https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 478. * புரிதலின் திகைப்பு *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 478

பதிவு : 478 / 664 / தேதி 27 அக்டோபர் 2019

* புரிதலின் திகைப்பு


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-13




வாழ்கை அறுசுவை உணவு, காலம் அதை வலிந்து ஊட்டிவிடுகிறது . எத்தனை வெறுத்தாலும் அனைத்து வித சுவையாலும் கலந்து உணரப்படும் போது , ஒருவனுக்கு  பசி அடங்கி விடுவது போல , வாழ்வின் அனைத்து ருசிகளையும் கலந்து கண்ட பிறகு அது நிறைவடைகின்றது . வாழ்கை முற்றான தோல்வி ஒரு சுவை , அது முடிந்து இனி ஆற்றுவதற்கு ஒன்றில்லா வெறுமை மட்டுமே மிஞ்சியிருப்பதாக உணர்தல் நல்லூழ் என நினைக்கிறேன் . எதுவும் எஞ்சாத தோல்வி அனைத்து கதவுகளையும் திறந்து வைப்பது . அதை ஊடுருவி பார்க்கும் பார்வையை மட்டும் வளர்த்தெடுத்துக் கொள்வதே அனைத்திலிருந்தும் மீள்வதற்கான வழி . அதுவரை கடந்து வந்த வாழ்கை பலவிதமான கருத்தியல்களினால் ஈடுகட்டி நிலைபெற செய்யப்பட்டது . மிச்சமுள்ள வாழ்கையில் அவற்றை திரட்டி அதிலிருந்து மெய்மையை அடைய முயல்வது ஒன்றே அதை கழித்துக் கடப்பது

அன்றாட வாழ்கையின் அனைத்துப் புள்ளிகளிலும், திசைகளிலும்  நிலைபெற்றிருக்கும் அர்த்தமற்ற அரசியல் யாரையும் உளமொடுங்கச் செய்வது . அதை ஆழுள்ளத்தில் நன்கு உணர்ந்திருந்தேன் என நினைக்கிறேன் . நான் பங்கு கொண்டிருந்த இயக்கங்களை சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த செயல்களால் நான் எனது ஈடுபாடுகளை குறைத்துக் கொண்டு எனது சிறு கூட்டில் மிக அமைதியாய் வாழ முயற்ச்சித்த சூழலில்வெண்முரசுஎன் வாசலை தட்டியது. அதன் கருத்தியல் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் , மேலும் அது எனது வாழ்வில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைக்கக்கூடும் என்கிற அச்சமிருந்தது. புதிது புதிதாக ஒன்றை தொடங்கி வாழ்க்கை  முழுவதையும் அர்த்தமுள்ளதாக ஆக்கும் வேலையை இனி செய்வதில்லை என முடிவெடுத்த தருணம் . கருத்தியலால் தாக்குறும் போது புதிதாக ஒன்னறை மீளவும் துவங்கும் உள நிலையில் இல்லை . ஆனால் என்னையும் கடந்து அதுவே நிகழ்ந்தது .

ஜெயமோகனின் கருத்தியலில் , விடுபட்டு வெளியேறிய வாழ்கையில் கடந்து வந்த எல்லா பக்கத்திலும் தூண்டப்பட்டும் செய்திகள் இருந்தனஅனைத்தின் மீதும் ஒரு மீள் பார்வை என்பது போல . எனக்குள் ஒருவர் இத்தகைய ஆதிக்கம் செலுத்த இயலும் என நான் அறிந்ததில்லை . ஒவ்வொரு கணமும் உளத்தாக்குதலுக்கு உள்ளாகும் போது ,என்னைப் பற்றியே நான் மீள் பார்வை கொள்ளவேண்டிய தேவை எழுந்ததும், அதை உருவாக்கும் ஒருவரை நான் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்வாசிப்பினூடாக எழுத்தாளர் ஜெயமோகனை அவதானிக்க வேண்டியிருந்தது

இதில் விந்தை என்னவெனில் , அடைந்த புரிதலுக்கு தரவுகளை அவரது ஆக்கங்களில் தேடி கண்டடைந்து கொண்டிருந்தேன் என்பதுதான் . “முதற்கனலின்முதல் பதிவே எனக்கு ஜெயமோகனைஇன்னார்என சொல்லிவிட்டது . எடுத்த முடிவிற்கு மேல் தரவுகளை கொண்டு கொட்டி அது  நிறுவியபடி இருப்பது எடுத்த முடிவில்  உறுதிப்பாடு வருவதற்கு . நான் செயல்படும் முறைஅது எனக்கு புதிதல்ல . வாழ்கை , மனிதர்களை எப்பவும் நம்பாதே என சொல்லிக் கொடுத்திருந்தது . அது அரசியலின்  அடிப்படை விதி . என் இயல்பிற்கு மாறாக என்னால் என்னை எங்கும் முன்னிறுத்த முடியாது . என்னால் நடிக்க இயலாது .

மனிதர்களை நம்பாது அவர்களுடன் நட்பு பாராட்டுவது ஒருவித நடிப்பு . அனுக்கர்களிடமிருந்து சதா ஒரு சிக்கலை , துரோகத்தை , கைவிடுதலின் முதல் கணத்தின் முனையை எப்போதும் வருடிக் கொண்டு எதிர் நோக்கி காத்திருப்பது . அதனூடாக வாழ்ந்து கொண்டிருப்பது , அது ஒருவித அரை வாழ்கை . அவர்கள் எங்கும் எதிலும் நிறைவுறுவதில்லை . அவர்கள் தனித்த பிறவிகள் . ஆனால் அவர்கள் அல்லாத பிற எவரும் ஆரசியலில்  நிலைகொள்ள இயலாது

ஆரசியல் எனக்கு மிக விருப்பம் உள்ள துறையாக இருந்தது . கற்பிக்கப்படுவதின் சுவை தனித்த ஒன்று . அதை வேறெங்கும் அடைய முடியாது . ஒருவேளை திரைப்படத்துறை இதைவிட அதிக கற்கும் இடமாக இருக்கலாம் என நினைக்கிறேன் . அரசியலை விட அழுக்காறு நிறைந்த இடம் . நான் அரசியலில் எனக்கென உருவாகி வந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள மற்றும் அங்கே நிலைகொள்ள விரும்பினேன் , அது என்னை வலிந்து வெளியேற்றும் வரை . அங்கு நான் எனக்கான நிலைகொள்ளச் செய்யும்  விதிமுறைகளையும்  ஆழுள்ளத்தை அமைதி கொள்ளச் செய்யும் கருத்தியல்களையும் உருவாக்கிக் கொண்டேன் .

மனிதர்களைப் பற்றி இறுதி முடிவிற்கு வருவதென்பது எப்போதும் இயலாதது. காரணம் அவர்கள் அதை ஒருநாளும் ஆற்றுவதில்லை . அது கால , சூழலை அதீனமாக கொண்டது . உள்ளத்தால் ஏற்கும் ஒருவரை என்னால் எக்காலத்தும் மறுக்க இயலாது . அனைத்திலும் இருக்கும் இருமை எவரிடமும் உள்ளதே . எல்லாவற்றிற்குமான் காரணத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பது ஒன்றே அதிலிருந்து வெளியேறும் வழி . அது ஒருகட்டத்தில் என்னை யாரிடமும் கசப்பை உருவாக்கி கொள்ளாது பழகும் மனதிற்கு கொண்டு சேர்த்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்