https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 1 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 466 * திறப்புக்களினாலான வெளி *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 466

பதிவு : 466 / 651 / தேதி 01 அக்டோபர் 2019

* திறப்புக்களினாலான வெளி * 


ஆழுள்ளம் ” -01
படிமம்-01




நான் எனது வலைத்தளதில் முழ ஊக்கத்துடன் எழுதுவதற்கான விசையைஇன்றைய காந்தியிலிருந்துபெற்றுக்கொண்டேன் . அதில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்விலும் என்னை பொறுத்திக்கொள்ள முடிவதால் , அதன் அத்தனை அலகுகளையும் முன்பின் , வலம் இடம் என என்னால் மிக அனுகி உணர முடிந்தது . அதில் பங்கு கொண்ட ஒவ்வொருவரின் உளநிலை , கோணம் அன்று எடுக்கப்பட்ட முடிவு அவை காலத்தினால் இந்திய தேசத்திறகு என்னவாக விளைந்தது என்கிற கணக்குகளுடன் ஒரு மௌன சாட்சியாக அது நிகழ்கின்ற காலத்தில் இருந்து கொண்டு  அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்வது அற்புத தருணம் . இன்றைய காந்தியில் ஜெயமோகன் விவரித்துச் கொண்டு சென்றது எனது உள்ளத்தில் அப்படிப்பட்ட பதிவாகத்தான் நிலை கொண்டது .

அன்று நிகழ்ந்ததை அருகில் இருந்து பார்ப்பதாக உணர்வது மிரளவைக்கும் தருணம் . இதில் வேடிக்கை என்னவென்றால் . அந்த ஆளுமைகளின் மனம் மற்றும் இந்திய வரலாற்றில் அவர்களுக்காக உருவாகி வர இருக்கும் இடம் போன்றவை இன்னும் யூகித்து முடியாத ஒரு காலக்கட்டம் அது . அதில் தொகுக்கப்பட்ட பல்வேறு  செயல்பாட்டின் வழியாக அவர்கள் பின்னாளில் போற்றவும், தூற்றவும் பட்டார்கள். பலர் காணாமலானார்கள் , சிலர் கசந்து ஒதுங்கினர், சிலர் எதிரகாலத்தை கணிக்கக் தவிறி அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்தார்கள் . சிலர் நிதானமாக காலத்தின் படிகளில் ஏறி உச்சத்தை சென்றடைந்தார்கள். இதில் இயற்கையின் வினோதம் என்னவெனில்  வென்றவர் , தோற்றவர் அனைவரும் வெறுமையை சென்றடைந்தார்கள் என்பது  . காலம் சற்றும் இரக்கமற்று அவர்களின் நிஜத்தை மறைத்துக் கொண்டது . பின்னாளில் வந்தவர்கள் அவர்களை மெள்ள மறந்து போனார்கள் . அதனால் அவர்களில் இருந்து விசையுடன் புதியவர்கள் அந்த இடத்திற்கு உருவாகிவந்தார்கள் . அது ஒரு முடிவிலி .

ஒரு கதை சொல்லியாக அவர்களின் மத்தியில் இருப்பது அப்புத்தகத்தின் ஆசியரான ஜெயமோகன் மட்டுமே . அது ஒரு ஓரங்க நாடக கதாபாத்திரத்தை நினைவுறுத்துகிறது . அவர் ஒவ்வொருவராக நடித்துப் பார்பதன் வழியாக அவர்களின் ஆழுள்ளத்தில் பிரவேசிக்கிறார் மற்றும், பின் மெள்ள  வாசகர்களை அங்கு அழைத்தும் செல்கிறார்  , அங்கிருந்து கொண்டு அந்த நிகழ்வின் சூழலை வெளிப்படுத்துவது , சிறந்த புனைவு யுக்தி . வரலாற்றை இதைவிட அனுகி விளக்க இயலாது என நினைக்கிறேன் . காகித தரவுகள் ஒரு கட்டத்திற்கு மேல்  உதவாது . அவை வேறொருவரின் பார்வை மட்டுமே . ஆனால் இன்றைய காந்தி அவற்றை பொருட்படுத்தாது ஆழுள்ளதை திறக்க முயல்கிறது .

ஆனால் அவற்றை வெறும் புனைவு என்று சொல்லிவிட இயலாது , ஆதாரங்களுடன் அவற்றை இணைத்துக்கொள்ள கொண்டு அதுவாக விரிவது இன்னும் கடினமானது . ஆழ்மனம் முழு விழிப்பு நிலையில் உள்ள ஒரு அரசியலாளனின் மட்டுமே அங்கு அவ்வாறு நின்று நிதானித்து அவற்றின் விளைவுகள் குறித்து யோசிக்க இயலும் . அது போன்ற யுக்தியை அவர்      “ விஷ்ணு புரநாவலில் கையாண்டிருப்பார் . கலத்தை முன்பின்னாக மாற்றி போடுவதன் ஊடாக ஒரு கனவு நிலையை அங்கு உருவாகிட இயலுகிறது . காரணம் கனவால்  மட்டுமே ஆழுள்ளத்தில் நுழைய முடியும் .

எனது ஆழுள்ளத்துடன் இன்றைய காந்தி வாசிப்பினூடாக உரையாடியதால் மட்டுமே என்னால் அந்த கனவுலகை நோக்கிய கதவை திறக்க முடிந்தது . நான் அப்படிபட்ட நிலைகுலவை , நெகிழ்வை அடைய முடிந்ததற்கு, அந்த நோக்கு பெற்றது காரணமாக இருக்கலாம் . ஒரு காட்சியில் நகர்த்தப்படும் அரசியல் சதுரங்கக் காய்களின் பல நூறு அலகுகளை சொல்லியும் , புரிதலுக்கு விட்டும் அதன்  நிலையழிதல் துல்லியமாக புரியவைக்க  காட்சியூடகத்தில் மட்டுமே வெளிப்படுத்த சாத்தியமானது . அதை எழுத்தில் கொண்டுவருவது ஒரு ஆகப்பெரும் எழுந்துக்கலை என்றே நினைக்கிறேன்

கடந்த சென்ற எனது முப்பத்தைந்து வருட அரசியல் அனுபவத்தை மீளவும் அருகிலென பார்க்க வைப்பது என்னை கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்வது .ஆனால் நான் இன்று இதை வேறொரு கோணத்தில் பார்க்க விழைந்தேன் . அது என்னை பித்து கொள்ள வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது . இன்றைய காந்தியில் சொல்லப்பட்ட நிகழ்வுகளை பிரதிபலிக்கும் பதிலிகளை புதுவை மற்றும் அகில இந்திய அரசியலின் போக்கில் அனுபவப்பட்டிருக்கிறேன். அன்று ஒரு பார்வையாளனாக . சில சமயம் அதில் பங்கு பெருபவனாக , சில சமயங்களில் அது உருவாக்குபவனாக இருந்து  இருந்திருகிறேன்

இன்றைய காந்தியில் சொல்லப்படும் தேசிய அரசியலின் முழு அடர்த்தி நான் சந்தித்த அரசியலில் இல்லாது போனாலும் , அதுவும் அவற்றின் சிறு துளியே . அதில் உள்ள அனைத்தும் இதிலும் உண்டு . அது திறக்கும் கதவுகளை என்னை இன்றைய கந்தியில் சொல்லப்பட்டவைகளை காட்சி வடிவத்தில் பார்க்க வைத்தது என நினைக்கிறேன்.

நுண் அரசியல் கருத்தியலின் கருப் பொருளையும், கலைச்சொற்களையும் வெண்முரசு மற்றும் அறம் போன்ற  ஆக்கத்தை ஏக காலத்தில் வாசிப்பதின் வழியாக அடைந்தேன் . மேலும் ஜெயமோகனின் கேள்வி பதில் பகுதிகள் நீண்ட நெடும் நாட்களாக இயங்கி கொண்டிருக்கும் அறுபடாத காலச்சுவடு. அதில் விவாதிக்கப்படாத தலைப்புகளில்லை . அவை என்னை பொது வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் அறிவியகத்தின் மத்தியில் கொண்டு இருந்தின . பிறதுறைகளில் இருந்து கொண்டிருந்ததால் ஏற்பட்ட இடைவெளிகளை அவை கலைந்து கொடுத்தது . ஒரு குறுகிய காலம் என்னை இன்றைய நடைமுறை உலகத்திற்கு அறிமுகப் படுத்தி வைத்தது ஆச்சர்யமளிக்கும் ஒன்று .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...