https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 18 ஜூலை, 2018

அடையாளமாதல் - 373 * மரபு மீறுதல் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 373

பதிவு : 373 / 554 / தேதி :- 18 ஜூலை  2018

* மரபு மீறுதல் 


நெருக்கத்தின் விழைவு ” - 68
விபரீதக் கூட்டு -05 .



தலைவர் என்னிடம் செயற்குழுவை கூட்டச்சொன்ன அந்த நொடி அடுத்து என்னென்ன நிகழ வேண்டும் என்கிற அனைத்தும் கண்முன்னே தோன்றியது. ஆம், நான் அடுத்து செய்யவேண்டியது என்ன? என்று முடிவு செய்துவிட்டேன் . பல வருடங்கள் எனது சிந்தையை குவிக்காது போதும் தன்னிச்சையாக ஒன்று என்னை மீறி, இது போன்ற வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்கிற கற்பனையை விரித்தபடி இருப்பதை ,ஓயாத தலைவலியாக நான் அறிந்ததுண்டு . அது எனது கட்டுபாட்டிறகுள் வராத ஒன்றாக எப்போதும் இருந்து கொண்டிருந்தது . இப்போது  அது சொல்வதை நான் கேட்க வேண்டிய தருணம்

உற்சாகமாக ,கரைபுரண்டு ஓட நினைத்த  மனதை அடக்கிக் கொண்டேன். அதை தலைவரிடம் மறைக்க மிகவும் சிரமமாக இருந்தது . சிறு அசைவையும்  அவரால்  உய்த்தறிய இயலும் . என் மனதில் ஒடுவதை அறிந்து கொண்டால் , பின்னர் அவர் கூட்டம் நடத்தப்படவேண்டிய  முறைமைகளை சொல்லத் துவங்கி விடுவார் . அது நான் சுதந்திரமாக செயல்படும் பாதைகள் முழுவதும் அடைந்துவிடும்.

முதல் முறையாக மாநில செயற்குழு எனது  தலைமையில் கூடவிருக்கிறது . கடும் எதிர்ப்பு எழும் . முதலில்தற்காப்பு ஆட்டம்என்னும் கயிற்றின் மீது நடக்கும்கழைக்கூத்தாடிபாணி அரசியலை  கைவிட வேண்டும் .அது  என் இயல்பிற்கு மாறனது. எப்படி இதனுள் வந்து இதுதாள் வரை அடைபட்டு கிடந்தேன் என்பது எனக்கே ஆச்சர்யமளிப்பது . இத்தனை காலம் அது ஏற்படுத்திய ஒவ்வாமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது.  

கூடுகைக்கு அழைப்பிதழில் நான் பொதுச் செயலாளர் என்கிற எனது அதிகாரத்தை முற்றாக பயன்படுத்த முடிவு  செய்தேன் . கூடுகை எனது தலைமையில் நடக்க இருப்பதை சொல்லும் அழைப்பு , எல்லா முனைகளையும் ஒரே நேரத்தில் பற்ற வைப்பது . அந்த ஆட்டத்தை ஆடி பார்த்துவிட முடிவெடுத்து விட்டதால் . கூடுகை முறைமைகளில் பிழை நேராது மிக கவனமாக எனது காய்களை நகர்த்த துவங்கினேன்

முதலில் வல்சராஜுக்கு அலைபேசியில் தொடப்பு கொண்டு பேசியபோது . அவர் தன்னால் வர இயலாத காரணத்தை சொல்லி என்னை நடத்தைச் சொன்னார் . முதல் விஷயம் மிக சுமூகமாக முடிந்தது . தலைவருடன் அவ்வப்போது செய்யும் தகவல் தொடர்புறுத்தலை அழைப்பு சென்று சேர்ந்து எதிர்வினை வரும்வரை  அறவே நிறுத்தினேன் . இது எனக்கான களம் , அது வாழ்ச்சி அல்லது வீழ்ச்சியை கொடுத்தாலும், அது நான் சொந்தமாக முடிவாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்

களம் தயாராகும் வரை தலைவரை சந்திப்பதை முழுமையா தவிர்த்தேன் . அவரிடம்  சொன்னது போல இரண்டு நாளில் கூட்ட வேண்டிய நிர்பந்தம் ஒன்றுமில்லை . சற்று நிதானத்துடன்  நான் கூட்ட நினைத்தது உண்மையான மாநில செயற்குழு கூட்டம். கண்ணன் மற்றும் பாலன் காலத்திலிருந்து உழைத்து ஓய்ந்து போன , அவர்களால் ஏமாற்றப்பட்ட, இன்று  நான் மட்டுமே அறிந்த பழைய தோழர்கள் . முகம் தெரியாத அந்த உறுப்பினர்கள் கலந்து கொள்கிற கூட்டம்  . அது காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறுகையில் அவர்களை அந்த  செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள செய்வதுதான் அவர்களின் உழைப்பிற்கு கிடைக்கும் அங்கீகாரம் .

சுமார் இருபது ஆண்டுகளாக  மாநில கட்சிக்கு கசப்பாகிப்போன ஒரு இயக்கம். அதனாலேயே தலைமையின் பாராமுகத்தால் அழிந்து போன புதிய தலைமுறைப் தலைவர்கள் . இளைஞர் காங்கிரஸ் என்றாலேசண்டியர் அமைப்புஎன்கிற மனநிலையை மாற்ற எனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இது . தலைவர்  அங்கீகரித்தது என்னை மட்டுமே . ஆனால் அதை அமைப்பின் அங்கீகாரமாக மாற்றுவதுதான் எனக்கான களத்தை உருவாக்கிக் கொடுக்கும் என உறுதியாக இருந்தேன் .

அத்தனை பெரிய செயற்குழு கூட்டத்தை மிக குறுகிய காலத்தில் நிகழ்த்துவதில் பிறழ்வுகள் ஏற்படும் வாய்ப்புகளே அதிகம் . இரண்டு நாட்களுக்குள் கூட்டுவதாக நான் தலைவரிடம் சொன்னதால் அவர் மாநில நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டம் என்று மட்டும் கணக்கிட்டிருப்பார். அதனால்தான்  எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி அவர் என்னுடன் விவாதிக்கவில்லை. மேலும் கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்திக் கொள்ள அனுமதித்ததும் அதை மனதில் கொண்டே என்பதையும் அறிந்திருந்தேன்

அவர் விழித்திக்கொண்டு என்னை  முறைமைகளுக்குள் கட்டிவிடும் முன்னர் கூட்டம் பற்றிய செய்தி மாநிலம் முழுவதும் சென்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன் . அதனால்தான்  நான் அதை ஒருவார கால அவகாசத்தில் நடத்த விழைந்தேன். மிக ஆபத்தான விளையாட்டை தொடங்கியாகி விட்டது.வெற்றிபெற்றால் ஏன் இப்படி செய்தேன் என்கிற அவரது கேள்விக்கு என்னால் பதில் சொல்லி மாளாது . தோல்விவுற்றால் அவ்வளவுதான்....அந்த ஆபத்தை உணர்ந்தே இருந்தேன்.அவரது பார்வை என்மீது படாதிருக்க அவரிடம் இரண்டு நாளில் நடத்துவதாக குறுகிய அவகாசம் சொன்னேன். அது பொய் , அரசியலில் பிறரின் நன்மை பொருட்டு பொய் சொல்லாம் என்பது விதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக