https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 4 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 469 * காலத்தில் திறவா திறப்புகள் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 469

பதிவு : 469 / 654 / தேதி 04 அக்டோபர் 2019

* காலத்தில் திறவா திறப்புகள் 


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-04

2001 ல் அரசியலிலிருந்து வெளியேறிய போது இனி திரும்புவதில்லை என்கிற உறுதிபாடுடன் விலகினேன் . அதன் கதவுகளை திறந்து கொண்டு மிக இயல்பாக , வெளியேறிய வருத்தமோ , அதற்கான  சூழலை உருவாக்கியவர்களின் மீது கோபமோ இன்றி நீரிலிருந்து நீர் பிரிவதை போல எந்த தடயத்தையும் விடாது விலகி வெளியேறினேன். எனது ஆழுள்ளம் பற்றி இன்று இருக்கும் புரிதல்கள் ஏதும் அன்றெனக்கு இல்லை . ஆனால் நான் ஆழ்மனத்தால் செலுத்தபட்டே வெளியேறியிருக்கிறேன்  என்பது    எண்ணிலடங்காத எதிர்காலக் கணக்குகள் , அவற்றில் நிகழக்கூடியசாத்தியக்கூறுகள் என்பதை இப்போது மிக தீர்க்கமாக உணர்கிறேன்அரசியலின் அமைப்பு  கட்டுமானத்தின் அஸ்திவாரம் சரிந்து வருவது  பற்றி எங்கோ உணர்ந்திருந்தாலும் . எதுப்பற்றியும் தனித்த புரிதலின்றி அவை ஒற்றை தொகுப்பாய் இழைகளை பிறிக்க இயலாது என் மனத்தில் கிடந்தது . அது என் நல்லூழ் என்பதை தவிர பிற சொற்கலால் அவற்றை விளக்கிட இயலாது. இன்றுவரையும் அது எனது ஆகச்சிறந்த முடிவென்றே கருதுகிறேன். ஆழுள்ளத்தின் அந்த முரணியகத்தின் தொகுப்பின் நுணி உள்ளத்தில் அமைந்துள்ளது என நினைக்கிறேன் . அவற்றை பிறித்து அறிந்து கொள்ள ஆகப்பெரிதான நல்லூழ் வேண்டும் போல.

அரசியலில் ஆற்ற வேண்டிய இலக்குகள் குறித்த தெளிவான கருத்தியலே பிறருக்கு மத்தியில் தலைமையாக கொண்டு ஒருவரை இருத்துகிறது . அரசியலில் காற்று நல்லதும் அல்லாததுமாக இரண்டு திசைகளிலும் எப்போதும் வீசி ஊடுபாவிக் கொண்டிருப்பது . சாதக பாதகங்களின் அடர்த்தியையும் விளைவுகளையும் நிமிடத்திறகொருமுறை அதன் வண்ணங்களை கூட்டி குறைப்பது . நிலையில்லாதது . எவ்வளவு காலம் அது நீடித்திருக்கும் என எந்த பண்டிதனாலும்  சொல்லிட இயலாது . வாய்ப்பு கிடைக்கும் போது இலக்கை நோக்கிய நகர்வை துவங்குவது எப்போதும் எளிதென இருப்பதில்லை . ஆனால் அதை கடந்தே எவரும் சாதிக்கின்றனர் . தலைவர் சண்முகத்திடம் பார்த்தது சாதகமான சூழலில் வெளிப்படும் பாய்ச்சல் பிரமிக்க வைப்பது. சாதகமற்றபோது காலம் தன்னை எங்கு நிறுத்திகிறதோ , அங்கே தன்னை அமைத்துக்கொள்ள அவர் தயங்கியதல்லை . அமைத்துக் கொண்ட இடத்தில் நிறைந்து வாழத் துவங்கி விடுவார்அந்த மனம் ஆழுள்ளத்தின்  வழிகாட்டலை அடிப்படையாக கொண்டதாக நான் இப்போது உணர்கிறேன்.

மனம் ஆற்பரிப்பது , நிலை கொள்ளாதது . தனக்கான இடமே இல்லாத பல்லாயிரக்கணக்கான சாமாண்ய மனிதர்கள் , அரசியலில் குழைவதையும் , குமுறுவதையும் ஆதாரவில் ஓங்கி நிற்பதும் . நல்ல சூழலில் நம்பிக்கையிழந்து கைவிடுவதுமாக அவர்களை பார்த்திருக்கிறேன் . தலைமை பண்பென்பது இத்தகைய அலைக்கழிப்பில் சிக்காமல்  எண்ணிய இலக்கை நோக்கிய பயணத்தில் சற்றும் தளராத மன உறுதி . அதை ஆழ்மனத்துடன் தர்கித்தே ஒருவர் அதிலிருந்து வெளிவர இயலும் . தன்னை சுற்றி நிலவும் சூழலை ஒட்டி சாதக பாதகங்களை அளவிடும் மனம் எப்போதும் கடல் அலையென  சர்வகாலமும்   சலித்துக்கொண்டிருப்பது . இரு புறமும் அலையாக எழுந்து கொண்ட கருத்திலை இரு பக்கமும் கரைத்துக் கொடுப்பது , எஞ்சுவதை முடிவென இருத்துவது . சதா ஆர்பரிக்கும் அந்த ஆலைகளுக்கு அடியில் உறைவது ஆழ்மனம் . அது உலகியல் கருத்தின் எந்த சரடையும் தன்னில் கொள்ளாதது . தனித்தது . உன்னின் இயல்பை சொல்லுவது . ஒருவரின் இயல்பாகவே இருப்பது . அதை சாராத எடுக்கப்படும் எந்த முடிவும் விரைவில் அயற்ச்சியை கொடுப்பது . ஒரு கட்டத்தில் எடுத்த முடிவிற்கு எதிர்திசையில் பயணிக்க வைப்பது . தற்கொலைக்கு சமமான இழிவை சம்பாதித்து கொடுப்பது 

மிகுந்து ஈடுபாடுள்ள ஒரு துறையில் இருந்து காலத்தினால் வெளியேற்றப்படுவது  அவ்வளவு எளிதாக யாருக்கும் நிகழ்ந்து விடுவதில்லை. இத்துறை என்னை மட்டுமல்ல என்னைவிட செல்வாக்குள்ள பலரை வெளியேற்றி இருக்கிறது . அவர்கள் இரண்டு வகை . தன்னைப்பற்றிய மிகை மதிப்பு கொண்டு ஆணவத்தால் உந்தப்பட்டு எடுத்த நிலைப்பாட்டால் வெளியேற்றப்பட்டு பின்னர் அதற்காக காலமெல்லாம் வருத்துபவர்கள் . தன்னை எப்போதும் நொந்து கொள்பவர்கள் . பிறர் மீது எப்போதும் கசப்பை கொட்டுபவர்கள் . இரண்டாம் வகை நிலைமையை உணராது வெளியேறி பின்னர் தனது அவசரப்புத்தியை நொந்துக் கொள்பவர்கள் .

என் நல்லூழ் நான் இந்த இரண்டு வகைமைக்குள்ளும் பொருந்தி வருபவனல்ல. புதுவை முதல்வராக சண்முகம் பதவியேற்றிருந்து சமயம் அது . அவரிடத்தில் எனக்கான இடத்தை அடைவதைப் பற்றி பிறிதெவரும் கனவிலும் நினையாதது. அந்த சூழலில் நான் வெளியேறியது ஒரு நகைமுரண் . அந்த முடிவை நான் எட்டிய போது எனது அரசியல் மற்றும் அனுக்க நண்பர்கள் திகைத்திருந்தனர். அந்த முடிவு குறித்து இன்றும் என்னை விமர்சிக்கும் நண்பர்களுக்கு அளவில்லை . ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து எனது முடிவு ஆகச்சிறந்தது ஒன்றென நான் நினைப்பதற்கு காரணம் அது எனது ஆழுள்ளத்தின் தெளிவான வழிகாட்டல் என்பதை இன்று உணர்கிறேன்.

2001 முதல் மொது உலகில் இருந்து என்னை முற்றாக விளக்கிகொண்டு ஒரு தனித் தீவாக என்னை மாற்றிக் கொண்டு எனது தொழிலில் ஈடுபட்ட சூழலில் உலகம் என்னைவிட்டு விலகி நின்று போனது . அதில் நிகழ்ந்த எதுவும் என்னை வந்தடையாத நிலையில் 2014 ல் நான் வெளிவந்த போது என்னை திரும்பவும் நடைமுறை உலகில் கொண்டு வந்து இருத்தியது நான் ஜெயமோகன் ஆக்கங்களை வாசிக்கத் துவங்கிய பிறகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக