https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

அடையாளமாதல் - 459 *நுகர்பொருள் உலகம் *


ஶ்ரீ:


அடையாளமாதல் - 459

பதிவு : 459 / 640 / தேதி 03 செப்டம்பர் 2019

*நுகர்பொருள் உலகம்  * 


எழுச்சியின் விலை ” - 60
முரண்களின் தொகை -03 .






இந்து ஞான மரபு பிற மதங்களுடன் உரையாடி தன்னை ஒரு தொகுப்பு மதமாக உருவாக்கிக் கொண்டது  என்கிறார்கள் , அது உண்மை என்றே நினைக்கிறேன்  இன்று அதனுள் பழங்குடி மரபு முதல் நாட்டார் தெய்வங்கள் வரை பல வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிக் கொண்டது .இந்த நெகிழ்வுத்தன்மையே அதன் பலம் . ஆன்மீக வழிபாடு, ஒருவரின் முறையான வாழ்கை முறையை உருவாக்கிக் கொள்ளும்  அகவயமான உந்து சக்தியை அளிக்கிறது.    இந்திய போன்ற பரந்த தேசம் பலவித மத , இன , கலாச்சார பண்பாட்டுகளால் உள்ளடக்கியது அது தன்னை அரசியல் சட்டத்தினாலும் , காவல் நிலையம்  குறித்த அச்சத்தினாலும் பாதுகாத்துக் கொள்வதில்லை .எஞ்சி நிற்கும் தனி மனிதனின் தன்னறம் மற்றும் குடும்பஅறம் என்கிற தத்துவத்தினால் நிலைத்து நிற்கிறது. அவர்களுக்கு யாரும் தர்ம சாஸ்திர வகுப்பெடுப்பதில்லை .அது தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு அவர்களை இங்கு கொண்டுவந்து சேர்ந்திருக்கிறது .

கைமாறி வந்து சேர்ந்த அந்த மரபுகளுக்கு இன்றைய சூழலில் அதன் இடம் என்ன என்பது தான் கேள்வி .மரபை ஆன்மீக அமைப்புகள் முன்னெடுக்க இயலாத நிலையில் என்ன நிகழக்கூடும் . மக்களின் போக்கை நிர்ணயத்து அவர்களுக்கான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு முற்றும் இல்லாத சூழலில் அனைத்தும் ஒற்றைப்படையாக மாறிவிடும் என சொல்வதற்கில்லை . இன்று பொருளாதார தேவையை நோக்கிய பாய்ச்சல் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் ஆன்மீக விழுமியங்களுக்கு எந்த பொருளும் கொள்ள இயலாத , அதே சமயம் அதில் பொருளியல் தன்நிறைவு அடைந்தவர்கள் திரும்பி வரும் நிலை எழுந்தால் அன்று இது என்னவாக இருக்கக் கூடும் .

மக்கள் சமூகம் வேகமான பொருளாதார விரிவால் நுகர் வணிக சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் . அதன் மறு எல்லையாக திருமணம் இருக்கிறது . திருமண முடிவுகளில்  ஆண்களின் உலகம் சுருங்கி பெண்களின் ஆதிக்கம் மேலெழுந்த நிலையில் , நடுத்தர சமூகமூகத்தின் எல்லை மேலும் கீழுமாக நெடுக்கில் வரிவடைந்து விட்டது . நடுத்தர உயர்மட்ட நிலையிலிருந்து , புது முக நடுத்தர வர்க்கத்தின்  உள்நுழைவு அந்த நெடுக்காக வழியை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் ஊடுவிய நிலையில் நடுத்தர உயர்மட்டம் தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்கும் இடத்திற்கு  வந்துவிட்டது என நினைக்கிறேன் .

புதுமுக நடுத்தர வர்க்கத்தின் பழங்குடி மரபின் நீட்சியாக வழிபாட்டு முறையை கொண்ட அமைப்பும் , தரிசனங்களை உள்ளீடாக கொண்ட பிற அமைப்பிறகிடையே பரிவர்தனை நிகழ்வது தவிர்க்க இயலாதது . சைவ , வைணவ பெரும் மதங்களின் காலம் முடிவிற்கு வந்து விட்டது என நினைக்கிறேன் .அதன் கோட்பாடு வழியாக நிகழ்ந்த வழிபாட்டு முறைகள் முற்றாக கைவிடப்பட்டு , தேவையை ஒட்டி உருவாகும் புதிய சிந்தனை எழலாம் . பாரமார்திக வழியை கைவிட்டு விலகிய பிராமணர்கள் திரும்பி வரும் நிலை உருவாகி இருக்கும் சமயத்தில் பழைய யாக யஞ்ய மரபு உருவாகி வரலாம் . லௌகீக பிராம்ண சமூகம் ஆன்மீகத்தில் எழுச்சி பெருமானால் அது ஆபத்தில் முடியலாம் .

ஆன்மீகப் புரிதல் குறித்து இன்று சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் இடைவெளி நவீன வாழ்கை முறையை ஒட்டி உருவானது. இன்றைய நவீன மனதிற்காக இடம் இதுவரை இருந்து வந்த வழிபாட்டு முறைகளில் என்னவாக இருக்கப் போகிறது  .மத அமைப்புகள் ஒடுங்கிவிட்ட நிலையில் , அது வியாபாரிகளுக்கான இடமாக மாறிவிட்டது  புரிந்து கொள்ளக் கூடியதே . இதுவே இன்றைய யதாரத்தம் . பழைய மாண்பு என்கிற ஒன்றை நோக்கி திரும்புவது இனி நிகழப்போவதில்லை .

கடந்த காலத்தை பார்க்கையில் , சங்கரர்  , ராமாநுஜர் போன்ற மதப் பிரவர்த்தகர்களும் மக்களின் போக்கை ஒட்டியே மத அனுகுமுறையை உருவாக்கி கொடுத்தனர் .அதற்கு அவர்களது காலத்தில் எழுந்து எதிர்ப்பும் , எதிர் விமர்சனமும் பின்னர் அடங்கி அவர்கள் தரிசனமே இன்றைய ஆன்மிக வழிமுறையானது . நவீன யுகத்தில் ஆன்மீக விஷயத்தில் காந்தி எடுத்த புஷ்டி மார்கமும் கூட கருத்தொற்றுமையை உருவாக்க முடிவில்லை . அவர் அரசியல்வாதியாக பார்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம் .

அன்றிருந்த மேல் கீழ் அமைப்புகள் முற்றாக தகர்ந்து புதிய அடுக்குமுறைகள் உருவாகி வந்திருக்கும் நிலையில் ஆன்மீகத்தின் இடம் எப்படிப்பட்டது , அதற்கென உருவாகி வரக்கூடிய விதி முறைகள் என்னவாக இருக்கக் கூடும் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...