https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 19 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -59 . எல்லைகளைக் கடந்து...


ஶ்ரீ:




எல்லைகளைக் கடந்து...


பதிவு :  450 / தேதி :- 19. மார்ச்   2018






மதம் என்கிற ஒன்று இந்துக்களுக்கு சகலவிதமான ஆச்சாரங்களை, ஒழுக்கங்களை, விழுமியங்களை புராண இதிகாசங்களின் வழியாக கதைகளாக சொல்லிச் செல்கின்றன , மதம்  மறுதலிக்கப்படுகையில்  சரடு போல இணைத்திருந்த ஒன்று அறுபட்டுபோகிறது . காரணம் நம்முடைய  மொழி கலாச்சாரம் பண்பாடு போன்றவை மதத்தின் வழியாகவே நமக்கு சொல்லிக்கொடுப்பட்டு வந்திருக்கிறது . குடும்பம் என்கிற கருதுகோள் காலத்தினால் பெரும் மாற்றம் அடைந்திருப்பதை பார்க்க முடிகிறது . “பொருளியல்அதில் பெரும் பங்கு வகிக்கிறது . தந்தையை மையப்படுத்தியதில் இருந்தது விலகி மகனை மையங்கொள்கிற போது அனைத்திற்கும் புது பரிமாணம்  வந்து விடுகிறது , அது மகளை மையப்படுத்துகிற போது  மாற்றம் இன்னும்  நுண்மையானதாக மாறிவிடுவதை காண்கிறேன்  . 

உறவுகள் அனைத்தும் மதம் என்கிற ஒன்றை மையப்படுத்தியே நம்மை சுற்றி பின்னப்பட்டிருக்கின்றன . அவற்றின் நுட்பங்கள் நமது ஆழ்மனப்படும்பங்களில் வேர் விட்டிருக்கின்றன . நமது அன்றாட முறைமைகள் அவற்றிலிருந்தேதான் எழுகின்றன . சமூக மரியதை, அந்தஸ்து என்பதும் விழுமியங்களும் அங்கிருந்தே இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது . அதிலிருந்து ஒருவருக்கு விலகும் வாய்ப்பு ஏற்படின் அனைத்தை நோக்கியும் கேள்விகள் எழுந்துவிடுகிறது. அவற்றால்  சிந்தனையில் நிகழும் பரிவர்த்தனைக்கு மிக ஆழமான தொடர்பிருப்பதாக கருதுகிறேன்

மதம் ஒரு குறியீடுபோல அதில் விரவி இருப்பதை பார்க்க முயலுகிறேன் . மரபான குருநிலைகளின் செயல்பாடுகளால், அவற்றிலிருந்து சமூகத்தின் எதிர்பார்ப்புகள் முற்றிலுமாக விலகிவிட்ட சூழலில் , அவர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் வாய்ப்பு அவைகளுக்கு குறுகிவிட்டது என்றே உணர்கிறேன். சமூகமும் ,குடும்ப சூழலும் , அவர்களுக்கு விடுக்கும் அறைகூவலை எதிர்கொள்ள மரபான குருநிலைகள் உதவ இயலாத சூழலில், இதற்கான பதிலை கண்டடைவது எளிதானதல்ல.

இதை ஒட்டிய சிந்தனையில் ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்கிற வேகத்தில் நான் இருந்த நாட்கள் அவை . பக்தி மார்க்கத்தை குறித்த நம்பிக்கை மட்டுமே அனைத்து வித எதிர்மறை சிந்தனைகளுக்கு வடிகாலாக இருந்தது . அதன் நுட்பம் நோக்கிய தேடலை அவை என்னுள் தொடங்கி வைத்தன . ஏதாகிலும் செய்ய வேண்டும் என்கிற முனைப்பின் வடிவேராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுபற்றிய பெரும் கனவு திட்டத்தில் நான் அப்போது இருந்தேன். பாட்னாவிலிருந்து  சென்னை நோக்கிய இரண்டு நாள் பயணம் அதன் தொடக்கமாக அமைந்தது .

ஆயிரம் ஆண்டுகள்அறுபடாத தொடர்பு என்பது , ஒருவித மனக்கிளர்வை தருபவை , அது பிரம்மாண்டமான நிகழ்வாக ஒருங்கப்படும்போது , சமூகத்தை நோக்கி உரையாடும் வாய்ப்பை அது தருவதற்கான சந்தர்ப்பத்தை உணர்ந்தேன்  , அதை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த சூழலில் , ஒரு கார்ப்பரேட் குருநிலை செய்யும் தொடர்புறுத்தலின் ஒரு சிறு பகுதியாவது இதில் இருக்க வேண்டும் என்பதும், சம்பிரதாயங்களுக்கு இடையே இருக்கும் காழ்ப்பும் , மரபு மற்றும் நவீன மனங்களுக்கான முரண்களை களைய இதை ஒரு வழி கண்டடையப்பட வேண்டும் என நினைத்தேன். மனதளவில் அந்த திட்டம் முழுமை பெறாதநிலையில் , அதற்கான  சாத்தியம் நோக்கிய முதலடியை  அந்த ரயில் பயணம் ஏற்படுத்தி கொடுத்தது என உணர்கிறேன்.


திரும்பி வரும் இரண்டு நாள் பயணத்தை ரயிலில் அவருடன் இணந்து செல்வது என முடிவெடுத்தது ஜீயர் ஸ்வாமிகளிடம் இந்த விஷயங்கள் குறித்து பேச நிறைய வாய்ப்பும் இருக்கும் என்பதால்தான் . அவர்கள் வேறு பெட்டியில் இருந்தார்கள் . மறுநாள் சந்தித்திக்க வாய்ப்பு கிடைத்தால், நான் நினைப்பதைப் பற்றி அவரிடம் பேசலாம் என்கிற எண்ணத்தில் இருந்தேன் . அந்த இரவு ஒரு அற்புதமான பயணமாக இருந்தது . மறுநாள் காலை எழுந்ததும் அந்த கூப்பே முழுவதுமாக எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இருந்ததை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை . காலை உணவு ,அரட்டை ,மதிய உணவு என அன்றை நாள் ஒரு மறக்க முடியாத அனுபவங்களாக அவை நீண்டுகொண்டே சென்றது . மதிய உணவிற்கு பின்னர் நான் தூங்க சென்றேன். மாலையில் ஜீயர் ஸ்வாமியை சென்று சந்திக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு . ரயிலில் மட்டும் ஏன் படுத்தவுடன் தூக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது இன்று வரை தெரியாத விஷயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்