https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 15 ஜூலை, 2018

அடையாளமாதல் - 370 *ஊடுபாவுகள் *

ஶ்ரீ:




பதிவு : 370 / 551 / தேதி :- 15 ஜூலை  2018

*ஊடுபாவுகள் 


நெருக்கத்தின் விழைவு ” - 64
விபரீதக் கூட்டு -05 .




மாநில செயற்குழு கூடுகையில் கலவரம் நடத்த திட்டமிடப் படுகிறது என்கிற தகவல் அன்று இரவிற்குள் முக்கியமான சில பகுதிகளில் இருந்து உறுதி செய்யப்பட்ட தகவலாக வந்து சேர்ந்தது. நான் ஒருவித ரௌத்திர நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன் . நான் எதிர்பார்த்தது போல அன்று தலைவர் நிகழ்ந்திய பத்திரிக்கையாளர் கூட்டம் நிறைய குறுக்கு கேள்விகளால் ஆனதாக இருந்தது . சில கேள்விகள் நிருபர்கள் நிரையின் பின்வரிசையிலிருந்து எழுந்ததும் , சண்முகம் அதற்குகண்ணன் கேட்க சொன்னாரா?” என்பது தலைவரின் எதிர் கேள்வியை இருந்தது . அதன் உஷ்ணத்தை அனைவரும் அறிந்திருந்ததால் அந்த கோணத்தில் பிறிதொரு கேள்விகள் எழாது  மூத்த நிருபர்கள் பார்த்துக்கொண்டனர்

பல அரசியலார்களால் இதை செய்ய இயலுவதில்லை . தன்னை அரசிலுக்கு அப்பால் நிறுத்திக்கொள்வதில் அவர் வெற்றியை அடைந்திருந்ததால் , அவர் முன்வைத்த பல விஷயங்கள்  அவரை அரசிலுக்கு அப்பாற்பட்டவராக நிலை நிறுத்தி இருந்தது . அவரது அரசியில் எதிரிகள் கூட அவர் முன்வைக்கும் கேள்வியை , உள்நோக்கமுள்ளதாக , அல்லது தனிப்பட்ட லாபம் பொருட்டு கேட்கப்படுவதாக நினைப்பதில்லை . ஒரு சிறந்த அரசியலின் வழிமுறை இது என நினைக்கிறேன்

தன்னை நிலை நிறுத்திக் கொள்ள  எப்போதும் பொது அரசியல் வெளியை பயன்படுத்துவதில்லை . அதற்கான காரணம் அவற்றை தனியாக வேறு தளத்தில் வைத்துக்கொண்டார் . ஒரு ஆட்சியை விமர்ச்சிக்கும் போதும் இதுவே அவரது வழிமுறையாக இருந்தது . குதர்க்கமான கேள்விகளுக்கு காது கேளாதவர்போல கேட்டவரை பலமுறை கேட்க வைத்து அதை நீர்த்து போகசெய்துவிடும் . அரசியலார்கள் தவறை மட்டுமே இழைப்பவர்களாகவும்  பத்திரிக்கையாளர்கள்  அவர்களை கண்காணிப்பவர்கள் என்பது போல இருப்பது ஒரு தோற்றம் மட்டுமே . அது நிஜமல்ல. அவர்களுக்கும் உள்நோக்கமுண்டு . சண்முகம் தனது நீண்ட அனுபவத்தினால் அதை புரிந்து வைத்திருந்ததால் , கேள்வின் திசையைக் கொண்டு மாநில அரசியலின் போக்கை நிர்ணயிக்கும் திறமை உள்ளவராக அவரை பல பத்திரிக்கையாளர்கள் சொன்னதுண்டு . பல கூட்டங்களில் பத்திரிக்கையாளர்கள்தான்  அவருக்கு தகவல் தருபவர்களாக மாறி விடுவதாக  , அவர்கள் சொன்னதுண்டு

இளைஞர் காங்கிரஸ் இருந்து நிர்வாகிகள் வெளியேற துவங்குவது கட்சி வலுவிழக்க செய்து விட்டதா? என்று பதிக்கையாளர் கேட்ட எதற்கும் பதில் சொல்லப்படாததால் கூட்டம் திசை மாறிப்போனது . இறுதியில் அது சுமூகமான கூட்டமாக அன்று முடிவிற்கு வந்தது . அந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பலர் அமர்ந்திருந்தும் யாரும் பேசவில்லை. இந்த ஒழுங்கு காங்கிரசின் பிற தலைவர்கள் நடத்தும் பத்திரிக்கையாளர்களின் கூட்டத்தில் கூட நிகழ்வதில்லை.தலைவர் மதியம் வீடு திரும்பும் முன்னர் என்னை வீட்டிற்கு  வர சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார் . நான் அடுத்த சிக்கலுக்கு நகர்ந்தேன்

நான் தலைவர் வீட்டிற்கு சற்று தாமதமாக சென்றேன் . அவரது தனி உதவியாளன் ரவி தலைவர் சாப்பிடுவதாக சொன்னதும்நான் அவர் சப்பிடும்வரை காத்திருக்க முடிவு செய்தேன் . எல்லாம் முடிந்த பிறகு எதற்கு வீட்டிற்கு வர சொன்னார் என்பது புரியவில்லை . நான் என்னை தயாரித்துக்கொள்ளா சற்று அவகாசம் தேவைப்பட்டது . ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் , நான் வந்ததும் உள்ளே வரச்சொன்னதாக ரவி சொல்லியதும் நான் உள்ளே சென்றேன் . அவர் தனது அறையின் பின்னே உள்ளே அந்த சிறிய இடத்தில அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் என்னை பார்த்ததும் அருகே இருந்த இடத்தில் அமர சொன்னார்
ஏதும் பேசாது சாப்பிட்டு முடித்தவர். கைகழுவி பின் மிக நிதானமாக என்னிடம்இளைஞர் காங்கிரசில் என்ன நடக்கிறது . மாநில நிர்வாகிகள் கூட்டாக வெளியேறுவது இந்த சூழலில் நமக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் . உட்கட்சி தேர்தல் வரலாம் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது . நான் வல்சராஜை தலைவராக போட்டது அதற்கு ஒரு ஸ்திர தன்மை வருவதற்கு ஆனால் அதை நிர்வகிப்பது உனது வேலை என்பது தெரியதைப்போல ஏன் நடந்து கொள்கிறாய்என்றார்

இதற்கு நேரடியான பதிலை நான்  விரும்பவில்லை . எனக்கேற்படுத்தப்பட்ட தடைகளைதகவல்களாகக் கூட சொல்ல அவர் என்னை அனுமதிக்கப்படுவதில்லைஅதற்குஜனநாயக மரபுஎன்கிற தலைப்பில் பிரசங்கத்தை ஆரம்பித்துவிடுவார் . அல்லது அவற்றை எனது போதாமை என்கிற முன்முடிவுடன் புத்தி சொல்லமுயற்சிப்பர் . நான் நிறைய யோசிக்கவேண்டி இருக்கிறது . இப்போது எதையும் உள்வாங்கும் மனநிலையில் இல்லை . "தலைமை என்பது ஒருவித நடிப்பு மட்டுமே. அனுபவங்களை ஆழ்மனம் கொண்டு அடுக்கி அடுக்கி நம்மை உருவாக்கிக் கொள்கிறோம் . ஆம் அது அப்படித்தான் என்கிற பதில் நமது எதிர்முணையிலிருந்து வந்துவிட்டால் , பின்னர் அதுவே சரி என்றாகி விடும் . பின்னர் பிறதொருகோட்பாடை நோக்கி நகர்ந்து விடுவார்கள்,   என்று  என்னால் அவரிடம் நேரடியாக சொல்ல முடியாது ஆனால் அதை நான் உணர்ந்திருக்கிறேன் என்பதை குறிப்பால்  உணர்த்தமுடியும் .  இப்போது பேசுவது என்னை பலகீனப்படுத்துவது. இந்த நேரத்தில் அவற்றை பற்றி பேசுவது எனக்கே கூட நல்ல பலனை தராது போகலாம்

கமலக்கண்ணன் குழு ஆரம்பம் முதலே இந்த இடத்தில் பொருந்தி இருக்க முடியவில்லை . காங்கிரஸ் என்று வந்த பிறகும் அவர்களுக்கான இடம் மரைக்காயர் என்றே இருந்தது , மரைக்காயர் மத்திய மந்திரியானது , பின்னர் ராஜினாமா செய்தது புதுவைக்கு வருவது குறைந்து போனது போன்ற நிகழ்வுகள் , புதுவையில் அவரை சார்ந்து இருந்தவர்களிடையே வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது . அங்கு அவர்களை ஒருங்கிணைக்கும் கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்கனவே அவருக்கான குழு முருகேசன் தலைமையில் இருக்கும்போது கமலககண்ணன் நினைக்கும் முக்கியத்துவம் அவர்களுக்கு கிடைக்காது என்கிற நிலை பல வருடங்களுக்கு முன்பே உருவாகி விட்டது

நான், அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்கிற விழைவு அவர்களுக்கு இருந்திருக்கலாம். என்னால் அதை செய்ய இயலாது . அவர்கள் எக்காலத்திலும்  நம்பிக்கைக்கு உகந்தவர்களில்லை . தவிற நான் முன்னிறுத்த விழையும் அரசியலை முடக்க நினைப்பவர்களுடன் இணைந்து இவ்வளவு காலம் செயல் பட்டவர்கள் . அந்த கருத்தியலை குறித்து எத்தனையோ வருடங்கள் இரவு பகலாக உரையாடினோம் . ஆனால் அதை நான் முன்னெடுத்தேன் என்கிற ஒரே காரணத்தால் வெளியிட முடியாத  அசூயை மட்டுமே அவர்கள் முன்நின்றது . அவர்கள் இங்கிருந்து விலகியதே இன்று மாற்றமடைந்திருக்கும் சூழல் நிலவ காரணம்  . அவர்கள் எனக்காக செய்த பேருதவி என்பது இதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்