https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 2 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 42 . அஜடம் .

ஶ்ரீ:



அஜடம் 




பதிவு :  432 / தேதி :- 02 மார்ச்   2018







மனதிற்கு நிறைவான ஒரு நிம்மதியை அடைந்திருந்தேன். என் உள்ளே நீண்ட காலமாக அழுத்திக்கொண்டிருந்த ஒரு நிறைவின்மை . அது நதியில் அடித்துக் கொண்டு போய்விட்டதை போல ஒரு எடையின்மையை , ஒரு மகிழ்வை கொண்டுவந்து நிறைத்து விட்டதைப்  போல தோன்றி ஒரு கணம் மனம் விம்மினேன் . வேரெதிலும்  கிடைக்காத ஒரு கரைந்து போதல் . நான் சற்று முன்  பார்த்த அந்த கரிய படலம் அதுவாக கூட இருக்கலாம். அது என்னில் இருந்து கழன்று போயிருக்க வேண்டும் . அந்த கழலுதலும் நான் அறியாமல் நிகழ்ந்திருந்தது . இந்து சனாதன தர்மத்தில் நதி ஸ்நானத்தைமுக்திக்குவிஷயமாக சொல்லுவதுண்டு . ஸ்நானம் ஒரு செயல், கர்மா   எனப்படுவது,   ஞானமில்லாததால் அது ஜடம். ஞானம் சித் ரூபம் எனப்படுவது  . ஞானத்தினால்தான் முக்தி என்கின்றன எல்லா சம்பிரதாயங்களும்  , அதை அசேதனமான ஜடம் கொடுக்கும்  என்பது பொருந்தாது . பின் ஏன் அப்படி சொல்வானேன் ? என்றால். ஞானத்திற்கான ஒரு அகவயமான மின்னலின் தீண்டலை நாம் எங்கோ பெறலாம் . அது புத்தி விகாசத்தை கொடுக்கலாம். ஸ்நானம் அதை கொடுத்துவிடுவதாக ஒரு நிர்வாகம்அங்கு இருக்கும் பல்லாயிரம் முகங்களின் தொகுப்பும் அதில் தெரியும் அபரிதமான நம்பிக்கையும் மட்டுமேஇப்போது  சாட்சியாக நின்றுகிறது . அது ஒரு உளமயக்காக இருந்தாலும் இப்போது அடைந்திருக்கும் நிம்மதியும் , உணர்ந்த இந்த தருணமும் , வாழ்நாளுக்கு போதுமானவை. அது ஒன்றே இதன் பிரயோஜனம் .



ரிஷிகேஷ் ஸ்நானம் அதுவரை இல்லாத ஒரு ஏக்கத்தை எனக்குள்ளிருந்து வெளிக் கொணர்ந்தது . அது ஒரு விடுதலை உணர்வு . அனைத்து பொறுப்புகளில் இருந்து வெளியேறுதல் . மனதின் பிறிதொரு பகுதி அதற்கு ஒருகாலும் உடன்படப்போவதில்லை . அது என் ஆணவத்தால் ஆனது . அது உலகியல் சார்ந்தது . அதனால் இருப்பதிலிருந்து  பின்கால் வைக்க முடியாது . ஆனால் காலம் தான் அதை எனக்கென எடுத்துக் கொடுத்துதது . அந்த மூன்று வருடம் இறப்பின் தருணங்கள் , ஒன்றின் முழுமையான தோல்வி அதை என் அகம் ஒருநாளும் ஒப்பப்போவதில்லை . காரணம் அதன் அமைப்பு அப்படி. பல துறைகளில் என்னை நோக்கி விடப்படும் அறைகூவலை எதிர்கொண்டு அது என்னை வளர்ந்திருக்கிறது . அதனூடாக நான் அடைந்த அனுபவங்கள் அளப்பரியவைகள் . இயல்பில் அதைத்தான் மனம் தொடர்ந்து முன்னெடுத்தது . ஆனால் காலம் பேருரு கொண்டு எழுந்து நான் பின்னகர வேண்டிய கட்டங்களை உருவாக்கி கொடுக்க , நான் அதில் ஒரு காயை போல நகர்ந்து கொண்டிருந்தேன் . உலகியல் நோக்கி நகர்ந்து என்னை உருவாக்கிய மனம் ஒன்று பின்னடைய , என்னை வழிநடத்தும் பிறிதொன்று மேலெழுந்துவருவதை அறிந்து கொள்ள முடிந்தது

நான் என்னை முற்றாக அதற்குத்தான் ஒப்புக்கொடுத்திருந்தேன் . அதையும் கடந்து  என்னை நிலைநிறுத்திக்கொள்ள , தொழிலில் நான் வேறு சில நிலைப்பாடுகள் வழியாக முயன்றிருக்கலாம் . அதில் வெற்றிக்கான சாத்தியங்களே அதிகம் . ஆனால் அதில் தெரியும் பேருண்மை. அது என் உளச்சிக்கல்களுக்கு முடிவல்ல. இதைவிட பிறிதொரு பெரும் வெற்றியை நோக்கி நகரும் தொடக்கம் மட்டுமே . அங்கு பிறிதொரு உளச்சிக்கல் இதனினும் பெரிதாக காத்திருக்கிறது . அது எத்தனை பெரிய வெற்றியாக இருப்பினும் , இப்போது நான் இருக்கும் இந்த நிலைக்கு , இந்த மன நிலைக்கு , அங்கிருந்து பாதைகள் இல்லை என்பது ஒன்றே நிதர்சனம்

உலக வாழ்க்கை இப்படி நல்லதும் அல்லாததுமாக உள்ள ஊடுபாவுகளால் ஆனது .அது இல்லாமல் வழக்கை இல்லை . தீரம் என்னும் சொல் ,அதில் விரும்பும் உலகியல் சூழல் எந்தவிதமான பாதையை அது  கொடுக்கிறதோ அதில் நுழைந்து, நிறைந்து , வாழ்ந்து முடிந்துபோகும் யதார்த்த மானமுள்ள ஒருவனுக்கு , துக்கம் செய்துவிட எதனாலும் முடியாது . மகிழ்வும் , அமைதியும் வெளியிலிருந்தான் வரவேண்டும் என்றல் என்றைக்கு இருந்தாலும் அது நஷ்டமே . அது உள்ளிருந்து பிரவகிக்கும் பாதையை அடையாதவனுக்கு , வாழ்க்கை என ஒன்று இல்லை


நம்மை சூழ்ந்துள்ள அனைத்தும் நமக்கு பயன்படாத காலம் ஒன்று நிச்சயமாக உண்டு . நம் சொல் கேளாமை. பிறர் நமக்கு  செய்யும் அவமதிப்பு என்றால் , ஒருநாள் நாம் சொல்வதை நம் கை , கால்களே கேளாது ஒழியும் ஒரு காலம் உண்டே , அப்போது அடையும் புரிதல் , இதைவிட அவமதிப்பை பிறிதொருவர் நமக்கு ஆற்றிவிட முடியாது என்கிற பேருண்மை . இதன் சொல்லக்கேட்டே நாம் வாழ்வில் எல்லாம் இயற்றினோம் . இது எத்தகைய நன்றி இல்லாதது என்கிற புரிதலை அடைகிற தருணம் முற்றாக தனிமையை கொடுக்க வல்லது . அத்தகைய தனிமையை மிக சமீபத்தில் சந்தித்த் ரமேஷ் பிரேதனை பார்த்தபோது கண்டது . இந்த புறவயமான உலகிலிருந்து அவர் அடைய வேண்டியது இனி ஒன்றில்லை . வாழ்தலை வாழ்தலுக்காக மட்டுமே செய்வதை போல ஒரு நிலை , என்னை திகைக்க வைத்தது . அவர் பேசும்போது சொன்ன அந்த வார்த்தைகள் . தன் உடலின் மரணத்தை தான் பார்ப்பது என்று  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்