https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 24 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 477 * தனித்த மழை *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 477

பதிவு : 477 / 663 / தேதி 24 அக்டோபர் 2019

* தனித்த மழை


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-12




விசிஷ்டாத்வைத தரிசனத்தைக் கொடுத்த ராமாநுஜர், நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு விரிவுறையை தான் செய்யாது பிறரிடம் எழுதுமாறு கொடுத்தார்   , பல பாஷியங்களை அவர் செய்திருந்த சூழலில் , இவற்றிற்கு அவரே விரிவுரை செய்யலாமே என்று அவரை நோக்கி கேள்வி எழுந்தபோது அவர் தனக்கிருக்கும் முக்கியத்துவம்  காரணமாக தனக்கு பின்னர் வருபவர்கள் அதன் மீதான நவீன உரைகளை எழுத தயங்கக் கூடும் என்பதை காரணமாக சொன்னார் . அது இன்றளவிற்கும் உண்மை . அதன் பிறகு வந்தவைகள் அவற்றை விளக்கிச் சொல்பவை . அது புது நோக்கை முன்வைக்க விழையவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியது . எந்த ஒரு காலத்தை கடந்து நிற்கும் விஷயமும் நவீன புரிதலுக்கு உட்பட்டாக வேண்டும் .

அன்றிருந்த சமூக கட்டமைப்பு இன்றில்லை . அறிவியக்க செயல்பாடு முடங்கிய பிறகு நவீன தேவையை நிறைக்கும் புதிய முன்னெடுப்புகள் நிகழ வாய்பில்லாது போனது . அதன் அத்தனை பக்கமும் பூட்டப்பட்டு இறுக்கமாயின . அதிலிருந்து சிறிய புது சிந்தனை எழுவதே குற்றம் என பார்க்கப்பட்டு அவை முற்றாக சகூகத்திலிருந்த விலகிப் போயின . அதன் தொடர்ச்சி இன்றளவும் இருந்தாலும் அது தேய்ந்து வருவதை யாரும் மறுப்பதற்கில்லை .

மரபைபின் தொடர்ச்சியை பேனும்தாத்தாக்காளும் பாட்டிகளும்முற்றாக இல்லாத சூழலில் மரபின் மீதான தொடர்பு அறுந்து போனது . நவீன மருத்துவம் மற்றும் உடலின் அழகியல் எண்ணங்களால் அவர்கள் இன்னும் தங்களின்  இளமையை தொலைக்கவில்லை . மரபையும் பண்பாட்டையும் ஒரு சமூகத்தால் முற்றாக கைவிட இயலாது. அவை ஆழ்மனதின் படிமங்கள் , அவை பண்டிகைகள் , திருவிழாக்கள் அவற்றை நவீன உலகில் அவற்றை தொடர்புறுத்தும் சரடுகள் . எங்கோ எழும் ஒரு சொல் ஆழ்மனதை எழுப்பச் செய்பவை .

இந்து மெய்ஞான மரபை பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்துக்களால் அலையென  புதிய புரிதல்கள் ஆழ்மனதில் கிளர்ந்தெழுந்து கொண்டிருந்த போது அதைத்தான் நான் உணர்ந்தேன் என நினைக்கிறேன் . அந்த மரபை பற்றிய ஆழ் கருத்துக்கள்  ஒன்றுக்கொண்டு தொடர்பற்று உதிரிகளாய் மனம் முழுவதும் பரவிக்கிடப்பதைப் போல ஒரு எண்ணத்தை அடைந்திருந்தேன் . ஆனால் அவை அவற்றிற்கான இடைவெளிகளை கண்டடைந்து அவற்றில் சென்று இணைந்து கொண்டிருக்கக் கூடும் . அவற்றை மீளவும் எடுத்து தொகுத்துக் கொள்ளும் வழி அவற்றை எழுதி அடுக்கிக் கொள்வதே

அவற்றை மேலும் மேலுமென விரித்தெடுக்க அது பற்றி ஆர்வமுள்ள யாரிடமாவது பகிர்ந்து கொள்ளும் வேகம் எழுந்தது . உரையாடல் வேறொரு வகையில் எண்ணங்களை அடுக்குபவை . எழுதுவதனூடாக அது குறித்து ஆழ்ந்து சிந்திக்க இயன்றதால் எனது வளைத்தளத்தில் எனது அனுபவங்களின் பதிவுகளுக்கு மத்தியில் அவற்றை பதியும் வழமைக்குள் வந்தேன் .

ஜெயமோகனின்  எழுத்துக்களிலிருந்து  மனம் அதீதமாக புதிய கருத்தியல் எழுச்சி அடைந்திருந்தது . அதன் தீவிரம் ஒருகட்டத்தில் எனது நீண்ட கால ஆழ்மனப் புரிதலின் அடைப்படிகளை மாற்றி அமைந்துவிடக் கூடும்  என உணரத் தொடங்கியவுடன் , புதிய கருத்தியல்கள் எனக்குள் எந்த வித மாற்றத்தை நிகழ்த்தக் கூடும் என அவதானிக்க துவங்கினேன்

எனது வாழ்வியல் நடைமுறை , ஆரம்ப நாள் முதல் என் தந்தையிடமிருந்து எனக்கு கைமாற்றி கொடுக்கப்பட்ட ஒன்று . அவரின்  கருத்தியல்களில் பலவற்றை நான் எனது சிந்தையில்  முரண்பட்டிருந்தேன் . அவை இன்னும் எளிமையாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டிருந்தது . அவரது பூஜா விதானம்  இளவரசன் , அவனது அடிமை பாணி . “யானையும் பட்டத்து இளவரசும் செய்வதை கேள்வியாக்க இயலாதுஎன்பார்.

எனது அன்றாட பூஜை முறை பல மாற்றங்கள் அடைந்தபடி இருந்தாலும் , பூஜை விதானம் மாற்றமடையவில்லை . எனது தந்தையின் பூஜா விதானம் பிரபந்த வாசிப்போடு நின்றுவிடும் . சிலா பூஜை என் நினைவு தெளிந்த நாட்கறிலில்லிருந்து எனக்கு அனுக்கதாக , உகந்ததாக உணரப்பட்ட ஒன்று . ஒருவேளை எனது முதுதந்தையிடமிருந்து அதை நான் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் . ஜெயமோகனின் எழுத்துக்களால் மெல்ல அவற்றை நியாயப்படுத்த முயன்று கொண்டிருந்த சூழலில்  உள்ளம் பெரும் கிளர்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது . அவை என்னை முற்றாக மாற்றி அமைந்துவிடக் கூடும் என்கிற அச்சமும் எழுந்து கொண்டிருந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்