https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 8 ஜூலை, 2018

அடையாளமாதல் - 363 * இயல்பின் நிழல் *

ஶ்ரீ:




பதிவு : 363 / 544 / தேதி :- 08 ஜூலை  2018

* இயல்பின் நிழல்  *


நெருக்கத்தின் விழைவு ” - 57
விபரீதக் கூட்டு -04.





சூர்யநாராயணன் சொன்னது நூறு சதவிகிதம் சரி , நான் இதை எனது கோணத்திலிருந்து  பார்க்கப்  போவதில்லை நான் அமைதியாக இருக்கப் போகிறேன் . என்ன நிகழ்ந்தாலும் பொறுமையை இழப்பதில்லை என்கிற தீர்மானத்தை மீள மீள சொல்லிக்கொண்டேன். என்னால் அதை கடைபிடிக்க இயலுமா எனத் தெரியவில்லை . அது எனது நிழல் .அது என்னை பின் தொடருவதை என்னால் நிறுத்தமுடியாது. காரணம்   இங்கு அமர்த்திருக்கும் இருவருமே என்மீது பெருங்கசப்பில் உள்ளவர்கள் . சபாபதி அல்லது வையத்தரசு ஏதாவது பேசும் வரை நான் ஏதும் பேசுவதில்லை என்கிற உறுதியுடன்  அன்றைய பேப்பரை பார்த்துக்கொண்டிருந்தேன் 

தொலைபேசியில் அதுவரை பேசிக்கொண்டிருத்த தலைவர் , அதை வைத்துவிட்டு என்னிடம்வல்சராஜ் எங்கேயா ?” என்றார் , நான் ஒன்றும் புரியாததுபோல அவர் மஹே சென்றுவிட்டதை சொன்னதும் , அவர் கோபத்தை அடக்கிக் கொள்வது  அவர் கடைவாய் அசைவதை கொண்டு அறிந்து கொள்ள முடிந்தது . அவரது இந்த செய்கை சிக்கல் எனது தளத்திலில்லை என்பதை தெளிவு படுத்தியதும் நான் மேலும் அமைதியின் ஆழத்திறகு செல்ல துவங்கினேன்

மெல்ல என்னை நோக்கி திரும்பி சபாபதி , “உனக்கு எப்போது செய்தி தெரியும்என்றார். நான் அமைதியாக ஒன்றும் தெரியாதது போலஎன்ன செய்திஎன்றதும் அவர் திகைப்பது தெரிந்தது , நான் விளையாடுவதாக அவர் எண்ணுவதற்குள்ளாகநான் இன்று காலைதான் தில்லியில் இருந்து வந்தேன் , என்ன செய்தி? என்று அவரிடமே கேட்டதும் , அவர் சண்முகத்தின் பக்கம் முகத்தை திரும்பி கொண்டு என்னை தவிர்த்தார் .

உள்ளத்தில் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நான் வையத்தரசிடம்என்ன செய்தி ? என்றதும் , அவன் காமலக்கண்ணன் குழு , கண்ணனிடம் சென்று சேர்ந்த செய்தியை சுருக்கமாக சொன்னான் . நேற்று அவர்கள் விடுத்த பத்திரிக்கை செய்தியில் தாங்கள் உதாசீனப்பபிடுத்தப்படுவதாக பொதுவில் அனைவர் மீதும் குற்றம் சுமத்தி இருந்தார்கள் .இந்த சிக்கல் எனக்கானது அல்ல என்பதுபோல அமைதியானேன் . சபாபதி என்னை நோக்கி திரும்பி , “அனைவரையும் கலந்து செய்யாத சில செயல்கள் நமக்கு எவ்வளவு சிக்கலை தருகிறது பார்த்தாயா , சீதாராம் கேசரி தலைவராக வந்ததிலிருந்து உட்க்காட்சி விவகாரங்களை தில்லி மேலிடம் கவலையோடு பார்க்கிறது இந்த நேரத்தில் உட்கட்சி விவகாரங்களை அது வேறு  மாதிரி அணுகும்என்றார் . நான் மெல்ல எனது கட்டுப்படை இழந்துகொண்டிருந்தேன் , “வேறு மாதிரி என்றால் எந்த மாதிரி ?” என்றேன் . அவர் மௌனமானார் . நான்இதை நீங்கள்  வாசராஜிடம் சொல்லாமேஎன்றதும் வையத்தரசு ஏதோ ஆவேசமாக சொல்லவந்தவன் சபாபதி கை அமர்த்தியதும் மௌனமானான் . அவன் எனக்கு எப்போதும் ஒரு பொருட்டல்ல . சிக்கல் எனது களம் களத்தில் அல்ல என்கிறபோது நான் அதை அடித்து ஆட முடிவெடுத்தேன்

சபாபதி ஏதோ சொல்ல தலைவர் இடைபுகுந்தார் , என்னிடம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று பத்திரிக்கை கூட்டத்தை ஒருங்கச்சொன்னார் , நான் மறுபேச்சு பேசாமல் அலுவலகம் கிளம்பினேன் ஆனால்அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக பின் காட்டுக்கு சென்றேன் அங்கிருந்து தலைவர் பேசுவதை கேட்க முடியும் . எனக்கு இப்போது பத்திரிக்கை கூடுகைக்கு தலைவர்  யாரை முன்னிறுத்தப்போகிறார் என்பது தெரிந்தால்தான் நான் எனது நகர்வை முடிவு செய்ய முடியும் . காலை வீட்டிலிருந்து கிளம்பும் முன்பு இருந்த மனநிலை முற்றாக மாறி இனி வாய்ப்பு கிடைக்கும் போய்ப்பதெல்லாம் அடித்து ஆடுவது .  தற்காப்பு ஆட்டம் ஆடுவதை நிறுத்த வேண்டும்  என முடிவெடுத்து விட்டேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்