https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 11 ஜூலை, 2018

அடையாளமாதல் - 366 * கை கொள்ளும் விழுமியங்கள் *

ஶ்ரீ:




பதிவு : 366 / 547 / தேதி :- 11 ஜூலை  2018

* கை கொள்ளும் விழுமியங்கள் 


நெருக்கத்தின் விழைவு ” - 60
விபரீதக் கூட்டு -04.



அரசியலாளர்களின் பாதையை அதிகாரத்திற்கு முன் , பின் என வகுத்துக் கொண்டால்  மரபின் மீது , விழுமியத்தின் மீது நெறியின் மீது அவர்கள் கொள்ளும் பிடிப்புகள் அனைத்தும் ஒரு நடிப்பு மட்டுமே என்கிற உணர்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கும் . ஒரு முறை அதிகாரத்திற்கு வந்துவிட்டவர்களுக்கு  எல்லாவற்றிலிருந்து தங்களுக்கு விலக்குள்ளதாக நினைகிறார்கள் . சண்முகத்தின் கடந்த கால அரசியல் வழிமுறைகள் அவரை புதுவையின் பிறிதெல்லா அரசியல் தலைவர்களிடமிருந்து அவரை முற்றாக வேறுபடுத்தி காட்டியது இந்த இடத்தில்தான் என நினைக்கிறேன்    . அவரை அனுகுபவர்களுக்கு இயல்பில் ஒரு மரியாதையான  இடைவெளியை அது   உருவாகிவிடுகிறது .  அவர் தனது  தனிப்பட்ட வாழ்கையை கூட ஒரு சட்டகத்திற்கு உட்பட்டதாக வைத்துக் கொண்டது  பிறிதொரு  காரணமாக இருக்கலாம். அதைப் போன்ற ஒன்றை அரசியல் ஆளுமைகள் மட்டுமின்றி பல துறைகளை சேர்ந்த பெரியவர்களையும்  அப்படி பார்த்திருக்கிறேன். அவர்கள்  தங்களது செயல்பாடுகளுக்கு வரையரை செய்து கொண்டதால் . தங்களை  நோக்கிய  கேள்விகளை என்ன அல்லது  அவை எப்படி? கேட்கப்பட வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு  செய்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யம் . நல்ல அரசியல் என்பது இங்கிருந்து துவங்குகிறது என நினைக்கிறேன்.

ஆளுமை என்பது  ஒருவரின்   தனித்தன்மையில் இருந்து உருவாகி எழுவது . அவர்களின் குணநலனை பொதுமையாக கொண்டது . தன்னால் இயலும் அல்லது இயலாததை தான் புரிந்து கொண்டிருப்பது மட்டுமின்றி , பிறருக்கும் அது புரியும்படி முன்வைப்பது . அதை பிறரின் ஆழத்துடன் உரையாடும் தங்களின் சக்தியால் அவற்றை நிகழ்த்தினார்கள்   இங்கு இயலாதது என்பது இயலாமையை சொல்லவில்லை , அது போதாமையை குறிப்பது . நான் என்னை அவதானிக்கத்துவங்கியபோது , என்முன் எழுந்த பல கேள்விகளில் இதுவும் ஒன்று . அதில் நான் பெரும்பாலனவர்களுடன் முரண்பட்டேன். அரசியலின் பொருட்டு ஆழ்மனத்திற்கு ஒவ்வாத எதையும் என்னால் செய்ய இயலாது என்பதை எனது நண்பர்களுக்கு என்னால் இறுதிவரை புரியவைக்க முடியாது போனது .

அரசியல் என்பது பதவியை குறிவைத்ததல்ல என்பது எனது கோட்பாடாக இருந்தது. அதுவே ஆரோக்கியமான அரசியல் என புரிந்திருந்தேன் . தர்க்க ரீதியில் எனக்கு அதை சண்முகம் நேரடியாக சொன்னதில்லை. ஆனால் அவரது நகர்வுகளின் பின்னால் நான் அந்த கோட்பாட்டை   உணர்ந்திருக்கிறேன் . அது எனக்கு அவருடன்  என்னை அறியாமல் நிகழ்ந்த  ஒற்றை   மனப்பரப்பை   என்னையு அறியாமல் அடைந்துவிட்டதால் இருக்கலாம்  . அவரது சிந்தனையைஅதன் முனையை என்னால் பார்க்க முடிந்தது  . 

அவர்கள் தங்களுக்கான  ஒரு முகத்தை அல்லது அணுகுமுறையை பிறரின் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு  வைத்திருந்தார்கள் .  அவர்கள் ஒரு விஷயத்தில்  இப்படித்தான் முடிவெடுப்பார் என்கிற   குழப்பமில்லாத  பாதையை பிறிதொருவருக்கு காட்டுவதாகஅவை எப்போதும் இருந்தது . பல மூத்த தலைவர்களுக்கும் அதுவே பொதுவில் இருப்பதையும்    பார்த்திருக்கிறேன் . நவீன அரசியல் என்கிற ஒன்றை புகுத்த நினைத்த பலர் முரண்பட்டது இந்த இடத்தில். அவர்களுடன்  எக்காலத்திலும் உரையாட இயலாது . ஒரு நகர்வை யார் எந்த கோணத்தில் பார்க்க இயலாதோ அதுவே அவர்கள் தங்களது  வழிமுறை என்கிற பிறழ்வான ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டு கிளைத்து வளர்ந்துவிட்டது

பத்திரிக்கையாளர் கூட்டம் துவங்க 10 நிமிடம் இருக்கும் போது தலைவர் தனது அறையில் இருந்த அனைவரையும் வெளியேறச் சொல்லி , பின்னர் என்னை அழைத்தார் . நான் உள்ளே சென்றபோது அவர் மிக உக்கிரமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது . நான் அமைதியா நின்றிருந்தேன் , நான் நின்றிப்பதை கூட  மிக தாமதமாக உணர்ந்து என்னை அமர சொன்னார் . மீளவும்வல்சராஜ் எங்கே ?” என்றார் . அவர் தில்லிருந்து கொச்சின் வழியாக மஹே சென்றுவிட்டதை சொன்னேன்

அரசியலை நாங்கள் , விளையாட்டாக எடுத்துக்கொள்வதாக அவர் எப்போதும் மீள மீள  சொல்லும் அதே பழைய புராணம் . இப்போது  குறிப்பாக என்னை நோக்கி ஏதாவது சொன்னால் இம்முறை அதற்கு தெளிவாக பதில் சொல்லும் மனநிலையில் இருந்தேன் . அன்றைய சூழலில் மாநில  இளைஞர் காங்கிரஸ் அமைப்பு  அனைத்தையும் ஒரு தலைமையின் கீழாக என்னால் கொண்டுவந்திருக்க முடியும்  அதற்கு தடையாக இருந்தது தலைவரும் , வல்சராஜூம்  . இதை நேரடியாக சொல்லும் மனநிலைக்கு வந்துவிட்டிருந்தேன் . தலைவர் இதை எனது ஆணவம் என்று சொல்லலாம். தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு ஆணவமும் ஒரு அலங்காரமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...