https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

அடையாளமாதல் - 462 * எந்தையும் தாயும் மகிழ்ந்து *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 462

பதிவு : 462 / 644 / தேதி 20 செப்டம்பர் 2019

* எந்தையும் தாயும் மகிழ்ந்து


எழுச்சியின் விலை ” - 64
முரண்களின் தொகை -03 .





நாவல் என்பது நவீன கலை. இன்றைய வாழ்க்கையில் மகாபாரதம் கூறும் மதிப்பீடுகளின் இடமென்ன என்பதை ஆராய்வது இதன் நோக்கம். இன்றைய வாழ்க்கையைச் சொல்ல மகாபாரதக் குறியீடுகளைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு நோக்கம் மகாபாரதக் கதைகள் பலவேறுபாடுகளுடன் பிறகு வந்த புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.தேவிபாகவதம் வரை வேறுபட்ட வடிவங்கள் உள்ளன. வியாசபாரதமும், பிற புராணங்களும் இதன் மூலநூல்கள். ஆனால் அக்கதைகளை திரும்பிச் சொல்வது அல்ல இதன் வழி. அவற்றை மீண்டும் விரிவாக்கி இன்றைய வாழ்க்கையை நோக்கி வருவதுதான்என்கிறார் ஜெயமோகன் தனது வெண்முரசு ஆக்கம் குறித்து.

பிற துறைகளில் அதீத ஈடுபாடு என்னை வாசிப்பு உலகிலிருந்து மெல்ல வெளியேற்றியது . பின் ஒரு சந்தர்ப்பத்தில் பொறுமை இழந்து போய் இனி வாசிக்கவே இயலாது என முடங்கிப்போனேன் . அதன் பின் என்னை வாசிப்பு உலகிற்கு மீள் அறிமுகம் செய்து வைத்தது வெண்முரசு . அங்கிருந்து நான், என்னைப் பற்றி புரிந்து கொண்டது , ஒன்று உண்டென்றால் அது என்வாசிப்பின் பின்னனி என்னவென்று . நிகழ்ந்த அல்லது நிகழ் உலகை குறித்த , பொது அல்லது தனிமனிதருடைய வரலாறு போன்றவை மட்டுமே என்னை ஈர்ப்பதை அறிந்து கொண்டேன் . எனக்கு நம்பிக்கையளிக்கும் அக அல்லது புறவயமான கூற்று ஒன்று தேவைப்படுகிறது . முழு புனைவு எனக்கு உகப்பதில்லை .

விஷ்ணுபுரம் நாவலின் முழு புனைவிலும் நான் நம்பும் அந்த கூற்று சொல்லப்பட்டிருந்தது ,  ஆனால் எதிரிடையாக .  ஆனால் அதே சமையம்  நான் வெண்முரசை வாசிக்கத்துவங்கி இருந்தேன் . ஆசிரியரின் கருத்து இங்கு வேறுவிதமாக பிரதிபலிப்பதை எனது ஆழ்மனம் ஒப்பவில்லை . அதை நேர் செய்யம் கூற்று என்னால் அங்கு உணரப்பட்டமையாலே என்னாழ்மானம் அதை முழுக்க வாசிக்க அனுமதித்தது . அது உண்மை என்பதை வெண்முரசில் கொட்டிக் கிடப்பதை பின்னர் வாசித்து நிறைவடைந்தேன்.

என் அளவில் ஒரு எழுத்தாளனின் படைப்பும் தேடலும் ஒரு தொடர் விசையை தன்னுள்ளிருந்து வாசகனுக்கு நகர்த்தி  வைப்பது என்றே எண்ணுகிறேன். வெண்முரசு போன்ற நாவலை நோக்கி வர காரணம் இதுவாகவும் இருந்திருக்க கூடும் . வியாச பாரதம் எனக்கு எங்கோ என் மூதாதையர் காலத்தில் நிகழ்ந்தது என்கிற நம்பிக்கையும். அவர்கள் அதன் ஒரு துளியேனும் அன்று அறிந்திருப்பார்கள் . அங்கிருந்து அது கைமாற்றப்பட்டு இன்று என் வரை வந்து அடைந்துள்ளது . எனது கடமை அதை இன்னும் மூன்று தலைமுறைக்கேனும் பகிர்ந்தளிக்கும் ஏதாவதொன்றை இயற்றியாக வேண்டும் என நினைக்கிறேன் . அதன் தொடக்கம் புதுவை வெண்முரசு கூடுகையை உருவாக்கும்  எண்ணத்தை எனக்கு  கொடுத்தது .

இது போன்ற புராணங்களின் வழியாக நம்மை வந்தடையும் அன்றையத் தொடுகைகள் மத நம்பிக்கை என்கிற எல்லையை கடந்து மானிட உளவியல்  ஒருவர்  வாழ்வியலில் என்னவாக  பொருள்படுகிறது என்பதை எனது இலக்காக இருந்து கொண்டிருந்தது  . பொதுவான குடும்ப சூழலில் யாராவது  அதை இன்றளவும் என்னை சுற்றி நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள் . உளவியல் குறித்து இனி நவீன உலகிற்கு செல்ல இருக்கும் எனது இளம் உறவுகளுடன் உரையாட தலைமுறை இடைவெளிகளை ஒருத்து நல்ல தளத்தை அது உருவாக்கி கொடுக்கலாம்

கடந்து சென்ற காலத்தில் என்னை என் முதுதந்தையும் , தந்தையும் செய்தது போல ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அவர்களை கைபிடித்து அழைத்து சென்றிருக்கிறேன் . இன்று அவர்கள் வளர்ந்து விட்ட சூழலில் உலக யதார்த்தங்கள் பற்றிய புரிதலை  அவர்களுக்கு திறந்து கொடுக்க வேண்டியது எனக்கானது என எண்ணுகிறேன். அவர்கள் சந்திக்க இருக்கும் நாளைய உலகின்  இன்றைய சிக்கல்களின் மிச்சம் . அது உறவென்றும் பிரிவென்றும், ஊழ் என்றும் காலம் என்றும்  அவர்களை வதைப்பது . வெற்றி தோல்வி , திறமை , மடமை என்கிற அர்த்தமற்ற இரட்டைகளை நோக்கியே அவள் செல்லக்கூடும் .அது காற்று புழங்காத நொதித்த பகுதிகள் அதன் ஆழங்களை அறிந்து கொள்ள வெண்முரசு போன்ற ஒரு தொகை நாவல் அன்று அவர்களுக்கு தேவைப்படலாம் .

எக்காலத்திற்குமான சொல்லை சொல்ல வருவதால் எனக்கு வெணமுரசு மிக முக்கியமானதொரு ஆக்கமாக தோன்றுகிறது . என்னை கடந்து இன்று எனது குடும்ப புதிய தலைமுறையுடன் நான் இணைத்துக்கொள்ளும் ஊடகமாக வெணமுரசு புரிந்திருக்கிறேன். ,அவர்கள் என்னை சந்திக்கும் போது அல்லது நான் அவர்களை சந்திக்கும் போது அவர்கள் வெண்முரசை படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருக்கின்றேன் .

மஹாபாரத பிற நாவல்களை வாசித்திருக்கிறேன். பாவண்ணனுடைய பருவம், ராமகிருஷ்ணனுடைய உப்பாண்டவம் போன்றவை . அவற்றை வாசிக்க முயன்று பின் ஏதோ ஒரு காரணத்தால் அதை முழுவதுமாக வாசிக்க இயலாது வெளியேறினேன் . அதன் சொல்முறை என்னை வெளியேற்றி இருக்கலாம் . வெண்முரசின் இறுதி நாவலுக்கு பின் அவற்றை மீள் வாசிப்பதற்கு எடுக்க வேண்டும். அந்த இரண்டு நூலுமே கூட வெண்முரசிற்கு பல வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டது . வெண்முரசு முழுமையான வடிவம் என்பதோ அல்லது அதன் இடைவெளி நிரப்புதல் அல்லது அதன் அடர்த்தியான பண்பாட்டு தொகுப்புக் குறிப்புகள் போன்ற ஒரு பண்மையும் , பண்பாட்டு வெளியை அளித்தல் என்கிற கூற்று பிற நூல்களில் இல்லாமை மற்றொரு காரணமாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்