https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 18 செப்டம்பர், 2019

அடையாளமாதல் - 461 *அறியாத வர்ணங்கள் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 461

பதிவு : 461 / 642 / தேதி 18 செப்டம்பர் 2019

*அறியாத வர்ணங்கள் 


எழுச்சியின் விலை ” - 61
முரண்களின் தொகை -03 .
இந்து ஞானமரபில் ஊற்றமுள்ளவர்களுக்கு தேடியதை வழிகூட்டுவதற்கு அன்று செல்வாக்கு செலுத்தும் ஒரு ஆக்கமாக வெண்முரசு” இருக்கக் கூடும் என , எனது முந்தையப் பதிவில் சொல்லியிருந்தேன் .அது அதி மிகையான சொல் எனவும் இருக்கலாம் . பௌரானிக மரபு முற்றாக வழக்கொழிந்து போயிருக்கலாம் . மத அமைப்புகள் கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியன்றி வேறொன்றும் செய்யாதொழியலாம் . பெற்றோர் தான் அறிந்த பொருளியல் அல்லாது உலகியலில் தான் கற்றதை தனது வேர்களுக்கு மடைமாற்றலாம் . ஆலயங்கள் ஊர்பெரியவர்களாக வந்தவர்களின் பாதை பற்றி தங்கள் வாழ்வு தேரலாம் . பிராம்னர் எனும் சொல் கோவில்களிலும் கேட்காது போகலாம் .ஆனால் தேடல் நின்றுவிடுவதில்லை .

பரந்து விரிந்துள்ள பாரத தேசத்தில் உள்ள ஜீவன் தனது உஜ்ஜீவன உபாயத்தை நோக்கிய தேடல்  ஒருபோதும்   நின்றுவிடுவதில்லை.அதற்கு வழிவகுக்கும் நீதி நூலுக்கு மத்தியில் வெண்முரசும் சென்று அமைந்து கொள்ளலாம் . அதன் எழுத்து முறை இடைவெளிகளில் சொல்லாத சொற்களால் நிறைந்துள்ளது . மரபை உடைத்து வீசுவது தன்னை பற்றிய அறிதலுக்கான அறைகூவலாக இருக்கலாம் . நாவல் என பெயரளவில் சொன்னாலும் புரான அடையாளங்களை அது விட்டுவிட்டதாக தெரியவில்லை . வெண்முரசு மஹாபாரத கதையை சொல்லவந்தாக இருப்பினும் . அது தவிர்த்த வேறு பல நோக்கங்கள் அதற்குள் இருப்பதை உணர்கிறேன் .தான் இயற்றிய அத்தனை ஆக்கங்களின் செறிவான ஒரு துளி இதில் இருக்கிறது .தனது தேடலின் மத்தியில் இது நிகழ்வதால் , வெண்முரசு தனது இறுதி நோக்கத்தை சொல்லியபடி செல்கிறது என்பதை நான் நிராகரிக்கிறேன் .அது தேடியபடி சென்று கொண்டிருக்கிறது . அதன் ஆசிரியர் இதுவரை அறியாத ஒன்றை கண்டடைந்து  இதன்  இறுதியில் அதை வெளியிடலாம் 

எனினும்  நான் இரண்டின் அடைப்படையில் இந்த முடிவிற்கு வருகிறேன். ஒன்று: வியாஸரின் எச்சில் ஜகத் சர்வம்” என்கிற கோட்பாடு , யாரின் கருத்தும் வியாசரின் எழுத்தை ஒட்டியே உருவாகுபவை என்றும் , அதில் யாரும் புதிய கருத்தை உருவாகிட இயலாது . இரண்டு: இன்றைய பக்தி மார்க்கம் தழிழகத்தின் கொடை என்கிற பாகவத்தின் கூற்று . அது மீண்டும் நிகழலாம்

மஹாபாரதம் புரான இலக்கியமாக உருவானபோது , அதில் பின்னாளில்  நிரப்பக்கூடிய இடைவெளிகளின் உலகை இருப்பாகக் கொண்டது . புதிய கதை சொல்லும் போக்கை உருவாக்கி கொடுத்தது . அங்கிருந்து அந்த இடைவெளிகளினூடாக எவரும் தங்களின் சம காலத்திற்கு இறங்கி வரும் வழிகளை கண்டடைய முடியும் . அதுவே அனைத்தையும் , அனைவரையும் இணைக்கும் புரிதலின் புள்ளி என உணர்கிறேன் .

மஹாபாரதத்தை நாவல் வடிவில் எழுத முயற்சித்தது , நவீன இந்தியாவில் வெண்முரசு மட்டுமே அல்ல . அதை முதல் முறையாகவும்  அது முயற்சிக்கவில்லை , பல சிறப்பான எழுத்தாளர்கள் தங்கள் தங்கள்  மொழிகளிலும் அதை முயன்றிருக்கிறார்கள் .மீள மீள அதை எழுதும் முயற்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது  . மஹாபாரதம் தனக்கு அனுக்கமாக ஏதோ ஒன்றை சொல்லவருவதாக உணரும் எவரும் அதை எழுதவும் , வாசிக்கவும் , விவாதிக்கவும் செய்கிறார்கள் .

வெண்முரசு அத்தகைய முயற்சியின் பெரும் தொகுப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது . இப்போதும் மஹாபாரதம் குறித்த எந்த கேள்விக்கும் இணையதளம் வெண்முரசிற்கு இட்டுச் செல்கிறது .இன்று அது ஒரு ஒப்பீடு நூல் .மஹாபாரதம் ஒரு புரிதலின் வெளி . வெண்முரசில் அந்த புரிதல்களை சுவாரஸ்யமாக எடுத்தாளப்படுகிறது .மரபில் நம்பிக்கையுள்ள நவீன மனத்தின் சிந்தனை வெளியாக அது உருவாகி இருக்கிறது

அது ஒரு பிரமானமாக இன்று கருதப்படாத நிலையில் , அதற்கான இடம் , இன்னுமொரு நூற்றாண்டில் அதற்கான தேவை ஏற்படலாம் .இன்று வெண்முரசை எழுதுபவரும் அதை வாசிப்பவரும் இல்லாத சூழலில் அது நிகழக்கூடும். இந்து ஞான மரபு , பிற தரிசனங்களில் இருந்து தருக்க நியாயத்தை வகைப்படுத்தி தனது தரிசனத்திற்குள் கொண்டுவந்தது இன்றைய நிலை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதை சொல்லவருகிறது என நினைக்கிறேன்.இன்றைய இளைஞர்கள் தங்கள் நவீன மனம் எழுப்பும்  கேள்விகளுக்கு இந்து ஞான மரபு என்ன சொல்கிறது . என்பதே எனது தேடலாக எப்போதும், இருந்து வந்திருக்கிறது. நீண்ட காலத்திற்கு பிறகே நான் எனது தந்தை தொடங்கி வைத்த தேடலின் நீட்சி என புரிந்து கொள்கிறேன்  .

உலக பொதுப் போக்கிற்கு மாறாக எதுவும் பயணம் செய்ய இயலாது .பல நூற்றாண்டுகளாக உரையாடல்களின் வழியாக நிகழ்ந்த அறிவுத்தேடல் இன்றில்லை.இன்று இந்திய சமூகத்தின் மீதுள்ள பிடிமானங்களை அதன் மத அமைப்புகள் முற்றாக இழந்து நிற்கும் நிலையில் இந்திய சமூக அமைப்புகள் , இந்திய தண்டனை சட்டம் , மற்றும் இந்திய அரசியல் அமைப்பை சார்ந்து  இருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது .மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் சமூகம் இரண்டாக பிளவு பட்டு நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...