https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 3 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 467 * ஊடுபாவுதலின் புனைவு *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 467

பதிவு : 467 / 652 / தேதி 03 அக்டோபர் 2019

* ஊடுபாவுதலின் புனைவு


ஆழுள்ளம் ” -01
படிமம் -02




1982 முதல் 2012 வரையிலான காலம் நான் அரசியலில் தீவிரமாக இருந்தேன் என்றாலும் , நிகழ் அரசியலில் எனக்கு ஒவ்வாமை ஏற்படும் போதெல்லாம் நான் என்னை பொது அரசியலிலிருந்து துண்டித்துக் கொண்டிருக்கிறேன் . சிற்சில காரணங்களினால் அந்த முடிவு எடுக்க வேண்டி இருந்தது .அதெல்லாம் அரசியலில் முதிரா பருவம் .அரசியலின் செயல்படு முறையில் ஏற்பட்ட வருத்தத்தினால் விலகியிருக்கிறேன் . ஆனால் 2001 பிறகு நிரந்தரமாக வெளியேற முடிவு செய்தது புத்தப்பூர்வமானது . கணக்கிலடங்காஏன்எனக்குள் எழுந்த போது , ஒவ்வொன்றையும் தர்க்கபூர்வமாக விலக்கி , விலக்கி எனது மனதை கட்டுக்குள் கொண்டுவந்தே அரசியலிலிருந்து முற்றாக வெளியேறினேன் . முக்கிய தலைவர்கள் சிலர் வீடு தேடி வந்து அழைப்பை முன்வைத்தும் அதை இதுவரை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவில்லை . அதற்கு எனது ஆழுள்ளம் விரித்துக்காட்டிய எதிர்காலத்தை பற்றிய வரைபடம் மட்டுமே காரணம் .

புதுவை முதல்வராக சண்முகம் பதவியில் அமர்ந்ததிலிருந்து அனைவரையும் கட்டி இணைக்கும் தலைபீடம் வெறிச்சோடி போனபிறகு , அந்தப் பொறுப்பிற்கு வந்த நாராயணசாமிக்கு முதல்வர் பதவியில் சண்முகம் தோற்க வேண்டும் என்பதை தவிர வேறு குறிக்கோலில்லை . அது அரசியலில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு . சண்முகம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது . நாராயணசாமியின் கணக்கை மிக எளிதாக நிறைவேற்றியது . இதன் பிண்ணனியில் எண்ணிலடங்கா அலகுகள் சண்துகத்தற்கு எதிராக திரும்பியது . மனித மனம் ஒன்றினோடு பிறிதொன்று உரையாடும் ஒவ்வொரு கணமும் அது ஒன்றில் ஒன்று ஊடுருவி வண்ணக் கலவைகளை உருமாற்றி காட்டும் ஜலத்திலிருந்து யாரும் தப்பிக்க இயலாது . அவரது வீழ்ச்சியை வெகுகாலத்திறகு முன்பாக கணித்திருந்தேன் . முதல்வருக்கு மிக அருகில் இருந்தும் என்னால் ஒன்றும் இயற்ற முடியாத சூழலை ஒட்டியே எனது மதிப்பீடுகள் உருவாகின .

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பவருக்கு அருகில் இருக்கும் போது அரசியலிலிருந்து வெளியேறுவது என்பது துல்லியமான கணக்கீடுகளைக் கோருவது . அரசியலில் இரண்டாம் நிலை தலைமைக்கு நகர்ந்து கொண்டிருந்த எனக்கு , அதன் உள்ளீடுகளும் அதை ஒட்டி கண்களுக்கு புலப்படாத உள்ளோட்டங்களை கொண்ட நுண்மை அரசியலை தெளிவாக உணர்ந்து கொண்டேன் என்றால் அது எனது ஆழ்மனம் எனக்கு எடுத்துக் கொடுத்தது என்பதை தவிர வேறு காரணங்களை என்னால் கற்பிக்க இயலவில்லை.

நான் அறிந்தவரை ஆழ்மனச்செயல்பாடு என்பது நிகழவிருக்கும் ஒன்றின் முணையை அதை பிரதிபலிக்கும் பிறிதொரு அலகின் அதிர்விலிருந்து எடுத்துக் கொடுக்கிறது . தேவை அது பற்றிய தீர்க்கமான கருத்தியல் உறுதி . தலைவர் சண்முகம் என்னை அதற்கு பயிற்றுவித்திருந்தார் என்பதை வெகுகாலம் கழித்தே புரிந்து கொண்டேன் .ஏறக்குறைய பத்து வருடம் அரசியல் மற்றும் அதிலிருந்து விலகி தொழில்துறை என இரண்டு காலகட்டம் அது
எனக்கு 1999 அரசியல் ரீதியான திருப்புமுனை வருடம் 1999 முதல் 2002 வரையிலான உச்ச கட்ட அரசியல் என்னை வேறொரு உலகிற்கு இட்டுச் சென்றது . புதுவை முதல்வர் பதவியில் அமர்ந்த பிறகு தலைவர் சண்முகத்தின் வீழ்ச்சியைப் ஒருவாறு கணித்திருந்தேன் . இறுதியில் அதுவே நிகழ்ந்தது . அவர் மீது கடும் வருத்தம் இருப்பினும் அவரை போன்ற ஒரு ஆளுமையடன் பணியாற்றி பிறகு அவரிடத்தில் வேறொருவரை என்னால் ஏற்க இயவில்லை . நான் முற்றாக அரசியலிலிருந்து வெளயேறினேன் .

அதன் பிண்ணனிப் பற்றி விரிவான பதிவுகள் பின்னர் . இருப்பினும் அவற்றை இங்கு பதிவிட்டதற்கு  ஒரு முக்கிய காரணமுண்டு . இது ஆழுள்ளம் பற்றிய எனது எண்ணத்தை பதிவி செய்வதாக அமைந்திருக்கிறது . இது எனது வலைப்பூதளம் என்றாலும் , அன்றன்று என்ன பதிவு வெளியாக வேண்டும் என்பதை என்னால் முடிவு செய்ய இயன்றதில்லை  என்பது எனக்கே வேடிக்கையாக தோன்றியதுண்டு . சில பதிவுகள் நான் பதிவிட எண்ணிய எந்த சிறு கூறும் இல்லாமல் அதன் போக்கில் வெளியானதை உணர்ந்திருக்கிறேன் . ஆரம்பத்தில்  அவற்றை என் வாட்டத்திறகு கொண்டு வர   முயற்சிக்கும் போதெல்லாம் அவற்றின் ஒழுங்கில் குறைகளை கண்டு அவற்றை சரி செய்யும் முயற்சியில்  என் எண்ணங்கள் சொற்களாக திரளாமலாகி நீண்ட நாள் அவை அப்படியே கைவிடப்பட்டு கிடந்திருக்கின்றன. பின்னர் அதன் போக்கிற்கு என்னை ஒப்புக் கொடுத்த பிறகு , அதன் வேகம் என்னை பிரமிக்க செய்வது

ஒவ்வொரு நாளும் எனது பதிவுகளை முதலிலிருந்து துவங்குவதில்லை . அது ஒரு பத்து இருபது பதிவிற்கான தகவல்களாக நீண்டு சிதறிக் கிடக்கும் . ஒவ்வொரு நாளும் அதன் முன் அமரும்போது , அவற்றை திருத்தி , மேலதிக தகவல்களை இணைக்கும் போது அவை நீண்டு நான் நினைத்ததற்கு மாறாக வேறொரு வடிவம் எடுப்பதை நானும் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்