https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 470 * மரபின் இலக்கணம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 470

பதிவு : 470 / 655 / தேதி 06 அக்டோபர் 2019

* மரபின் இலக்கணம்


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-05







ஜெயமோகன் தளத்தில் உள்ள கேள்வி பதில் பகுதிகள் நீண்ட நெடும் நாட்களாக இயங்கி கொண்டிருக்கும் அறுபடாத அறிவியகத்தின் காலச்சுவடு போல . அதில் விவாதிக்கப்படாத தலைப்புகளில்லை . அவை என்னை பொது வெளியில் இயங்கிக் கொண்டிருந்த அறிவியகத்தின் மத்தியில் கொண்டு இருந்தின . அனைத்து பொது நிகழ்விலிருந்தும் துண்டித்துக் கொண்டு பிறதுறைகளில் இருந்து கொண்டிருந்ததால் ஏற்பட்ட பத்து வருட இடைவெளியை அவை கலைந்து கொடுத்தது . குறுகிய கால வாசிப்பு என்னை இன்றைய நடைமுறை மேம்படுத்தி இயல்பான உலகிற்கு  அறிமுகப் படுத்தி வைத்தது ஆச்சர்யமளிக்கும் ஒன்று .

ஜெயமோகனைப் பற்றி சிறு துணுக்கு செய்தி இந்தியா டுடேவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்திருந்தாலும் 2014 ல்  எனக்கு வெண்முரசு அறிமுகமாகும் போது அதன் நான்காவது நூல் நீலம் ஏறக்குறைய முடிவுறும் தருணத்தில் இருந்தது . “வெண்முரசு , இன்றைய காந்தி ,அறம், விஷ்ணுபுரத்தைஇரண்டு மாத காலத்தில் வாசித்து முடித்தேன் . ஜெயமோகனின்கேள்வி பதில்பகுதிகளில் ஏறத்தாழ எண்பது சதவிகிதம் படித்து முடிக்க எனக்கு மூன்று மாதம் பிடித்தது , பின்னர் தினசரி வெண்முரசு பதிவுகளை வாசித்து முடிக்கும் பழக்கத்திற்கு வந்த பிறகு எனது ஆழ்மன உந்தலால் ஜெயமோகனை கோயம்புத்தூரில் கீதையுரையின் போது சந்திக்க விரும்பினேன் .

அவரைப்பற்றி அவரது எழுத்தின் வழியாக எனக்குள் ஒரு சித்திரம்  உருவாகி இருந்தது . அனுமானம் நிஜத்திடன் ஒத்துப் போவதில்லை என்கிற கோட்பாடு அறிந்திருந்தேன் . இருந்தும் என் தேடலின் கதவு எனது தேவையை நோக்கி திறக்கலாம் என்கிற உறுதியான எண்ணத்தை அடைந்திருந்த சூழலில், அவரது தளத்தில்கீதை உரைபற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்தது . எனக்கு அது ஆச்சரியமளிக்கவில்லை என் வாழ்நாள் முழுவதும் ஒரு விஷயத்தை பற்றி நான் ஆராயவிரும்பாதது . ஒரு தகவலை அறிந்து கொள்ள விழைந்து எனது பாதையை தேர்ந்தெடுத் பிறகு அதைப்பற்றிய தகவல்கள் திடீரென என்னை சுற்றி நிரம்பத்துவங்கும் . அதை ஒரு நிமித்தமாகவே ஏற்றிக் கொள்வேன் . ஏன் , எப்படி என அதை ஆராயகிளம்புவதில்லை.

கீதை உரை பற்றிய அறிவிப்பாக அன்றி பிறிதொன்றாக அது வெளியாகி இருந்தால் கோயம்புத்தூருக்கு நிச்சயம் பயணப்பட்டிருக்க மாட்டேன் . காலம் எனக்காக வைத்த தூண்டில் அது , என நன்றாகவே உணர்ந்திருந்தேன். எனக்கு மரபை அறிமுகம் செய்த வைத்த எனது தந்தை ஒரு சம்ரதாய கருத்தை சொல்பவரை வரையரை செய்ய கீதையைத்தான் அளவுகோளாக கொள்வார் . கீதா ஸ்லோகார்தம் குறித்த அவர்களது நிர்வாகம் என்ன என்பதே அவரை தொடர்வதா? இல்லையா ? என முடிவு செய்ய உகந்தது காரணி என்பார் . அவர் மறுதலித்த பௌராணிகர்கள் நிரை மிகப் பெரியது , சங்கரரை அவரது கீதா பாஷ்யத்திற்காகவே விலக்கினார் . இஸ்கானின் பிரபுபாதா , கோரக்பூர் பதிப்பைப்பற்றி கேட்கவே வேண்டாம் .

அவர் புறந்தள்ளிய காரணத்தை தர்க நீதியாக அவர் சொன்ன விளக்கங்களை கேட்டு வளர்ந்ததால் அவரின் நிழல் என்னை எப்போதும் வழிநடத்துவாதாக நினைப்பவன் . எனவே ஜெயமோகன் கீதை உரை பற்றிய அறிவிப்பு வெளியிட்ட பிறகு கோயம்புத்தூருக்கு சென்றே தீருவதாக முடிவெடுத்தப் பிறகும் பெரும் தயக்கமிருந்தது , அதை விலக்கி கோயம்புத்தூர்  செல்ல முடிவெடுத்த காரணம் தனது  உரைப்பற்றிய அவர் வெளியிட்ட அறிவிப்புதனது கீதை உரையில் தான் சொல்ல விழைவதும் , விழையாததும் பற்றியது .

கீதா ஸ்லோகார்த்தம் என்றிருந்தால் நிச்சயமாக சென்றிருக்க மாட்டேன் . ஆனால் அதைப் பற்றிய அறிவிப்பு மிகத் தெளிவாக இருந்தது . எதெது பேசப்படும் , எதெது படாது என்கிற தெளிவு . என்னை இரண்டாக பிளவுறச் செய்தது . அந்த செய்தி எனது தேடலின் முனையை தொட வைக்கும் என்கிற நம்பிக்கையும் அச்சத்தையும் ஒரே சமயத்தில் தோற்றுவித்தது.

அதிதீவிர மற்றும் நவீன சிந்தனை முறையைக் கொண்ட ஒருவர் தன்னுடைய சாமர்த்தியத்தால் எனது நம்பிக்கைகளை களைத்துப் போடக்கூடியவராக மற்றுமன்றி ,அதற்கான மாற்றுத் தீர்வு கொடுக்கவும்  வல்லவராகவும் இருக்க வேண்டும் . மேலும் அதை நான் மறு சொல்லில்லாது ஏற்கவும் வேண்டும் என்கிற மூன்று நிலைகளில் கீழுள்ள இரண்டில் ஒன்று  நிகழாது போனாலும் , அது காசு கொடுத்து சூன்யம் வைத்துக்கொள்வதற்கு சமம்

சரியோ தவறோ இதுநாள்வரை கொண்டிருந்த நம்பிக்கை என்னை வழிநடத்திக் கொண்டுவந்து சேர்த்துள்ளது  . அது கொடுத்த வாழ்வில் எனது வாழ்க்கை பெரும் வெற்றிகளயும் , மீள இயலாத முழுத்தோல்வியை அடைந்திருக்கிறேன் . அவற்றின்  மத்தியில் இருந்து கொண்டு நான் சந்தித்த அனைத்து சிக்களிலிருந்து வெளியேற , நான் பற்றி நின்றது சம்பிரதாயக் கருத்தை கொண்டே . அதைக்கொண்டே அவற்றிலிருந்து மீண்டு வெளிவந்திருக்கிறேன் . நிகழ்ந்து முடிந்த அனைத்தையும் கடந்து இன்று நிறைவுற்று மகிழ்ந்திருக்கிறேன் . இது ஆழ்ந்து பரந்து வேரோடியது . கண்களுக்கு புலப்படாத அதன் உச்சியை யூகிக்க எனக்கு நவீன மனம் வேண்டும் என விழைகிறேன் . அறுபடாத தொன்மம் இன்று என்னவாக பொருள் கொள்கிறது என அறிய விழைகிறேன் . அதற்கான குருவை தேடுகிறேன் . அவர் மரபின் மீது நம்பிக்கையும் மதிப்பும் கொண்டவராக நவீன சிந்தனையை அதில் போட்டுப்பார்க்கக் கூடியவராக இருப்பின் . அதை வழியாக கொண்டு  என்னால்  இதிலேயே நிறைந்து வாழ்ந்து முடிக்கவும்  நினைக்கிறேன் . கொண்ட கருத்தியலை பற்றிய மறுபரிசீலனை எனக்கு அவசியமற்றது . எனது சம்பிரதாயம் என் பிறப்பின் கொடை . என் தாய் தந்தையரை நான் முடிவு செய்யவில்லை . அது போன்றே எனது மரபும் சம்பிரதாயமும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்