https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 19 ஜூலை, 2018

அடையாளமாதல் - 374 * சில வாழ்வியல் தருணங்கள் *

ஶ்ரீ:
பதிவு : 374 / 555 / தேதி :- 19 ஜூலை  2018

* சில வாழ்வியல் தருணங்கள் 


நெருக்கத்தின் விழைவு ” - 69
விபரீதக் கூட்டு -05 .
அடுத்த ஒருவார காலத்தில் இளைஞர் காங்கிரஸின் மாநில செயற்குழு என் தலைமையில் கூட இருகிற செய்தி மாநில அணைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது . எதிர் அணியில் இது நிலைகுலைவை உருவாக்கி விடும். மாநிலம் முழுவதுமாக எழ இருக்கும் செயலூக்கமும் அதன் எதிர்வினைகளையும் கணக்கிட எனக்கு சிறிது இடைவெளி வேண்டும்  . கிடைக்கும் அனைத்து தகவல்களை ஒட்டி கூட்டத்தில் இறுதி நேர மாற்றங்களை செய்து கொள்ள எனக்கு நிறைய அவகாசம் தேவை .

வல்சராஜ் தலைமையில் மாற்றி அமைக்கப்பட்ட நிர்வாகிகளை மட்டும் கொண்ட குழுவை கூட்டுவது அர்த்தமற்றது மட்டுமின்றி வீண்வேலை. அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக இயக்கத்தை உறைநிலைக்கு கொண்டு சென்றார்கள் . எனவே ஆக்கபூர்வமான எந்த முன்னெடுப்பிற்கும் அவர்கள் உதவப் போவதில்லை. அது காசு கொடுத்து நமக்கு சூன்யம் வைத்துக்கொள்வது போல .என்ன அவதானிப்பில் தலைவர் செயற்குழுவை என்னை கூட்டச் சொன்னார்  என்று எனக்குத் தெரியவில்லை. அமைப்பின் உள்சிக்கலை அவர் அறிந்திருக்கவில்லையா?. அல்லது தேவையற்று ஏதாவது அதில் எழுந்தால் அதைக் கொண்டு முற்றிலும் முடக்க நினைக்கின்றாரா?. அரசியலில் அனைத்துக்கும் இடமுண்டு என்பார்கள் .

நிர்வாகிகளில்  பலர் யார் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பதை செயற்குழு நடைபெறும் அந்த நொடிவரை வெளியிட மாட்டார்கள் . இதை சாதகமாக எடுத்துக்கொண்டு எதிர் அணியினர் எல்லா சிக்கலையும் அன்று உருவாக்க நினைப்பார்கள் என்பதால் , முழு அளவிலான மாநில தழுவிய செயற்குழு கூட்டம் என்பதுதான் சரியான தீர்வாக இருக்கும். என்பது எனது உறுதியான எண்ணமாக இருந்தது. அதிலிருந்து யாரின் பொருட்டும் நான் விலகுவதாக இல்லை . ஆனால் அது மிக சிக்கலான வேலை. தலைவரிடமிருந்தே கூட அதற்கு எதிர்ப்பு கிளம்பலாம்.

மாநில நிர்வாகிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை நான் எடுத்ததற்கு , அவர்கள் மீது எனக்கான காழ்போ அல்லது அவர்கள்  நியமிக்கப்பட்ட முறையிலோ எனக்கு எந்த முரண்பாடும் இல்லை . அன்று நான் யாரையும் சிபாரிசு செய்யும் நிலையில் இல்லை . அதைவிட நான் அந்த கமிட்டியில் இடம்பெறாது போவதையே விரும்பினேன் என்பதை பழைய பதிவில் சொல்லியிருப்பேன் . காரணம் அது முழுவதுமாக தலைவரின் முடிவு. இரண்டின் அடிப்படையில் அந்த நிர்வாக கமிட்டி செயலிழந்து போனது . ஒன்று  பழைய அமைப்பு பாலனால் நியமிக்கப்பட்டது என்கிற ஒரே காரணத்தினால் அதில் இடம்பெற்ற அனைவரும் ஒதுக்கப்பட்டனர் . இது அனைத்து புதிய தலைமை மொறுப்பேற்கும் போதும் இயல்பாக ஏற்படுவது ,தவிற்க இயலாதது .

தலைவர் அனைவரையும் ஒருங்கிணைக்க மாநில அரசியலில் கோஷ்டிகளாக தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்த தலைவர்கள் அனைவருக்கும் அதில் பிரதிநிதித்தும் கொடுத்தார்  ,அவர்கள் சிபாரிசு செய்த சிலர் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர் . அவர்கள் இளைஞர் காங்கிரஸின்கருத்தியல்என்வென்று அறியாதவர்கள் , அதன் விழுமியங்களுக்கும் அவர்களின் செயல்பாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை . யாரும் யாருடனும் இணைந்து செயல்படவேண்டிய  அவசியமில்லாத சூழல் உருவாகிவிட்டது

நான் பொறுப்பில் வந்த உடன் அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை வல்சராஜ் சொல்லி நான் செய்ய முற்பட்ட போது கிருஷ்ணமூர்த்தி குழு பழைய நினைவுகளால் ஆட்பட்டு ஆரம்பம் முதல் எனக்கு எதிர்ப்பு நிலை எடுத்துவிட்டதால் , எனது எல்லா முயற்சிக்கும் தடைகளை உருவாக்குவதை முழுநேர வேலைய எடுத்துக்கொண்டார்கள் . வல்சராஜும் நான் கேட்ட உதவிகளை செய்வதில் தயக்கம் காட்டினார். இதில் வினோதமான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் கமலக்கண்ணன் குழுவினர் . அவர்கள்கருதியில்ரீதியில் இளைஞர் காங்கிரஸின் அரசியலை அறிந்தவர்கள்

எனது செயல்பாட்டு  அடிப்படையிலான  முன்னெடுப்புக்களுக்காவது அவர்கள் என்னுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கலாம். அது இயக்கத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவருவது மட்டுமின்றி அவர்களுக்கும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் , ஆனால் அவர்கள் அதற்கு  மறுத்ததற்கு என்மீதான காழ்ப்பும் , மரைக்காயரை சார்ந்து அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்படும் முக்கிய காரணியாக அமைந்தது . அதன் பயனாக இன்று ஒரு அவமானகரமான முடிவிற்கு தள்ளப்பட்டார்கள். காலம் பொல்லாதது.

கிருஷ்ணமுர்த்தி மரைகாயரின்  ஆதரவாளர் என்பதால் கமலக்கண்ணன் எனக்கு எதிர்ப்பாக  அவரது குழு செய்த அனைத்து செயல்களையும் கண்டுகொள்ளாது இருந்து விட்டனர் . எனது முயற்சிகள் அனைத்தும் பழைய நிர்வாகிகளுக்கு அவர்களுக்கான இடத்தை பெற்றுத் தருவதற்கானது .அது என் தனிப்பட்ட லாப நோக்கத்திற்காக என கமலக்கண்ணனின் குழு நினைத்திருக்க வாய்ப்பில்லை . பொது நோக்கத்திற்கு அவர்கள் இத்தனை காலம் நம்பியகருத்தியல்”  அடிப்படையிலாவது என்னுடன் இணைந்து செயல்பட முன் வந்தருக்கலாம். அவர்களது ஆதரவின்மை என்னை மூன்று வருடமாக முடக்கிவிட்டது.

எந்த ஒரு அரசும் அந்த சமூகம் அளிக்கும் கருத்தியல் அங்கீகாரம் மூலமே அதிகாரத்தில் இருக்கிறது. அதாவது அரசாங்கத்துக்கு அந்த சமூகம் மீது ஒரு கருத்தியல் ஆதிக்கம் இருக்கிறது. அதையே அது நேரடி அதிகாரமாகச் செயலாக்குகிறது. இந்தக் கருத்தியல்  அதிகாரத்தை மார்க்ஸியக் கலைச்சொல்லால்கருத்ததிகாரம்’ [Hegimony] என்று சொல்லலாம். அந்த ஆதிக்கத்தை மெல்ல மெல்ல பிரிட்ட்டிஷ் அரசு இழந்ததுஎன்கிறது ஜெயமோகனின்இன்றைய காந்திகட்டுரைத்தொகுப்பு . எதன் பொருட்டு சிறுபான்மை பிரிட்டானிய அரசு இந்திய பெருநிலத்தை ஆண்டதோ , அதை இருந்ததனால் வெளியேற வேண்டிய சூழல் உருவானது. காந்தி நிகழ்த்திய சுதந்திரப் போராட்டம் இதன் நுட்பமான பின்னனியில் விளைந்தது.

நமது சொந்த விருப்பு வெறுப்பிற்கு அப்பால் நாம் செய்தேயாகவேண்டிய கடமைகள் என சில உண்டென நான் உறுதியாக நம்புகிறேன். அது நம்மை பிறரின் பொருட்டு ,அவர்களின் நலன் பொருட்டு, அறத்தின் பொருட்டு ஒன்றிணைய முடியாது போனால் அது நமது களத்தை முற்றழிக்கும்என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அதை செய்வதினால் எழும் விளைவை பற்றிய கவலையும் உள்கணக்கும் கூட நமக்கு ஓரளவிற்கு மேல் தேவையற்றது என்பதே நான் கண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...