என்னை என்னிலிருந்து போழ்ந்தெடுத்து கொடுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக