https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெண்முரசு 17

புதுவை வெண்முரசு கூடுகை -17

வெண்முரசு நூல் 2 மழைப்பாடல்
60 முதல் 68 வரை


மகிழ்ச்சி என்றால் அல்லல்கள் விடுபடும் உணர்வு. சலிப்பு மறையும் நேரம். அல்லது வெற்றியின் முதற்கணம்.

மகிழ்ச்சி என்பது இப்படித்தான் இருக்கும்போலும். சிந்தனைகள் இல்லாமல். உணர்ச்சிகளும் இல்லாமல். கழுவிய பளிங்குப்பரப்பு போல துல்லியமாக. இருக்கிறோமென்ற உணர்வு மட்டுமே இருப்பாக. ஒவ்வொன்றும் துல்லியம் கொண்டிருக்கின்றன. ஒலிகள், காட்சிகள், வாசனைகள், நினைவுகள். அனைத்தும் பிசிறின்றி இணைந்து முழுமையடைந்து ஒன்றென நின்றிருக்க காலம் அதன்முன் அமைதியான ஓடை என வழிந்தோடுகிறது. ஆம், இதுதான் மகிழ்ச்சி. இதுதான்.

மகிழ்ச்சி என்பது ஈட்டக்கூடிய ஒன்றாக இருக்கமுடியுமா என்ன? கைவிரிக்க பழம் வந்து விழுந்ததுபோல நிகழவேண்டும். எப்படி இது நிகழ்ந்தது என்ற வியப்பையும் அனைத்தும் இப்படித்தானே என்ற அறிதலையும் இருபக்கமும் கொண்ட சமநிலை அது. அடையப்படும் எதுவும் குறையுடையதே. கொடுக்காமல் அடைவதேதும் இல்லை. கொடுத்தவற்றை அடைந்தவற்றில் கழித்தால் எஞ்சுவதும் குறைவு. அடைதலின் மகிழ்ச்சி என்பது ஆணவத்தின் விளைவான பாவனை மட்டுமே. அளிக்கப்படுவதே மகிழ்ச்சி. இக்கணம் போல. இந்தக் காலைநேரம் போல.”

கங்கைக்கரைக்குச் சென்று மணலை அள்ளி தங்கள் கற்பின் வல்லமையால் அதை ஒரு சிறு குடமாக ஆக்கி நீர் முகர்ந்து கரையில் கங்கையாக நிறுவப்பட்டுள்ள உருளைக்கல்லை மும்முறை முழுக்காட்டவேண்டுமாம்" என்றாள். அவள் விழிகளை குந்தியின் விழிகள் ஒருமுறை தொட்டுச்சென்றன. புன்னகையுடன் "இதற்கு முன்னர் தேவியர் அதைச்செய்திருக்கிறார்களா?" என்றாள். "பேரரசி?"

"ஆம்" என்றாள் அனகை. "அப்போது பேரரசிக்கும் ஒரு கரியகுழந்தை இருந்தது" என்றாள் குந்தி. எழுந்த புன்னகையை அனகை அடக்கிக்கொண்டாள்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...