https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 16 ஜூலை, 2018

அடையாளமாதல் - 371 * வாய்ப்பு *

ஶ்ரீ:




பதிவு : 371 / 552 / தேதி :- 16 ஜூலை  2018

* வாய்ப்பு 


நெருக்கத்தின் விழைவு ” - 66
விபரீதக் கூட்டு -05 .



கமலக்கண்ணன் குழுவினை நான் அரவணைத்து சென்றிருக்க வேண்டும் என்கிற விழைவு அவர்களுக்கு இருந்திருக்கலாம். அதை என் ஆழ்மனத்தில் நான் நன்கு உணர்ந்திருந்தேன் . ஆனால் என்னால் அதை செய்ய இயலாது . பிறிதெவருடனாவது  பேசும்போது என்னை பற்றிய ஏதாவதொரு செய்தியை விட்டுச்செல்வார்கள் அவர்களின் பேச்சை செவியுற்றவர்கள் எங்கள் இருவருக்கும் பொதுவானவர்கள் என்பதால் , இருவரையும் இணைக்கும் விழைவுடன் அவர்கள் சார்பில்  தூது வருவருவதும்  அவர்களுக்கு  கமலக்கண்ணன் குழு எந்த உடன்பாட்டிற்கும் வராத ஒன்று .அவர்களுடன்  பற்றிபேசுவது வெறும் அரசியல் மட்டுமே . விலகினால் அனுகுவதும் , அனுகும் போது விலகுவதுமாக அவர்களின் விளையாட்டல் நான் ஆர்வமிழந்து போனேன் இது ஒருவித உளவியல் சிக்கல் என்பதை கடைசீ வரை தூது வருபவர்களுக்கு புரியவைக்க முடியவில்லை  .

அரசியலின் அடிப்படை சட்டமே ஒருவருக்கு தன்னுடைய இருப்பு , தனக்கான வாய்ப்பு , அது கனியும் காலம் பற்றிய புரிதல் இல்லை என்றால் கிடைக்கும் சந்தர்பங்களில் இருந்து தங்களுடைய பாதையை கண்டடையமுடியாது . மிகை நம்பிக்கையும் , அதனால் கை நழுவிப்போகும் வாய்ப்புக்களால் வாழ்க்கை  முழுவதும் வெறுப்பிலிருந்து  பொறாமை பின் அதிலிருந்து கழிவிரகத்திற்கு தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் . இந்த குணமே அவர்களை எங்கும் பொருந்தி இருக்கசெய்யவில்லை  . அவர்களுக்கு உதவ அருகனைந்தால் தங்களை மிகையாக புரிந்து கொண்டு எந்த உடப்பாட்டையும் மறுப்பார்கள் . ஓரிரு முறை நம்பிக்கையுடன் அவர்களை அனுகிஏமாற்றமும் சலிப்புமுற்று   விலகினேன்  ,
அவர்கள் எக்காலத்திலும்  நம்பிக்கைக்கு உகந்தவர்களில்லை . எனக்கான அரசியல் முடக்கப்பட விழையும் என் எதிர்நிலையில் உள்ளவர்களுக்கு   பெருமளவில் உதவினார்கள் . இன்று மாற்றமடைந்திருக்கும் சூழல் நிலவுவதே அவர்கள் இங்கிருந்து விலகி சென்ற பிறகுதான் . அவர்கள் எனக்காக செய்த பேருதவி என்பது இதுதான்.

தலைவர் என்னிடம் என்பொறுப்பை பற்றி பேச ஆரம்பித்த பிறகு நான் அவருக்கு எனது மனநிலையையும் அரசியலை நான் அனுகும் முறையையும் அவருக்கு தெளிவுபடுத்த விரும்பினேன் . “கண்ணன் அழைத்து இவர்கள் யாரும் அங்கு செல்லவில்லை ரவிச்சந்திரன் அவர்களை அழைத்து பேசியதால் அங்கு சென்று இணைந்தனர் . அவர்கள் கண்ணனை சென்று சந்திக்கவே இல்லை எனபது உங்களுக்கு தெரியாததல்ல . இதைப்போன்ற ஒன்று நடக்கும் என சில மாதங்களுக்கு முன்பு வல்சராஜை வைத்துக்கொண்டு உங்களிடமே சொன்னேன் . அப்போதைய சூழலில் நீங்கள் அதை பெரியதாக எண்ணவில்லை . கண்ணனிடம் பாலனுக்கே உரிய இடம் இல்லாதபோது கமலக்கண்ணன் எங்கே அங்கே மரியாதையை . நான் அறிந்தவரை அங்கு அரசியல் முகம் இரண்டே பேர்கள்தான் ஒன்று ரவிச்சந்திரன் , பிறிதொருவர் லக்ஷ்மிநாராயணன் . பாலனும் ரவிச்சந்திரனை நம்பித்தான் தமாகா சென்று இணைந்தார் . பாலனை கட்டுப்பபிடுத்த கூட ரவிச்சந்திரனுக்கு கமலக்கண்ணன் தேவைப்பட்டிருக்கலாம் . நாம் இதை பெரிதாக நினைக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன் . இதைப்போல ஒன்று கட்சி  அரசியலில்  எப்போதும் நடப்பதுதானேஎன்றேன் . சண்முகம் அமைதியானார் .

"பின் இங்கு கிளம்பி இருக்கும் அலருக்கு பத்திரிக்கைகளுக்கு என்ன சொல்லளிப்பாய் . வல்சராஜ் வைத்துக்கொண்டு மாநில செயற்குழுவை கூடி அமைப்பு இன்னும் சரியாக இருக்கிறது எனபதை வெளி காண்பிக்கப்படவேண்டும் அதற்கான ஏற்பாடுகளை உடனே செய் " என்றார் . முதலில் நான் திகைத்தாலும் , இரண்டு நாளில் அதை செய்வதாக சொல்லி வீட்டிற்கு கிளப்பி சென்றேன். இது ஒரு அரியவாய்ப்பு மிகச் சரியாக இதை இயக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...