https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 10 ஜூலை, 2018

அடையாளமாதல் - 365 * பிரதிபலிப்புகள் *

ஶ்ரீ:
பதிவு : 365 / 546 / தேதி :- 10 ஜூலை  2018

*  பிரதிபலிப்புகள்  *


நெருக்கத்தின் விழைவு ” - 59
விபரீதக் கூட்டு -04.
எனக்கு நெருக்கமான சில  பத்திரிக்கையாளர்களுடன் நான்  பல தனிப்பட்ட சந்திப்புகளில் அவர்களை தொடர்ந்து அவதானிக்க முயன்றிருக்கிறேன். அவர்களில் பெரும்பான்மையோர் தங்கள்  துறையை அறிந்தவர்கள் . அவர்களில் பலர்  இன்று பெரிய பொறுப்பில் இருக்கும் பல அரசிளாலர்களை கோமாளிகளாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமின்றிஎல்லா அரசியலாளரைப் பற்றி அப்படித்தான் பொதுவில் கருதுகிறார்கள் , என்பது எனக்கு எப்போதும் வருத்தமளிப்பது . அந்த கூற்றில் உள்ள உண்மையை நான் அறிவேன் . அவர்கள்   வேறுசிலரை முரடர்கள் எனத் தெரிந்து கொண்டு தள்ளி நிற்கக்வும் கற்றவர்கள் . பத்திரிக்கை நன்பரகளின் இந்த இரண்டு பதிவுகளுமே பெருமை சேர்ப்பவை அல்ல

வளர்ந்து விட்ட  பல அரசியல் தலைவர்களுக்கு கூட பத்திரிக்கை மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதை வெறியாக செய்வதை பார்த்திருக்கிறேன் . பத்திரிக்கையாளர்களை கௌரவிப்பது எனகவர்களைகொடுக்கத் துவங்கியது 1990 பிற்பகுதிகளில் . பின்னர் அவர்கள் அதை தீபாவளி இனாம் அளவிற்கு தங்களை தாழ்த்திக் கொண்டார்கள் , அதன் பிறகு அரசியலாளர்கள் அவர்களை கீழ்மையின் உச்சத்திற்கு கொண்டு சென்றார்கள்  . செய்தி சேகரிப்பவர் மட்டும் கூடும் கூடுகை பின்னாளில் . காட்சி ஊடகத்தின் நுழைவிற்கு பிறகுதான்  இந்த தாழ்ச்சியை அடைந்தது

கேமராமேன்களே நிருபர்களின் இடத்தை பிடித்துக் கொண்டு பத்திரிக்கையாளர்களாகிப் போனார்கள் . உள்ளூர் சேனல்கள் பெருகியதும் இத்தகைய செய்தியாளர்கள் கட்டுப்படுத்த முடியாதபடி பெருக்கினர் . ஜர்னலிசம் படித்தவர்கள் நுழையும் ஒரு துறை , வேறு வேலை வாய்ப்பு  கிடைக்காதவர்களும் புகும் துறையாக இழிந்து போனது . ஒரு கட்டத்தில் விழி பிதுங்கும் அளவிற்கு அவர்களின் எண்ணிக்கை நானூறை தாண்டியது. காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் செய்திகளை குறிப்பெடுபவர்களை புறந்தள்ளி விட்டது . பத்திரிக்கை மேலிடமும் ஒரு வேலைக்கு எதற்கு இரண்டு பேர்வெட்டியாகஎன்று முடிவு செய்து விட்டார்கள் போலும் . மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பும் யுகம்  துவங்கியதும் அதன் ஸ்வதர்மம் முடிவியிற்கு வந்து விட்டது.  

பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்துவது என்பது ஒரு கலைநான் தலைவரிடம்  கற்றுக்கொண்ட மிக சிறந்த பாடத்தில் அதுவும் ஒன்று என நினைக்கிறேன் . அரசியலில் ஆளுமையைப் பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அபிப்ராயங்கள் இருக்கலாம், ஆனால் அவர்களின் உருவாக்கம், அவர்களின் செயல்பாடுகளில் இருந்து எழுந்து வருகிறது , அவர்கள் சொல்லிலிருந்து அல்ல . அவர்களின் வளர்ச்சிக்கு பத்திரிக்கைத்துறை பெரும் பங்கு வகித்தது. அது அவர்களின் செயல்பாடுகளிலிருந்து அவர்களையும் அவர்களது அரசியல் தன்மையையும் புரிந்து கொள்ள முயன்றது . சட்டென ஒருவர் பத்திரிக்கைத் துறையின்வெளிச்சம் பாய்ச்சலுக்குள்வந்து விட முடியாது . அவரை பற்றிய அபிப்ராயம் ஏற்படுவதற்குள் அவரது செயல்பாடுகள் அவரை அடையாளப்படுத்தியிருக்கும். அந்த பிம்மமே அவராக கடைசி வரை நீடிக்கும்

இருத்துறையைச் சேர்ந்தவர்களும் சுயகௌரவமும் , தன்னறமும் முன்வைத்தார்கள் .அவரவர்கள் தங்களின் எல்லைகளை அறிந்தார்கள் . அரசியல் ஆளுமை என்பது தன்னை நோக்கிய கேள்வியை எப்படி திறமையாக எதிர்கொள்கிறது அல்லது பதிலளிக்கிறது என்பதில்  இல்லை அதன் மரியாதையை , அது அவர்களை நோக்கிய கேள்வியில் கேட்கப்படும் முறைமையில் இருக்கிறதுஎதை யாரிடம் எப்படி கேட்க வேண்டும் என்கிற வரைமுறைக்குள் , ஒருவரை நம்மை நோக்கி கேட்டகச் செய்வது  நமது செயல்பாடுகளின் வழியாக முளைப்பது  . நான் சந்தித்த பல ஆளுமைகளின் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் , பத்திரிக்கையாளர்கள் அவர்களிடம்  நடந்து கொள்ளும் முறை சண்முகத்திடம் மட்டும் பெரிதும் மாறுபட்டு இருந்ததை உணர்ந்திருக்கிறேன் . தலைவருடைய செயல்பாடு எவரையும் அவரை நோக்கி  என்ன அல்லது எப்படி கேட்கப்பட வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்தார் என்பதுதான் ஆச்சர்யம் . நல்ல அரசியல் என்பது இங்கிருந்து துவங்குகிறது என நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...