https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 29 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 479 * இரு முணை *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 479

பதிவு : 479 / 665 / தேதி 29 அக்டோபர் 2019

* இரு முணை


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-12





எனக்கான மெய்மை தேடிய பயணத்தில், ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் பொது செயளாலர் பதவி , முதற்கல்லை இட்டது . அதன் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்ச்சியில் பெரும் வெற்றி அடைந்திருந்தாலும். “திறந்த அரங்கம்என்கிற கனவு திட்டம் பெரும் அலைக்கழிப்பையே தந்தது . “சனாதன தர்மத்தின்அத்தனை தத்துவ கோட்பாடுகளுக்கு ஒரு நல்ல துவக்கமிருக்க வேண்டும் என்கிற சிந்தனை என்னை எல்லா வழிகளிலும் கொண்டு சென்றுஇந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்வாசித்து முடித்த போது அக்கனவின் இறுதி எல்லைக்கு வந்து விட்ட உணர்வை அடைந்தேன் . அதன் விரிவாக்கத்தை வெண்முரசு வழியாக புரிந்து கொண்டேன்

முதல் வாசிப்பின் போதுஇந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்ஆக்கம் எனக்குள் சொடுக்கிய மின்னலை இப்போது ஆழ்ந்து அவதானிக்க தொடங்கி இருக்கிறேன். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் வாசிப்பு ஏற்ப்பட்ட கருத்தியல் தாக்கத்தின் பரவசத்திலிருந்து வெளி வந்திருக்கிறேன் . இது முன்பே திட்டமிட்டது தான்

தீவிர தாக்கத்தை கொடுக்க கூடிய கருத்தியல்கள் எனக்குள் எந்த விதமான பரிமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை சிறிது காலம் கடந்து மீள் அவதானிப்புக்கு வருவது என . நான்கு வருடம் கழித்து இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் ஆக்கத்தை இந்த பதிவுகளின் மத்தியில் மீண்டும் வாசிக்கத் துவங்கி இருக்கிறேன். இப்போது முன்பிருந்த பரவசம் இல்லாது போனாலும் . ஆழுளத்தில் சென்று அமர்ந்து அது உருவக்கிய தாக்கத்தை மெல்ல ஆராய்ந்து பார்க்க முயல்கிறேன் .

இதுவுமே இப்போது என கூட நான் திட்டமிடாததே . முதல் நிலையில் வெறுப்பவர்களுக்கும் வழிபடுகிறவர்களுக்கும் இடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமை என்னவெனில், இருதரப்புமே இந்து ஞான மரபு என்பது முற்றிலும் ஆன்மிக மரபுதான் என்றும், அது தவிர்க்க முடியாதபடி மதச்சடங்குகளுடனும் மத நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது என்றும் நம்புவதுதான். இந்து ஞான மரபினைப் பற்றிய மிகத் தவறான புரிதல் இதுஎன்கிறது ஒரு கருத்தியல் அவை அந்த இரண்டிற்குமான உறவை ரத்து செய்கிறது . இரண்டையும் வெவ்வேறு தளத்தில் நிறுத்துகிறது . அத்வைத கொள்கையை ஏற்காது இதனுள் நுழைய முடியாது என கருதுகிறேன்.

விசிஷ்டாத்வைத கொள்கை அத்வைதத்தின் வேறொரு பரிமாணம் , அது அத்வைதத்தை விசேஷித்து சொல்ல வந்தது. என்கிற என் ஆச்சாரியன் கூற்றை இங்கு நினைவில் கொள்கிறேன் . அவர் சொன்னதிலிருந்து வந்து சேர்ந்தால் அது  பெரும் தெய்வமாக கண்ணனை கொண்டிருக்கும் காலத்தில் நுழைந்து வெண்முரசென்னும் நவீன விரிவிற்குள் இறங்க முடிகிறது . அது எனது மிக நீண்ட பண்பாட்டின் மரபின் எல்லையின் விரிவை நோக்கி சிந்திக்க வைக்கிறது .

எனது பூஜா விதானம் பல்வேறு கேள்விகளுக்கும் , புரிதலுக்கும் உட்பட்டு இங்கு வந்து சேர்த்திருக்கிறேன் . ஒரு புள்ளியில் நம்பிக்கை தளர்ந்த போது , என்னை ஆற்றுப்படுத்திய விஷ்ணு சகஸ்ரநாம தியான ஸ்லோகம் . அப்போது அது தமிழில் வெளிவரத் துவங்கியிருந்த காலம் . சமஸ்கிரத உச்சரிப்பில் அனைத்தையும் கேட்டு பழகிய பின்  தமிழாக்கம் சிறு தயக்கத்தை கொடுத்தது . ஆனால் அதை கேடக்க முயற்சித்த போது அது வேறு தளத்திற்கு இட்டுச் சென்றன . நான் பீஷ்மரை எனது குருவாக அடைந்ததும் . அவருடைய தாய் எனக்கு குரு மாதாவாகியதும் , மஹாபாரதம் ஒரு அனுக்கமான வாழ்வியல் சாத்தியமாகிப் போனது .

வெண்முரசு அதனாலேயே விவாதித்து புரிதலை அடைய வேண்டிய ஒன்றகியது . பிற நாவல்களை விட இது எனக்கு அதிக நம்பகத்தன்மையை கொடுத்தது . அதிலிருக்கும் உளவியல் கருத்துக்களை வியாச பார்த்ததில் போட்டுப் பார்த்து அது அவற்றின் இடைவெளிகளை எப்படி நிரப்புவது , நிரவுகிறது என்பதில் தொடங்கி அன்றாடங்களில் மேல் கொண்டு வைத்த அவற்றை மதிப்பிட இன்னும் அனுகி பார்த்திட வைக்கிறதுஇவை அனைத்துமே ஜெயமோகனை  பற்றிய மிக தெளிவான ஒரு சித்திரத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது . அடுத்த எல்லையான திறந்த அரங்கம் குறித்த திட்டத்திற்கான முன்வரைவு உருவாக்க முடியும் என்கிற எண்ணம் மேலோங்கியதும் , நேரில் சந்தித்து அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்கிற விழைவு மிகுந்தது

அவரது கீதை உரை பற்றிய அறிவிப்பு வெளியான பிறகு ஒதுக்கி வைத்திருந்த விஷ்ணுபுரத்தை வாசித்து முடித்து , அவரின் பிற ஆக்கங்களை புரட்டத்துவங்கினேன். அது எனக்குள் செல் , செல்லாதே என்கிற இரண்டு எல்லைகளை ஒரே நேரத்தில் தொட்டுக் காட்டியது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்