https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 16 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 474 * பிடிமானம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 474

பதிவு : 474 / 660 / தேதி 16 அக்டோபர் 2019

*  பிடிமானம்  *


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-09






எனக்கு விசிஷ்டாத்வைத தரிசனத்தை சொல்லிவைத்த முதல் குரு எனது தந்தைபிறகு அதன் நுணுக்கங்கள் மற்றும் தத்துவம் குறித்து அறிமுகம் செய்து வைத்தார் . அவை அவரது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது என்பதால் நானும் மறுசொல்லில்லாது அவற்றை உள்வாங்கிக் கொண்டேன் . காரணம் , என் நினைவு தெரிந்த நாள் முதல் தந்தை ஒரு நாத்திக மனச்சாய்வு கொண்டவர்  , நவீன இலக்கியம் மற்றும் கார்ல்மார்க்ஸ் புத்தகங்கள் அவரது புத்தக அலமாரிகளை நிறைத்து கொண்டிருந்ததை பார்த்து வளர்ந்தவன் . எழுத்தாளர் ஜெயகாந்தன் , நா. பரத்தசாரதி, கரிச்சான் குஞ்சி , கி.ரா போன்றோருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார் . அவருடைய தந்தைக்கும் அவருக்கும் நடக்கும் சில மென்மையான முரண்பாடுகளின் வழியாகவே அவரை நாத்திக சிந்தனையுள்ளவர் என புரிந்திருந்தேன் . பெரிய விவாதமெல்லாம் அவர்களுக்குள் நிகழ்ந்ததில்லை .

வீட்டு பண்டிகை நாட்களில் , கோயில் உற்சவம் மற்றும் வழிபாடு சமயங்களில் , அவரிடம் சிறு ஒவ்வாமை எழுவதையும், முதுதந்தையின் சிறு உறுமலுக்கு கட்டுப்பட்டு சிரத்தையல்லாமல் அவற்றில் பங்கு கொள்வதை பார்த்து அவருக்கு அதில் நம்பிக்கையில்லை என புரிந்து கொண்டேன் . முதுதந்தை மறைவிற்கு பின் சில வருடங்களில் அவரிடம்  பெரும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது .  நண்பர்கள் வழியாக மெல்ல அவர் பக்தி மார்க்கத்தில் நுழைந்தார் . பின் பிற எந்த கோவிலுக்கும் போகாத தீவிர வைஷ்ணவராக உருமாறினார்

அப்போதைய புதுவை தலைமை செயளாலரின் அறிமுகம் ஏற்பட்டு அவரை அவரது இல்லத்தில் சந்திக்க சென்றபோது  பக்தி குறித்து தனது ஆழ்மனம் கிளர்ந்ததை உணர்ந்ததாக பின்னர் ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறார் . நான் புரிந்து கொண்ட வகையில் என் முதுதந்தையின் நம்பிக்கை சார்ந்த பக்தி அவருக்கு உகப்பளிக்கவில்லை . அவை வெற்று பழைமைவாதம் என்கிற ஆழமான எண்ணமும். தங்கள் பிழைப்பு ஒட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள் என  பிராமனர்களுக்கு எதிரான நிலைபாட்டையும் அவர் தனது திரவிட கொள்கை மீதான மனச்சாய்வினால்எடுத்திருந்தார்  . தனது நவீன மனத்தில்  பக்திக்கு இடமில்லை என்பது அவரது  புரிதலாக இருந்திருக்க வேண்டும்.

புதுவை தலைமை செயளாலர் பாரத்தசாரதி ஒரு வைஷ்ணவ பிராம்னர் , அவரை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்று , அவர் தனது அன்றாட பூஜையை முடிக்கும்வரை காத்திருந்து அவரை சந்தித்த போது அவரது ஆழ்ந்த பக்தி திகைப்பை உருவாக்கியது . ஒரு மாநில தலைமை செயளாலர் , அதிக பொறுப்புள்ள பதவி , அன்றாடங்களின் புரிதல், சிக்கலன அரசியலுடன் தினம் அவர் செய்யும் சமர்களும், சமாதனங்களும் என் தந்தை நன்கறிவார் . இன்றைய நவீன உலகில் எல்லா அறிமுகம் இருந்தும் , அவற்றின் மத்தியில் அவரை போன்ற ஒருவர் பக்தியில் காட்டும் சிரத்தையும்  அனைத்தையும்  கடந்த அவரது நம்பிக்கையும் தந்தையின்  ஆழ்மனதை தொட்டிருக்க வேண்டும். அதன் பிறகு மெல்ல பகத்தியை நோக்கி வரத் துவங்கினார் 

அசாமில் பிரிவினை வாதம், மாணவர் போராட்டம் போன்றவை உச்சத்திலிருந்த போது அவர் புதுவையிலிருந்து அசாமிற்கு மாற்றாலாகி சென்றார் . அதன் பிறகும் அவர்களது நட்பு கடிதம் வழியாக நீடித்தது . தனது புரிதலின் துவக்கப்புள்ளி  அவர் என்பதால் , குரு ஸ்தானத்தில் அவரது படத்தை என் தந்தை பூஜை அறையில் வைத்திருந்தது நினைவிருக்கிறது . அசாம் தீவிரவாத இயக்கம் அவரது நாற்காலியில வெடுகுண்டு வைத்து அவரை சிதைத்த போது தந்தை மிகவும் மனம் வெதும்பிப் போனார்

பக்தி குறித்த தனது பார்வையில் மாறுபாடு ஏற்பட்டதும் , அவர் செய்த சில முக்கிய விஷயம் செய்ய    துவங்கினர் . தனது நாத்திக நம்பிக்கை குலைந்ததும் தன்  குழந்தைகளுக்கு மதம் பற்றி கலை பண்பாடு பற்றி தினம் ஏதாவதொரு புது விஷயத்தை சொல்லத் துவங்கினார் . நாங்கள் ஏழு பிள்ளைகள் அவருக்குஎன்னைத் தவிர பிற அனைவரும் பெண்கள் . முதலில் கந்தசஷ்டி கவசத்தை மனனம் செய்து ஒப்பிக்க சொன்னார் . இன்றும் அதன் சொற்குவியளை நினைவுறுகிறேன் . அறுபத்து மூவர் உற்சவத்தில் தேவாரம் இசையுடன் பாடிக் கொண்டு சென்ற குழுவில் ஈடுபட்டு அவர்களுடன் வீதி உலா சென்றது , பின்னர் அவர்கள் அனைவரையும் இல்லத்திற்கு அழைத்து வந்து இசைக்க வைத்தது . காணாபத்யம் , கௌமாரம் , சைவம் என ஒன்றிலிருந்து ஒன்றை நோக்கி பயணப்பட்டுக் கொண்டே இருந்து இறுதியாக வைஷ்ணவத்திறகு வந்து சேர்ந்தார் .

இன்று என்  அத்தனை முயற்சிகளும் அவரின் நீட்சி என்று உணர்கிறேன் . அவரின் தேடலும் கண்டடைதலும் எனக்கு மிக அருகில் நிகழ்ந்ததால் அது எனது ஆழுள்ளத்திற்கு அனுக்கமாக இருந்திருக்க வேண்டும் . நான் சிறு வயது முதலே பக்தி குறித்து எந்த குழப்பமும் அடைந்ததாக நினைவில்லை . அதன் மீதாக நம்பிக்கை என் இயற்கையிலேயே இருந்தது . அதை முறைபடுத்தியவர் என் தந்தை . அவரின் தேடுதலும் , புரிதல் வழியாக கண்டடையப்பட்டதும் அவரால் எங்களுக்கு விளக்கிச் சொவல்லப்பட்டமையல் அவை குறித்த சந்தேகங்கள் எங்களுக்கு எழவில்லை. இன்று வரை அவரிடம் பாதையில் எனது அக்கையும் , தங்கைகளும் பயணப்பட்டுக் கொண்டிருக்க , நான் மட்டும் அதிலிருந்து விலகி எனக்கான மெய்மையை நோக்கி நாகர்ந்து கொண்டிருக்கிறேன்  . அவையும் கூட ஒரு வகையில் எனது தந்தையின் நீட்சியே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக