https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

அடையாளமாதல் - 465 * கலைத்துப் போடும் புதிய புரிதல்கள்

ஶ்ரீ:


அடையாளமாதல் - 465

பதிவு : 465 / 650 / தேதி 29 செப்டம்பர் 2019

* கலைத்துப் போடும் புதிய புரிதல்கள்  * 


எழுச்சியின் விலை ” - 67
முரண்களின் தொகை -03 .





ஜெயமோகனின்இன்றைய காந்திவாசிப்பு , காந்தியை பற்றிய கருத்தை முற்றாக மாற்றி அமைத்தது . காந்தி, நேரு மற்றும் அப்பேத்காரை மிக நுட்பமாக அனுகிய ஆக்கம் . அதில் சொல்லி இருப்பது போல அது வகுக்கும் பாதையில் இருந்து சற்று விலகினால் கூட மலை மலையாக கொட்டிக்கிடக்கும் தகவல்களின் வெளி ஒன்றில் இட்டு விடும் அங்கிருந்து கொண்டு எந்த முடிவையும் எட்டாது தொலைந்து போகவே வாய்ப்பு . இன்றைய காந்தி ஒரு கூரிய தலைமை பண்பும் அரசுசூழ்தல் ஞானமும் உள்ள அரசியளாலனின் கூற்று . அதை பொதுவில் வைக்க பெரும் சாமர்த்தியம் தேவையாகிறது . இன்றைய காந்தியில் ஜெயமோகன் அதை சிறப்புற செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்

அதில் சொல்லப்படும் கருத்தியல் மற்றும் அரசியல் நுண் கூறு வாசிப்போரை அக்காலத்தின் அருகில்  கொண்டு இருத்துவது, அரசியல் நிகழ்கிற களமும் அதில் உள்ள மானுட மனம் பற்றி அறியாதவரைஅதில் சொல்லப்படுகிற நுண்தகவலகள் புரிதலுக்கு அறியது . முழுக்க முழுக்க உளவியலால் அது பகுக்க பட்டிருக்கிறது . அதை எழுத்தில் கொண்டுவர  ஒருவித கூட்டுநனவிலி கோட்பாட்டை புரிந்து கொண்டால் அவற்றை புரிந்து கொள்ள இயலும் என நினைக்கிறேன். எழுத்து முறை ஒன்றைத் தொட்டு பிறிதொன்றுக்குத் தாவி அந்த காலத்திற்குள்ளேயே நுழைந்து விட்டது போன்ற ஒரு நிலையை எழுப்பிக்கொண்டு, அங்கிருந்து கொண்டு இங்கு நோக்கிய கதவை திறந்து வைத்து பேசினால் மட்டுமே இக் கட்டுரை எழுதுவது சாத்தியமாவது.

கடந்து சென்ற காலத்தை படிக்கும் தோரும் அதில் பங்கு கெண்ட அத்தனை ஆளுமையின் மனப்போக்கை அறிந்து  அது அந்த சமயத்தில் எப்படி ஒவ்வொரு தனி ஆளுமையும் தன்மையையும் அவர்கள் எப்படிபட்ட எதிர்வினை ஆற்றி இருப்பார்கள்  என்கிற புரிதல் , நிகழ்ந்ததை கணக்கிட்டு உணர்ந்து கொள்வது , என்பது ஒரு ஆகச் சிறந்த புனைவாளனுக்கே உரியது . அதில் தன்கருத்தை தனியே வைக்கவும் தெரிந்திருக்க வேண்டும் . அந்த கட்டுரைகள் அந்த முறைமைகளை சரியாக கையாண்டுள்ளது என்றே நினைக்கிறேன்.

இன்றைய காந்தி வாசிப்பு எனக்குள் ஒரு விசையை சொடுக்கி இருக்க வேண்டும் . அது கால மடிப்பை உதறி ஒற்றை பரப்பாக காட்டியது என்றே நினைக்கிறேன் . ஒரு நிகழ்வின் புள்ளியில் இருந்து முன் பின் என்கிற காலத்தினுள் சென்று அமர்ந்திருக்கும் ஆளுமைகள் அதில் எப்படி தங்களுள் வினையாற்றுகிறார்கள்  என்பதும் தலைமையை எந்த திக்கிற்கு செலுத்த விழைகிறது , தலைமை என்ன செய்கிறது அதற்கு அந்த கணத்தில் உள்ள வாழ்பபுகள். அதை இயற்றுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளுகளை யாருக்கும் விளக்கிட முடியாது என்கிற ஆழுள்ள, பல வண்ண நீரோட்டங்களை கொண்ட காட்சியாகவே அவை எனக்குள் வரிந்து நின்றன

புதுவை நடைமுறை அரசியலிலிருந்து வெகுதூரம் கடந்து வந்த பின்னரும் , அதன் செயல்படு கூரை நான் இழக்கவில்லை என்பது இன்றைய காந்தியில் கொட்டிக் கிடந்த அரசியல் நுண்தகவல்கள் என்னுள் புதிய தீண்டலை உருவாக்கியதிலிரிந்து புரிந்து கொள்ள முடிகிறது. அவை பத்தி பத்தியாய் விரிந்து அன்றைய உள்அரசியலில் நுட்பத்தையும்  அனுபவத்தையும் சொல்லிச் சென்றது . ஆர்வமும் உள்ள எவரையும் அவை உசுப்புபவை . ஜெயமோகனின் இன்றைய காந்தி ஒரு தேர்ந்த அரசியளாலனின் பார்வை , அது ஒருபோதும் சாமான்ய பார்வையாளர்களின் கருத்திற்கு ஒத்துப் போகாது . ஒரு பொது பார்வையளனுக்கு முன்பாக அதை வைக்க அசாத்திய துணிவு வேண்டும் என்றே நினைக்கிறேன் . அது சர்ச்சைகளுக்கு அஞ்சதவர்களின் போக்கு.

கடந்த காலத்தில் சென்று தன்னை பொறுத்திக் கொள்வதின் வழியாக அங்கு அன்று என்ன நிகழ்ந்திருக்க கூடும் என வினவுகிற போக்கே ஓரு ஆராய்ச்சி மனமுள்ள புனைவாளரின் மனம் . உளவியலும் அன்று வாழ்ந்து மறைந்து போனவர்களின் திறந்து கிடக்கிற அவர்களின் வாழ்கை பாதையும் ஒரு தடயம் போல ஒவ்வொரு அரசியல் நிகழவும் அது நிகழ்ந்தவிதத்தை  சொல்ல வல்லது . மனச்சாய்வு உள்ளவர்களுக்கு வேண்டுமானால் அவர்கள் அணிந்து பார்க்கும் கண்ணாடியின் வண்ணம் தெரிவது தவிர்க்க இயலாது . ஆனால் வரலாற்றை திரிக்க நினைப்பவர்களை உலகம் மண்ணிப்பதில்லை

காலம் நீண்ட நெடிய பாதை ஒரு முடிவிலி , அதில் நேற்று தோன்றி இன்றிருந்து நாளை மறையும் எவரும் அதனுள்றை நெறியை அறிந்து கொள்ளவோ மாற்றி விடவோ இயலாது . காலம் தன்னில் நிகழ்ந்த புள்ளி சரியாக கணிக்கப்பட்டிருந்தால் அதை தன்னுள் பொதிந்து கொள்கிறது .

எனது வலைதளத்தில் இடம்பெறும் அத்தனை அரசியல் நிகழ்வுகளும் எனது ஈடுபாட்டை பற்றிச் சொல்லவந்ததல்ல . அவற்றை நினைவில் இருந்து மீட்பதின் வழியாக என் தேடலுக்குகான பாதையை கண்டடைய முயல்கிறேன் . இன்றைய காந்தியில் சொல்லப்பட்டிருந்த அதன் பல திருப்பங்களில் நான் உடைத்து வைத்து பொருட்களை சென்று பொருந்த தேவையுள்ள  வெற்றிடங்களை என் கடந்து சென்ற அரசியல் வாழ்வில் காணுகிறேன் . அவை எனக்கு வாழ்வின் புதிய அர்த்தங்களை கொடுப்பதாக இருந்தது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்