https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 475. * தொன்மத்தின் விந்தை *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 475

பதிவு : 476 / 662 / தேதி 20 அக்டோபர் 2019

* தொன்மத்தின் விந்தை  * 


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-11


இன்று மரபான தரிசன ஆக்கங்களை  கற்பதற்கான வாய்ப்பு அனேகமாக இல்லை . அதன் மொழியும் நடையும் உள்ளத்திற்கு வெகு அப்பால் என நிற்ப்பது . அதை கற்க  விழைபவர்களுக்கும் துவக்கபுள்ளி என ஒன்றில்லை. இன்றுள்ள அனைத்தும் பல புராண , இதிகாச , உபநிஷத்து மற்றும்  தரிசனங்களை உள்ளடக்கிய பரந்து விரிந்த மாபெரும் தொகுப்புக்கள் . அவை நேரடியாக மனதோடு உரையாடுவதில்லை . ஒன்றை பிணைக்கும் பிறிதொன்றை வேறொரு ஆக்கத்தில் விட்டுச் செல்கிறது . அதை எடுத்துப் இணைத்து புரிந்து கொள்ள வேண்டியதே கற்பதில் உள்ள சிடுக்கு . ஒரு குருவின் உதவியில்லாது அவற்றை கண்டடைவது இயலாது ,காரணம் அவை கடல்போல பெருகி விரிந்து கிடப்பவை . அனைத்தையும் விட எதை நோக்கிய பயணத்திற்காக உள்நுழைவது என்பது ஆகப்பெரும் கேள்வி கற்பதில் கொண்டு விடகூடும்.

இன்றைய சூழலில் குருவை கண்டடைவதில் சிக்கலில்லை , மரபும் , நவீனமுமாக குருநிலைகள் ஏராளமாக காணக்கிடைக்கின்றன. ஆனால் அவை எவற்றிலிருந்து தனது அடிப்படையை உருவாக்கி கொடுப்பது . மேலும் எந்த புள்ளியிலிருந்து என்பது கேள்வி . எளிய பக்தி , மெய்மை தேடல் , நவீன மனதிற்கான மரபை நோக்கியது என மூன்று பிரிவினருக்கு , இந்த இரண்டுவிதமான குருநிலைகள் அளிப்பது என்ன என்பது மற்றொரு கேள்வி .

மரபான குருநிலைகள் எதார்த்த உலகின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளிவரப்போவதில்லை . அசலான மெய்மை தேடலுக்கு நவீன மனம் ஒன்றே திறவுகோல் . தேடலை பிரதானமாக கொண்ட குருநிரைகள் உலகின் பார்வையில் இருந்து ஒதுங்கி வெளியே உள்ளது . அவற்றை கண்டடைய நல்லூழ் வாய்க்க வேண்டும் . சில நவீன குருநிலைகள் மரபை உடைத்து வீசி , மாற்று தராதவைகள் , சிந்திக்க வைத்து முற்றிருளில் தள்ளிவிடுபவை ஓஷோ , ஜே. கே போல

உலகை பரிவுடன் நோக்குவது , அவர்களையதார்த்த நவீனத்திற்குஇட்டு செல்வது . அதற்கான அறிமுகம் செய்து வைப்பது என்கிற மனமுள்ள சிலரை கொண்டு நிறுவ நினைத்த இயக்கம், முழுமையும் கனவாக கலைந்த போதுதான்   ஜெயமோகனின் இந்து மெய்ஞான மரபு பற்றி அறிந்து கொள்ள நேர்ந்த பின் அதைநோக்கிய எனது பயணம் தொடங்கியது . அது ஒரு அற்புதமான திறப்பு . தொடர்ந்து இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் வாசிப்பு ஒரு வரப்பிரசாதம் . நான் முன்னெடுக்க நினைத்த அமைப்பின்  சரியான பாடதிட்டம் . ஆனால் அதை எங்கு எப்படி துவங்குவது . அதொரு மாபெரும் கனவு அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன் . நற்காலம் வாய்க்க வேண்டும் .

இன்றைய குமுகங்கள் மரபிற்கு எதிரான மனநிலையை நவீனமானது என பிழையாக புரிந்துள்ளார்கள் என நினைக்கிறேன் . கோவில்களில் குவியும் அனைவருமே எளிய பகத்தியை கொண்டவர்கள். அவர்களுடைய தேடல் அன்றாட உலகியல்  குறித்ததுஅதை கடந்து அவர்களுக்கானது பிறிதொன்றில்லை . பக்தியின் ஆரம்பப்புள்ளி மாணவர்களுக்கானவேத விஞ்ஞானம்” . அங்கிருந்து அவற்றை துவக்க நினைத்த பின் விளைந்த அனுபவ இறுதியில் அது கற்பனா வாதம் என்கிற முடிவிற்குத்தான் வர வேண்டி இருந்தது

இன்றுள்ள சில மரபான தரிசனத்தை முன்வைக்கும் அத்தனை நூல்களும் , உயர்நிலை பள்ளி பாடம் கற்காதவருக்கு நேரடியாக முதுகலை பாடம் எடுப்பது போல . எந்த அடிப்படையையும் உருவாக்கி கொடுக்காமல்  கேட்பவரை அந்தரத்தில் நிற்கவைப்பது . அது தனது போக்கில் வேத , உபநிஷத்துக்களை மேற்கோள் காட்டி விளக்கத் துவங்கிவிடும் . அது கற்றலுக்கும் புரிதலுக்குமான  அகண்ட இடைவெளி . அந்த இடைவெளிகளை நம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவர்கள் , தங்களுக்கு சொல்லப்பட்டவைகளுக்கு முன்பின்னாக பயணப்பட்டு ஆழந்து அறிந்து தங்களை நிறைத்துக் கொண்டு தங்களைத்  தாங்களே நிலைபெறச் செய்து கொள்ள வேண்டிய சூழலை அது உருவாக்கி இருந்தது .

நான் அறிந்த விசிஷ்டாத்வைத கற்ப்பித்தலின் முறையும் பிற சனாதன மதங்கள் தங்களை முன்வைக்கும் முறையும் ஏறத்தாழ ஒன்றே . சனாதன மாதங்கள் ஒவ்வொன்றும் தங்களை நிலைபெறச் செய்ய கையாளும் ஒரு யுக்தி   புரான , இதிகாசம் அடைபடையாக கொண்டு  ஒன்றை பிறிதொன்று சிறுமைபடுத்துதல் , அதன்வழியாக ஒன்றை ஒன்று  முந்தி முன்நிறுத்த முயலுதல் என்பதே மதம் பற்றிய ஞானம் என்கிற அளவில் நின்று போனது .

காரணம் பல்லயிரமாண்டுகளாக விவாதங்களினூடாக எல்லா அறிவியக்கங்களும் விரிவடைந்து கொண்டிருந்த சூழலில் பொது வெளியில் அவை தீவிரமாக உரையாடியும் , விவதித்தும் தங்களை வளர்த்து கொள்ள முயன்றன . அறிவியக்கம் உச்சத்திலிருந்த காலம் . அனைத்து சம்பிரதாயத்திலும் விற்பண்னர்கள் நிறைந்திருந்தனர்

அவர்களுக்குள் நிகழ்ந்த அத்தனையும் இந்து மெய் ஞான மரபை நோக்கி அழைத்துச்செல்லபவை . ஆழமான ஞானமுள்ளவர்கள் காலசூழலில் ஒவ்வொரு சம்பிரதாயத்திலும் எழுந்து வருகிறபோது பிற சனாதன மதங்கள் தொய்வுறுவதும் , பின்னர் கிளைத்து எழுவதுமாக இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...