https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 13 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 53 . சட்டமும் ஒழுங்கும் .

ஶ்ரீ:





சட்டமும் ஒழுங்கும்  



பதிவு :  444 / தேதி :- 13 . மார்ச்   2018






கயா ஷேத்திரத்தில் ஏதோ ஒரு புராண காலத்தில் கயா அசுரனை கதாதரப் பெருமாள் கீழே தள்ளி அவனை எழுந்திருக்க விடாமல் இன்றுவரை அழுத்தி வைத்திருப்பதாக சொல்லுகிறது ஒரு ஸ்தல புராணம் . மேற்கு வங்கப் பகுதியில் நவத்தீபம் இந்து பக்தி மார்கத்திறகு விரிவாக வேத முடிபு கொள்கைகளை அழுத்தமாக பதித்தவர் நிமாயி பண்டிதர் , அவர் சைத்தன்ய மகாப்பிரபுவாகியது இந்த தளத்தில். இரவில் அந்த பகுதி முழுவதுமாக இருள் சூழ்ந்திருந்ததால் முழுமையாக பார்க்க இயலவில்லை .

கயா வளர்ந்து வரும் கிராமப் பகுதி போல இருந்தது . அது முக்கியமான ஊர்களை இணைப்பதால் அதன் சாலைகள் இயல்பில் அகலமானவைகளாக இருந்தன . ஊரில் அப்போதுதான்  மாற்றங்கள் நிகழ துவங்கியிருந்ததை பார்க்க முடிந்தது . இரவு 10:00 மணி . காற்றில் நல்ல குளிரை உணர முடிந்தது . அப்போதுதான் அந்த கல்யாண ஊர்வலத்தை பார்த்தேன் .அந்த நேரத்தில் ஒரு திருமண ஊர்வலம் மிக வினோதமாக இருந்ததுவட இந்திய திருமணங்களை திரைப்படங்களில்தான் பார்த்ததுண்டு , நேரில் இப்போத  . இங்கு ஊரில் சில சேட்டு கல்யாணங்கள் அங்கு அவை அதன் அத்தனை உயிர்ப்புடன் நடைபெறுவதில்லை  . 

ஆனால் இது வேறு மாதிரி இருந்தது ஊரவலத்தில் ஆண்களே பெருபாலும் இருக்க , ஊர்வலத்தின் இரு சாரியிலும் சிலர் தலையில் நம்மூர் பெட்ரோமாஸ் விளக்கு பணியில் மின்விளக்குகளையும், கலர் சீரியல் விளக்குகள் ,மூங்கில் கழிகளில் குழல் விளக்கு என ஒரே பிரகாசமான  ஒளிவெள்ளம்போல சூழ்ந்திருந்தது .பாண்டு வாத்தியங்கள் முழங்க ஏதோ பெயர் தெரியாத ஹிந்தி படப்பாடலை ஒலித்தபடி நகர்ந்து கொண்டிருந்தது . அது மாப்பிள்ளை ஊர்வலம் . மாப்பிள்ளைக்கு எப்படியும் 40 வயதிருக்கும் . ஊர்வலத்திற்கு பங்குபெற்ற அனைவரின் கைகளிலும் துப்பாக்கி இருந்ததை பார்க்க நேர்ந்தது. இங்கு எந்நேரமும் உயிராபத்துள்ளவர்கள் . காவல்துறையை நம்பாமல் சொந்த பாதுகாவலர்களை வைத்திருப்பவர்கள் .

பாதுகாவலருகான தகுதி முரட்டுத்தனம் மட்டுமே என்பது எழுதப்படாத விதி போலிருக்கிறது . ஆயுதங்களுடன் உலாவருவது அவர்களின் செல்வாக்கையோ அல்லது ஆபத்தையோ குறிப்புணர்த்தியது . ஊர்வலத்தின் முன் வரிசையில் சிலர் உடலை வளைத்து வளைத்து நாட்டியம் மாதிரி ஏதோ ஒன்றை வெகு நேரம்  முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்  . பாட்டு முடிவிற்கு வந்ததும் .அனைவரும் வினோதமான ஒலி எழுப்பிக்கொண்டு கையில் இருந்த துப்பாக்கியை வான் நோக்கி சுடத்துவங்கியதும் ,எனக்கு அந்த ஊரின் சட்ட ஒழுங்கை பற்றி பட்டென தெளிவாக புரிந்துபோனது ஒழுங்கு மரியாதையாக விடுதிக்கு திரும்பினோம்.

இன்றுவரை அந்த காட்சி நினைவு நின்றுகொண்டிருக்கிறது. இந்திய நிலப்பகுதிகளில் வடக்கு தெற்காக பார்க்கும்போது மனிதர்களுக்கிடையே நிறைய கலாச்சார வித்தியாசத்தை பார்க்க முடிந்தது . எந்த உணர்விலும் அவர்கள் அதன் உச்சத்தை அடைகிறார்கள் . அதன் பலன் நல்லதும் அல்லாததுமாக இருப்பதை  பார்க்கமுடிகிறது . ஆனால் தெற்கே அதிலும் தமிழகம் முன்னேரிய சமூகமாகப்பார்க்கப்பட்டாலும் , எது முன்னேற்றம் என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க இயலுவதில்லை. எந்த விழவாக இருந்தாலும் அங்கு திரளும் மக்கள் அடர்த்தி இங்கு திரள்வதில்லை . இங்குள்ள பொருளாதார வளர்ச்சி அதன் மையப்புள்ளியை ஒருக்கால் சிதறடித்து இருக்கலாம்..

இன்னும் அங்கே கூட்டு குடும்பங்கள் உண்டு . தெற்கில் அனேகமாக அது இல்லை என நினைக்கிறேன் . 1990 களுக்கு பிறகு புதிதாக உருவாகி சமூக அமைப்பு முற்றாக மாறி இருப்பதாக படுகிறது . அது மொழி ஜாதி இனம் கலாச்சாரத்தை கடந்து ஒரு பொதுமை சமூகத்தை உருவாக்கி இருக்கிறது .அது கணிப்பொறி சார்ந்த சமூகம். அதற்கு நாடும்  கடல்களும் எல்லையாக இருப்பதில்லை பொருள்முதல் வாதம் போல பொருளியல் நோக்கம் முதன்மையாக உருவெடுத்து இருக்கிறது . ஒரு குடும்பத்தின் ஆண்  பெண் அவர்களின் சிந்தனையை அது முழுவதுமாக மாற்றி அமைத்திருக்கிறது என நினைக்கிறேன் . கலாசாரத்தை கடந்து பொதுவில் அவர்களுக்கு பிறிதொன்று இருப்பதாக நினைக்கிறேன் . ஒவ்வொரு குடும்மதிலும் பெண்களின் பார்வையில் உலகம் பார்க்கப்படும் சூழல் எழுந்து வந்திருக்கிறது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்