https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 10 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 472 * கற்பனாவாதம் *


ஶ்ரீ:


அடையாளமாதல் - 472

பதிவு : 472 / 657 / தேதி 10 அக்டோபர் 2019

* கற்பனாவாதம் * 


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-07





வேதங்களோ, உபநிடதங்களோ, கீதையோ, மகாபாரதமோ, சைவத்திருமுறைகளோ, ஆழ்வார் பாடல்களோ எவையுமே ஓர் இந்துவுக்குக் கடைசிச் சொற்கள் அல்ல. இவையெல்லாம் முற்றாக அழிந்தாலும், நித்ய சைதன்ய யதி வரையிலான ஆசிரியர்களின் அனைத்துச் சொற்களும் முற்றாக அழிந்தாலும் இந்துஞானமரபு அழிவடையாதுஎன நம்பிக்கை கொள்கிறார் ஜெயமோகன் . நானும் அது அவ்வாறே என நினைக்கிறேன் . அதை முழுவதுமாக என்னால் ஏற்க முடிகிறது. காரணம் அது இதற்கு முன்பு நிகழ்ந்ததே . நாலாயிர பிரபந்தம் முற்றாக காணாமலாகி பல்லாயிரமாண்டு கடந்து வெளிப்பட்டது . அதுவரை அதன் மரபு நீடித்திருந்தது

2012 ம் ஆண்டு விசிஸ்டாத்வைத தரிசனத்தை முன்வைத்த சுவாமி ராமநுஜரின் ஆயிரமாவது ஆண்டு 2017 . அதை முன்னிட்டு  பெரும் விழாவிற்கான  முன்னெடுப்புகள் வேகமெடுத்துக் கொண்டிருந்தது . புதுவையை சேர்ந்து அனைத்து துறைகளின் பிரமுகர்கள் ஆட்சியாளர்களைக் கொண்ட விரிவான கமிட்டிகள் அமைக்கப்பட்டது . அதன் முதற் கூடுகையில்   வைணவ மரபான வைதிக  திட்டங்களை செய்படுத்துவது குறித்து முன்வைக்கப்பட்டது . என்னால் அவற்றை ஏற்க முடியவில்லை . நான் பொறுப்பேற்றுக்கொண்டது இயக்கத்தை வேறு வகையில் கொண்டு செல்வது குறித்து .  அவர்கள் முன்வைத்த திட்டங்களை  மறுத்து மாற்றுக் கருத்தாகசனாதன தர்மம்என்கிற கருதுகோளை நான் பரிந்துரைத்த போது கடும் கண்டனம் எழுந்து .

என்னுரையில் நான் சொன்னதுஇந்த பதவியை நான் ஒப்புக்கொண்டது பல்லாயிரமாண்டு இருந்து கொண்டிருந்த மரபை மாற்றி ஆயிரமாண்டிற்கு முன்பாக எளிய பக்தி மார்க்க தரிசனம் முன்வைக்கப்பட்ட போது கடும் எதிர்ப்பு எழுந்து அதுவே பிற்காலத்தில் நிலை கொண்டது . ஆயிரமாண்டிற்கு பிறகு இன்று அது என்னவாக இருக்கிறது. என்ன மாற்றங்களை அது கோருகிறது என்பதை இனி தனி நபர் முடிவெடுக்க இயலாது . தனிப்பட்ட மத அமைப்பும் அதை சொல்லத் தயங்குகின்றன அல்லது இயலவில்லை . இந்த சூழலில் பல்வேறு மத அமைப்புகள் ஒன்று கூடி அது பற்றி விவாதிக்கும் ஒரு அரங்கு உருவாக வேண்டும் . அங்கு நடைபெறும் விவாதத்தில் தேர்ந்ததை காலத்தின்  முடிவிற்கு விடுவது  . அங்கு விவாதங்கள்  பதிவு மட்டுமே நிகழ இருக்கிறது . அது யாருக்கும் எதையும் பரிந்துரைக் போவதில்லை .  நான்  முன்வைத்த வரைவு மீதான வாதப் பிரதிவாதங்களுக்கு பின் அரைமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது . எனது நிர்வாகத்திற்கு அவர்கள் ஒப்புமை அளித்து முன்மொழிந்தார்கள் .

"திறந்த அரங்கம்" என்கிற எனது கனவு திட்டத்தை முன்வைத்து ஒப்புதல் பெற்றிருந்தேன் . அது வேத விஞ்ஞான மரபு குறித்த ஆராய்வு எந்த நிபந்தனையும் இன்றி அறிஞர்கள் கூடி விவரிக்கும் மேடையாக அதை உருவாக்க நினைத்தேன் . மதம் உட்பட எதுவும்அதில் பங்கேற்பவருக்கு தடையாக இருக்காது என முடிவு செய்யப்பட்டது . அதற்கான அறிஞர்களை தேடி சுற்றிய போது கிடைத்த அனுபவத்தை பல முறை பதிவு செய்திருக்கிறேன் . “வேத விஞ்ஞானம்வழக்கொழிந்த மரபு அதை தொடர்புறுத்தும் எந்த தரவும் இல்லை . இருப்பதாக நம்பப்படும் சிலவற்றிக்கு எந்த தொகுப்பும் இல்லை . அல்லது அது இந்து மதத்தை தேவையற்று உயரத்தி பிடிக்க முயலும் அதீத கற்பனா வாதம் என்கிற முடிவிற்கு வந்த நின்றது .

இந்து மெய் ஞான மரபு இன்று இரண்டு வகைகளிலினால் நீர்த்துக் கொண்டிருக்கிறது . ஒன்று : முறையாக கற்பிக்கப் படாமை . இரண்டு : நவீன காலத்திற்கு உகந்த மாற்றும் செய்யும் அமைப்புகள் முற்றாக பொது சமூகத்தின் நம்கையை இழந்து போனது . இந்த சூழலில் பள்ளி மாணவர்களுக்கு ஆழ்மரபின் வேர்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பல்வேறு பாதைகளில் முயன்று தோற்றிருந்த சமயம் . அந்த சூழலில் எனக்கு வெண்முரசு மூலமாக ஜெயமோகன்  அறிமுகமானார்

முதற்கனல் வாசிப்பு முதற்கணத்திலேயே என்னை தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டது அதன் மணிப்பிரவாளம் போன்ற நடை . அவை உண்மையில் மலையாள சொல்லாட்சி முறை . என்றாலும் புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர் மரபை ஒட்டி புது முயற்சியை துவங்கியிருந்தது . அது எனக்கு என்னவோ சொல்ல வருகிறது என்பது புரிந்தது . வாசிக்கத் துவங்கிய பிறகு அது இன்று வழக்கொழிந்து கொண்டிருக்கும்  புராண மரபின் சிடுக்குகளை களைந்து , வேறொரு கோணத்தில் நம்பிக்கை கொள்ள வைக்கும் மீட்டுருவாக்க பாணி திகைக்கச் செய்வது . கையிலிருக்கும் சிலவற்றை விரித்தெடுக்கும் புனைவல்ல அது . இந்து ஞான மரபைப் பற்றிய நீண்ட ஆய்வுகளை மேற்கொண்ட ஒருவரின் கூற்று என்றே எனக்குப் பட்டது . அதன் ஆசிரியரை அவதானிக்க அவரது முக்கிய ஆக்கங்களை எடுத்து வாசிக்க துவங்கினேன் .

தொன்மங்களை தொன்மங்களாக விட்டுவைத்து அதன்மீது விமர்சன பார்வையை வைக்காமல் , அதிமானுட அனுபவம் போன்ற பலவற்றை வேறொரு கதாபாத்திரத்தின் கூற்றாக வைத்து , அதிசய நிகழ்வுகளை கனவுகளில் , உளம்பிறழும் மயக்கத்தின் குரலாக வைத்து , புராண யுகத் தோன்றல்களை, உயிரினம் உருவாவதை  நவீன இயற்பியல் மற்றும் வானவியல் கூற்றை அதனில் பொருத்தி பார்பதும் . மற்றும்  உளவியல் மையக்கருத்துகளை புராண கதாபாத்திரங்களின் மீது போட்டுப் பார்த்து அதன் விளைவுகளை யூகிக்கும் ஆழ்மன கணக்குகள் . பக்தியை புறந்தள்ளாமை , இந்து ஞான மரபின் மீது ஆசாத்திய நம்பிக்கை போன்ற தோற்றம் கொள்ளச் செய்வது.

ஒரு காலத்தில் ஒதுக்கித்தள்ளப்பட்ட  தர்கப்பூர்வமாக பௌத்த மதத்தினுடைய , புத்தி பூர்வமான தர்க்க கோட்பாடுகளை இன்றுள்ள நவீன விஞ்ஞான அறிவியல் கோட்பாடுகளுடன் முயங்கி அவை புராண மரபில் என்னவாக வெளிப்பட்டருக்கலாம் என்கிற புரிதலும் . இவை மொத்தத்தையும் வியாச பாரதத்தின் சொல்லப்படாத இடைவெளிகளை நிரப்ப பயண்படுத்திக் கொண்டதும் பிரமாதமான யுக்தியை பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...