https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 9 ஜூலை, 2018

அடையாளமாதல் - 364 * சுய கௌரவம் *

ஶ்ரீ:




பதிவு : 364 / 545 / தேதி :- 09 ஜூலை  2018

* சுய கௌரவம்  *


நெருக்கத்தின் விழைவு ” - 58
விபரீதக் கூட்டு -04.






என்னிடம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று பத்திரிக்கை கூட்டத்தை ஒருங்கச்சொன்னது மூலம் , தன் முன்  நிகழ இருந்ததை தலைவர் தடுத்துவிட்டார் . அதில்  எனக்கு சிறு வருத்தம் இருந்தாலும் , கூட்டத்தை வையத்தரசையும் உடன் வைத்துக் கொண்டு  ஒருங்கச் சொல்லாதது ஆறுதல் அளிப்பதாக இருந்தது . தலைவர் அதை போன்ற "குசும்பை" சகஜமாக செய்யக் கூடியவர் . இப்போது அதை செய்ய முடியாது . நான் மறுபேச்சு பேசாமல் அலுவலகம் கிளம்பினேன் .

ஆனால் வெளியில் செல்வதற்கு பதிலாக வீட்டின் பின் காட்டுக்கு சென்றேன் அங்கிருந்து தலைவர் பேசுவதை கேட்க முடியும் . எனக்கு இப்போது பத்திரிக்கை கூடுகைக்கு யாரை முன்னிறுத்தப்போகிறார் என்பது தெரிந்தால்தான் நான் எனது நகர்வை முடிவு செய்ய முடியும் . காலை வீட்டிலிருந்து கிளம்பும் முன்பு இருந்த மனநிலை இப்போது  முற்றாக மாறி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்து ஆடுவது . இனி தற்காப்பு ஆட்டம் ஆடுவதை நிறுத்த வேண்டும்  என முடிவெடுத்து விட்டேன். அதனால் விளையும் சாதக பாதகங்கள் குறித்து தில்லியிலேயே அவாதானித்தாகி விட்டது. இனி தயங்குவதில் பொருளில்லை.

நான் பின் கட்டிற்கு வந்த போது சபாபதி தலைவரிடம் ஏதோ சொல்ல அவர் சபாபதியிடம் , “அரியிடம் கேட்டதை அவன் சொன்னது போல நீங்கள் ஏன் வல்சராஜிடம் கேட்கக்கூடாது? . இங்கு அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாத என நினைக்கிறீர்களா? . பெரியவர்களுக்கு இளைஞர் காங்கிரஸ் உள்விஷயத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம்? , பேசாமல் அதிலிருந்து விலகி விடுங்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்என்றார்  . சிறிது மௌனத்திற்கு பிறகுபத்திரிக்கையாளர் கூட்டத்தை நான் கையாள்கிறேன்என்றதற்கு பிறகு சற்று நேரம் நிசப்தம் நீடித்தது . நானும் சூர்யநாராயணனும் ஒன்றும் பேசாது அமைர்ந்திருந்தோம் , தலைவர் அறை தொடர்ந்து நிசப்பதமாக இருந்தது பின் வண்டி கிளம்பி செல்லும் சப்தம் கேட்டது , ரவி ஓடிவந்து தலைவர் அலுவலகத்திற்கு கிளம்பி செல்வதை சொன்னதும்,  நான் அவர் சென்று அடையும் முன்பாக மாற்று வழியில் அலுவலகத்திற்கு சூர்யநாராயணனை எனது வண்டியில் ஏற்றிக்கொண்டு பறந்தேன்

தலைவர் வந்து சேருவதற்கும் நாங்கள்  கீழ் தளத்தில் சில வேலைகள் செய்தி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. தலைவர் அலுவலகம் நுழைந்ததும் " பத்திரிக்கையாளர் கூட்டம் கீழே வேண்டாம்  , தனது அறையில் வைத்திக்கொள்ளலாம்" என்றார் . தலைவர் அறையில் அது நிகழ்வதுதான் சரியாக இருக்கும் என எனக்கும் பட்டது . அங்குதான் கூட்டம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வரும்

இன்றைய பத்திரிக்கையாளர்களில் பலர் செய்தியை சேகரிப்பது , அதிலிருந்து  அரசியல் அவதானிப்பு கட்டுரைகள் எழுதுவது போன்றவற்றை அறியாதவர்கள் , அவர்களில் பலருக்கு அரசியல் தலைவர்கள் சிலரை நோக்கிய மனச்சாய்வு உண்டு , எனவே கேள்வியை கோணல் புத்தியுடன் கேட்டு யாரையும் பதறச்செய்வது அல்லது சினத்தை ஏற்படுத்தி அதை செய்தியாக்குவது செய்தி சேகரிப்பது என்கிற பிழைப் புரிதலில் இருந்தார்கள்  . பெரும்பாலும் பிற அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் நிலவும் உள்பூசலை தொடர்ந்து அவர்கள்  கோபத்துடன் வெளிப்படுத்தும் தனிப்பட்ட விமர்சனத்திற்கு இவர்கள் கேள்வி வடிவம் கொடுத்து பொதுமக்கள் இப்படி நினைக்கிறார்கள் என்று சொல்லி வெறுப்பேற்றுவார்கள்
அந்த அரசியலாளருக்கு யார் அந்த பொது மக்கள் ? என்று பதில் கேள்வி கேட்கத்தெரியாது , கேட்கப்பட்ட கேள்வியின் உள்ளர்த்தமும் அதில் உள்ள பகடியையும் அறியாத  அதற்கு  மெனக்கெட்டு பதில் சொல்லிக்கொண்டிருப்பதையும் மூத்த பத்திரிக்கையாளர்கள் நமுட்டு சிரிப்பை உதிர்பதை பார்த்திருக்கிறேன் . இன்றைய  அரசியளாலர்கள் தங்களது பொருளியல் சக்தியாலும்அதிர்ஷ்டத்தாலும் ஸ்தானத்திறகு வந்து விட்டாவர்கள் என்றும் அதைக் கடந்து எந்த தனித்திறமையும் இல்லாதவர்கள் என்கிற முன் முடிவிற்கு வந்துவிட்டவர்கள்  . எனவே அவர்களுக்கு அரசிளாலன் என்பவன் ஒரு கோமாளி மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்