ரீ:
பதிவு : 369 / 550 / தேதி :- 14 ஜூலை 2018
*தீர்மானம் *
“ நெருக்கத்தின் விழைவு ” - 63
விபரீதக் கூட்டு -05 .
விட்ட இடத்திலிருந்து மீளாவும் துவங்க வேண்டும் என்பதுதான் எனக்கான ஊழ் , அது எனக்கான வாய்ப்பல்ல . அதை செய்வதனால் எழும் விளைவை அடைவதே எனக்கு ஊழ் கையாளிக்க கரந்து காத்திருப்பது . எத்தனை யுகமானாலும் அது என்னை காத்திருக்கும் . அன்று இன்றும் நிலவும் சூழலில் உள்ள பல மெதுமைகளை நினைத்து பார்த்தால் , வாழ்க்கை எத்தனை சிக்கல் மிகுந்த வேர் பின்னலை கொண்டது என்கிற மலைப்பைத் தருகிறது . வெவ்வேறு களத்தில் முளைத்து எழுந்தவை என்றாலும் காலம் என்றும் ஊழ் என்றும் , அவை இவை இரண்டையும் விந்தையாக இணைப்பதை பார்க்க முடிகிறது .
இதிலிருந்து நான் மீள மீள தோற்று மனவெறுப்புற்று வெளியேறுவதுதான் எனது ஊழ் பலன் போலும் . என்வரையில்இந்த முயற்சி எவ்வகையிலும் எனக்குத் தோல்விதான் என உறுதியான பிறகும் , நான் விழைந்தது எனது மனநிலை மாற்றமடைந்து இ ருந்தது ஒரு காரணம் . இனி என்ன நிகழ்ந்தாலும் நான் கசப்படையப்போவதில்லை . நீ யார் ?. இந்த உலகம் நீ விரும்படி ஏன் இருக்க வேண்டும்? . உன் வாழ்க்கையின் ஒரு அத்தியாயமில்லை இந்த அகண்ட வெளி . இவ்வெளியின் சரித்திரத்தில் உன்னைப்பற்றியும் சில குறிப்புகள் வரலாம் , வரலாற்றின் போது இடையே பறந்த “ஈ” என. அதுவே உனக்களிக்கப்பட்ட அடையாளம் , அதன் பொருட்டே நீ எழுதும் இந்தப் பதிவுகள்.
என்முன் ஒரு பரு வடிவம் போல நாளை விடிந்தால் நிகழும் மாநில செயற்குழு கூட்டம் காத்திருக்கிறது . இத்தருணத்தில் என் முன் இருக்கும் விஷயம் நான் முன்னொரு முறை முயற்சித்தது, என்றாலும் அப்போதைக்கு இப்போதுள்ள வேறுபாடும் சிக்கலும் சமநிலைகளும் மிகப்பெரியவை . அன்று துவங்கிய ஆட்டத்தில் ஒருவேளை நான் வெற்றி அடைந்திருந்தால் அது மிக சரியாக என்னை இப்போதிருக்கும் இந்த புள்ளிக்குத்தான் கொண்டுவந்து சேர்த்திருக்கும். என்ன ஒரு விந்தையான உண்மை .
மீளவும் இங்கிருந்து நான் செய்ய நினைப்பதை , அன்று எப்படியும் இங்கிருந்தான் துவங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்போது அதைச் செய்யும்வாய்ப்பு ஏற்பட்டிருந்தால் , இன்று எனக்கான அமைப்பும் அதன் நிர்வாகிகளாவது எனக்கு மிச்சப்பட்டிருப்பார்கள் . இப்போதோ நான் தன்னந் தனியனாக , மிகச் சிறிய குழுவை வைத்துக்கொண்டு முயற்சிப்பது மிகை நம்பிக்கயோ? என்கிற அச்சமிருந்தும் நான் முடிவு செய்துவிட்டேன். மனம் என்றுமில்லாத சோர்வுடன் இருந்ததை இப்போது நினத்துப்பார்கிறேன்.
தலைவர் நிகழவிருந்த பத்திரிக்கையாளர் கூடுகைக்கு முன்பாக என்னிடம் பேசியபோது , என்னை நோக்கி ஏதாவது கூறினால் , “இளைஞர் காங்கிரஸில் அனைத்தையும் ஒரு தலைமையின் கீழாக என்னால் கொண்டுவந்திருக்க முடியும் அதற்கு தடையாக இருந்தது நீங்களும் உங்களால் வல்சராஜாவும்” என்பதை நேரடியாக சொல்லும் மனநிலைக்கு வந்தது , இந்த சிந்தனையில் பொருட்டே . தலைவர் அதை எனது ஆணவம் என்று வசைச்சொல்லால் குறித்திருக்கலாம் , தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு ஆணவமும் ஒரு அலங்காரமே.
எனக்கு கொடுக்கப்பட்ட இடுங்கலான பாதையின் ஊடக நான் அனைவருக்குமான பாதையில் சம புத்தியுடன் சூழலை சரியாக கையாண்டிருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டை என்மீது இருவருமே எக்காலத்தும் வைக்க கூடாது . ஆனால் தங்களை அனைவருக்கும் பொதுவில் வைத்துக் கொள்ள இருவருமே அதை சகஜமாக என்னை நோக்கி சொல்லக்கூடியவர்களே என்பதை நான் அறிந்தே இருந்தேன். அரசியலில் யாரும் யாரையும் பாதுகாப்பது குறித்து யோசிக்க மாட்டார்கள் . தங்களை காத்துக்கொள்ள எதையும் கடந்து செல்வார்கள். இந்த இரண்டின் மத்தியில் உள்ளதை நமக்கான அவர்களின் பரிவாக அன்பாக எடுத்துக்கொண்டால் , அது தான் நமது பாதை எனக் கூறிக் கொள்ள வேண்டியதுதான் . ஆகவே அவர்கள் நம்மவர்களே.!!
தலைமை பொறுப்பில் உள்ள எவருக்கும் , தங்களைச் சுற்றி உள்ள அனைவரும் தங்களின் வழிமுறையை தாங்கள் அமைக்கும் பாதையை ஒட்டியே பிறர் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்துவருகிறது . அதனால் பல நேரங்களில் எதிர்ப்பாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் கூட ஆதரவாளர்களுக்கு கிடைப்பதில்லை . அதுபற்றிய வருத்தம் எழாது மட்டுமின்றி , தான் பாதிக்கப்படுவதை பற்றி ஒரு சொல்லும் எங்கும் விளையாது பார்த்துக்கொள்பவர்கள் சிறந்து இரண்டாம் நிலைத் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக